தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள்

தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள், ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன், வாசகசாலை பதிப்பகம், விலை: ரூ.170 தமிழ்நாட்டில் உலக சினிமா மீது ஆர்வம் கொண்டு நுழைபவர்கள் ஒவ்வொருவரும் தவிர்க்க முடியாமல் கேட்கும் பெயராக க்வென்டின் டாரன்டினோ பெயர் மாறியிருக்கிறது. டாரன்டினோவின் படங்களையெல்லாம் நுட்பமாக அலசி, அவருக்கென 160 பக்கங்களில் ஒரு புத்தகம் கொண்டுவந்திருக்கிறார் ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன். இந்தப் புத்தகம் ஆய்வு நோக்கிலான பார்வையைக் கொண்டிருக்கவில்லை; மாறாக, டாரன்டினோவின் ஆத்மார்த்தமான ரசிகரின் பார்வையாக வெளிப்படுகிறது. நன்றி: தமிழ் இந்து, 7/3/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030231_/ இந்தப் புத்தகத்தை […]

Read more

வாழ நினைத்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம், முனைவர் செளந்தர மகாதேவன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150 நுாலாசிரியர் முனைவர் சவுந்தர மகாதேவனின், ‘வாழ நினைத்தால் வாழலாம்’ என்ற புத்தகம், திருக்குறளின் சாறு பிழிந்து, சுவைமிகு ரசமாக படைக்கப்பட்டிருக்கிறது. இன்பம், துன்பம், நம்பிக்கை, நட்பு என எந்த பக்கம் திரும்பினாலும், வழிகாட்டியாய், கலங்கரை விளக்கமாய் திருக்குறள் நமக்கு ஆறுதல் தருகிறது என்பதை சொல்லியிருக்கிறார். உலகப் பொதுமறையான திருக்குறளை விளக்க உரையுடன் தராமல், சிறு சிறு குட்டிக் கதைகளை சொல்லி, அவற்றின் வழியே திருக்குறள் கருத்துக்களை விளக்கும் […]

Read more

மறக்க முடியுமா?

மறக்க முடியுமா?, எம்.கே.நடராஜன், லட்சுமி பதிப்பகம், விலைரூ.200 பர்மாவில், இரண்டாம் உலகப் போர் அனுபவத்துடன் துவங்குகிறது புத்தகம். வாழ்க்கையை, தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்ட விதம் விவரிக்கப்பட்டுள்ளது. போரற்ற, நோயற்ற நிலை நோக்கி நகர துாண்டும் தொகுப்பு நுால். புத்தகத்திலிருந்து… பர்மா நாட்டில், மீங்கேயில், 1940ல் வசித்தோம். தமிழரை, ‘கள்ளா’ என்று அழைப்பர். பள்ளியில், 5ம் வகுப்பில் இருந்தேன். பேரிரைச்சலுடன் விமானங்கள் பறந்தன. தலை தெறிக்க ஓடினோம். 40 ஜப்பானிய விமானங்கள் குண்டுகளை பொழிந்தன. அன்று மூடிய பள்ளி திறக்கவேயில்லை. ஆங்கிலேய அதிகாரிகள் பர்மாவை விட்டு வெளியேற […]

Read more

ஆத்மபோதம்

ஆத்மபோதம்,  க. மணி;  அபயம் பப்ளிஷர்ஸ், பக்.260; விலை ரூ.350.   நான் என்னும் சொல்லை நாம் எல்லாருமே ஒவ்வொரு நாளும் பலமுறை உச்சரிக்கிறோம். ஆனால், அந்த நான் என்பது என்ன? அது நம் உடலா? உறுப்பா? மனமா? இவை மூன்றுமே இல்லையென்றால் வேறு எது? நான் என்பதற்கும் நான் அல்லாதவற்றிற்கும் என்ன வேறுபாடு? அந்த வேறுபாட்டை நாம் எப்படி அறிவது? அதனை அறிவதால் நாம் பெறக் கூடிய பயன் என்ன? இந்த வினாக்கள் அனைத்திற்கும் விடையாக அமைந்திருக்கிறது இந்த நூல். கனமான விஷயம் குறித்த […]

Read more

இந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை

இந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை, மு.நீலகண்டன்; கனிஷ்கா புக் ஹவுஸ், பக்.236; விலை ரூ.200;  பெண் விடுதலை என்பதும், பெண் சுதந்திரம் என்பதும் ஆண்களுக்கு எதிரானது அல்ல. பெண் விடுதலை என்பது சமூகத்தின் விடுதலையே என்ற அடிப்படையில் பெண்ணியத்தை அணுகும் நூல். 1938 – ஆம் ஆண்டு பம்பாய் மாநில சட்டமன்றத்தில் அம்பேத்கர் சுதந்திரத் தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்தபோது, குடும்பக்கட்டுப்பாடு தொடர்பான தனிநபர் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார். கருவுறுவதும், குழந்தை பெறுவதும் முற்றிலும் பெண்கள் தங்கள் விருப்பப்படித் தெரிந்தெடுத்ததாக இருக்க வேண்டும் என்பது […]

Read more

பீனிக்ஸ் பெண்கள்

பீனிக்ஸ் பெண்கள், வினிதா மோகன், எழிலினி பதிப்பகம், விலைரூ.250 உலக அளவில் தன்னம்பிக்கை ஊட்டும் பெண்களின் வெற்றி வாழ்க்கை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. 20 பேர் பற்றி எழுதப்பட்டுள்ளது. முதல் கட்டுரையே, தமிழகத்தில் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பற்றியது. சுருக்கமான வாழ்க்கை வரலாற்றுடன், சாதனையை வியந்து எழுதப்பட்டுள்ளது. பல துறைகளில் மிளிர்ந்த பெண்களின் வியப்பான வாழ்க்கை, சாதனை புரிய துாண்டுதல் என நம்பிக்கை தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பதின்பருவ சிறுமியர், லட்சியப் பாதை வகுக்க உதவும் .நன்றி: தினமலர், 17/5/20 இந்தப் […]

Read more

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும், ராஜ்கௌதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.270 எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் எண்ணத்தையும், போக்கையும் அவரது படைப்புகள் வாயிலாகக் கண்டறியும் முயற்சியின் வெளிப்பாடு தான் இந்த நுால். எல்லாவற்றையும் தன் கண்ணோட்டத்திற்குள் நுணுகிப் பார்க்கும் பார்வையை, சுந்தர ராமசாமியின் கருத்தாகக் காணமுடிகிறது. ‘சுந்தர ராமசாமியின் சிறுகதைகள், விமர்சன – விவாதக் கட்டுரைகள் முழுவதையும் படித்து அசை போட்ட பின், புளிய மரம் தந்த உற்சாகம் கிடைக்கவில்லை’ என, தன் என்னுரையிலேயே சுருங்கிய வடிவத் திறனாய்வாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர். ‘சு.ரா.வுக்கு […]

Read more

ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்

ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம், மருதன், கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.50. வரலாற்றாசிரியரின் வரலாறு மொழிபெயர்ப்பு நூல்கள், கட்டுரைகள் வழியாக ஏற்கெனவே தமிழுக்கு அறிமுகமாகியிருப்பவர் வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர். அவரது வாழ்க்கை வரலாற்றையும் வரலாற்றுக்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பையும் பற்றித் தெளிவாகவும் சுருக்கமாகவும் மருதன் எழுதியுள்ள நூல்தான் ‘ரொமிலா தாப்பர் ஓர் எளிய அறிமுகம்’. ரொமிலா தாப்பர் சிறு வயதில் காந்தியைச் சந்தித்தது, நேருவைச் சந்தித்தது போன்றவை குறித்தெல்லாம் மருதன் சுவைபட எழுதியிருக்கிறார். சம காலத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட, விமர்சிக்கப்பட்ட ஒரு வரலாற்று […]

Read more

அணிந்துரை அணிவகுப்பு

அணிந்துரை அணிவகுப்பு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், பக். 240,விலை 150ரூ. இந்த நூலில் 30 அணிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.மூல நுாலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த அணிந்துரைகள் ஏற்படுத்தும். ஏற்றுக்கொண்ட நுாலின் ரசமான பகுதிகளை ஆசிரியர் குறிப்பிடுவது நேர்த்தியானது. ‘மு.வ.,வின் செல்லப் பிள்ளை’ எனத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் அழைக்கப் பெறும் இரா.மோகன், சாகித்ய அகாடமிக்காக எழுதிய கு.ப.ராஜகோபாலன், கல்கி, முடியரசன், மீரா குறித்த ஆய்வு நுால்கள் எல்லாம் தனிப் பெரும் சாதனை எனச் சொல்லலாம். அணிந்துரை அணிவகுப்பு என்ற இந்த நுாலிலும் […]

Read more

இராஜாஜி

இராஜாஜி, ம.பொ. சிவஞானம், ஏ.கே.எல்., பதிப்பகம், விலைரூ.165 மூதறிஞர் ராஜாஜி பற்றி செங்கோல் இதழில், 1985 முதல், 1987 வரை எழுதப்பட்ட, 41 கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். 130 நுால்களை எழுதியுள்ள ம.பொ.சி., இந்நுால் அவற்றிலிருந்து தனிப்பட்ட ஒன்று எனக் கூறியுள்ளார். ராஜாஜியின் முதல் நுாலான, ‘ஸோக்ரதர்’ – சாக்ரடீஸ் மூலம் அவரின் எழுத்திலும், விடுதலைப் போராட்டத் தலைவர் என்பதன் மூலம் பேச்சிலும் ஈடுபாடு கொண்டு, பின் அவரையே குருவாக ஏற்ற ம.பொ.சி., ராஜாஜியின் அரசியல், ஆன்மிகம், குணநலன்கள், ஆட்சித் திறன் போன்றவற்றை இந்நுாலின் […]

Read more
1 19 20 21 22 23 88