பண மதிப்பு நீக்கம்

பண மதிப்பு நீக்கம், ஷ்யாம் சேகர், தேவராஜ் பெரியதம்பி, கிழக்கு பதிப்பகம், விலை 75ரூ. 500ரூபாய், 1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை, கடந்த நவம்பர் 8-ந் தேதி அன்று தொலைக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பண மதிப்பு நீக்கத்துக்கு அவசியம் ஏற்பட்டது ஏன்? இந்த அறிவிப்பால் இதுவரை சாதித்தது என்ன? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான விடை காண முயற்சிக்கிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 15/2/2017.   —-   சைவ சமையல் அசைவ உணவு வகைகள், மெர்குரிசன் […]

Read more

நல்ல தமிழில் எழுதுவோம்

நல்ல தமிழில் எழுதுவோம், என். சொக்கன், கிழக்கு பதிப்பகம், பக். 256, விலை 200ரூ. இலக்கணம் என்றாலே காத தூரம் ஓடும் நமக்கு சொக்கனின் இந்நூலைப் படித்தால் அடிப்படையான இலக்கணத்தை அறிந்து கொண்ட உணர்வைத் தருகிறது. நன்னூல், தொல்காப்பியம், இலக்கிய உதாரணங்களை மட்டும் சொன்னால் வறட்சியாக இருக்கும் என்று திரைப்படப்பாடல்களையும் பட்டிமன்ற நகைச்சுவையையும் உதாரணமாகக் காட்டுவது படிப்போரை எளிதில் விளங்க வைக்கும் உத்தி. புதிய தலைமுறையை நல்ல தமிழில் எழுதவைக்கும் முயற்சி இது. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

தத்துவ தரிசனங்கள்

தத்துவ தரிசனங்கள், பத்மன், கிழக்கு பதிப்பகம், பக். 352, விலை 300ரூ. கடவுள் உண்டா, இல்லையா என்ற வாதம் உலகம் தோன்றிய காலந்தொட்டே நடந்து வருகிறது. இது தொடர்பான ஆராய்ச்சியை பாரத நாட்டின் ரிஷிகளும், முனிவர்களும் மேற்கொள்வதுடன் அந்தந்த காலத்தில் சில தத்துவங்களை மக்களுக்கு வழங்கியுள்ளனர். நாத்திகம் பேசும் சார்வாகம், பொருள்களின் சேர்க்கைதான் உலகம் என்னும் லோகாயதம், ஆன்மாவை ஏற்கும் சமணம், சாங்கியம், வாழ்வியலை போதிக்கும் பௌத்தம், அணுக்களின் சேர்க்கையாலேயே உலகம் என்று விவரிக்கும் வைசேஷிகம், காரண – காரியங்களை அலசும் நியாயம், உடல், […]

Read more

நல்ல தமிழில் எழுதுவோம்

நல்ல தமிழில் எழுதுவோம், என். சொக்கன், கிழக்கு பதிப்பகம், பக். 256, விலை 200ரூ. இலக்கணம் என்றாலே காத தூரம் ஓடும் நமக்கு சொக்கனின் இந்நூலைப் படித்தால் அடிப்படையான இலக்கணத்தை அறிந்து கொண்ட உணர்வைத் தருகிறது. நன்னூல், தொல்காப்பியம், இலக்கிய உதாரணங்களை மட்டும் சொன்னால் வறட்சியாக இருக்கும் என்று திரைப்பாடல்களையும், பட்டிமன்ற நகைச்சுவையையும் உதாரணமாகக் காட்டுவது படிப்போரை எளிதில் விளங்க வைக்கும் உத்தி. புதிய தலைமுறையை நல்ல தமிழில் எழுத வைக்கும் முயற்சி இது. நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

சீன இதிகாசக் கதைகள்

சீன இதிகாசக் கதைகள், ஏவி. எம், நஸீமுத்தீ, கிழக்கு பதிப்பகம், பக். 127, விலை 110ரூ. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சீன இதிகாசக் கதைகள் கற்பனையில் சிறகடித்து, நம்பிக்கையில் கால் பதிக்கிறது. மனிதனின் அச்சம், ஆசை, ஆற்றாமை, கற்பனை, தனிமை, தன்னிரக்கம் என்ற உணர்வுகளை, இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன. சீனாவின் சமூக, சமய வரலாற்றையும் இக்கதைகள் தொட்டுக்காட்டுகின்றன. மாயாஜலம், கற்பனை, வினோதம், அற்புதங்கள் இக்கதைகளில் இழையோடும், ஆனாலும், சீன மண்ணின் மரபுகளையும், நம்பிக்கைகளையும் அவை தாண்டி விடாது. இந்தியாவுக்கு வந்த யுவான் சுவாங் என்ற சீனப் […]

Read more

இந்தியா பாகிஸ்தான் போர்கள்

இந்தியா பாகிஸ்தான் போர்கள், துவாரகை தலைவன், கிழக்கு பதிப்பகம், பக். 317, விலை 250ரூ. பொது வாசகர்கள் விரும்பி வாசிக்கும்படி சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் வரலாற்று நூல்கள் தமிழில் மிக அரிதாகவே வெளிவருகின்றன. இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த யுத்தங்கள் குறித்த புத்தகம் வருவது வரவேற்கத்தக்கது. மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டிய இரு நாடுகள் அல்லது இரு சமூகங்கள், நம்பவே முடியாத அளவுக்குப் பகை கொள்வது இந்தியா – பாகிஸ்தானுக்கு மட்டுமே உரித்தான விஷயமல்ல. இராக்-ஈரான், இன்றைய இஸ்ரேல் பகுதி போன்ற இடங்களிலும் நெடுங்காலமாகப் […]

Read more

ஆதி மனிதன் உணவுமுறை – பேலியோ டயட்

ஆதி மனிதன் உணவுமுறை – பேலியோ டயட், நியாண்டர் செல்வன், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலை ரூ.150. ஆராக்கியத்தோடு வாழ வேண்டுமானால் தற்போதைய உணவு முறையை மாற்றி, ஆதிமனிதன் சாப்பிட்ட உணவுக்கப் போக வேண்டும் என்கிறார் “பேலியோ டயட்” நூலின் ஆசிரியர் நியாண்டர் செல்வன். அவர் கூறுகிற உணவு – காலையில் 10 பாதாம் கொட்டைகள், மதிய உணவு 4 முட்டைகள். மாலை சிற்றுண்டி ஒரு கோப்பை பாலுடன் கால் கிலோ காய்கறிகள். இரவு உணவு பசி அடங்கும் வரை இறைச்சி. நன்றி: தினத்தந்தி, […]

Read more

நல்ல தமிழில் எழுதுவோம்

நல்ல தமிழில் எழுதுவோம், என் சொக்கன், கிழக்கு பதிப்பகம், பக்.256, விலை ரூ.200. தமிழர்கள் தம் தாய்மொழியின் பெருமையை உணர்ந்து அதைப் பிழையில்லாமல் படிக்கவும் எழுதவும் பழக வேண்டும். ஏனெனில், தமிழ் மொழியில் ஓர் எழுத்தை மாற்றி எழுதினாலும் அதன் பொருள் மாறிவிடும். ஒரு மொழிக்கு ஆணிவேர் போன்றது இலக்கணம். அதை முறையாக – சரியாகக் கற்றுக் கொண்டால்தான் பிழை இல்லாமல் எழுதவும், படிக்கவும், உச்சரிக்கவும் முடியும். மொழித் தூய்மைக்கு முக்கியமானது பிழை இல்லாமல் எழுதுவதுதான். இன்றைக்கும் பலரும் தடுமாறிப் போவது வல்லின, மெல்லினச் […]

Read more

லீ குவான்யூ சிங்கப்பூரின் சிற்பி

லீ குவான்யூ சிங்கப்பூரின் சிற்பி, எஸ்.எஸ்.வி, மூர்த்தி, கிழக்கு பதிப்பகம், விலை 250ரூ. இன்று சிங்கப்பூர் ஒரு சொர்க்கபுரியாக மாறி இருக்கிறதென்றால் அதற்கு ஒரே காரணம் லீ குவான் யூ. அந்த நாட்டின் பிரதமராக இருந்த அவர், தரமான கல்வி, நல்ல வாழ்க்கைத்தரம், வலுவான பொருளாதாரம், ஒழுங்கு, தூய்மை என உலகத்துக்கே ஒரு முன்மாதிரி நாடாக சிங்கப்பூரைக் கட்டமைத்தார். அவரது மன உறுதி, தொலை நோக்குப் பார்வை, திட்டமிடும் திறன் ஆகியவற்றை உலகமே வியந்து பாராட்டுகிறது. அத்தகைய லீ குவான் யூ வரலாற்றை, சிங்கப்பூரின் […]

Read more

ஆதி மனிதன் உணவுமுறை – பேலியோ டயட்

ஆதி மனிதன் உணவுமுறை – பேலியோ டயட், நியாண்டர் செல்வன், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலை ரூ150. இன்றைய நமது உணவுமுறை உடல் நலனுக்கு எதிராக உள்ளது. எனவே இன்றைய உணவுமுறையை மாற்றி ஆதி மனிதன் உண்ட உணவுகளை உட்கொண்டால் (அதுதான் பேலியோ டயட்) இன்று நாம் சந்திக்கும் பல உடல்நலப் பிரச்னைகள் பலவற்றைத் தீர்த்துவிடலாம் என்று கூறும் நூல். நூலில் கூறப்படும் பல கருத்துகள் மிகவும் வித்தியாசமாகவும், பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்துபவையாகவும் இருக்கின்றன. இட்லி, சப்பாத்தி உடலுக்கு நல்லது என்பதற்கு மாறாக, “இட்லி, […]

Read more
1 8 9 10 11 12 19