புதிய கல்விக் கொள்கை 2020- வரமா சாபமா?

புதிய கல்விக் கொள்கை 2020- வரமா சாபமா? ,  ஆர்.ரங்கராஜ் பாண்டே, கிழக்கு பதிப்பகம், பக்.168, விலை  ரூ.175 . மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரிடம் இருந்து ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் கூறப்படும் சூழலில், தமிழகத்தின் மொழி அரசியல், நீட் தற்கொலை அரசியல் என பல்வேறு விஷயங்களை இந்நூலில் பேசியிருக்கிறார் நூலாசிரியர் . தனது விருப்பத்துக்கு ஏற்ப உயர் கல்வியை படிக்கும் சுதந்திரம் புதிய கல்விக் கொள்கையில் வழங்கப்பட்டுள்ளது. இது, கல்லூரிப் படிப்பில் மிகப்பெரிய புரட்சியை […]

Read more

அவசரம்- உடனடியாகச் செய்ய வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்

அவசரம்- உடனடியாகச் செய்ய வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்,  சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், பக்.152; விலை ரூ.175. நம்நாட்டில் வறுமை இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது. சுற்றுச்சூழல் கேடு நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மக்களின் வாழ்க்கைநிலையில் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சி இல்லை'- இவ்வாறு நம்நாட்டின் பொருளாதார நிலையை மிகத் தெளிவாக இந்நூல் தக்க சான்றுகளுடன் படம் பிடித்துக் காட்டுகிறது. இப்படியே நிலைமை தொடருமானால், மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இப்போதுள்ள இந்தப் பொருளுற்பத்தி […]

Read more

மொபைல் ஜர்னலிசம்

மொபைல் ஜர்னலிசம், சைபர் சிம்மன், கிழக்கு பதிப்பகம், பக். 216, விலை 225ரூ. இதழியல் துறையில் புதிதாக ஒரு புயல் வீசிக் கொண்டிருக்கிறது. ‘மொஜோ’ என அழைக்கப்படும், மொபைல் ஜர்னலிசம், இத்துறையில் ஒரு புதிய வாசலை திறந்து வைத்திருக்கிறது. அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பங்களை தன் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வளைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது இதழியல் துறை. இப்போது அந்த வரிசையில், செல்பேசியையும் இத்துறை சேர்த்துக் கொண்டுள்ளது. நம் நாட்டில், செல்பேசி இதழியல் இப்போது தான் முதல் அடி எடுத்து வைக்க துவங்கியிருக்கும் நிலையில், […]

Read more

நேர்மையின் பயணம்

நேர்மையின் பயணம், பா.கிருஷ்ணன், கிழக்கு பதிப்பகம், விலை: ரூ.400 அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் பாலகுருசாமியின் வாழ்க்கை வரலாற்று நூல் இது. கரூர் மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த பாலகுருசாமி பின்னாட்களில் முக்கியமான கல்வியாளராகவும் அறிவியலாளராகவும் உருவெடுத்தவர். நாற்பது ஆண்டுகளாக ஊடகத் துறையில் பயணித்துவரும் பா.கிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்நூல் பாலகுருசாமியின் முழுமையான சித்திரத்தை வழங்குகிறது. நன்றி: தமிழ் இந்து, 15/2/2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789351350293.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

தேசத் தந்தைகள்

தேசத் தந்தைகள் – விமரிசனங்கள், விவாதங்கள், விளக்கங்கள், ராஜ்மோகன் காந்தி, தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.168, விலை ரூ.180. மிகப் பெரிய தலைவர்களாக விளங்கிய காந்தி, நேரு, அம்பேத்கர், பட்டேல் ஆகியோரின் சிந்தனைகளின், நடவடிக்கைகளின் விளைவாக அந்நாளில் நிகழ்ந்த இந்திய – பாகிஸ்தான் பிரிவினை, காஷ்மீர் பிரச்னை ஆகியவற்றை – வேறு மாதிரியாக உருவாக்கியிருக்க முடியுமா? என்பதை ஆராயும் நூல். குஜராத்தைச் சேர்ந்த ஸ்வாமி சச்சிதானந்த், காந்தி மற்றும் நேருவைப் பற்றி வைக்கும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெர்ரி […]

Read more

அயோத்திதாசர்

அயோத்திதாசர், டி.தருமராஜ், கிழக்கு பதிப்பகம், விலை 300ரூ. 1845-ல் பிறக்கும் காத்தவராயன் எந்தக் காலகட்டத்தில் அயோத்திதாசர் ஆகிறார்? 1892 சென்னை மஹாஜன சபைக் கூட்டத்துக்குப் பிறகு, பிராமணியத்துக்கு எதிராகவும் இந்து அடையாளத்துக்கு வெளியிலும் அவருடைய புதிய பயணம் தொடங்குகிறது என்பது தெரிகிறது. அதற்கு முன் அவருடைய வாழ்க்கை எப்படி இருந்தது, என்னவாக இருந்தார்? அயோத்திதாசரைப் பற்றிய விவரங்கள் எதுவாக இருந்தாலும் அவர் 1907 முதலாக 1914 வரை நடத்திய ‘தமிழன்’ பத்திரிகையின் வாயிலாக நமக்குக் கிடைப்பவைதான். அதில் அவர் தனது வாழ்வைப் பற்றி என்ன […]

Read more

அலர்ஜி

அலர்ஜி, டாக்டர் கு.கணேசன், கிழக்கு பதிப்பகம், பக். 135, விலை 140ரூ. டாக்டர் ஆன நுாலாசிரியர் தமிழ் நுாலாக இதைப் படைத்திருப்பது சிறப்பாகும், உடலில் ஒவ்வாத கிருமிகளை வெளியேற்றும் முறையை சுருக்கமாக அலர்ஜி எனலாம். இதற்கான மருத்துவ விளக்கங்களை தரும் ஆசிரியர், சாதாரணமாக காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு மருந்துகளை இஷ்டப்படி வாங்கிச் சாப்பிட்டு ஒவ்வாமையை வரவேற்கக்கூடாது என்கிறார். அழகுசாதனப் பொருட்கள், அதிக வெயிலில் அலைச்சல் உட்பட பல அலர்ஜி கூறுகளை ஏற்படுத்தும் என்ற அவரது கருத்துக்கள் உட்பட பல விஷயங்கள் பலருக்கும் பயன்படும். நன்றி: […]

Read more

காஷ்மீர் இந்தியாவுக்கே

காஷ்மீர் இந்தியாவுக்கே, கேப்டன் எஸ்.பி.குட்டி, கிழக்கு பதிப்பகம், பக்.304, விலை 250ரூ. கடந்த, 1947ல் நடந்த இந்தியா – பாக்., போர் பின்னணியை முழுமையாக விளக்குகிறது இந்த நூல். ஆசிரியர் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால், ராணுவ செயல்பாடுகளையும், நுணுக்கங்களையும் எளிமையாக விவரிக்கிறார். போரின் நிகழ்வுகள், அதில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகம், அரசியல்வாதிகளின் தவறான அணுகுமுறை என, அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் உரிமை கோரும் பாகிஸ்தானின் நடவடிக்கையை ஏற்க மறுப்பதற்கான காரணத்தை ஆதாரங்களுடன் பேசுவது கடினம். அதனை எளிமைப்படுத்தி இருக்கிறார், நூலாசிரியர். காஷ்மீர் பிரச்னை […]

Read more

தேசத் தந்தைகள்

தேசத் தந்தைகள், ராஜ்மோகன் காந்தி, தமிழில் ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், விலை 180ரூ. மகாத்மா காந்தியின் மகள் வழிப்பேரனான ராஜ்மோகன் காந்தி இந்த நூலை எழுதி இருக்கிறார். மகாத்மா காந்தி, நேரு ஆகியோர் பற்றி குஜராத் சுவாமி சச்சிதானந்த், அமெரிக்கப் பேராசிரியர் பெர்ரி ஆண்டர்சன் ஆகியோர் வெளியிட்ட எதிர்மறையான கருத்தக்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் கட்டுரையாக எழுதத் தொடங்கி பின்னர் விரிவடைந்த இந்தப் புத்தகத்தில், இந்தியக் குடியரசின் தொடக்க கால வரலாறு சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஏற்பட்ட […]

Read more

பிசினஸ் டிப்ஸ்

பிசினஸ் டிப்ஸ்,  சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், பக்.128, விலை140. சொந்தமாகத் தொழில் செய்ய விழைவோருக்கு எளிமையான, கலகலப்பான மொழியில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி.குட்டி, குட்டியாக இருபத்து மூன்று அத்தியாயங்களாகப் பிரித்து, புதிதாகத் தொழிலில் முனைவோருக்கு உந்து சக்தியாக இருக்கும் வகையில் நூலை வடிவமைத்திருக்கிறார். புதிதாய் பணியில் சேரும் ஓர் ஊழியரின் முதல் நாள் அனுபவம் அவருக்கு மறக்க முடியாதவண்ணம் அமைவதற்கு என்ன செய்கிறீர்கள்? என்று கேட்கும் சதீஷ், ஓர் அருமையான யோசனையை முன்வைக்கிறார். நீங்கள் பணிக்கு அமர்த்தும் புதிய ஊழியரை வரவேற்க […]

Read more
1 2 3 4 5 19