கையிலிருக்கும் பூமி

கையிலிருக்கும் பூமி, சு. தியடோர் பாஸ்கரன், உயிர்மை வெளியீடு, விலை 600ரூ. மூத்த சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் தமிழில் சூழலியல் எழுத்துக்குத் தனி அடையாளம் பெற்றுத் தந்தவர். தமிழில் அவர் எழுதிய 100 கட்டுரைகள் அடங்கிய இந்த முழுத் தொகுப்பு, முதன்மையான சூழலியல் ஆவணமாக வெளியாகியுள்ளது நன்றி: தமிழ் இந்து, 5/1/119. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027340.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கடலம்மா பேசுறங் கண்ணு!

கடலம்மா பேசுறங் கண்ணு!, வறீதையா கான்ஸ்தந்தின்,இந்து தமிழ், கடல், மீன்கள், துறைவர்கள், அவர்களது சமூகம்-பண்பாடு-சூழலியல் குறித்து மிகப் பெரிய திறப்பைத் தந்த இதே தலைப்பிலான தொடர், ‘இந்து தமிழ்’ நாளிதழில் ஓராண்டுக்கும் மேலாக வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் புத்தகமாகவும் வெளியாகியுள்ளது நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 0444959581

Read more

ஐம்பேரியற்கை

ஐம்பேரியற்கை. மாற்கு, தமிழினி . போராடும் மாநிலமாக மாறியுள்ள தமிழகத்தின் அத்தனை போராட்டங்களுக்கும் மைய இழை, இயற்கையைப் பாதுகாப்பதுதான். அந்த நோக்கத்துக்கு இலக்கிய வடிவம் கொடுத்திருக்கிறார் மாற்கு. கிராமத் தன்னிறைவு, சமத்துவம், எளிய வாழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற லட்சியங்களைக் கொண்ட ஒரு வெற்றிகரமான கிராமத்தை முன்மாதிரியாகக் காட்டுகிறது கதை. தொண்டு நிறுவனங்களின் லாப நோக்கம், நகர நாகரிகத்தின் தாக்கத்தால் மறந்துபோன 23 மூலிகைகளின் பட்டியல் என்று நடப்பையும் இழப்பையும் ஒருசேரப் பேசுகிறது. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

சிவப்புக் கிளி

சிவப்புக் கிளி, வசுதேந்திரா – தமிழில் யூமா வாசுகி,  பாரதி புத்தகாலயம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நம் அனைவரது வாழ்வையும் நேரடியாகத் தீண்டத் தொடங்கிவிட்ட நிலையிலும், அவற்றைக் குறித்த அடிப்படை உணர்வு அற்றவர்களாகவே பெரும்பாலோர் இருக்கிறோம். இயற்கையையும் நம் வாழ்க்கையையும் எப்படிப்பட்ட அவலமான வகையில் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அழுத்திச் சொல்லும் கதைகளில் ஒன்று ‘சிவப்புக் கிளி’. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சுற்றுச்சூழல் சிதறல்கள்

சுற்றுச்சூழல் சிதறல்கள், ஜே.ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், விலை 420ரூ. சுற்றுச்சூழல் பாழ்பட்டு வருவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. இதில் இடம் பெற்றுள்ள 100 கட்டுரைகளிலும் வளங்கள், நீர்நிலைகளை பாதுகாப்பது, பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் ஆபத்து போன்ற பயனுள்ள பல அரிய தகவல்கள், புள்ளி விவரங்கள் இடம்பெற்று உள்ளன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027226.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

சுற்றுச்சூழல் காப்போம் வாங்க

சுற்றுச்சூழல் காப்போம் வாங்க, பொறிஞர் எஸ்.சுந்தரம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.104, விலை 75ரூ. கழிவுப் பொருட்களால் நதிகள் வீணாவதையும், கிரீன் ஹவுஸ் விளைவுகளையும், ஓசோன் அடுக்கு பற்றி மக்கள் கவலைப்படுவதையும், குப்பை கழிவுகள் எங்கே செல்கின்றன… அமில மழை என்றால் என்னவென்பதையும், மின்சார கார்களை ஏன் உபயோகிக்கவில்லை? எரிபொருள் நெருக்கடி, சலவை சோப்புகளால் பூமி மாசுபடுவதையும், பவளப்பாறைகளின் முக்கியத்துவத்தையும், பயனற்றவையிலிருந்து செல்வம் பெறுவது எப்படி? ஒருவருக்கான உணவை 20 பேருக்கு அளிப்பது என்பதையும் படங்களுடன் விவரிக்கிறது இந்நுால். நன்றி:தினமலர், 20/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

மறைந்து வரும் மரங்கள்

மறைந்து வரும் மரங்கள், சுப்ரபாரதி மணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.116, விலை ரூ.100. உலக அளவில் வெப்பநிலை உயர்வதற்கான காரணங்களில் ஒன்று, மரங்களை வெட்டுவதும். நமதுநாட்டில் பல பாரம்பரிய மரங்கள் பல அழிந்து வருகின்றன. அவ்வாறு அழிந்து வரும் மரங்களில் இலுப்பை, இலந்தை, மாவிலங்கம், சந்தன வேங்கை, தான்றி, மகிழம், கோங்கு, விளா, சரக்கொன்றை, கடுக்காய், மகாவில்வம், திருவோடு, பூவரசு, வெட்டிவேர், சந்தனம், நாவல், உருத்திராட்சம் உள்ளிட்ட 30 மரங்களைப் பற்றி நாம் அறியாத பல செய்திகள் இந்நூலில் இடம் […]

Read more

பட்டினிப் புரட்சி

பட்டினிப் புரட்சி, பரிதி, விடியல் பதிப்பகம், விலை 450ரூ. புத்தகத்தின் பெயரைப் பார்த்தால் பட்டினியால் வாடும் மனிதர்களைப் பற்றியது என்ற எண்ணம் வருவது இயல்பு. ஆனால், உண்மையில் சமூகம், சுற்றுச்சூழல், உயிரியல் எனப் பல துறைகளில் இன்றிருக்கும் பிரச்சினைகளையும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அபத்தங்களையும் பற்றிப் பேசுகிறது இந்நூல். நம்முடன் வாழும் மனிதர்களில் மூன்றில் ஒருவர் முறையான உணவின்றித் தவிப்பதற்குக் காரணம், தாம் வாழும் சமூக அமைப்புதான் என்பதை அதிரும்படி உணர வைக்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம், என்.ராமதுரை, க்ரியா பதிப்பகம், விலை 130ரூ. உலகெங்கிலும் பருவநிலை மாறி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கோடையில் வெயில் வழக்கத்தை விடக் கடுமையாக இருக்கிறது. புயல்கள் அதிகரிக்கின்றன. சில இடங்களில் அளவுக்கு மீறி மழை பொழிகிறது அல்லது வறட்சி தலைகாட்டுகிறது. இது ஏன் என்பதை இந்த நூல் எளிமையாக விளக்குகிறது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

இனயம் துறைமுகம்

இனயம் துறைமுகம், கிறிஸ்டோபர் ஆன்றணி, எதிர் வெளியீடு, விலை 120ரூ. நவீன யுகத்தில் இயற்கைச் சீர்கேடு மிகவும் அதிக அளவில் நடக்கிறது. அது காடானாலும் கடலானாலும் ஒன்றுதான். கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள இனயம் துறைமுகத்தைச் சுற்றி நடக்கும் அரசியல் பற்றியும், பவளத் திட்டுச் சிதைவுகள் உள்ளிட்ட சூழலியல் பாதிப்புகள் பற்றியும், கடலில் கலக்கும் பெட்ரோலிய கதிர்வீச்சால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது இந்தப் புத்தகம். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more
1 2 3