விதை அரசியல்

விதை அரசியல, பாமயன் , தமிழினி வெளியீடு , இடுபொருட்களை விற்பனைசெய்து வேளாண்மையில் இனிமேலும் பெரும் லாபம் சம்பாதிக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட பன்னாட்டு நிறுவனங்கள், அடிமடியில் கை வைக்கும் விதமாக விதை வியாபாரத்தை கையில் எடுத்துள்ளன. இது எப்படிப்பட்ட பேரழிவுக்கு இட்டுச்செல்லும் என்று எச்சரிக்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பணத்தின் பயணம்

பணத்தின் பயணம் – பண்ட மாற்று முதல் பிட்காயின் வரை, இரா. மன்னர் மன்னன், விகடன் பிரசுரம், பக்.336; ரூ.260; கற்காலத்தில் இருந்து தற்காலம் வரையிலும் பணத்தின் பரிணாம வளர்ச்சியை சொல்லும் நூல் இது. பழங்காலத்தில் இருந்த பண்டமாற்று முறை, தங்கம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை பிணயப் பொருள்களாகப் பயன்படுத்தியது, கரன்சிகள் உருவெடுத்த வரலாறு, பல்லவர் காலத்தில் பணம் தொடர்பாக பொதிந்துள்ள பொருள் மதிப்பு, பொற்காசுகளாக மாறிய வரலாறு உள்ளிட்டவற்றை தெள்ளத் தெளிவாக நூல் ஆசிரியர் விளக்கியுள்ளது இந்த நூலின் சிறப்பு அம்சமாகும். […]

Read more

ஜி.எஸ்.டி.கையேடு

ஜி.எஸ்.டி.கையேடு,என்.இராமதாஸ், டி.ரமேஷ், பிரணவம் அசோசியேட்ஸ், பக். 44, விலை 100ரூ. சரக்கு மற்றும் சேவை வரிக்குள் உள்ளடங்கும் மத்திய – மாநில வரிகள், நான்கு விதமான ஜி.எஸ்.டி., சட்டங்கள், உள்ளீட்டு வரி வரவை கழித்துக்கொள்ளும் முறை, ‘ரிட்டர்ன்’ சமர்ப்பிக்க மற்றும் வரி செலுத்த வேண்டிய முறை, வரி தீர்மான மதிப்பீட்டிற்கு மேல்முறையீடு, வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் விபரம் உள்ளிட்டவை இந்நுாலில் இடம்பெற்றுள்ளன. வணிகவியலாளருக்கு மிகவும் பயனுள்ள எளிய நுால் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

பணமே பணமே ஓடோடி வா

பணமே பணமே ஓடோடி வா, ஏ.எல்.சூர்யா, பி பாஸிட்டிவ் புரொடக்ஷன்ஸ், பக்.296, விலை ரூ.300. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எல்லாரும் விரும்புகிறார்கள். ஆனால் என்னதான் உழைத்தாலும், எவ்வளவு முயற்சி செய்தாலும் பணத்தைச் சம்பாதிக்க முடியவில்லை; அப்படியே சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லை என்று புலம்புபவர்களே அதிகம். அவர்களுக்கு வழிகாட்டும்விதமாக, இந்நூல் மலர்ந்திருக்கிறது. பணம் சம்பாதிக்க விரும்புபவர்கள் முதலில் தங்களுடைய ஆழ்மனதை அதற்குத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குரிய பயிற்சிகளை இந்நூல் விளக்குகிறது. ஓர் இடத்தில் வேலை செய்பவர்கள் சுயமாக எதையும் செய்ய முடியாது. […]

Read more

வங்கிகள் வழங்கும் சேவைகள்

வங்கிகள் வழங்கும் சேவைகள், எம். ராமச்சந்திரன், வசந்த் பதிப்பகம், பக்.190, விலை 150ரூ. சேமிப்பு, நடப்பு, தொடர் கணக்கு, பிக்ஸட் டெபாசிட், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கி கணக்குகள், நியமனதாரர் நியமனம், டெபாசிட் இன்சூரன்ஸ், உரிமை கோரப்படாத வங்கி டெபாசிட்டுகள், டிமாண்ட், தவணை, ஓவர் டிராப்ட்… கிரிடிட் இன்பர்மேஷன் ரிப்போர்ட், பத்திரக் காப்பகம், பாதுகாப்பு பெட்டகம், தேசிய மின்னணு பணம் மாற்றுதல், மின்னணு தீர்வு, ஒருங்கிணைந்த வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை, இன்டர்நெட், எஸ்.எம்.எஸ்., உள்ளிட்ட வங்கி சேவைகளை பட்டியலிட்டு கூறுகிறது இந்நுால். […]

Read more

ரூபாய் நோட்டுக்கள் தடை

ரூபாய் நோட்டுக்கள் தடை,  எஸ். குருமூர்த்தி, அல்லயன்ஸ் வெளியீடு, பக். 160, விலை ரூ. 120. இந்த நூலின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி நாடறிந்த பொருளாதார நிபுணரும் அரசியல் விமர்சகருமாவார். நாட்டின் முக்கிய பொருளாதார விவகாரங்களைப் பற்றி எழுதி வருகிறார். நாட்டையே உலுக்கிய உயர் மதிப்பு கரன்சி மதிப்பிழப்பு குறித்து எஸ். குருமூர்த்தி எழுதிய முக்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். மேலும் ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பைத் தொடர்ந்து ஆங்கிலத் தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டிகளின் தமிழாக்கமும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த […]

Read more

வங்கிகள் வழங்கும் சேவைகள்

வங்கிகள் வழங்கும் சேவைகள், M.ராமச்சந்திரன், வசந்த பதிப்பகம், விலை 150ரூ. வங்கியில் உயர் பதவிகளை வகித்தவரும், வங்கி பயிற்சி கல்லூரி பேராசிரியருமான எம்.ராமச்சந்திரன், வங்கிகள் குறித்த பொதுமக்கள் அறிய வேண்டிய தகவல்களை புள்ளி விவரங்களுடன் இந்நூலில் கொடுத்துள்ளார். இந்த நூலின் விலை 150ரூ. மற்றும் சிறுதொழில் கடன் (:ரூ.100). வியாபாரக் கடன் (ரூ.75), வீட்டுக்கடன் (ரூ70), வாகனக் கடன் (ரூ.60), கல்விக்கடன் (ரூ70), விவசாயக் கடன்(ரூ.60), காசோலைகள் (ரூ120) ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். எல்லாமே, வங்கிப் பணிகள் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ள […]

Read more

ஃபால்ட் லைன்ஸ்

ஃபால்ட் லைன்ஸ், ஹவ் ஹிடன் ஃப்ராக்சர்ஸ் ஸ்டில் த்ரெட்டன் த வேர்ல்ட் எகானமி, ரகுமாம் ஜி. ராஜன், ஹாப்பர் காலின்ஸ் பப்ளிஷர்ஸ், விலை 499ரூ. விரிந்த பார்வையில் உலகப் பொருளாதாரம் சீட்டுக்கட்டுக் கோட்டையைப் போல் 2008-ல் மளமளவெனச் சரிந்த உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை முன்னறிவித்த பெருமைக்குரியவர் ரகுராம்ராஜன். உலகப் பொருளாதாரத்தின் நலிவுற்ற பகுதிகளை சீர்செய்யவில்லை எனில் அதைவிட மோசமான பின்னடைவை உலகம் சந்திக்க வேண்டியிருக்கும் என இந்நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் நுகர்வுக் கலாச்சாரத்தையே நம் நாட்டு வளர்ச்சிக்கு ஆதாரமாகக் கொண்டு செயல்படுவது சரியான ஒன்றல்ல […]

Read more

டாக்டர் அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள் ஓர் ஆய்வு

டாக்டர் அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள் ஓர் ஆய்வு, இரா.நடராசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 130ரூ. அம்பேத்கரின் பல்வேறு வாழ்வியல் பரிமாணங்களையும், வாழ்க்கை வரலாற்றையும் பல்துறை சார்ந்த அவரின் சிந்தனைகளும் இடம்பெற்றுள்ளன. இந்திய சமூக மாற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளதார வளர்ச்சிக்காகவும் அவர் கையாண்ட முறைகளை இந்த நூல் படம் பிடித்து காட்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 25/10/2017,

Read more

டிஜிட்டல் பணம்

டிஜிட்டல் பணம், சைபர் சிம்மன், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. வளர்ந்த நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை விரிவாக அலசும் நூல். நிதிச் சமுகத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டுமானால் அதற்கு டிஜிட்டல் பணமே ஒரே வழி என்பதை எளிமையாக இந்த நூல் புரிய வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 2/8/2017.

Read more
1 2 3 4 5