மலிவான பொருட்களால் மகிழ்வான சோதனைகள் 2.0

மலிவான பொருட்களால் மகிழ்வான சோதனைகள் 2.0, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 50ரூ. சோதனைக்கூடமோ, பெரிய கருவிகளோ இன்றி, வீட்டில் இருக்கும் மலிவான பொருட்களை வைத்து அறிவியல் பரிசோதனைகளைச் செய்ய உதவுகிறது இந்நூல். 42 சோதனைகளை எளிய பொருட்களின் உதவியோடு மாணவர்கள் செய்து பார்க்கலாம். நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நியூட்ரினோ

நியூட்ரினோ, வே. மீனாட்சி சுந்தரம், புதிய அரசியல் நெறி பதிப்பகம், விலை 50ரூ. நியூட்ரினோ திட்டம், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்ற தவறான நம்பிக்கை விதைக்கப்படுகிறது. தேவையற்ற பயத்தை அகற்றும் விதமாக எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம். இது வெறும் நியூட்ரினோ ஆதரவு புத்தகமாக எழுதப்படவில்லை. எதிராளிகள் முன்வைக்கும் வாதங்கள் என்ன என்பதைக் கூறி, அதற்கு அறிவியல் ரீதியாகப் பதிலடிக் கொடுக்கப்பட்டுள்ளது. இளையோர் புத்தக அலமாரியை அலங்கரிக்க வேண்டிய முக்கிய நூல் இது. நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்

பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல், முனைவர் இரெ.குமரன், காவ்யா, பக். 316, விலை 300ரூ. பொதுவாக புலவர்கள் எல்லை கடந்த கற்பனைத் திறன் கொண்டவர்கள். ஒளி புகா இடத்திலும் கவி புகுவான் என்று சொல்லக் கேட்டதுண்டு. அசாத்திய கற்பனைத் திறன் காணாத உலகுக்கெல்லாம் உள்ளத்தை வழிநடத்தி உலா செல்வதோடு, ஊகங்களின் வழியே புதுமைகளை நிர்மாணிக்கிறது. இவ்வுலகின் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் கற்பனைகளாலும் கைதேர்ந்த ஊகங்களாலும் அடையப்பட்டவையே. ஆனால், அவை அடையப்பெறும் முன், அதற்கான வித்தை யாரோ இட்டுவிட்டுச் செல்கின்றனர். அவை இயற்கையின் அங்கமாகவும் இருக்கலாம். நம்புதற்கரிய […]

Read more

அறிவியல் தத்துவம் சமுதாயம்

அறிவியல் தத்துவம் சமுதாயம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா; தமிழில்: அ.குமரேசன், அலைகள் வெளியீட்டகம், பக்.64, விலை ரூ.50. பண்டைய இந்தியாவில் சமயச்சார்பின்றி முற்றிலும் உலகியல் சார்ந்ததாக மருத்துவம் இருந்திருக்கிறது என்பதை நூலாசிரியர் மிக விரிவாக விளக்குகிறார். மாயாவாத – மதச்சடங்கு சார்ந்த சிகிச்சை என்பதிலிருந்து பகுத்தறிவு சார்ந்த நிலைக்கு மருத்துவத்துறை முன்னேறுகிறது என்றும், யுக்தி-வ்யாபஸ்ரேய பேஸாஜா'வாக மருத்துவம் மாறுகிறது என்றும் நூலாசிரியர் கூறுகிறார். புத்தரின் கொள்கைகளை விளக்கும் நூலான வினய பீடகத்தில் துறவிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து புத்தர் நீண்ட விவாதம் நடத்தியிருக்கிறார். அது […]

Read more

டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1,2,3,4

டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1,2,3,4, பாலாஜி, சார் பதிப்பகம். தொழில்நுட்பக் கில்லாடி ஆகலாம். ஒரு விரல் நுனி அளவிலான கருவிக்கள் எப்படி ஒரு நூலாகத்தின் புத்தகங்களை எல்லாம் அடுக்க முடிகிறது. நூற்றுக்கணக்கான திரைப்படங்களை வைக்க முடிகிறது. ஆயிரக்கணக்கான பாடல்களைச் சேமிக்க முடிகிறது என்பது போன்ற கேள்விகளுக்கான விடை ஒரு எலெக்ட்ரானிக் மாணவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இவற்றை டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் கையடக்கப் புத்தகத்தின் நான்கு பாகங்கள் கதைபோல விவரிக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 15/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

அறிவு தேடலில் அறிவியல் உணர்வு

அறிவு தேடலில் அறிவியல் உணர்வு, ராஜேந்திர பிஹாரி லால், தமிழாக்கம் கண்ணையன் தட்சிணாமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், விலை 90ரூ. உணர்ந்துப் படிக்கலாம் அறிவியலை இன்று உலகம் அடைந்திருக்கும் முன்னேற்றத்துக்கு மிகப் பெரிய பங்காற்றி இருப்பது அறிவியல்தான் என்றாலும் மூடநம்பிக்கைகளுக்குப் பின்னே ஏனோ மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அதற்குக் காரணம் இயற்கையின் புதிரான ரகசியங்களை விளக்கும் அறிவியலை அனைவருக்கும் கொண்டுசேர்க்கத் தவறியதே. அப்படி தவறவிட்டதைப் பிடிக்கும் முயற்சியே அறிவு தேடலில் அறிவியல் உணர்வு. நன்றி: தமிழ் இந்து, 15/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

வறுமையின் நிறம் பச்சை

வறுமையின் நிறம் பச்சை, ஆரூர் சலீம், வெம்மை பதிப்பகம், பக். 126, விலை 125ரூ. புத்தகத்தைப் படிக்கத் துவங்கியபோது, உடலில் திடீர் உஷ்ணம் பரவி, கடும் அதிர்ச்சி ஏற்பட்டு விட்டது. என்ன சொல்ல வருகிறார் நுாலாசிரியர்? புவி வெப்பமயமாதல் என்ற விஷயமே கிடையாது என்பதை, எடுத்த எடுப்பிலேயே, வெட்ட வெளிச்சமாகப் போட்டுடைத்து விட்டாரே… அதை எப்படி, தர்க்க ரீதியாக விவரிக்கப் போகிறார், அப்படியெனில், வெப்பமயமாதல் தொடர்பான அனைத்து கட்டுரைகளும், கருத்துகளும், வெறும், ‘டுபாக்கூர்’ தானா, அப்படி யெனில், பூமி வெப்பம் அதிகரிப்பதேன், காலநிலை மாற்றத்தைப் […]

Read more

குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்

குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள், எஸ்.குருபாதம்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.500, விலை ரூ.450. குழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வளர்ப்பை இந்நூல் அணுகுகிறது. எனவே குழந்தைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இயல்பறிந்து எவ்வாறு பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்? குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? என்பதை இந்நூல் விளக்குகிறது. குழந்தைகளிடம் […]

Read more

டிஜிட்டல் மாஃபியா – நீங்கள் டிஜிட்டல் உலகின் சோதனை எலிகள்

டிஜிட்டல் மாஃபியா – நீங்கள் டிஜிட்டல் உலகின் சோதனை எலிகள், வினோத்குமார் ஆறுமுகம், பக்.132, விலை ரூ.120. இன்று எல்லாரும் பேஸ்புக், யூ டியூப், கூகுள், இணையதளங்களைப் பயன்படுத்துகிறோம். நெட் பேங்கிங், ஆன்லைன் ஷாப்பிங், வாடகைக் கார் புக்கிங் என்பது சாதாரணமாகிவிட்டது. ஒரு தனிமனிதன் ஒவ்வொருநாளும் என்ன செய்கிறான்? எங்கே போகிறான்? என்ன வாங்குகிறான்? யாரிடம் பேசுகிறான்? எந்தமாதிரியான பொழுதுபோக்குகளை விரும்புகிறான்? எதை விரும்பிச் சாப்பிடுகிறான்? என்ன மாதிரியான உடை உடுத்த விரும்புகிறான் என்று எல்லாமும் இந்த இணைய உலகில் பதிவு செய்யப்படுகிறது. அந்தத் […]

Read more

இருளர்களும் இயற்கையும்

இருளர்களும் இயற்கையும், சி. மஞ்சுளா , என்.சி.பி.எச். வெளியீடு, விலை 150ரூ. பழங்குடியினரையும் இயற்கை குறித்த அறிவையும் பிரித்துப் பார்க்க முடியாது. தாவரவியல் அறிவை மருத்துவ அறிவாகப் பரிணமிக்கச் செய்த இருளர்களைப் பற்றி ஆய்வுபூர்வமாகப் பேசுகிறது இந்த நூல். சமவெளி இருளர்கள் பற்றி மிகக் குறைவான பதிவுகளே இருக்கும் நிலையில், இப்புத்தகம் முக்கியமானது. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027061.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more
1 4 5 6 7 8 21