முதுவர் வாழ்வியல்

முதுவர் வாழ்வியல், முனைவர் க.முத்து இலக்குமி, திருக்குறள் பதிப்பகம், பக். 216, விலை 160ரூ. தமிழக பழங்குடி மக்களான முதுவர் இனத்தை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். எட்டு தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. தமிழக – கேரள எல்லையில் வாழும் பழங்குடியினர் வாழ்க்கை தனித்துவமானது. இந்த மக்களின் பழக்கவழக்கங்களை ஆராயும் நுால்கள் பல வந்துள்ளன. அவை, தமிழகத்தின் பன்முகத்தை காட்டும். கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் முதுவர் என்ற பழங்குடி மக்கள் வாழ்க்கை பற்றிய புத்தகம் இது. இவர்கள் வசிக்கும் கிராமங்களில் சென்று, […]

Read more

தலித் பண்பாடு

தலித் பண்பாடு, ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 118, விலை 100ரூ. சாதிய ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் எவ்வாறு கட்டமைந்துள்ளன என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள நுால். சாதிப்படி நிலையில் அங்கீகாரம் பெற செய்து வரும் பூஜை, தான, தர்மம் முதலானவற்றை, மக்கள் வாழ்வியலில் உள்ளபடி படம்பிடிக்கிறது. தலித் பண்பாடு ஒரு கலந்துரையாடல், பெரிய புராணத்தில் மேல், கீழ் வரிசையும் முறைமீறல்களும், தமிழ் தலித் இலக்கியம் உட்பட, புத்தகம் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளது. தலித் மக்களின் வாழ்க்கைக் கட்டமைப்புக்கு ஆலோசனை சொல்கிறது. […]

Read more

சத்தியத்தின் குரலும் குறளும்

சத்தியத்தின் குரலும் குறளும், கு. பாலசுந்தரி, மணிமேகலைப் பிரசுரம், பக். 152, விலை 100ரூ. மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவோரின் அனுபவங்களால் கவரப்பட்டு, இந்த நுாலை எழுதியதாக கூறியுள்ளார். காந்தியின் வாழ்க்கை வரலாறு சம்பவங்களை எளிமையாக, 30 கட்டுரைகளில் எழுதியுள்ளார். சிறு கதைகள் போல் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையையும், பொருத்தமான குறளுடன் முடித்துள்ளார். மகாத்மா வாழ்ந்த காலத்தில் எடுத்த படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. நன்றி: தினமலர், 11/10/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

ஆங்கிலமும் தாழ்வு மனப்பான்மையும்

ஆங்கிலமும் தாழ்வு மனப்பான்மையும், நா.பார்த்தசாரதி, அர்ஜித் பதிப்பகம், பக். 192, விலை 105ரூ. சிந்தனை வளம் சிறப்பாக இருந்தால், மற்ற வளங்கள் வந்து சேரும். வறுமை என்பது அறிவின்மை; வளமை என்பது அறிவுடைமை என்பார் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி. அவர் எழுதிய, 33 கட்டுரைகள் நுாலை அலங்கரிக்கின்றன. சமூகப் பொறுப்பு இல்லாத ஆட்சியாளர், சுயநலம் மிக்க அரசியல்வாதி, பொது நன்மை நோக்காத மக்களின் செயல்கள், நாட்டை எவ்வாறு கேட்டில் நிறுத்துகின்றன என்பதை முத்தாய்ப்பாக எழுதியுள்ளார். நன்றி: தினமலர், 19/7/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

யோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்

யோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம், மறைமலை அடிகள், பாலாஜி பதிப்பகம், பக். 191, விலை 200ரூ. ‘வசிய மந்திரம்’ என்று வாயளவில் பேசப்படும் ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் பற்றிய அறிவியலை விளக்கியுள்ள நுால். 100 ஆண்டுகளுக்கு முன், ஞானசாகரம் என்ற மாத இதழில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. திருமாலின் அறிதுயிலுடன் இதை ஒப்பிடுகிறார். அருள் துாக்கம், இருள் துாக்கம் என்றும் வகைப்படுத்துகிறார். மூச்சுப் பயிற்சி, அமைதி காத்தல், நரம்புகளை இளக்கச் செய்தல், நினைவை நிறுத்தல், விரல்களால் உடலில் ஆற்றல் செலுத்தல், சொல்லி சொல்லி அறிதுயிலில் ஆழ்த்தும் […]

Read more

வளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்

வளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள், டி.என்.இமாஜான், மணிமேகலைப் பிரசுரம், பக். 122, விலை 80ரூ. புன்னகை துவங்கி, கடவுள் முடிய அறிஞர்களின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ள நுால். ‘உயர்ந்ததோர் லட்சியத்திற்காகப் பாடுபடுகிறோம், வாழ்கிறோம் என்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது…’ என்கிறார் அரிஸ்டாட்டில். ‘நம்பிக்கை குறையும் போது, ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்…’ என கணித்துள்ளார் ஜான் மில்டன். இப்படி எளிய கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. – பின்னலுாரான் நன்றி:தினமலர், 20/9/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

மனிதர்களைப் படியுங்கள்

மனிதர்களைப் படியுங்கள், சீத்தலைச் சாத்தன், ஒப்பில்லாள் பதிப்பகம், பக். 76, விலை 85ரூ. ஒவ்வொரு மனிதனிடமும் தனித்த வரலாறு உண்டு. அந்த வரலாறுகளால் இந்தச் சமுதாயத்திற்குப் பயன் ஏற்படலாம். வங்கித் துறையில் பணியாற்றியவர், ஓய்வுக்கு பின் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.நிதி நிறுவனம், பங்குச் சந்தை, ஆலயப் பணி, பத்திரிகைப் பணி என துவங்கி, அவற்றில் பார்த்த ஏற்றத்தையும், இறக்கத்தையும் உள்ளது உள்ளபடி தந்துள்ளார். மொழியையும் சிக்கனமாகப் பயன்படுத்தியுள்ளார். – முகிலை ராசபாண்டியன் நன்றி:தினமலர், 20/9/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

இலக்கிய ஆளுமைகள்

இலக்கிய ஆளுமைகள், மு. விவேகானந்தன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.150 அறிஞர்களின் ஆளுமைகளை முன் நிறுத்தும் நுால். பாரதியும் இதழ் இயலும் என்ற கட்டுரை, எழுதுகோலும் தெய்வம், எழுத்தும் தெய்வம் என்பதை நிரூபிக்கிறது. சுதேசமித்திரன் துணை ஆசிரியராக, 17 ஆண்டுகள் அவர் எழுதுகோல் ஓயவில்லை. கேலிச் சித்திரம் வெளியிட்டவர். வாசகர் அனுப்பும் செய்திகளுக்கு சன்மானம் கொடுத்தது முதன் முதலில் பாரதி தான். சிறுகதை உலகின் சிகரத்தை எட்டிய புதுமைப்பித்தன் பற்றிய ஆளுமைக் கட்டுரை மிகவும் அருமை. சிறுகதை என்றால் சிக்கல், பின்னல், எழுச்சி, முடிவு இவற்றுக்கு […]

Read more

தீர்ப்பு: இந்தியத் தேர்தலைப் புரிந்துகொள்ளல்

தீர்ப்பு: இந்தியத் தேர்தலைப் புரிந்துகொள்ளல், பிரணாய் ராய், தொராய் ஆர்.சொபாரிவாலா, எதிர் வெளியீடு, விலை: ரூ.399 தேர்தல் குறித்த கருத்துகளை 1980-களின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து பேசிவரும் நிபுணர் பிரணாய் ராய், கள ஆய்வு நிபுணர் தொராய் ஆர்.சொபாரிவாலா இருவரும் இணைந்து இந்தியாவின் தேர்தல்கள் குறித்த சிறந்ததொரு நூலை எழுதியிருக்கின்றனர். ‘தீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல்’ என்ற பெயரில், ச.வின்சென்ட்டின் தமிழாக்கத்தில் இப்போது ‘எதிர்’ வெளியீடாக வந்திருக்கிறது. இதுவரையிலான இந்தியத் தேர்தல் வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரித்து, பல்வேறு பிரிவு சமூகத்தினரின் தேர்தல் பங்கேற்பு எவ்வாறு […]

Read more

உதயசூரியன்: ஜப்பான் பயணக் கட்டுரைகள்

உதயசூரியன்: ஜப்பான் பயணக் கட்டுரைகள், தி.ஜானகிராமன், ஐந்திணைப் பதிப்பகம், விலை: ரூ.60 தி.ஜானகிராமனின் இரு பயணக் கட்டுரைகள் இன்றும்கூட வாசிக்கப்பட வேண்டியவை. ஒன்று, ‘உதயசூரியன்’ (ஜப்பான் பயணக் கட்டுரைகள் – சுதேசமித்திரன் – 1967), மற்றொன்று ‘கருங்கடலும் கலைக்கடலும்’ (செக்கோஸ்லோவோகியா பயண அனுபவங்கள் – கணையாழி – 1974). வெறுமனே பயணக் கட்டுரையாக அல்லாமல், அங்கே சென்றபோது தனக்குத் தோன்றிய சிந்தனைகளை எல்லாம் அவ்வளவு அழகாக வடித்திருப்பார் தி.ஜா. கியாத்தோ ரயில் நிலையத்தில் கூலிகளையோ போர்ட்டர்களையோ காண முடியவில்லை என்று சொல்கிற இடத்தில், “கல்வி […]

Read more
1 21 22 23 24 25 88