விறலி விடுதுாதுக்களில் தேவதாசியர்

விறலி விடுதுாதுக்களில் தேவதாசியர்; ஆசிரியர்; சி.எஸ்.முருகேசன், வெளியீடு: சங்கர் பதிப்பகம், விலை ரூ. 160/- தமிழ் மொழியில், 96 வகைச் சிற்றிலக்கியங்கள் உள்ளன. சங்க இலக்கியங்களில் நண்டு, நாரை, வண்டு, கிளி போன்றவை துாது சென்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ் இலக்கியங்களுக்கு, நாயக்க மன்னர்கள் ஆதரவு அளிக்காததால், துாது இலக்கியங்களை புலவர்கள் இயற்றியதாக கூறப்படுகிறது.தேவதாசியரின் குடும்ப நிலை, பழக்கவழக்கங்கள், குலதெய்வ வழிபாடு போன்றவற்றை விறலி விடு துாதுக்களில் புலப்படுவதை நுால் விளக்குகிறது. -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

இலங்கையில் இராமாயணத் தேடல்கள்

இலங்கையில் இராமாயணத் தேடல்கள்; ஆசிரியர் : டாக்டர் ஷியாமா சுவாமிநாதன், வெளியீடு: செங்கைப் பதிப்பகம், விலை ரூ. 150/- இலங்கையில், ராமாயண சம்பவம் நடந்த இடங்களை விளக்கும் நுால். இலங்கையின் மலைப்பிரதேசமான நுவாரலியாவில், ‘சீதாஎலியா’ என்ற வனப் பிரதேசம் இருக்கிறது. அங்கே சீதா, நீராடி பொழுதைக் கழித்ததாகச் சொல்லப்படுகிறது. இலங்கையும், ராமாயணமும் பிரிக்க முடியாத ஒன்று. இந்த நுாலைப் படித்தால், இலங்கையில் அந்த இடங்களை தேடி பயணிக்கும் ஆசை ஏற்படும். -பேராசிரியர் இரா.நாராயணன். நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

குறுந்தொகை மூலமும் உரையும்

குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர்.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, விலை: ரூ.500. தமிழர்கள் பண்பாட்டின் முக்கியமான விளைச்சல் குறுந்தொகை. அந்த நூலை 1937-ல் உ.வே.சாமி நாதையர் பதிப்பித்தார். அதற்கான காலத்துக்கேற்ற செம்பதிப்பை சமீபத்தில் உ.வே.சா. நூல் நிலையம் கொண்டுவந்திருக்கிறது. காதலைப் பாடும் சங்கப் பாடல்கள் ஊடாக, தமிழரின் வாழ்க்கை முறையையும் இந்த நூலில் உணர முடிகிறது. குறிப்பாக, இலக்கியத்தோடும் வாழ்க்கையோடும் இயற்கை எந்த அளவுக்கு ஊடாடுகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி: தமிழ் இந்து, 07.01.2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030465_/ இந்தப் […]

Read more

திரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி

திரிகூட ராசப்பக் கவிராயர் பாடியருளிய திருக்குற்றாலக் குறவஞ்சி,  உரை ஆசிரியர் : புலியூர்க்கேசிகன், சந்தோஷ் பப்ளிகேஷன்ஸ், விலை  ரூ.120. வடகரைப் புண்ணிய பூமியின் அரசர் பெருமான் சின்னணஞ்சாத் தேவரின் அரசவைப் பெரும் புலவராக விளங்கியவர் திரிகூட ராசப்பக் கவிராயர். இக்குறவஞ்சியைப் பாடியதும், அன்றைய விஜயரங்க சொக்கலிங்க நாயகரான மதுரை மன்னரின் பாராட்டையும், பரிசையும் பெற்றார்.இலக்கிய நயம் செறிந்த பாடல்களால் ஆனது குற்றாலக் குறவஞ்சி. நாட்டின் பெருமையைக் கூற வந்தபோது கவிஞர் சொல்வார். பாவம் தவிர ஏதும் இங்கே நீங்குவதில்லை. கன்னலும் செந்நெலும் நெருங்குவது தவிரப் […]

Read more

வள்ளுவர் காட்டும் உவமைகள்

வள்ளுவர் காட்டும் உவமைகள்,  பு.சி. இரத்தினம்,  மணிமேகலை பிரசுரம், விலை 90ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு இல்லாத சிறப்புகளே இல்லை எனலாம். ஏழு சீர்களில், உலகமே வியக்கும் படியான பல கருத்துகளைக் கூறியுள்ள நுால் திருக்குறளாக இருப்பதால், பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீரிய கருத்துகளைக் கூற வந்த திருவள்ளுவர், அக்கருத்தை மேலும் தெளிவாக உணர, பல உவமைகளையும் கூறி விளக்குகிறார். உவமைகள் பாடல்களுக்கு மேலும் அழகு தருவதால், அவை அணிகளாகின்றன. பிறருக்கு உதவி செய்பவரிடம் உள்ள செல்வம், ஊர் நடுவே பயன்மரம் பழுத்தது போல […]

Read more

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும்

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும், சி.விநாயகமூர்த்தி, மணிமேகலைப் பிரசுரம், பக்.268, விலை ரூ.200. கபிலர் பல இலக்கியங்களைக் பாடியிருந்தாலும், அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற இலக்கியம் குறிஞ்சிப் பாட்டுதான்! கபிலருக்கும் வள்ளல் பாரிக்குமான நட்பு, தலைவன்-தலைவியரின் காவியக் காதல், கபிலர் பாடிய-கபிலரைப் பாடிய மன்னர்கள், மன்னர்களை நல்லுரை கூறி நல்வழிப்படுத்திய கபிலரின் அறிவுத் திறன் முதலானவற்றுடன், பலவகையான உயிரினங்கள் மற்றும் வரலாற்றுத் தரவுகளையும் குறிஞ்சிப் பாட்டில் காணமுடிகிறது. அவற்றை இந்நூல் விரித்துரைக்கிறது. இயற்கை வருணனைகளையும், உவமைகளையும் தகுந்த இடங்களில் எடுத்துக்கூறி, […]

Read more

அறம் கூறும் ஆத்திசூடி

அறம் கூறும் ஆத்திசூடி, துரை. சக்திவேல், மணிமேகலைப் பிரசுரம், பக். 160, விலை 100ரூ அறம் செய விரும்பு முதல், சக்கர நெறி நில் வரையிலான அவ்வையின் நீதி போதனைகளை, புனைப்புக் கதை வடிவில் சித்திரக் காட்சிகளுடன் எளிய நடையில் படைத்துள்ள ஆசிரியர் சக்திவேல் பாராட்டிற்குரியவர். கணினி மயமான இன்றைய வாழ்க்கைச் சூழலில், நன்னெறி புகட்டும் அறக் கருத்துகளை  சிறார்களுக்கு வழங்கும் நல்ல வாழ்வியல் நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. – த.பாலாஜி நன்றி: தினமலர், 2/2/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

மஸ்னவி

மஸ்னவி, ஜலாலுத்தீன் ரூமி, தமிழில்: நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம், ஃபஹீமிய்யா ட்ரஸ்ட் வெளியீடு, மொத்த விலை: ரூ. 3,700 (7 தொகுதிகள்) உலகின் கவிதைப் பேரிலக்கியங்களுள் பாரசீக சூஃபி ஞானி ஜலாலுத்தீன் ரூமியின் ‘மஸ்னவி’யும் ஒன்று. 27,000 வரிகளில் ஆறு பாகங்களாக வெளியான கவிதைப் பொக்கிஷம் இது. கி.பி. 1258-ல் எழுதத் தொடங்கி 1273-ம் ஆண்டு தனது மரணம் வரை எழுதிய நூல் ‘மஸ்னவி’. இந்த நூலை ஏழு தொகுதிகளாக நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம் மொழிபெயர்த்திருக்கிறார். ரூமியின் ‘மஸ்னவி’ பெருந்தொகுப்பு தமிழ் இலக்கிய உலகம் கொண்டாட வேண்டிய […]

Read more

தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும்

தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள், தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக். 192, விலை 180ரூ. தொல்காப்பியம் தமிழின் முதல் இலக்கண நுால். இந்நுாலின் கருத்துகள் சில, பிராய்டின் கனவுக் கோட்பாட்டுடன் ஒத்துப் போவதை ஒப்பிட்டு ஆய்ந்துரைக்கிறது இந்நுால். தொல்காப்பியன் அகம், புறம் என மனித வாழ்வைப் பகுப்பது போன்று பிராய்டு காமத்தையும், மூர்க்கத்தையும் மனித உள்ளுணர்ச்சிகள் என்று காட்டுகிறார் என ஒப்பிட்டுக் காட்டுகிறது. சிக்மண்ட் பிராய்டைத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில், அவரது கனவு நுாலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனைகளைத் தொல்காப்பியம் கூறும் உள்ளுறை, […]

Read more

உலகவர் போற்றும் முத்தமிழ்

உலகவர் போற்றும் முத்தமிழ், தொகுப்பாசிரியர் மு கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை ரூ. 500 இயல் இசை நாடகம் ஆகிய மூன்று வகை தமிழும் எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதை அறிந்துகொள்ள உதவும் ஆய்வு நூலாக இந்நூல் காணப்படுகிறது. மூவகை தமிழின் வளர்ச்சி தொடர்பாக அனைத்துலக அளவில் திருச்சியில் நடந்த முத்தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட பல அறிஞர்களின் கட்டுரைகள் தொகுப்பு இந்த நூல் இடம் பெற்றிருக்கிறது. தமிழின் பல வகையான நாடகங்கள் கூத்துகள் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் ஆடல் கலை சங்க காலம் முதல் […]

Read more
1 5 6 7 8 9 56