மாணவர்களுக்கான தமிழ்

மாணவர்களுக்கான தமிழ், என்.சொக்கன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ ‘காபி’க்கு தமிழில் என்ன பொருள்; முதலாளி, தொழிலாளி, உழைப்பாளி ஆகியவற்றில் வரும், ‘ஆளி’ எதைக் குறிக்கிறது; நள்ளிரவு என்ற சொல்லில், ‘நள்’ என்பது என்ன? உள்ளிட்ட பல சொற்களுக்கு இலக்கணம் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர்,16/7/2017.

Read more

ஹைட்ரோ கார்பன் – இயற்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான பேரழிவுத்திட்டம்

ஹைட்ரோ கார்பன் – இயற்கைக்கும் மனிதகுலத்துக்கும் எதிரான பேரழிவுத்திட்டம், கா.அய்யநாதன், கிழக்கு பதிப்பகம், பக்.288, விலை ரூ.225. உலக இயக்கத்திற்குத் தேவையான எரிசக்திக்கு ஆதாரமாக இருப்பது ஹைட்ரோ கார்பன். அதில் இருந்து எடுக்கப்படும் கச்சா பொருளைச் சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் போன்றவற்றை நாம் பெறுகிறோம். அப்படிப்பட்ட ஹைட்ரோ கார்பனை நமது நாட்டின் தேவைக்கு ஏற்ற அளவில் உற்பத்தி செய்ய முடியாததால், அதற்குத் தேவையான கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இந்த இறக்குமதியைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் […]

Read more

டிஜிட்டல் பணம்

டிஜிட்டல் பணம், சைபர் சிம்மன், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. வளர்ந்த நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை விரிவாக அலசும் நூல். நிதிச் சமுகத்தை இந்தியாவில் உருவாக்க வேண்டுமானால் அதற்கு டிஜிட்டல் பணமே ஒரே வழி என்பதை எளிமையாக இந்த நூல் புரிய வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 2/8/2017.

Read more

கார்காலம்

கார்காலம், என்.சொக்கன், கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. மென்பொருள் வல்லுநராகவும், எழுத்தாளராகவும் அறியப்பட்ட என். சொக்கன், திருமணத்துக்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட பயண அனுபவத்தையும் பிரிவின் வலிமையையும் விறுவிறுப்பான மொழிநடையில் எழுதியுள்ளார். எப்போதும் முகம் பார்த்தபடியே அருகிருக்கும் கணவன் – மனைவி இருவரில், யார் ஒருவரேனும் சற்றே பிரிந்து சென்று, மீண்டும் கூடுகையில் அன்பின் நெருக்கம் இன்னும் அதிகமாவது நிச்சயம். பயண நாட்களின் அனுபவங்களை நாட்குறிப்பில் எழுதுவதுபோல் பதிவுசெய்துள்ள இந்நாவல், வெளியூர் பயணம் முடிந்து கார்காலத்தில் வீடு திரும்பாதவர்களின் பிரிவின் வலியை மெல்லிய குரலில் […]

Read more

நெருங்காதே நீரழிவே

நெருங்காதே நீரழிவே, டாக்டர் எஸ். விஜயராகவன், சுஜாதா தேசிகன், கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. சர்க்கரை நோயினால் (நீரழிவு) பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அந்த நோயிலிருந்து விடுபட வழி சொல்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

பணம் பத்திரம்

பணம் பத்திரம், செல்லமுத்து குப்புசாமி, கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. பணத்தை எப்படிச் சேமிக்கலாம்? அந்த சேமிப்பை எதில் முதலீடு செய்யலாம்?, அதை எப்படி அதிகரிக்கலாம்? என்பது குறித்த பர்சனல் பைனான்ஸ் பற்றி செல்லமுத்து குப்புசாமி எழுதிய நூல். வீடு, தங்கம், நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்வது சரியானதா? பங்கு சந்தையில் எப்படி முதலீடு செய்ய வேண்டும்? என்பது குறித்து எளிமையாக விளக்குகிறார். சேமிப்பின் அவசியத்தை விளக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

எமகாதக எத்தர்கள்

எமகாதக எத்தர்கள், கி.ஹரி கிருஷ்ணன், கிழக்கு பதிப்பகம், பக். 152, விலை 140ரூ. கற்பனைக்கு எட்டாத, பிரமிக்க வைக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தி செய்த தில்லுமுல்லுகள் பிரசித்தமானவை. பொய், சூழ்ச்சி, வஞ்சகம், திருட்டு, ஆள்மாறாட்டம், ஏமாற்று என்று இவர்கள் பயன்படுத்தாத வழிமுறைகளும், செய்யாத சட்டவிரோத செயல்களும் இல்லை என, எமகாதக எத்தர்களின் மோசடிகளைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 27/8/2017.

Read more

பொலிக பொலிக

பொலிக பொலிக, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 325ரூ. ஸ்ரீராமானுஜரின் சரிதம் ஸ்ரீராமானுஜரின் வரலாற்றை “பொலிக பொலிக” என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் பா. ராகவன். ஒரு நாவல் போல விறுவிறுப்புடன் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

டாக்ஸி டிரைவர்

டாக்ஸி டிரைவர், ஆனந்த் ராகவ், கிழக்கு பதிப்பகம், விலை 120ரூ. எழுத்தாளர் ஆனந்த் ராகவ் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பு. ஒரு சமூதாயத்தின் நேர்மை, கலாசாரம் எல்லாவற்றுக்கும் அளவுகோலே அந்தர ஊரின் வாடகை வண்டி ஓட்டுகிறவர்கள்தான் என்ற கருத்தில் அமைந்துள்ள ‘டாக்ஸி டிரைவர்’ , 75 வயது தந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, அவர் உயிர் பிழைத்து வரமாட்டாரா என்று ஏங்கும் மகனின் ஏக்கத்தை வெளிப்படும், ‘இரண்டாவது மரணம்’ உள்பட அனைத்துக் கதைகளும் அருமை. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

தக்கர் கொள்ளையர்கள்

தக்கர் கொள்ளையர்கள், இரா. வரதராசன், கிழக்கு பதிப்பகம், பக்.224, விலை 200ரூ. வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற இந்நூலாசிரியர், இத்துறை தொடர்பான மிகப் பழைமையான ஆவணங்களைத் தேடி நாடு முழுவதும் பயணம் செய்து, பலவகையான அரிய தகவல்களைத் திரட்டியுள்ளார். அந்த வகையில் தக்கர் கொள்ளையர்களைப் பற்றிய தனியான தொகுப்பே இந்நூல். பாரசீகத்தில் முஸ்லிம் மதத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு இந்தியா வந்த நாடோடி பழங்குடியினரும், இங்குள்ள ஹிந்து பழங்குடியினரும் இணைந்து உருவாக்கியதே இந்த தக்கர் குற்றச் செயல்பாடுகள். இவர்கள் சுமார் 8000 ஆண்டுகளாக இந்தியாவின் வட […]

Read more
1 6 7 8 9 10 19