மூளை என்னும் மூலவர்

மூளை என்னும் மூலவர்,  பக்கவாதத்தையும் வெல்லலாம், அ.வேணி, சிவாவேணி பதிப்பகம், பக்.224, விலை ரூ.220. பக்கவாதம் என்றால் என்ன? அந்நோய் வருவதற்கான காரணங்கள் எவை? பக்கவாத நோய்க்கான அறிகுறிகள் எவை? பக்கவாத நோய் வராமல் தடுக்க, எதை உண்ண வேண்டும்? என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்? குழந்தைகளுக்குப் பக்கவாதம் வருமா? பெண்கள் பக்கவாதத்தால் அதிகம் பாதிக்கப்படாமல் இருப்பது ஏன்? சுவாசிக்கும் காற்று, சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகள் ஆகியவற்றால் பக்கவாதம் வருமா? பாரம்பரியத்தால் பக்கவாதம் வருமா? குடிப்பழக்கத்திற்கும், புகைப்பழக்கத்திற்கும் பக்கவாதத்திற்கும் தொடர்புகள் உள்ளதா? பக்கவாதம் வந்துவிட்டால் […]

Read more

சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, யுவால்நோவா ஹராரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 499ரூ. பரிணாமத்தின் வரலாறு யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’, மனித இனத்தின் சமூக, அரசியல், பொருளாதார பரிணாம வரலாற்றைப் பேசும் புத்தகம். பத்து லட்சம் பிரதிகள், முப்பது மொழிகளில் மொழியாக்கம் என்று உலகளவில் அதிகம் விற்பனையான நூல். நெருப்பு, மொழி, வேளாண்மை என்று தொடர்ந்துவந்த மனித அறிவின் பரிணாமத்தில் அடுத்தடுத்து வந்த பணமும் முதலாளித்துவமும் அறிவியலும் இன்றைக்கு மனிதர்களை எப்படி ஆட்டிப்படைக்கின்றன என்பதை வரலாற்று […]

Read more

நவீன சூரிய மின்சக்தி

நவீன சூரிய மின்சக்தி, குன்றில்குமார், அழகு பதிப்பகம், பக். 112, விலை 100ரூ. சூரிய ஒளியை இரண்டு விதமாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். ஒளி மின் அழுத்தம் என்பது நேரடியாக சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதாகும். சூரியக் கதிரை மின்சாரமாக மாற்றும் ஒளிமின் கலங்களைப் பற்றியும், அவற்றை இணைத்து மின் ஆற்றலை வழங்கும் ஆய்வு மற்றும் தொழிலைப் பற்றியும் குறிப்பதாகும். தினமும் தவறாமல் சூரிய ஒளி கிடைத்துக் கொண்டே இருப்பதால், இது வற்றாத ஆற்றலாக விளங்குகிறது என்கிறார் நுாலாசிரியர். இறைவன் நமக்கு அளித்த […]

Read more

பேரிடர்களை எதிர்கொள்வோம்

பேரிடர்களை எதிர்கொள்வோம், ச.வைரவராஜன், சங்கமித்ரா பதிப்பகம், விலை 250ரூ. அறிவியல் துணையுடன் மனிதன் உலகையே ஆண்டு வந்தாலும் இயற்கையை மட்டும் அவனால் வெல்ல முடியவில்லை. மானுட சமூகத்தை அச்சுறுத்தும் வகையில் ஆங்காங்கே அவ்வப்போது நேரிடும் இயற்கை பேரிடர்கள் இந்த உண்மையை உரக்கச்சொல்லிவிடுகின்றன. நிலநடுக்கம், புயல், சூறாவளி, சுனாமி, காட்டுத்தீ என மனிதனை சோதிக்கும் இடர்பாடுகள் ஏராளம். இத்தகைய பேரிடர்கள் நேரிடுவதை தடுக்க முடியாவிட்டாலும், அவற்றில் இருந்து சமயோஜிதமாக தப்பிக்க முடியும். அதற்கான வழிகாட்டிதான் இந்த நூல். மனிதனை அச்சுறுத்தும் ஒவ்வொரு பேரிடருக்குமான காரணம், அவற்றின் […]

Read more

தமிழர் மரபும் அறிவியல் பார்வையும்

தமிழர் மரபும் அறிவியல் பார்வையும், ச.இராமமூர்த்தி, லாவண்யா பதிப்பகம், பக்.160, விலை ரூ.150. பதினாறு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தமிழரின் வாழ்க்கை, சிந்தனை, இயற்கைச் சூழல் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றைப் பற்றிய அரிய விஷயங்களை இந்நூலில் உள்ள கட்டுரைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. அகநானூறு, நற்றிணை, பொருநராற்றுப்படை உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் யாளி என்று கூறப்படுவது சிங்க முகம் கொண்ட கொடிய விலங்கு; 1800 ஆம் ஆண்டிற்குப் பிறகே அறிவியல் அணு பற்றிக் கூறத்தொடங்கியது. ஆனால் அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு […]

Read more

நவீன சூரிய மின்சக்தி

நவீன சூரிய மின்சக்தி, குன்றில் குமார், அழகு பதிப்பகம், விலை 100ரூ. தண்ணீர், நிலக்கரி, அணுசக்தி ஆகியவற்றால் மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் மாற்று முறையாக சூரிய மின் சக்தி கண்டுபிடிக்கப்பட்டது பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. சூரிய மின்சக்தி என்றால் என்ன, அவை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, வீடு மற்றும் விவசாயத்துக்கு அவற்றை பயன்படுத்திக் கொள்வது எப்படி என்ற பயனுள்ள அனைத்து தகவல்களையும் ஆசிரியர் தந்து இருக்கிறார். சூரியமின் சக்தி பற்றி தெரிந்து கொள்வதற்கு நல்ல கையேடாக இந்தப் புத்தகம் விளங்குகிறது. நன்றி: […]

Read more

ஆச்சரியமூட்டும் அறிவியல்

ஆச்சரியமூட்டும் அறிவியல், ஹாலாஸ்யன், பினாக்கிள் புக்ஸ்,பக்.144, விலை ரூ.135. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் எப்படி இயங்குகின்றன? அவை இயங்கு வதன் அறிவியல் அடிப்படைகள் எவை? என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. புதிய கண்டுபிடிப்புகள் எவை? அவை ஏற்கெனவே உள்ள எந்தப் பொருளின் உயர்வான, அடுத்தநிலையாக உருவாகி இருக்கிறது? என்பதும் நமக்குத் தெரியாது. அவற்றைப் பற்றியெல்லாம் நமக்குச் சொல்கிறது, தினமணி இணையதளத்தில் தொடராக வெளிவந்து, இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள். மின்சார வசதியில்லாத இடங்களில் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுத்தாத புவியீர்ப்பு விசையால் இயங்கும் க்ராவிட்டி […]

Read more

சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு

சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, யுவால் நோவா ஹராரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 499ரூ. 1350கோடி ஆண்டுகளுக்கு முன் ‘பெருவெடிப்பு’ காரணமாக இந்த உலகம் உருவானதாகக் கருதப்படுகிறது. பின்னர் படிப்படியாக உயிரினம் தோன்றி, அதில் இருந்து ஆதிமனிதன் உருவாகி, 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் சேப்பியன்ஸ் என்ற ஆதி மனித இனம் தோன்றியதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். அந்த மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி ருசிகரமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மனித வாழ்வில் ஏற்பட்ட மதம், […]

Read more

பறவை போல் வாழ்தல் வேண்டும்

பறவை போல் வாழ்தல் வேண்டும், இ.தனுஷ்கோடி, தமிழ்வாணி பதிப்பகம், பக். 102, விலை 70ரூ பறவை போல் வாழ்தல் வேண்டும் எனும் இந்த நுாலில், 34 பறவைகளின் வாழ்க்கைச் செய்தியை, திரட்டியுள்ளார் என்பது, இந்த நுாலை வாசிப்பவர்களுக்குத் தெரியும். அன்பால் இணை பிரியாத அன்றில் பறவை, காக்கை, சிட்டுக்குருவி, கிளி, புறா, குயில், மயில், ஆந்தை போன்ற பல பறவைகளின் குணங்களையும், அதன் வாழ்க்கை, வாழும் சூழலையும் அருமையாக கூறியிருக்கிறார் ஆசிரியர். சேர்ந்து வாழும் காதல் பறவைகள், அடிக்கடி முத்தமிட்டு ஆனந்தம் கொள்ளும். தன் […]

Read more

காலம் (அணு முதல் அண்டம் வரை)

காலம் (அணு முதல் அண்டம் வரை), பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 264, விலை 200ரூ. அண்மையில் மறைந்த, உலகப் புகழ் பெற்ற அறிவியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் (அவரது கழுத்துக்குக் கீழே எந்த உடலுறுப்பும் இயங்காது) படைத்த, ‘தி ப்ரீப் ஹிஸ்டரி ஆப் டைம்’ என்ற நுாலில், அகிலம் எப்படித் தோன்றியது. காலமும் இடமும் சேர்ந்து அதை வளர்த்து, இன்றைய நிலைக்கு எப்படி கொண்டு வந்தது என்ற ஆய்வை நுாலாசிரியர் தம் அறிவியல் மெய்யியல் சிந்தனைகளோடு கலந்து புது நுாலாக உருவாக்கியுள்ளார். பூரண […]

Read more
1 5 6 7 8 9 21