பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ

பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ, ஆசிரியர் : டாக்டர் தங்க.ஜெய்சக்திவேல், வெளியீடு: டெஸ்லா பதிப்பகம், விலை 175/- பேரிடர் காலத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு உதவும், ஹாம் ரோடியோ தொழில்நுட்பம், அதை பயன்படுத்தும் விதம் பற்றிய தகவலை உள்ளடக்கிய நுால். எளிமையான, 13 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களின் போது, தொலைபேசி சேவைகள் செயலிழக்க வாய்ப்பு உண்டு. அது போன்ற நேரங்களில், அமெச்சூர் வானொலி என்ற, ‘ஹாம்’ சேவை முக்கிய பங்காற்றும். மீட்பு நடவடிக்கைகளில் உதவும். அந்த சேவையை பற்றி விளக்குகிறது இந்த நுால்.ஹாம் […]

Read more

அறிவுரை கூறும் நெறிமுறை

அறிவுரை கூறும் நெறிமுறை  ஆசிரியர் : மெர்வின், வெளியீடு: மெர்வின் பதிப்பகம், விலை 100/- வாழ்க்கையில் வெற்றி பெறும் வழிமுறையை அறிவுரைத்துள்ள நுால். சந்திக்க வருபவர்களை, அன்பு, மரியாதையுடன் நடத்த வேண்டியதன் அவசியத்தை அழகாக வலியுறுத்துகிறது. நன்மை, தீமையை அறிந்து, ஒரு செயலை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் கூறுகிறது. பிறருக்கு அறிவுரை கூறும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் உள்ளடக்கியது. – வி.விஷ்வா. நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

நிலத்தின் மீதான போர்

நிலத்தின் மீதான போர், தேனி மாறன், பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, விலை: ரூ.60. ஹைட்ரோகார்பன் திட்டம் , எட்டு வழிச் சாலை திட்டம், மீத்தேன் திட்டம் என அரசின் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் போராட்டக் களமாக மாறியுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் குஜராத், ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, சத்தீஷ்கர் என இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் தங்கள் நிலங்களின் மீது கார்ப்பரேட்டுகள், அரசுடன் கூட்டு சேர்ந்து நடத்தும் போரை மக்கள் வலுவான குரல் எழுப்பி […]

Read more

கடவுள் சந்தை

கடவுள் சந்தை, மீரா நந்தா, தமிழாக்கம்: க.பூரணச்சந்திரன், அடையாளம் வெளியீடு, விலை ரூ.300. மூடநம்பிக்கை, பேராசை, அதிகார வேட்கையைத் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டு, நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கடவுள்களையும் ஆன்மிகத்தையும் சரக்காக விற்பனை செய்யும் ‘நவீன மோஸ்தர்’ சாமியார்கள் பெருகிவருகின்றனர். அவர்கள் ஈட்டும் பரிவர்த்தனை மதிப்பில் 99%-ஐத் தங்கள் ‘ஆன்மிகக் கூடங்களில் பதுக்கி வைத்துக்கொள்ளவும், தொழில், வணிகத்தில் முதலீடு செய்துகொள்ளவும் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் உதவுகிறார்கள். மக்களின் மத உணர்வு, மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களது வாக்குகளைப் பெற இந்த நவீன ஆன்மிகவாதிகள் துணைபுரிகிறார்கள்.இந்தியாவிலுள்ள முக்கிய ஊடகங்களும் […]

Read more

தமிழகத் தடங்கள்

தமிழகத் தடங்கள், மணா, அந்திமழை, விலை: ரூ.300. ஒரு பத்திரிகையாளராகத் தமிழகம் முழுக்க மேற்கொண்ட பயணங்களின் வழியே கிடைத்த கள யதார்த்தங்களைக் கட்டுரையாக்கியிருக்கிறார் மணா. ஏற்கெனவே 40 கட்டுரைகளோடு வெளிவந்த புத்தகத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பு இது. ‘சாம்பல் நத்தம்’ தொடங்கி ‘கீழடி’ வரை என 75 இடங்களின் தொகுப்பாகப் பதிவாகியிருக்கும் இந்தக் கட்டுரைகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்ட வரலாற்று சாட்சியங்களாக இருக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 08.02.2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000000330_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

அழகிய மரம்

அழகிய மரம், தரம்பால், தமிழில்: பி.ஆர்.மகாதேவன், கிழக்குப் பதிப்பகம், மொத்த விலை: ரூ.900. ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய இந்திய அறிவுத்தளம் பற்றிப் பேசும்போது பெருமிதமும், சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதைப் பேசும்போது கீழான பார்வையும் வெளிப்படுவது பொது மனோபாவமாகவே மாறியிருக்கிறது. நிறைய கட்டுக்கதைகளும் பொய்ப்புரட்டுகளும் இந்த வரலாற்றில் கலந்திருக்கின்றன. அங்கே புதையுண்டிருக்கும் உண்மையை வெளியே எடுக்கும் எண்ணத்தோடு களத்தில் இறங்கினார், இந்தியாவின் மிக முக்கியமான காந்தியச் சிந்தனையாளர்களுள் ஒருவரான தரம்பால். அவருடைய இரண்டு முக்கியமான புத்தகங்கள் இப்போது மறுபதிப்பு கண்டிருக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் இந்தியப் […]

Read more

மேலைநோக்கில் தமிழ் நாவல்கள்

மேலைநோக்கில் தமிழ் நாவல்கள், பகுதி 1,  ப.மருதநாயகம், எழிலினி பதிப்பகம்,  விலை: ரூ.350. ஆங்கிலத்தின் வாயிலாகவே தமிழில் நாவல் வடிவம் அறிமுகமானது. ஆனால், தமிழ் நாவல்கள் பற்றிய விமர்சனங்களில் மேலை இலக்கியக் கோட்பாடுகளையெல்லாம் பொதுவாகக் கவனத்தில் கொள்வதில்லை. ரசனை அடிப்படையே நாவல்களின் தரம், குணம் யாவற்றையும் தீர்மானிக்கிறது. தமிழ்-ஆங்கில இலக்கிய ஒப்பீட்டு ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான ப.மருதநாயகத்தின் இந்த நூல், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ தொடங்கி தற்காலம் வரையில் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல் படைப்புகளை மேலை இலக்கியக் கோட்பாடுகளின் பார்வையில் திறானாய்வு செய்யும் முயற்சி. […]

Read more

மனசு போல வாழ்க்கை 2.0

மனசு போல வாழ்க்கை 2.0, ஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.150. மனம் குறித்த அலசல் கட்டுரைகள், கேள்வி-பதில் பகுதியின் தொகுப்பே இந்தப் புத்தகம். இதைப் படிக்கும் வாசகருக்குத் தன்னுடைய பயம், பதற்றம், மன அழுத்தம், கோபம், வருத்தம், ஏமாற்றம், குற்றவுணர்வு போன்ற மனம் செய்யும் ஆர்ப்பாட்டங்களை ஆற்றுப்படுத்தும் பக்குவம் வாய்க்கும். மனத்தை ஆளத் தெரிந்த எவருக்கும் எந்தவொரு சவாலையும் எளிதாக ஆள முடியும். அதற்கு இந்நூல் உதவும். நன்றி. தமிழ் இந்து. 04.04.2020 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030478_/ இந்தப் […]

Read more

சிறுகதை என்னும் கலைவடிவம்

சிறுகதை என்னும் கலைவடிவம், காலவெளிக் கதைஞர்கள், தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ், சாகித்ய அகாடமி வெளியீடு,  விலை : ரூ.300. சர்வதேச அளவில் ஒப்பிடக்கூடிய மேதமைகள் பல்வேறு சோதனைகளை நிகழ்த்திப் பார்த்து வெற்றிகண்ட வடிவம் தமிழ்ச் சிறுகதை வடிவமாகும். சிறுகதை வரலாறு, எழுத்துப் போக்குகள், இயக்கங்கள் அடிப்படையில் இருபது சிறுகதை ஆசிரியர்களைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ்ச் சிறுகதைகளின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியைக் காண்பிப்பதாக உள்ளன. தமிழ்ச் சிறுகதைகளில் சாதனை நிகழ்த்திய புதுமைப்பித்தன், மௌனி, கு. ப.ரா, ந.பிச்சமூர்த்தி ஆகிய முதல் தலைமுறையினர் […]

Read more

தென்னாட்டு ஜமீன்கள்

தென்னாட்டு ஜமீன்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா பதிப்பகம், விலை: ரூ.1000. பத்திரிகையாளரும் வரலாற்று எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு, நெல்லைச் சீமையின் அரசியல், பண்பாட்டு வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து தொடர்ந்து எழுதிவருபவர். தேரிக்காட்டு ஜமீன்தார்கள் என்ற தலைப்பில் ஏற்கெனவே நூல் எழுதியிருக்கும் காமராசு, இந்தப் புதிய நூலில் மறவர் ஜமீன்கள், நாயக்கர் ஜமீன்கள், மற்றையோர் என 18 ஜமீன்களின் வரலாற்றை மிக விரிவாக அளித்திருக்கிறார். ஜமீன்களின் வம்சாவளியினர், அவர்களின் வாழ்க்கைமுறை, தொடர்புடைய கோயில்கள், திருவிழாக்கள், இன்றும் அவர்களுக்குத் தொடரும் பாரம்பரிய மரியாதை என்று கடந்த சில […]

Read more
1 23 24 25 26 27 88