நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர்

நினைவில் வாழும் குழந்தைக் கவிஞர் , தொகுப்பாசிரியர்: தேவி நாச்சியப்பன், குழந்தைப் புத்தக நிலையம்,பக். 288, விலை  ரூ.180.  தமிழில் குழந்தை இலக்கியத்தை ஓர் இயக்கமாக வளர்த்த “குழந்தைக் கவிஞர்’ அழ.வள்ளியப்பாவின் நூற்றாண்டை- நினைவைப் போற்றும் வகையில் வெளிவந்திருக்கிறது இத்தொகுப்பு. அழ.வள்ளியப்பாவுடன் பழகியவர்கள், நண்பர்கள் என நூறு பேரிடமிருந்து பெறப்பட்ட வாழ்த்து, கவிதை, கட்டுரை, கருத்துரை, புதிய கட்டுரைகள் ஆகியவை நான்கு பகுதிகளாகப் பிரித்துத் தனித்தனியே தொகுக்கப்பட்டுள்ளன.  பொள்ளாச்சி நா. மகாலிங்கம், சௌந்தரா கைலாசம், சுப.வீரபாண்டியன், குழ.கதிரேசன், பூவண்ணன், அய்க்கண், திருப்பூர் கிருஷ்ணன், இனியவன், […]

Read more

கலைஞர்: இலக்கியத்தடம்

கலைஞர்: இலக்கியத்தடம், சு.சண்முக சுந்தரம், காவ்யா, பக். 352, விலை ரூ.350. கலைஞர் மு.கருணாநிதியை இன்றைய தலைமுறைக்கும் வருங்கால தலைமுறையினருக்கும் அறிமுகம் செய்து வைக்கும் நோக்கில் இந்நூலை எழுதியிருக்கிறேன் – என்று கூறும் நூலாசிரியர் கலைஞரின் பன்முக ஆளுமைகளை இந்நூலில் பட்டியலிட்டிருக்கிறார். கருணாநிதியின் தமிழ்ப்பணி குறித்து கூறும்போது, நாடகங்களான “தூக்குமேடை’ தொடங்கி “மணிமகுடம்’ வரையிலும், சிறுகதை என்றால் “குப்பைத்தொட்டி’ தொடங்கி திடுக்கிட வைக்கும் சிறுகதைகள் வரையிலும், நாவல் என்றால் “புதையல்’ தொடங்கி “பொன்னர் சங்கர்’ வரையிலும் எந்தெந்த காலத்தில் – எந்தெந்த பத்திரிகைகளில் அவை […]

Read more

பார்த்தது கேட்டது படித்தது – பாகம் 6

பார்த்தது கேட்டது படித்தது – பாகம் 6, அந்துமணி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.300. ஒரு சின்ன பூனைக் குடும்பம்; அதுல, அம்மா, அப்பா, ஒரு குட்டிப் பூனைன்னு அன்பு அன்பா குடும்பம் நடந்துச்சாம்… ஒரு நாள், அப்பா பூனை செத்துப் போச்சாம். அப்போ அம்மா பூனையும், குட்டி பூனையும் அப்பாவோடு பேசி மகிழ்ந்த வார்த்தைகளைச் சொல்லிச் சொல்லி அழுதுச்சாம்… அது ரெண்டும் என்ன சொல்லி அழுதுச்சுன்னு சொல்லுங்க பார்ப்போம்? ரஜினி சாரை போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொன்னா, எப்பவுமே தலையை […]

Read more

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும், அந்தோன் சேகவ், தமிழில் ரா.கிருஷ்ணய்யா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 300ரூ. ரஷிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான அந்தோன் சேகவ் எழுதிய கதைகள் அனைத்தும் இலக்கியத் தரம் வாய்ந்தவை. அவற்றில் இருந்து 4 சிறுகதைகளும் 4 குறுநவால்களும் தேர்ந்தெடுத்து இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அனைத்துக் கதைகளிலும், அந்தக் கால ரஷியாவின் சமூக கலாசாரம், மக்களின் போக்கு ஆகியவை யதார்த்தமான முறையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதிகாரிகள் எவ்வாறு ஆட்சியாளர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பச்சோந்தி என்ற சிறுகதை அழகாகப் […]

Read more

எல்லோருக்குமானவரே

எல்லோருக்குமானவரே, க.கணேசன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, விலை: ரூ.20. அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி கடந்த ஏப்ரல் 14 அன்று மலிவுப் பதிப்பாக வெளியான ‘எல்லோருக்குமானவரே’ நூல், இதுவரையில் இரண்டாயிரம் பிரதிகளுக்கும் மேலாக விற்பனையாகியுள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி குறித்த அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றி அசோக் தாவ்லே எழுதிய கட்டுரை, பெண் விடுதலைக்கு அம்பேத்கரின் பங்களிப்பு குறித்து பிருந்தா காரத் எழுதிய கட்டுரை ஆகியவற்றின் மொழிபெயர்ப்புடன் பேராசிரியர் க.கணேசன் எழுதிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்திய அரசமைப்பின் சிற்பி, ஒடுக்கப்பட்டோரின் தலைவர் என்பதைத் தாண்டி மானுடவியல், […]

Read more

வால்மீகி அறம்

வால்மீகி அறம், நல்லி குப்புசாமி ரெட்டியார், பிரய்ன் பேங்க் பப்ளிகேஷன், விலை 395ரூ. வியாசர் அறம் என்ற நூல் மூலம் மகாபாரதத்தைத்தந்த தொழில் அதிபர் நல்லி குப்புசாமி ரெட்டியார். அவர் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் உள்ள கதைகள் கூறும் அறம் என்ன என்பதை இந்த நூலில் கொடுத்து இருக்கிறார். இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்தில் ஓர் அறவுரையும், அதனைத் தொடர்ந்து ராமாயணக் கதைகளும் நீதிகளும் சொல்லும் அறமும், அந்த அறத்தை சமீபகால நடப்புகளுடன் ஒப்பிட்டு, அதன் மூலம் நாம் பெற வேண்டிய பாடம் […]

Read more

காந்திஜியின் பொன்மொழிகள்

காந்திஜியின் பொன்மொழிகள், அருள்நம்பி, நர்மதா பதிப்பகம், விலைரூ.70. மகாத்மா காந்தியை புகழாத மனிதரில்லை; போற்றாத நாடில்லை; எழுதாத மொழி இல்லை. காந்தியின் அமுத மொழிகளை அனைத்து மதத்தினரும், எந்த நாட்டினரும் ஏற்றுக்கொள்பவை. இந்நுாலும் அந்த வகையில் அமைந்துள்ளது. கடவுள், தீண்டாமை, உழைப்பு, தியாகம், பணிவு, பகுத்தறிவு, ஒழுக்கம், அன்பு, இயற்கை வைத்தியம் போன்ற தலைப்புகளில் பொன்மொழிகள் அமைந்துள்ளன. மரணம் பேய் அல்ல; ஆவிகளுடன் பேச முடியுமா? யமனை கண்டு ஓடுபவரா? மறு பிறப்பு உண்டா? மரணத்திற்கு பின் தொண்டு போன்ற கேள்விகளுக்கு, காந்தி என்ன […]

Read more

தமிழ்க்காற்றின் உயிரோசை

தமிழ்க்காற்றின் உயிரோசை, வே.குமரவேல், முல்லை பதிப்பகம்,  பக்.208, விலை ரூ.160. மேடைப் பேச்சுக்கு, சொற்பொழிவுகளுக்குதமிழர் வாழ்வை மாற்றியமைத்ததில் மிகப் பெரிய பங்குண்டு. தமிழகத்தின் சிறந்த பேச்சாளர்களைப் பற்றிய அறிமுகமாகவும், அவர்களுடைய சொற்பொழிவுகளைப் பற்றிய மென்மையான விமர்சனமாகவும் இந்நூல் அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக சிறந்த சொற்பொழிவாளரான ஸ்டாலின் குணசேகரனின் சொற்பொழிவுகள் குறித்த விரிவான தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. “ஸ்டாலின் பேச்சில் சொல் அலங்காரம் இருக்காதே தவிர, சொல்லாட்சி இருக்கும். வர்ணனைகளும் தனிமனிதத் துதியும் தனி மனிதத் தாக்குதலும் இல்லாமல், இலக்கணம் வகுப்பது போல கனகச்சி […]

Read more

நல்லாரைக் காண்பதுவும்

நல்லாரைக் காண்பதுவும், டி.கே.எஸ்.கலை வாணன், வானதி பதிப்பகம், பக்: 416, விலை ரூ.350. வாழ்ந்து மறைந்த நல்லோர்கள், வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லோர்கள் என மொத்தம் எழுபது பேர்களைத் தேர்வு செய்து, அவர்களின் நற்குணங்களையும், நல்ல தன்மைகளையும் சம்பவங்களுடன் இந்நூலில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர். அவ்வை டி.கே.சண்முகத்தின் புதல்வரான இவர், எந்த வகையில் அவர்களோடு இணைந்திருந்தார் என்பதையும், அவர்களிடமிருந்து கற்றதையும், பெற்றதையும் சுவைபட ஒரு டைரி குறிப்பைப் போன்று எழுதிக் குவித்திருக்கிறார். வாழ்ந்து மறைந்த நல்லோர் வரிசையில் காமராஜர், அண்ணா, க.அன்பழகன், ஜி.கே. மூப்பனார், ஜி.உமாபதி, நீதியரசர் […]

Read more

இறையுதிர் காடு

இறையுதிர் காடு, இந்திரா சவுந்தர்ராஜன், விகடன் பிரசுரம், விலைரூ.1350. நவபாஷாண முருகன் சிலையை உருவாக்க, போகர் என்னென்ன பாஷாணங்கள் பயன்படுத்தினார்; உறுதித் தன்மைக்கு, என்ன கலவை கலந்தார். இதற்காக, எங்கெல்லாம் சென்று மூலிகை சேகரித்தனர் என விவரிக்கிறது இந்நுால். முருகன், சர்வரோக நிவாரணி என்கின்றனரே அது உண்மையா? ஹிந்து சமயத்தில் எவ்வளவோ கடவுள்கள் இருக்க, போகர் பிரான், எதனால் முருகனை பாஷாணத்தில் கட்டமைத்தார்? அழகிய கோலங்களை பொருட்படுத்தாமல், ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகனை செய்தார்? போன்ற கேள்விகளுக்கான விடையை விவரிக்கிறது. ஆனந்த விகடனில், 87 […]

Read more
1 2 3 4 5 63