மனிதனை இயக்குவது மனமா மூளையா?

மனிதனை இயக்குவது மனமா மூளையா?, டாக்டர் ஏ.வி.ஸ்ரீநிவாசன், லஷ்மி மோகன், நலம் வெளியீடு, பக். 128, விலை 125ரூ. தாயின் வயிற்றில் உள்ள கருவிலேயே மூளையில் நியூரான்கள் உதிக்கத் துவங்கி, குழந்தை கற்கவும் துவங்கி விடுகிறது என்பது இறைவனின் விந்தை. எந்தக் குழந்தைக்கும் முதல் மூன்று மாதத்திலேயே ஒவ்வொரு வினாடியும், 2,500 நியூரான்கள் உருவாவது, பேதமற்ற முழு முதல் கடவுளின் வித்தை. குழந்தைப் பருவத்தின், ‘சிதறும் மனநிலை’ முதல், வயோதிகத்தின் இறுதிக்கட்டமான, ‘ஒடுக்கப்பட்ட மனநிலை’ வரை, பல்வேறு காலகட்டங்களில் எண்ணங்களைத் தாங்கி நிற்கும் மூளையின் […]

Read more

காலம்

காலம், பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. சுற்றுவது பூமியா சூரியனா? காலச் சுழற்சி எதனால் ஏற்படுகிறது? காலத்தைப் பின்னோக்கி நகர்த்த முடியுமா? விண்ணிலும் மண்ணிலும் காலமாற்றத்தில் என்னென்ன நிகழ்கின்றன? மனிதர்களும் உயிர்களும் தோன்றியது எவ்வாறு? இப்படி காலம் குறித்த ஏராளமான விஞ்ஞான விளக்கங்கள். எளிய நடையில். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 2/5/2018.

Read more

புன்னகை ஓர் அரிய ரோபோ

புன்னகை ஓர் அரிய ரோபோ, மோகன் சுந்தரராஜன், அறிவியல் ஒளி, பக். 105, விலை 90ரூ. இக்கால இளைய தலைமுறைகளிடையே அறிவியல் ஆர்வத்தை உண்டாக்க எழுதப்பட்ட இந்நுால், தமிழக இளைஞர்களின் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு முன்னுரை. ஆண் – பெண் என்ற பாகுபாடின்றி, வயதைவிட அறிவையே மேலாகப் போற்றும் மனப் பக்குவத்தை வலியுறுத்துகிறது. மனித அறிவின் மேன்மையையும், மனித நேயத்தையும் நிலைநாட்டுவதை எடுத்துரைக்கிறது இந்நுால். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

தத்துவ ஞானி ஜே.கே.

தத்துவ ஞானி ஜே.கே., மானோஸ், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.208, விலை180ரூ. ஜே.கே., என சுருக்கமாக அழைக்கப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு பூரண சிந்தனையாளர்; தத்துவ ஞானி. அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் இருந்தும், மாணவர்களுடன் அவர் நடத்திய உரையாடல்களில் இருந்தும் எழுந்த கருத்துக்களை அழகாகத் தொகுத்து, தத்துவ ஞானி ஜே.கே., என்று தந்திருக்கிறார் மானோஸ். உலகில், இன்று வரை நிலைத்திருக்கும் சமயங்களுக்கும், முன்னோர்களின் தத்துவ விளக்கங்களுக்கும், குருமார்களின் சடங்கு, சம்பிரதாயங்களுக்கும், அவற்றுக்கு இடையே நிகழும் முரண்பட்ட கருத்துக்களுக்கும், அதனால் எழும் குழப்பங்களுக்கும், பிரச்னைகளுக்கும் தெளிவாக விளக்கமளித்து, […]

Read more

அறிவியல் முதல்வர்கள்

அறிவியல் முதல்வர்கள், தேவிகாபுரம் சிவா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 70ரூ. அறிவியல் பாடப்புத்தகங்களில் பெயர்களை மட்டுமே படித்திருக்கும் அறிவியல் அறிஞர்கள் பன்னிருவரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாகவும் சுவையாகவும் தரப்பட்டிருப்பது அருமை. மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் வளர இந்நூல் நிச்சயம் உதவும். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000022170.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம், 14/3/2018.

Read more

அறிவோமா அறிவியல்

அறிவோமா அறிவியல், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், தாமரை பிரதர்ஸ் வெளியீடு, பக். 120, விலை 80ரூ. மத்திய அரசின் தேசிய அறிவியல் பிரச்சார மையத்தில், முதுநிலை விஞ்ஞானியாக உள்ள, த.வி.வெங்கடேஸ்வரனின் கேள்வி – பதில் தொகுப்பு. ஏழு தலைப்புகளின் கீழ், பல்வேறு அறிவியல் கேள்விகளுக்கு, எளிமையாக பதில் அளித்திருக்கிறார். குழந்தைகள் இருக்கும் வீட்டில் நிச்சயம் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினமலர், 16/1/2018.

Read more

மலர்களே கொஞ்சம் மலருங்கள்

மலர்களே கொஞ்சம் மலருங்கள், சிறுவர்களுக்கான அறிவியல் சிறுகதைகள், லூர்து எஸ்.ராஜ், வைகறை பதிப்பகம், விலை 40ரூ. பூக்கள் குறித்த அறிவியல் சார்ந்த விஷயங்கள், வித்தியாசமான கதை பாணியில் சொல்லப்படுகின்றன. மாணவர்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து மணம் வீசும். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

வெளிச்சத்தின் நிறம் கருப்பு

வெளிச்சத்தின் நிறம் கருப்பு, முகில், சிக்ஸ்த்சென்ஸ் பக்ளிகேஷன்ஸ், பக். 316, விலை 240ரூ. அறிவியலுக்குள்ளும், பகுத்தறிவுக்குள் அடங்காத மர்மங்கள், இவ்வுலகில் நிறைந்திருக்கின்றன. ஏன், எதற்கு, எப்படி என்ற மூன்று கேள்விகளுக்குள் அடங்காத, அந்த மர்மங்களின் கதகதப்பை உணர செய்கிறது இப்புத்தகம். ‘திக் திக்’ விரும்புகளுக்கு, நிச்சயம் இந்நு’ல் பிடிக்கும். நன்றி: தினமலர், 16/1/2018.

Read more

பேலியோபுரம்

பேலியோபுரம், நியாண்டர் செல்வன், ஆரோக்கியம் நல்வாழ்வு, பக். 224, விலை 220 ரூ. உடலின் எடையை குறைக்கவும், கொழுப்பை கரைக்கவும், பலரும், டயட் மேற்கொள்கின்றனர். நேரத்திற்கு தகுந்தாற்போல் உணவையும், முறையான பயிற்சியையும், எடுத்தால், உடம்பிற்கு கொழுப்பு நல்லதுதான். நாம் சாப்பிடும் உணவு, இயற்கையிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்பதை, இந்த நூல் வாசகர்களுக்கு உணர்த்தும். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

உயிர்மெய்

உயிர்மெய்,  கு.சிவராமன், விகடன் பிரசுரம், பக்.224, விலை ரூ.185. பருவ வயது தொடங்கும் ஆண், பெண் உடல்களில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவது தொடங்கி, திருமணமாகி அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது வரை ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்னைகளைப் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகளைப் பற்றியும் விரிவாக விளக்கும் நூல். தைராய்டு பிரச்னை, ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் கருத்தரிப்பதில் பல தடைகளை ஏற்படுத்துகின்றன. அந்தத் தடைகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. ஆண்-பெண் உறவு தொடர்பான அனைத்து கற்பிதங்கள், நம்பிக்கைகளின் உண்மைத்தன்மைகளை இந்நூல் எடுத்துக்காட்டி, அது […]

Read more
1 7 8 9 10 11 21