சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 400ரூ. கைத்தறி நெசவு தொடர்பான சொல் சாலாம்புரி என்பதைத் தலைப்பாகத் தாங்கி இருக்கும் இந்த நாவல். தமிழகத்தில் 1950 களில் நடைபெற்ற அரசியல், அப்போதைய நெசவாளர்களின் வாழ்க்கை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. திராவிடர் கழகத்தில் இருந்து விலகி தொடங்கப்பட்ட தி.மு.க.வின் வளர்ச்சிக்கு உழைக்கும் கதாநாயகன், அவரைச் சுற்றி நடைபெறும் நெசவாளர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், சாதி பிரச்சனை ஆகியவை கண் முன் படம் பிடித்துக் காட்டப்பட்டு இருக்கின்றன. சரளமான நடை, கதாபாத்திரங்களின் அப்பட்டமான பேச்சு, விறுவிறுப்பான […]

Read more

இந்திர நீலம்

இந்திர நீலம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை: ரூ.150 இன்று பிறக்கும் சங்க காலப் பெண்கள். சங்க காலத்துக்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டில்தான் பெண்களின் இலக்கியப் பங்களிப்பு பரவலாகக் காணக்கிடைக்கிறது. இதற்கு இடைப்பட்ட நெடிய பரப்பில் ஆண்டாள், காரைக்காலம்மையார் போன்றோரின் பக்திநெறிப் பனுவல்கள் மட்டுமே இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. இந்த இடைவெளியை நேர்செய்யும் விதமாக இன்று கவிதை எழுதும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது முக்கியமான விஷயம். அவ்வகையில் கவிஞராகக் கவனம்பெற்று தற்போது புனைவுகளிலும் கவனம் செலுத்திவருபவர் அ.வெண்ணிலா. இவரது மூன்றாவது சிறுகதைத் […]

Read more

கனவும் விடியும்

கனவும் விடியும், அ.வெண்ணிலா, சாகித்ய அகாடமி, பக்.224, விலை 200ரூ. இந்நுாலில், முதன்முறையாய் பெண்ணே தன் உடலைப் பற்றி எழுத்தாணியால் எழுத முயன்று, ஆழக் கடலில் முத்தெடுத்துள்ளாள். ‘ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும், சிசு கண்ட அதிர்வில் குருதியின் பாலையும் சாறெடுக்கின்றன. ஒரு நிறைவேறாத காதலின் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த் துளியாய்த் தேங்கித் தளும்புகின்றன!’ என்ற கவிதை வரிகள், ‘தாய்மையின் ஊற்றுக் கண்ணாய் போற்றப்படும் முலைகள்’ பெண்ணுக்குத் தோன்றும் விதம் ஆச்சர்யமூட்டும். நவீன அடையாளம் கொண்ட பெண்கவிகளின் கவிதைகள் தொகுக்கப்பட்ட நுால் எனலாம். இருபதாம் […]

Read more