மயிலிறகு மனசு

மயிலிறகு மனசு, தமிழ்ச்சி தங்கபாண்டியன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை – 600002, விலை 80 ரூ. “நெருக்கமான நண்பர்களிடத்தில் நாம் கொண்டிருக்கும் நட்பின் பிரதிபலிப்புகளை உளவியல் நோக்கோடு ஆராயும் நூல். சுட்டு வைத்த கனங்கிழங்கு வாசமும், குழிப்பணியாரத்தின் மென்மையும், காத்தாடி பார்க்கின்ற பரவசமும், சமயங்களில் சுடுமணல் பொறுக்காத தவிப்பும்… என்று தாயாய் வருடிக்கொடுக்கவும், குழந்தையைப் போல் அடம்பிடிக்கவும் கற்று வைத்திருக்கிறது தமிழச்சியின் தமிழ். அழகான வடிவமைப்பு, அரிய புகைப்படங்கள், மனித நேயமிக்க தகவல்களுடன் கூடிய இந்த நூல் ஒரு வரலாற்றுக் […]

Read more

1945ல் இப்படியெல்லாம் இருந்தது…

நினைவு அலைகள், டாக்டர் தி.சே.சவு. ராஜன், சந்தியா பதிப்பகம், பக்கங்கள் 352,விலை 225 ரூ. இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் மிகவும் மதித்துப் போற்றப்பட வேண்டியவர், இந்நூலின் ஆசிரியர் டாக்டர் தி.சே.சவு.ராஜன். 1947ல் வெளிவந்த பதிப்பிற்குப்பின், தற்போதுதான் இந்நூல் வெளிவந்துள்ளது. ராஜனின் சுயசரிதையாக இந்நூல் இருப்பினும், விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட பலரின் நிகழ்வுகளும் உள்ளன. அக்கால சிறைக் கொடுமை குறித்தும், தேர்தல் குறித்தும், ஹரிஜன சேவை குறித்தும், அவர் எழுதியுள்ள நிகழ்வுகள், படிக்கப்படிக்க, ஒரு நாவலைப் படிக்கும் விறுவிறுப்புடன் உள்ளன. நூலிற்கு, கல்கி எழுதியுள்ள முன்னுரை […]

Read more

காற்றின் கையெழுத்து

காற்றின் கையெழுத்து, பழநிபாரதி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 130ரூ. ஒரு பத்திரிகை நின்று போனது குறித்து எழுதும்போது… எழுத்தாளர் சுஜாதா, ‘நிகழ் காலத்தைப் பிரதிபலிக்காத எதுவும் நிலைக்காது’ என்று சொன்னார். பத்திரிகைகளுக்கு மட்டுமல்ல… படைப்பாளிக்கும் அது பொருந்தும். சினிமா பாடலாசிரியராக இருந்தாலும் பழநிபாரதிக்குள் இருக்கும் ‘சமூகன்’ கொடுக்கும் சாட்டையடிகள்தான் இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள். வளரும் நாடுகளை உய்விக்க வந்ததாகச் சொல்லப்படும் உலகமயமாக்கல், பாரம்பரியத்தை நசுக்கி அன்னிய நாட்டிடம் கையேந்தி நிற்கும் நிலை ஆகியவற்றைக் காட்டுவதாகவே இந்த தொகுப்பின் […]

Read more