மதிகெட்டான் சோலை

மதிகெட்டான் சோலை, சரவணன் சந்திரன், கிழக்கு பதிப்பகம், பக். 200, விலை 190ரூ. மதிகெட்டான் சோலை, சமகால அரசியல், வணிகம், சமூகம் உள்ளிட்ட எண்ணற்ற விஷயங்களை முன் முடிவுகளற்று அருகில் சென்று, ஆழம் பார்த்து எழுத்தாக வடிக்கப்பட்டுள்ளது. அனுபவத் திரட்சியாக உள்ளதால், ரத்தமும் சதையுமான மனிதர்களின் துறைகள் குறித்த வெளிப்படையான கட்டுரைகளாக விரிந்துள்ளன. இதில், 27 கட்டுரைகள், வெவ்வேறு துறை சார்ந்து விரிந்துள்ளன. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

பூனைக்கதை

பூனைக்கதை, பா.ராகவன், கிழக்கு பதிப்பகம், பக். 382, விலை 350ரூ. கற்பனையும், எதார்த்தமும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் விலகியும், கலையுலகம் பற்றிய கதையம்சத்துடன் புனையப்பட்டுள்ள நாவல். ஒரு பூனை எனும் பாத்திரம், இரண்டு உலகங்களை நம் முன் விரிக்கிறது. அந்த உலகத்தின் அரிதார முகங்களை, அந்த பூனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. கதைக்குள் கதையாய் விரியும் இந்நாவல், நவீன தமிழ் நாவல்களின் வரிசையில் இடம் பிடிக்கும். நன்றி: தினமலர், 11/1/2018.

Read more

மச்ச புராணம்

மச்ச புராணம், வேணு சீனிவாசன், கிழக்கு பதிப்பகம், பக்.312, விலை 290ரூ. திருமாலின், 10 அவதாரங்களில், முதன்மையானது மச்ச அவதாரம். வியாச முனிவரால் எழுதப்பட்ட, 18 புராணங்களுள், மச்ச புராணத்திற்கு, தனி சிறப்பு உண்டு. மீன் வடிவெடுத்து, நீர்ப்பிரளயத்தில் இருந்து, இவ்வுலகை காத்தார் என்ற புராணத்தை, எளிய நடையில் ஆசிரியர் விளக்கியுள்ளார். ஆன்மிகம் நாட்டம் கொண்டோர், இந்நுால் வாசித்தால், மகிழ்ச்சி அடைவர். நன்றி: தினமலர், 10/1/2018

Read more

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0,

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0, சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், விலை 175ரூ. உணர்வு மேலாண்மை என்ற எமோஷனல் இன்டெலிஜென்ஸ் புத்தகத்தில் மனிதர்களிடையே நட்பை ஏற்படுத்த தேவைப்படும் குணாதிசயங்கள் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் நமக்கு ஏற்படும் விதவிதமான உணர்வுகளை எப்படி ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்ற வழியையும் இந்த நூல் கற்றுத்தருகிறது. அத்துடன், பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும், பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தங்களில் இருந்து மீள்வதற்கான வழிகளும் கற்றுத்தருகிறது. மன்னிப்பின் அவசியத்தையும், மற்றவர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவத்தையும் இந்த நூல் மூலம் தெரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் […]

Read more

ஹைட்ரோ கார்பன் அபாயம் (இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரான பேரழிவுத் திட்டம்)

ஹைட்ரோ கார்பன் அபாயம், (இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரான பேரழிவுத் திட்டம்), கா. அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், பக். 288, விலை225ரூ. உணவு, எரிபொருள் ஆகிய இரண்டுமே மக்களுக்கு மிக முக்கியமான தேவைகள். இவற்றில் பூமிக்குள் பொதிந்திருக்கும் ஹைட்ரோ கார்பனிலிருந்து தான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவை தயாரிக்கப்படுகின்றன. மிகப் பண்டைய காலத்தில் இருந்தே காவிரிப் படுகை விவசாய நிலமாகத் திகழ்ந்து வருகிறது. இப்படுகை நிலத்தைத் தோண்டி ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டால், அந்தப் பிராந்தியம் முழுவதும் விவசாயம் செய்ய முடியாமல் பாழாகிவிடும். ஹைட்ரோ […]

Read more

பான் கி மூனின் றுவாண்டா

பான் கி மூனின் றுவாண்டா, அகர முதல்வன், கிழக்கு பதிப்பகம், பக்.128, விலை ரூ.120; பத்து சிறுகதைகளின் தொகுப்பு. ஈழத்தில் நடந்த உள்நாட்டுப் போர் அங்கு வாழ்ந்த மக்களை எவ்வாறெல்லாம் பாதித்தது, மக்களின் அன்றாட, இயல்பான வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்து போனது என்பதைச் சித்திரிக்கும் சிறுகதைகள். ராணுவம், மக்கள் மீது போர்தொடுக்கும்போது ஏற்படும் படுமோசமான தீய விளைவுகளும், நிகழும் மனிதத்தன்மையற்ற செயல்களும் மிக இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் போர் இயக்கங்களின் நடவடிக்கைகள், அவற்றில் ஈடுபட்ட மனிதர்கள், அவர்கள் செய்த தியாகங்கள், அவர்களின் இழப்புகள் அதிர […]

Read more

ஹைட்ரோ கார்பன் அபாயம்

ஹைட்ரோ கார்பன் அபாயம், கா.அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், விலை 225ரூ. தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வேளாண் பூமியாகத் திகழ்ந்துவரும் காவிரிப் படுகை, ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காகக் குறிவைக்கப்படுவது பெரும் முரணாக மாறியிருக்கிறது. வலுக்கட்டாயமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசுக்கும் இயற்கை சார்ந்த வாழ்வாதாரத்தைப் போற்றும் மக்களுக்கு இடையிலான மோதலாகவும் உருவெடுத்துள்ளது. ஆனால் ஓ.என்.ஜி.சி.யோ. ‘இது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்’ என்கிறது. இவற்றில் உண்மை என்னவென்பதை அறிவியல் பூர்வமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் அலசி ஆராய்கிறது இந்நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

கடல் பயணங்கள்

கடல் பயணங்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 130ரூ. பயணிகளால்தான் பாதை உருவானது. அதுதான் உருண்டையான உலகின் இரு முனைகளை இணைக்க உதவியது. வாஸ்கோடகாமா, மார்கோபோலோ, கொலம்பஸ் என பன்னிரண்டுபேர் கடலோடிகளாகப் பயணித்து பல்வேறு சிரமங்களுக்கு இடையே கடல்வழிப் பாதைகளையும் அதன் வழிசென்று பல நாடுகளையும் கண்டுபிடித்த வரலாறு. கதைபோல் சொல்லப்பட்டிருப்பது சுவாரஸ்யம்! -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

ஈழ இலக்கியம் – ஒரு விமர்சனப் பார்வை

ஈழ இலக்கியம் – ஒரு விமர்சனப் பார்வை, ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலைரூ.155. நாப அய்யர். அதன் பின்னர் ஈழ இலக்கியத்தை ஈழப்போர் வழியாகவே அறிய நேர்ந்தது. ஈழப்போர் வழியாகவே ஈழ இலக்கியம் சார்ந்த இதழ்கள் உருவாகின. அவையே ஈழ இலக்கியம் பரவலாக அறிமுகமாக வழி வகுத்தது. ஈழத்தின் இலக்கியச் சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி படைப்புகளின் வழியாகவும், சிறுகதையை அ.முத்துலிங்கம் படைப்புகளின் வழியாகவும், கவிதைகளை வில்வரத்தினம், சேரன் படைப்புகளின் வழியாகவும் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். தத்துவத்தின் விளிம்பில் மெய்யியலில் சஞ்சரிப்பவர் தளையசிங்கம். ஒரு முற்போக்காளராக […]

Read more

கடல் பயணங்கள்

கடல் பயணங்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், பக்.144, விலை ரூ.130. உலக வரலாற்றை மாற்றியமைத்த கடல் பயணங்களின் வரலாற்றை எளிய நடையில் விவரிக்கும் நூல். வணிகம், புதையல், ஆராய்ச்சி, பொழுதுபோக்கு, தேடல் என பல்வேறு காரணங்களுக்காக எத்தனையோ மனிதர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், சரித்திரத்தின் பக்கங்களை வசீகரித்த குறிப்பிடத்தக்க 13 பேரின் பயணங்கள் குறித்து இந்த நூல் பதிவு செய்திருக்கிறது. வாஸ்கோடகாமா போர்ச்சுகலில் இருந்து இந்தியாவைத் தேடி செயிண்ட் கேப்ரியல் என்ற கப்பலில் பயணிக்கிறார்; முதல் மூன்று மாதங்கள் நிலமே கண்ணில் படவில்லை. எங்கு திரும்பினாலும் […]

Read more
1 4 5 6 7 8 19