கிருபானந்தவாரியாரின் தமிழ் அமுதம்

கிருபானந்தவாரியாரின் தமிழ் அமுதம்,பெ.கு. பொன்னம்பலநாதன், பக் 256, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, விலை 125ரூ To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-5.html அறுபத்து நான்காவது நாயன்மார் என்று சைவப் பெருமக்களால் பாராட்டப்பட்ட கிருபானந்தவாரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சுவையாகச் சொல்லும் நூல். வாரியார் தனது ஒன்பதாவது வயதிலேயே மேடையேறிப் பேசியதும், பன்னிரண்டாவது வயதிலேயே பத்தாயிரம் பாடல்களை மனப்பாடமாகப் பயின்றதும் மைசூர் சென்ற வீணை வாசிக்கக் கற்றக்கொண்டதும் சுவையான தகவல்கள். சைவ, வைணவ நூல்களைப் பயின்றதைப் போலவே, வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள் போன்றவற்றையும் […]

Read more

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமைகள் – பெருமைகள்

ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமைகள் – பெருமைகள், கவிமாமணி முத்துமணி, எல்.கே.எம்., பப்ளிகேஷன், பக்கங்கள் 672, விலை 290ரூ. பஞ்ச பூதத் தலங்களில், வாயுத்தலமாக விளங்குவது திருக்காளத்தி ஆகும். களத்ர தோஷம், ராகு-கேது தோஷங்களுக்குப் பரிகார ஸ்தலமாக ஸ்ரீ காள ஹஸ்தி விளங்குகிறது. ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மகிமையும், பெருமையும் அறிய இந்நூல் மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை. இந்நூலில் காளத்தீஸ்வர சுப்ரபாதம், ஸ்தோத்திரம், சரணம், மங்களம் என்று நான்கு பகுதிகளுக்கும், பாடலும் – உரையும் எழுதியுள்ள நூலாசிரியரின் நுண்மதி போற்றத்தக்கதாகும். உரையில் பல புராணச் செய்திகளும், […]

Read more

இமய குருவின் இதய சீடன்

சூரியன், சாந்தகுமாரி சிவகடாட்சம், சாந்தி சிவா பப்ளிகேஷன்ஸ், பக்கம் 176, விலை 120 ரூ. சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் என, இதுவரை 10 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கும் சாந்தகுமாரி சிவகடாட்சத்தின் புதிய நாவல் சூரியன். கிராமம், நகரம் என, இரண்டு வழிகளில் பயணிக்கும் இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களை, அவரவர் இருப்பிடத்திற்கே உரிய குணங்களோடு, ஒப்பனை இன்றி படைத்துள்ளார் ஆசிரியர். இன்றைய, இளைய தலைமுறையினரின் வாழ்க்கைப் போக்கின் மீது தனக்குள்ள வருத்தத்தை, ‘சூரியன்’ நாவலில் ஆழமாக பதிவு செய்துள்ளார். நாவல் பிரியர்களுக்கு நல்ல தீனி.   […]

Read more

ஜாமக்கோள் பிரசன்னம்

ஜாமக்கோள் பிரசன்னம், ஆர். செல்வம், புஞ்சை புளியம்பட்டி மற்றும் இருவர், வெளியீடு ஜெமினி பதிப்பகம், பக்கம் 272, விலை 270 ரூ ஜோதிடக்கலை வேதத்தின் ஓர் அங்கமாகும். அதில் பிரசன்னம் என்பதும் ஒரு பகுதி. இந்நூல் ஜாமக்கோள் பிரசன்னம் பற்றி, ஜோதிட நூல் சமண, சமய முனிவர்களில் ஒருவராகிய ஜைனமுனி முதல் இன்றைய நாள் வரை ஜாமக்கோள் பிரசன்னம் வளர்ந்தவிதம், அதன் வரலாறு, அதன் பயன் என தகவல்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. கல்வி, திருமணம், காணாமல் போன பொருள் எங்கே கிடைக்கும் என்று பல்வேறுபட்ட தலைப்புகளில் […]

Read more

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம், தி. பாஷ்ய ராநுசதாசன், யஷ்வந்த் பப்ளிக்கேஷன், பக்கங்கள் 80, விலை 60 ரூ. ஸ்ரீமத் ராமாநுஜர் ஒரு சமயம், ஸ்ரீமதுரகவியாழ்வார் அவதாரம் செய்த திருக்கோளூர் அருகில் வருகிறார். எதிரே, ஒரு பெண்பிள்ளை, மூட்டை முடிச்சுகளோடு ஊரை விட்டு வெளியே வருவதைக் கண்ட ராமாநுஜர், அவளை யாரென்று விசாரிக்க, அவள் திருக்கோளூரிலிருந்து வருவதாகச் சொன்னாள். ‘எல்லாரும் புகும் ஊர் உனக்கு புறப்படும் ஊராயிற்றே’ என்று ராமாநுஜர் கேட்க, அவள்தான் எளியவள் என்று, எண்பத்தோரு விளக்கங்கள் சொல்கிறார். அந்த விளக்கங்களே படிக்கச் […]

Read more

ரமண மஹரிஷி

ஸ்ரீரமண மகரிஷி- பாலகுமாரன்; பக்.344; ரூ.160; விகடன் பிரசுரம், சென்னை-600 002 பெரிய புராணத்தை அகத் தூய்மையோடு படித்து முடிப்போர் “தென்னாடுடைய சிவனே போற்றி’ என்று சிவ பக்தியால் முணுமுணுப்பது உண்டு. அதுபோல் பாலகுமாரன் எழுதியுள்ள ஸ்ரீரமண மகரிஷியைப் படிப்போருக்கு “ரமணா.. ரமணா..’ என்று பக்திப் பெருக்கால் உள்ளம் உருகும். திருவண்ணாமலையை ஒரு மண்டலம் கிரிவலம் வந்த மகிழ்வும் பூரிப்பும் மகிரிஷியின் இந்நூலைப் படித்து முடிக்கும்போது ஏற்படுகிறது. பக்தியோ, நாம சங்கீர்த்தனமோ, மந்திர ஜபமோ, யாக விஷயங்களோ, ஹடயோகமோ.. எதுவாக இருந்தாலும் மனத்தை அழித்து […]

Read more