வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும், பெ.சிவசுப்ரமணியம், சிவா மீடியா வெளியீடு, விலை 400ரூ.   தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு அச்சமூட்டும் வகையில் காடுகளில் மறைந்து வாழ்ந்த சந்தனக் கடத்தல் வீரப்பனை முழுமையாகப் படம் பிடித்துக்காட்டும் வகையில் இந்த நூல் தயாராகி இருக்கிறது. துணிந்து காட்டுக்குள் சென்று, மாயாவி என்று அழைக்கப்பட்ட வீரப்பனை முதல் முறை நேரடியாகச் சந்தித்து அவனது பிகைப்படத்தையும் பேட்டியையும் வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய இந்த நூலின் ஆசிரியர், சந்தனக் கடத்தல் வீரப்பனின் சிறு வயது முதல், யானை வேட்டைக்காரனாக இருந்த அவன், […]

Read more

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, வானொலி அண்ணா என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், விலை 120ரூ. பத்திரிகைத் துறை, கல்வி, ஆன்மிகம், விளையட்டு, பொது மக்கள் சேவை போன்ற பன்முகத் துறைகளில் ஒப்பற்று விளங்கிய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கைக் குறிப்பும், அவர் செய்த சாதனைகள், சேவைகள் ஆகியவற்றின் சுருக்கமான வரலாறும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. தொழிலாளர்களோடு தொழிலாளியாக நெருங்கிப் பழகிய அவரது பண்பு, அரசியலில் ஈடுபடாமலேயே, அனைத்து அரசியல் தலைவர்களாலும் கொண்டாட்டப்பட்ட அதிசயம் ஆகியவை உள்ளிட்ட டாக்டர். பா.சிவந்தி […]

Read more

யதி: தத்துவத்தின் கனிதல், சின்னச் சின்ன ஞானங்கள்

யதி: தத்துவத்தின் கனிதல், சின்னச் சின்ன ஞானங்கள், தமிழில்: யூமா வாசுகி, தன்னறம் வெளியீடு, மொத்த விலை: ரூ.620 நித்ய சைதன்ய யதி: இரு அறிமுக நூல்கள்! 1998-ல் ‘காலச்சுவடு’ இதழில் ‘மந்திரம், இசை, மௌனம்’ என்ற தலைப்புடன் ஜெயமோகன் எடுத்திருந்த நேர்காணல், நித்ய சைதன்ய யதி (1924 – 1999) என்ற பெயரைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே அறிமுகப்படுத்தியது. தத்துவம், கலை, இலக்கியம், ஆன்மிகம் எனப் பல தளங்களில் அமைந்த செறிவான அந்த உரையாடல், நித்ய சைதன்ய யதியின் ஆளுமையை உணரச்செய்தது. அதன் […]

Read more

கலைஞர் என்னும் மனிதர்

கலைஞர் என்னும் மனிதர், மணா, பரிதி பதிப்பகம் வெளியீடு, விலை: ரூ.500. கருணாநிதி ஆட்சியில் முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டபோதும் பத்திரிகை யாளர்கள் சந்திப்புகளில் கேள்விகளை எதிர்கொள்ள ஒருபோதும் தயங்கியதில்லை. அவருடைய பதின்பருவத்து வாழ்க்கை, பத்திரிகையாளராகத் தொடங்கியதன் காரணமாக அவருக்கு எப்போதும் பத்திரிகையாளர்கள்மீது இணக்கமான பார்வை உண்டு. பத்திரிகையாளர்கள் கேட்கிற முரண்பாடான கேள்விகளுக்கும் லாகவமாகப் பதில் சொல்லும் ஆற்றல் மிக்கவர் அவர். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படுகிற பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள், அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்துக் கேள்விகளை எழுப்பி […]

Read more

திரை உலகில் செல்வி ஜெயலலிதா

திரை உலகில் செல்வி ஜெயலலிதா, பொன்.செல்லமுத்து, வைகுந்த் பதிப்பகம், விலை: ரூ.950. ஜெயலலிதா என்றவுடன் அவரது அரசியல் வாழ்க்கைதான் முந்திக்கொண்டு நினைவில் வருகிறது. அரசியல் வாழ்வில் அதிரடித் திருப்பங்களைச் சந்தித்தவர் என்பதால் இருக்கலாம். நடிப்பால் பிரபலமாகி, அரசியலில் அடியெடுத்துவைத்த அவரை, அரசியல் தவிர்த்து ஒரு நடிப்புக் கலைஞராக மட்டுமே சிறப்பிக்கிறது இந்தப் புத்தகம். 12 ஆண்டுகளில் ஜெயலலிதா நடித்தது மொத்தம் 121 படங்கள். தமிழில் நடித்த 87 படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்தது மட்டும் 28. கதாநாயகனே மொத்தத் திரைப்படத்தையும் ஆக்ரமித்திருந்த காலத்தில், ஜெயலலிதா […]

Read more

பாரதியாரைப் பற்றி புதிய பார்வை!

பாரதியாரைப் பற்றி புதிய பார்வை!, ஜி.சுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.155. விடுதலைக் குயில் பாரதி குறித்த அரிய செய்திகளை விரித்துச் செல்லும் நுால். பாரதியின் பெருமித உணர்ச்சி, கவித்துவ மேன்மை, இசை அறிவு, நட்பு போற்றும் உருக்கம் எனப் பல்வேறு செய்திகளை விறுவிறுப்பு குறையாமல் சுவைபடச் சொல்கிறார் ஆசிரியர். காந்திமதிநாதனுடன் விளைந்த கவிதைப் போர், கிருஷ்ணசாமி செட்டியார், குவளைக்கண்ணனுடன் பாரதிக்கு இருந்த நெருக்கம், வ.ரா.,வின் பற்றும் ஈடுபாடும், சுதேசமித்திரன், இந்தியா நாளிதழ்கள் குறித்த செய்திகள், பாரதியின் இறுதிச் சொற்பொழிவு, ச.து.சி.யோகியார் பாரதியிடம் கொண்டிருந்த அன்பு […]

Read more

திரை உலகில் செல்வி ஜெயலலிதா

திரை உலகில் செல்வி ஜெயலலிதா, பொன்.செல்லமுத்து, வைகுந்த் பதிப்பகம், விலை: ரூ.950 ஜெயலலிதா என்றவுடன் அவரது அரசியல் வாழ்க்கைதான் முந்திக்கொண்டு நினைவில் வருகிறது. அரசியல் வாழ்வில் அதிரடித் திருப்பங்களைச் சந்தித்தவர் என்பதால் இருக்கலாம். நடிப்பால் பிரபலமாகி, அரசியலில் அடியெடுத்துவைத்த அவரை, அரசியல் தவிர்த்து ஒரு நடிப்புக் கலைஞராக மட்டுமே சிறப்பிக்கிறது இந்தப் புத்தகம். 12 ஆண்டுகளில் ஜெயலலிதா நடித்தது மொத்தம் 121 படங்கள். தமிழில் நடித்த 87 படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்தது மட்டும் 28. கதாநாயகனே மொத்தத் திரைப்படத்தையும் ஆக்ரமித்திருந்த காலத்தில், ஜெயலலிதா […]

Read more

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர், ம. கணபதி, மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.160. ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால். காஞ்சிபுரத்திற்கு குடிபெயர்ந்த பின், யாதவப் பிரகாசர் என்னும் அத்வைதியிடம் வேதம் கற்று வந்தார் ராமானுஜர். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கங்கைக் கரைக்குத் தீர்த்த யாத்திரை சென்ற போது, நர்மதை ஆற்றங்கரையில் தன்னைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதை உணர்ந்தார் ராமானுஜர். உடனே தப்பி, மீண்டும் காஞ்சிபுரம் வந்தார். வழியில் வேட்டுவன் வடிவில் இறைவன் காத்த நிகழ்ச்சியை நாடகப் பாங்கில் படைத்து உள்ளார். திருக்கோட்டியூர் நம்பிகளிடம் […]

Read more

திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர்

திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர், இனியன் கிருபாகரன், இனியன் பதிப்பகம், விலை: ரூ.300. திரைக்குப் பின்னாலும் நாயகன் திராவிட இயக்க இதழ்களை ஆவலோடு சேகரிக்கும் பழக்கமுடைய கிருபாகரனிடமிருந்து வெளிவந்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட ஆளுமைகள் பற்றிய புத்தகங்கள் பரவலான கவனம் பெற்றன. இந்த வரிசையில் திரைக் கலைஞர் ஜெய்சங்கர் இணைந்திருப்பது ஒரு சுவாரஸ்யமான கதை. எம்ஜிஆர் மீது அபிமானம் கொண்ட கிருபாகரனை ஜெய்சங்கரோடு இணைக்கும் புள்ளியாக மனிதாபிமானம் இருக்கிறது. திரைப் பயணத்துக்கு வெளியே ஜெய்சங்கர் செய்த மனிதாபிமான உதவிகளின்பால் ஈர்க்கப்பட்டதிலிருந்து இந்தப் புத்தகத்துக்கான தேடல் […]

Read more

உலகத் தமிழ்த் துாதர் தனிநாயகம் அடிகளார்

உலகத் தமிழ்த் துாதர் தனிநாயகம் அடிகளார், பால்வளன் அரசு, கதிரவன் பதிப்பகம், விலைரூ.120. ஈழத்தில் பிறந்து, தமிழகத்தில் முறையாகத் தமிழ் ஆய்வு மேற்கொண்டு, மலேஷியாவில் பேராசிரியராக வீற்றிருந்தவர் சேவியர் தனிநாயகம் அடிகளார். பன்மொழிப் புலவராகவும், பன்னாட்டுத் தமிழ்த் துாதராகவும், உலகத் தமிழாய்வு மன்ற நிறுவனராகவும், உலகத் தமிழ் மாநாடுகளின் அமைப்பாளராகவும், தமிழ்ப் பண்பாடு என்னும் ஆங்கில முத்திங்கள் இதழின் ஆசிரியராகவும் விளங்கியவர். ஐரோப்பியப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் தமிழ் ஆய்வுச் சொற்பொழிவுகள் ஆற்றியவர். அவரது அரும் பணிகள் பற்றிச் சொல்லும் நன்னுால். தேவநேயப் பாவாணர், […]

Read more
1 2 3 4 5 46