கொரோனா உலகம்

கொரோனா உலகம், ப.திருமலை, தமிழர் ஆய்வு மையம், விலைரூ.150. இந்த நுால் கொரோனாவை மருத்துவ கண்ணோட்டத்தில் பார்ப்பதல்ல; மாறாக நாம் கடந்து சென்று கொண்டிருக்கும் கொரோனா காலத்தின் மீதான சமூக பார்வை. மட்டற்ற சுதந்திரத்தில் இருக்கும் உலகம், கொரோனா என்ற பேரிடரால் எப்படி முடங்கி, அடங்கிப் போனது; அதனால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் என்ன; சமூக மாற்றங்கள் என்ன என்பது பற்றி எல்லாம் அலசியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் திருமலை. கொரோனா காலத்தின் செய்தி தொகுப்பாக அல்ல; நிகழ்காலத்தின் கண்ணாடியாக நுாலை தந்திருப்பதால், காலம் கடந்தும் […]

Read more

துளிர் அறிவியல் கட்டுரைகள்

துளிர் அறிவியல் கட்டுரைகள், அறிவியல் வெளியீடு, விலைரூ.150. அறிவியல கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். 50 கட்டுரைகள் அடங்கியுள்ளது. மிகவும் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. முதலில், உலகையே ஆளும் வைரஸ் என்ற தலைப்பில், ராமானுஜம் எழுதிய கட்டுரை உள்ளது. அடுத்து, யார் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் என்ற கேள்விக்கு விடை தரும் வகையில், முனைவர் கண்ணப்பன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிரான போரில், உதவும் பொறியியல் நுட்பங்கள் பற்றி ஒரு கட்டுரையை டாக்டர் டில்லிபாபு எழுதியுள்ளார். இது போல் பல பொருட்களில், அறிவியல் வளர்ச்சியை […]

Read more

கம்பராமாயணத்தில் அரிய அறிவியல் தகவல்கள்!

கம்பராமாயணத்தில் அரிய அறிவியல் தகவல்கள்!, முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.80 ‘புதியன கண்ட போழ்து விடுவரோபுதுமை பார்ப்பார்’ என்ற கம்பன் கருத்தை ஆமோதிக்கும் வகையில் பல்வேறு அரிய அறிவியல் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார். ஆற்றல் அழிவின்மை விதியை உணர்த்தும் முதல் பாடல் துவங்கி, யுத்த காண்டத்தில், கம்பன் கணக்காக படைகளின் பலத்தைக் காட்டுவது ஈறாக, 19 கட்டுரைகளில் அறிவியல் நுட்பம் அணிவகுத்து உள்ளது. சோலார் கருவிகளின் பயன்பாட்டை, வருணனை வழி வேண்டுபடலத்தில் ஒப்பிடும் திறம் புதுமை. ‘விசை இலவாக தள்ளி வீழ்ந்தன’ என்னும் […]

Read more

நீர் உயிரின் வேர்

நீர் உயிரின் வேர், சான்றோர் தளம், அமிர்தம் பீட்டர் ராசன், விலைரூ.90. நீர் குறித்த துல்லியமான விபரங்கள் அடங்கிய நுால். அறிவியல் பார்வையுடன் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் அடங்கியுள்ளன.புத்தகத்தில், ஐந்து இயல்கள் உள்ளன. நீர் என்பது என்ன என்பதில் துவங்கி, அதன் அளவு, தரம், நீரை சீராக்கும் முறைகள், நீர் மேலாண்மை, விவசாயம் என முறைப்படுத்தி தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தெளிவான அறிவியல் தகவல்களுடன் தரப்பட்டுள்ளது. அறிவைத் திறக்கும் வகையில் அமைந்துள்ளது. நீரின்றி அமையாது இவ்வுலகு என்பதை தெள்ளத்தெளிவாக விவரித்து, […]

Read more

மனிதனைப் படைப்பது யார்?

மனிதனைப் படைப்பது யார்?, ஏ.கே. ராஜ், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150. மனித படைப்பை, அறிவியல் கண்ணோட்டத்துடன் விவரிக்கிறது இந்நுால். மனித படைப்புக்கு காரணம், விரும்பியபடி வாழ முடியுமா போன்ற சாதாரண கேள்விகளுக்கான மர்ம முடிச்சுகளை ஆராய்கிறது.மனிதன் உருவான விதம், ஆற்றல், சக்தி, நிலம், நெருப்பு, நீர், சூரியன், கோள்கள் குறித்து, எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. மனித மூளையின் செயல்பாடுகள், மனிதனின் தன்மைகள், பண்புகள் எப்படி வெளிப்படுகிறது என்பதையும் விவரிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், கணித மேதைகளின் ஆற்றல், படைப்புகள், அதற்காக அவர்கள் பட்ட கஷ்டங்கள், ஆட்சியாளர்களின் நுட்பமான […]

Read more

மனம் அது செம்மையானால்

மனம் அது செம்மையானால்? ,  க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்: 160,  விலை ரூ.200. மனம் என்பது என்ன? அது எப்படிச் செயல்படுகிறது? மனத்தை எப்படிச் செம்மையாக்குவது? மனத்தின் நோய் எது? அதிலிருந்து எப்படி விடுபடுவது? ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய மனம் என்னவாகும்?இத்தனை கேள்விகளுக்கும் தத்துவரீதியாகவும் அறிவியல்ரீதியாகவும் இந்நூலில் விளக்கங்களை அளித்துள்ளார் நூலாசிரியர். மேல்மனம் என்பதையும் ஆழ்மனம் என்பதையும் வேறுபடுத்தி விளக்கியுள்ளார் (மேல்மனம் அறிவுமயமானது; ஆழ்மனம் உணர்வு மயமானது). நம் உயிர்தான் நம் மனம் என்பதை தெளிவாக விளக்குகிறார்.  மனம் உடலில் உள்ளவரை […]

Read more

துளிர் அறிவியல் கட்டுரைகள்

துளிர் அறிவியல் கட்டுரைகள் , தொகுப்பு: துளிர் ஆசிரியர் குழு, அறிவியல் வெளியீடு, பக்.152; விலை ரூ.150;  துளிர் மாத இதழில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 50 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். குழந்தைகளுக்குப் புரியும்வண்ணம் மிக எளிமையாக எழுதப்பட்ட இக்கட்டுரைகள் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்களை உள்ளடக்கியவையாக உள்ளன. கரோனா வைரஸ் பற்றி உலகையே ஆளும் வைரஸ் கட்டுரை விவரிக்கிறது. பல்வேறு தொழில்நுட்பங்கள் எல்லாம் இணைந்துதான் இன்றைய உலகம் இயங்குகிறது. மருத்துவ உலகமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும்விதமாக "மருத்துவர்களுக்கு உதவும் […]

Read more

அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை

அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை,  ய.சு. ராஜன், ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர்,  பதிப்பாசிரியர் – சிற்பி பாலசுப்பிரமணியம்; அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம், பக்.724, விலை ரூ.600. விண்வெளித்துறையில் அப்துல்கலாமுடன் பயணித்த, அவரது நெருங்கிய நண்பரான விண்வெளி விஞ்ஞானி யக்ஞசுவாமி சுந்தர்ராஜன் என்கிற ய.சு. ராஜன் மற்றும் அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயரும் இணைந்து அப்துல்கலாமைப் பற்றிய பலரும் அறியாத தகவல்களின் களஞ்சியத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் உயர்ந்ததற்கான பின்னணியை இந்நூல் விளக்குகிறது. கலாமின் […]

Read more

புல்லாங்குழல்

புல்லாங்குழல், ஆர்னிகாநாசர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160 ஆசிரியர் ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் தொகுப்பின் கடைசி புத்தகம் புல்லாங்குழல். கற்பனைக்கு எட்டாத அதிசயங்களை அழகான கதையாக பிணைத்து உள்ளார். கதைக்கு கதை அறிவியல் வித்தியாசங்களை காட்டி அதிசயிக்கச் செய்யும் ஆசிரியரின் கைவண்ணத்துக்கு ஒரு கோப்பை தேநீர், காகித அம்பு கதைகளே சான்று. முனியம்மா ரயில் வண்டி நிலையம்… இனிமேல் நடக்கப் போகும் கூத்தின் ஆரம்ப கட்ட யதார்த்தம். ஆசிரியரின் கற்பனைக் கதைகளுக்கான அறிவியல் தேடல் மிக அதிகம் என்பதை அவரது […]

Read more

இனிய இணையதள நுாலகம்

இனிய இணையதள நுாலகம், முனைவர் ப.பாலசுப்ரமணியன், சங்கர் பதிப்பகம், விலைரூ.110 பல துறைகளில் நுழைந்த அறிவியல் வளர்ச்சி, இப்போது நுாலகத் துறையிலும் புகுந்து, நுாலகத்தின் பயன்பாட்டை பலருக்கும் அறிமுகப்படுத்தி வளர்ந்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள நுாலகங்கள் பெற்றுள்ள அதீத வளர்ச்சி, நம் நாட்டு நுாலகங்களிலும் அமைந்துள்ளதை விளக்கமாக இந்நுாலில் விவரித்துள்ளார், நுாலாசிரியர். அதில் குறிப்பாக, இணையதளத்தில் பல நுால்கள் வெளியாகி, வாசகர்கள் மத்தியில் உலா வருவதையும், ஒரு எழுத்தாற்றலின் படைப்பு, இணையதளம் மூலம், வெளிநாட்டில் உள்ளவர்களும் அறிந்து கொள்ள முடிவதையும் விவரித்துள்ளார். நன்றி: தினமலர், 1/3/20 […]

Read more
1 2 3 4 21