சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி

சார்பியல் கோட்பாடு ஓர் அரிச்சுவடி, பேரா.க.மணி, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், விலை 100ரூ. ஐன்ஸ்டைனைப் புரிந்துகொள்ளலாம் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு வெளியாகி 100 ஆண்டுகள் கடந்த பின்னரும் நவீன இயற்பியலில் இன்று நடக்கும் ஆய்வுகளுக்கும், பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்குமான கருவியாகத் திகழ்கிறது. படித்தவர்களுக்குக்கூட எளிதில் புரியாதென்று கூறப்படும் ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டை எளிய முறையில் விளக்கும் சவாலை இந்த நூல் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. ஆங்கிலத்தில் புகழ்பெற்ற மார்டின் கார்ட்னர் எழுதிய ‘ரிலேட்டிவிட்டி சிம்ப்ளி எக்ஸ்ப்ளெய்ண்ட்’ நூலின் மொழிபெயர்ப்பு இது. தூரம், காலம், அளவு ஆகியவை […]

Read more

ஆண்ட்ராய்டின் கதை

ஆண்ட்ராய்டின் கதை, ஷான், யாவரும் பதிப்பகம், விலை 70ரூ. எளிய தமிழில் தொழில்நுட்பக் கதை இன்று நாம் பயன்படுத்தும ஸ்மார்ட் ஃபோன், தொலைபேசி செய்த வேலையை மட்டுமல்லாமல், கால்குலேட்டர், கணினி, இசைக்கருவி, ரேடியோ, டார்ச், கேமரா, வீடியோ கேம்ஸ் இன்னும் ஏகப்பட்ட சாதனங்களின் அம்சங்களை உள்ளடக்கியிருக்கிறது. அதிலும் ஆண்ட்ராய்ட் மென்பொருளின் பயன்பாட்டால் ஸ்மார்ட்ஃபோன் அதி நவீன தொழில்நுட்ப அவதாரத்தை எடுத்துள்ளது. இந்த ஆண்ட்ராய்டின் கதை ஆங்கிலத்தில் உள்ளதே தவிர தமிழில் (எளிய) இல்லை. அந்தக் குறையைப் போக்க ஆண்ட்ராய்ட் மென்பொருளின் வரலாற்றைக் கதைபோல சொல்கிறது […]

Read more

அறிவியல் பார்வையில் ஹைட்ரோகார்பன்

அறிவியல் பார்வையில் ஹைட்ரோகார்பன், த.வி.வெங்கடேஸ்வரன், சி.இ.கருணாகரன், வ.சேதுராமன், ப.கு.ராஜன், அறிவியல் வெளியீடு, விலை 35ரூ. அறிவியல் மக்களுக்கே என்ற முழக்கத்துடன் செயல்பட்டுவரும் தமிழ்நாட்டு அறிவியல் இயக்கத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது இப்புத்தகம். ஹைட்ரோகார்பன் திட்டத்தைப் பற்றிய பல்வேறு அம்சங்களை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், அறிவியலாளர்களைக் கொண்டு, அறிவியல் பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். அரசியல் கலக்காமல், கேள்வி பதில் வடிவத்தில், உள்ளதை உள்ளபடி தெரிவிப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பட்டினிப் புரட்சி

பட்டினிப் புரட்சி, பரிதி, விடியல் பதிப்பகம், விலை 450ரூ. புத்தகத்தின் பெயரைப் பார்த்தால் பட்டினியால் வாடும் மனிதர்களைப் பற்றியது என்ற எண்ணம் வருவது இயல்பு. ஆனால், உண்மையில் சமூகம், சுற்றுச்சூழல், உயிரியல் எனப் பல துறைகளில் இன்றிருக்கும் பிரச்சினைகளையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அபத்தங்களையும் பற்றிப் பேசுகிறது இந்நூல். நம்முடன் வாழும் மனிதர்களில் மூன்றில் ஒருவர் முறையான உணவின்றித் தவிப்பதற்குக் காரணம், தாம் வாழும் சமூக அமைப்புதான் என்பதை அதிரும்படி உணர வைக்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பூச்சிகள் ஓர் அறிமுகம்

பூச்சிகள் ஓர் அறிமுகம், ஏ.சண்முகானந்தம், வானதி பதிப்பகம், விலை 60ரூ. இயற்கையைப் பொறுத்தவரை ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு காரணம் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒரு சங்கிலித் தொடர்பு இருக்கும். அதில் மிக முக்கியமானவை பூச்சிகள். பூச்சியைப் பார்த்தாலே பலருக்கும் அருவருப்பாகத் தோன்றும். ஆனால் அவை அருவருக்கத்தக்கவை அல்ல என்பதை அழகிய படங்களுடனும் அறிவியல் தகவல்களுடனும் சிறப்பாக அறிமுகம் செய்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

ஹைட்ரோ கார்பன் அபாயம் (இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரான பேரழிவுத் திட்டம்)

ஹைட்ரோ கார்பன் அபாயம், (இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரான பேரழிவுத் திட்டம்), கா. அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், பக். 288, விலை225ரூ. உணவு, எரிபொருள் ஆகிய இரண்டுமே மக்களுக்கு மிக முக்கியமான தேவைகள். இவற்றில் பூமிக்குள் பொதிந்திருக்கும் ஹைட்ரோ கார்பனிலிருந்து தான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவை தயாரிக்கப்படுகின்றன. மிகப் பண்டைய காலத்தில் இருந்தே காவிரிப் படுகை விவசாய நிலமாகத் திகழ்ந்து வருகிறது. இப்படுகை நிலத்தைத் தோண்டி ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டால், அந்தப் பிராந்தியம் முழுவதும் விவசாயம் செய்ய முடியாமல் பாழாகிவிடும். ஹைட்ரோ […]

Read more

மருத்துவ மாயங்கள்

மருத்துவ மாயங்கள், டாக்டர் கு.கணேசன், காவ்யா பதிப்பகம். மருத்தவ உலகம் மிகவும் புதிரானது. டாக்டர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்து சீட்டுகூட நோயாளிக்குப் புரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிற மருத்துவர்கள் வாழ்கிற இக்காலத்தில், 21-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள், கண்டுபிடிப்புகள். நவீன சிகிச்சைகள் குறித்து எளிய தமிழில் எழுதியிருக்கிறார் மருத்துவ எழுத்தாளர் கு.கணேசன். மருத்துவச் சொற்களைக் கூறி நம்மை அச்சுறுத்தாமல், குடும்ப நண்பரைப் போன்று விஷயங்களை விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

கையா உலகே ஒரு உயிர்

கையா உலகே ஒரு உயிர், ஜேம்ஸ் லவ்வாக், தமிழில் சா.சுரேஷ், பாரதி புத்தகாலயம், விலை 160ரூ. இன்றைக்கு அனைத்து நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கும் பொருளாக புவி வெப்பமயமாதல் மாறியுள்ளது. இந்தப் பூவுலகு ஒற்றை உயிர் போலவே இயங்குகிறது என்கிற கோட்பாட்டை முன்மொழிந்து அதைப் பரவலாக ஏற்கச் செய்தவர்களில் முக்கியமானவர், இந்நூலின் ஆசிரியர். பருவநிலை மாற்றத்தை மாறுபட்ட கோணத்தில் புரிந்துகொள்ள உதவும் இன்னுமொரு புத்தகம் இது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

உயிரி வளமும் காலநிலை மாற்றமும்

உயிரி வளமும் காலநிலை மாற்றமும், கு.வி.கிருஷ்ணமூர்த்தி, உலகத் தமிழ் பண்பாட்டு மையம், விலை 200ரூ. பல்லுயிர் வாழும் பூமியில், இயற்கையின் கொடையைத் தற்காத்துக் கொள்வதே உத்தமம். பல மாற்றங்களுக்கும், சீற்றங்களுக்கும் புவி வெப்பமடைதலே மையக் காரணமாக உள்ளது. புவி வெப்பமடைவதற்கு மனிதச் செயல்பாடுகளே முதன்மைக் காரணமாக உள்ளது. பருவநிலை மாற்றத்தால் சூழலியலில் ஏற்படும் தாக்கம் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்த நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பறவையியல்

பறவையியல், வ.கோகுலா & சி.காந்தி, ஜாஸிம் பதிப்பகம், விலை 300ரூ. தமிழ்ச் சூழலில் அறிவியல் சார்ந்த படைப்புகள் கணிசமாக இருந்தாலும் பறவையியல் குறித்த படைப்புகள் பெருவாரியாக இல்லை என்பதே உண்மை. சமீபகாலமாகத்தான் பறவைகள் தொடர்பான புத்தகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்தப் புத்தகமும் சேர்ந்துள்ளது. பறவைகளின் உடற்கூறு பற்றி சற்று விரிவாகப் பேசுகிறது இது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more
1 8 9 10 11 12 21