மறைக்கப்பட்ட பக்கங்கள்

மறைக்கப்பட்ட பக்கங்கள் பால், பாலினம், பாலியல் ஒருங்கிணைவு, கோபி ஷங்கர், கிழக்கு பதிப்பகம், விலை 250ரூ. பாலினத்தின் பன்முகங்கள் தன்பாலின உறவு இனிச் சட்ட விரோதம் அல்ல என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உச்சநீதி மன்றத் தீர்ப்பு, 2018-ல் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆண், பெண் ஆகிய இரு பாலினங்களைத் தவிர மற்றவர்களைக் குறித்த தெளிவு இன்னும் எட்டப்படவில்லை. இரண்டு பாலினங்களைச் சேர்ந்தவர்களின் பார்வையை ஒட்டியே மருத்துவம், அறிவியல், வரலாறு என அனைத்தும் காலங்காலமாக எழுதப்பட்டுவந்திருக்கின்றன. இது சரியா என்னும் கேள்வியை வாசகர்களின் மனத்தில் ஆழமாக […]

Read more

சினிமாக்காரர்கள்

சினிமாக்காரர்கள், ஜெயபாரதி, கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. சினிமா! வெளியே இருந்து பார்க்கும் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் மாயாஜாலம். இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் வரை நம்மைக் கட்டிப்போடும் இந்தக் கனவு உலகிற்கான கதைக் கரு எப்படிப் பிறக்கிறது? அது எப்படிக் கதையாக உருவாகி, காட்சிகளாக வசனங்கள் பேசி, வடிவமைப்பாகவும், இசையாகவும், இயக்கமாகவும் இன்னபிறவாகவும் உருமாறி சினிமாவாகப் பிறக்கிறது என்பதைப் படிப்படியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜெயபாரதி. சினிமாவின் திரையில் தெரியாத இன்னொரு முகம். நன்றி: குமுதம்,19.9.2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9789386737465.html இந்தப் […]

Read more

மறைக்கப்பட்ட பக்கங்கள்

மறைக்கப்பட்ட பக்கங்கள், கோபி ஷங்கர், கிழக்கு பதிப்பகம், விலை 250 ரூ. உலக அளவில் பாலினம் தொடர்பான மொத்த கருத்துக்களை தொகுத்துள்ள புத்தகமாக வெளிவந்துள்ளது. பாலினத்தை எப்படி வரையறை செய்வது? பாலியல் கல்வி கல்வி வேண்டுமா? என்பது குறித்தும் ஆசிரியர் கோபி சங்கர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். பாலின சிறுபான்மையினர் பற்றியும் பாலின விழிப்புணர்வு பற்றியும் இந்தப் புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கப் பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி 30/ 5/ 2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9789386737328.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

எம்.ஜி.ஆர். என்ற ஹிந்து

எம்.ஜி.ஆர். என்ற ஹிந்து, ம.வெங்கடேசன், கிழக்கு பதிப்பகம் ம.வெங்கடேசனின் சமீபத்தைய புத்தகம் ‘எம்.ஜி.ஆர். என்கிற ஹிந்து’. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரை சொந்தம் கொண்டாட திராவிடர் கழகம் முனைந்ததை ஒட்டி ஏற்பட்ட ஆய்வில் இப்புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார் ம.வெங்கடேசன். சில புத்தகங்கள் உணர்வுப் பூர்வமாக இருக்கும். சில புத்தகங்கள் வெறும் தகவல்களாக இருக்கும். இப்புத்தகம், ம.வெங்கடேசனின் மற்ற புத்தகங்களான ‘ஹிந்துத்துவ அம்பேத்கர்’, ‘தலித்துகளுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி’ போன்ற புத்தகங்களைப் போலவே, மிகவும் விவரமாக தரவுகளுடன் எழுதப்பட்ட புத்தகம். ஹிந்துத்துவ அம்பேத்கர் என்ற பெயர் […]

Read more

ஆதிசைவர்கள் வரலாறு

ஆதிசைவர்கள் வரலாறு, தில்லை எஸ்.கார்த்திகேய சிவம், கிழக்கு பதிப்பகம், விலை 130ரூ. சிவனோடு தொடர்புடையது சைவம். "சைவத்தின் மேல் சமயம் வேறில்லை' என்பது சைவர்களின் உறுதியான நம்பிக்கை. சிவனை வணங்கும் யாவரும் சைவர்களேயாயினும் இறைவன் திருமேனியை முப்போதும் தீண்டி பூஜை செய்து வழிபடுவோரை "ஆதிசைவர்' என அழைப்பது மரபு. ஆதிசைவர்கள், குருக்கள், பட்டர், நாயனார், சிவாச்சாரியார் என வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு பகுதிகளில் அழைக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஆதிசைவர்களின் வரலாற்றை ஓரளவு விரிவாகவும் மிகத்தெளிவாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். திருக்கயிலாய மலையில் சிவபெருமான், பார்வதி […]

Read more

இந்தியாவின் இருண்ட காலம்

இந்தியாவின் இருண்ட காலம், சசி தரூர், கிழக்கு பதிப்பகம், விலை 350ரூ. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்ததாகக் கூறப்படும் நன்மைகளை பாராட்டும் நூல்கள் பல இருக்கின்றன. ஆனால் காலனி ஆதிக்கம் இந்தியாவை எப்படிச் சீரழித்தது என்பதையும், இந்தத் தேசத்தை எப்படி பின்னோக்கி இழுத்துச் சென்றது என்பதையும் இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது. பிரிட்டிஷார் இந்தியாவுக்கு இழைத்த அநீதியைத் தகுந்த ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்நூல் நம்முடைய கடந்த காலம் குறித்த பிழையான புரிதலைக் களைய உதவும் ஒரு முக்கிய ஆவணமாகவே இருக்கிறது. ஜாலியன் […]

Read more

எம்டன் செல்வரத்தினம்

எம்டன் செல்வரத்தினம், கிழக்கு பதிப்பகம், பக்.144, விலை 140ரூ. சென்னையர் கதைகள் சென்னை தினத்தை முன்னிட்டு, 2017ம் ஆண்டு நடத்திய, ‘சென்னை சிறுகதைப் போட்டி’யில் வெற்றி பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு தான், ‘எம்டன் செல்வரத்தினம்!’ முதல் பரிசுக் கதையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பாகவும் இருக்கிறது. கடந்த, 1914ம் ஆண்டு ஜெர்மானியக் கப்பல் எம்டன் மதராஸ் மீது குண்டு வீசிய தருணத்தை கற்பனை கலந்து கொஞ்சமும் உறுத்தாமல் வரலாற்றுக் கோணத்தில் விவரித்துப் பார்க்கும் கதை. 68, லாயிட்ஸ் ரோடு வாசலில் விரியும் ராயப்பேட்டை வீடு. காமத்தை […]

Read more

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், போகன் சங்கர், கிழக்கு பதிப்பகம், விலை 175ரூ. இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே உள்ள இடைவெளிபோல், இருப்புக்கும் இறப்புக்கும் இடையேயும் உண்டு. அந்த இடைவெளிக்குள் எத்தனை எத்தனையோ உறவுகள், உயிர்கள், உணர்வுகள். அவற்றை அறிமுகம் செய்து நம் அடிமனதை வருடி, ஆழ்மனதை நெகிழச் செய்யும் சிறுகதைகள். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9788184938197.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம், 7/3/2018.

Read more

வில்லாதி வில்லன்

வில்லாதி வில்லன், பாலா ஜெயராமன், கிழக்கு பதிப்பகம், பக். 208, விலை 200ரூ. இணையதளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற தொடரின், நூல் வடிவம் இது. வரலாற்றைக் கறுப்புப் பக்கங்களால் நிரப்பிய, முக்கிய வில்லன்களின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் விவரிக்கும் நூல். நன்றி: தினமலர், 16/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9788184935141.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

விளம்பர மாயாஜாலம்

விளம்பர மாயாஜாலம், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், பக். 136, விலை 125ரூ. விளம்பரம் என்பது, கலையும், அறிவியலும் கலந்த ஒரு தொழில் நுட்பம். எத்தனை தரமான பொருளாக இருந்தாலும், அதை அழகான விளம்பரமாக உருவாக்க தெரியாவிட்டால் பிரயோஜனம் இல்லை என்கிறது, இந்நூல். நன்றி: தினமலர், 22/1/2018.

Read more
1 3 4 5 6 7 19