சிக்கனம் சேமிப்பு முதலீடு

சிக்கனம் சேமிப்பு முதலீடு, சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், பக்.120, விலை ரூ.125. சேமிப்புப் பழக்கம் வீட்டில் உள்ள உண்டியலிலிருந்து தொடங்குகிறது எனத் தொடங்கும் நூலாசிரியர், சேமிப்பதால் என்ன பயன் என்பதை விளக்குகிறார். பணமாகச் சேமித்து வைக்கும்போது விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகிய காரணங்களால் பணத்தின் மதிப்பு குறைந்துவிடுகிறது. அதனால் லாபம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே, சேமிப்பதற்கான சிறந்த வழிமுறைகளை இந்நூலில் விளக்கியுள்ளார். தனிநபர்களிடம் அல்ல; பதிவு பெற்ற சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதே நல்லது என்று கூறுகிறார். வங்கிகளில் டெபாசிட் செய்வது நல்லதா? வங்கியின் […]

Read more

மொபைல் ஜர்னலிசம்

மொபைல் ஜர்னலிசம், நவீன இதழியல் கையேடு, சைபர் சிம்மன், கிழக்கு பதிப்பகம், பக்.216, விலை ரூ.225. செல்பேசி இதழியல் என்பது, களத்தில் நடக்கும் நிகழ்வுகளை எளிதாகவும், விரைவாகவும் படம் பிடித்து வெளியிட ஸ்மார்ட் போன்கள், செயலிகள், சமூக வலைப்பின்னல் சேவைகள் மற்றும் இணைய வசதி ஆகியவை இணைந்து அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதாகும். யார் வேண்டுமானாலும் செல்போன் மூலம் செய்திகளைப் பிறருக்குப் பரப்பலாம் என்ற நிலை இருப்பதால், அதற்கான அடிப்படைகளை வரையறுத்து விளக்குவதும், அவற்றை ஒழுங்குபடுத்துவதும் அவசியமாகிறது. அந்த அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. செல்பேசியின் மூலம் […]

Read more

தமிழ் அறிஞர்கள்

தமிழ் அறிஞர்கள், ஜனனி ரமேஷ்,  கிழக்கு பதிப்பகம்,  விலைரூ.500 உயர்தனிச் செம்மொழிகள் ஆறினுள், தமிழ் முதன்மையானது எனலாம். தொல்காப்பியமே, 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனில், தமிழ் மொழியின் தொன்மைக் கால வரையறைக்குள் கொண்டு வருவது கடினமாகும். தமிழின் எழுத்து வடிவமும் பல மாற்றம் பெற்று வந்துள்ளது.ல இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் இருந்து அச்சிடப்பட்டு, பலரும் படிக்கும் நிலையில் இருக்கிறது. இத்தகு பல முன்னேற்றங்களை தமிழ் மொழி பெற, தமிழ் அறிஞர்கள் பலர், தம் வாழ்நாள் முழுவதும் ஓடி உழைத்துள்ளனர். அவர்களில் சிலரின் வரலாறு கூறுவதே இந்நுாலின் […]

Read more

இந்திய ஓவியம் ஓர் அறிமுகம்

இந்திய ஓவியம் ஓர் அறிமுகம், அரவக்கோன், கிழக்கு பதிப்பகம், விலை ரூ.250 சுவரோவியங்கள், பழங்குடியின ஓவியங்கள், கிராமிய ஓவியங்கள் தொடங்கி வெவ்வேறு சாம்ராஜ்ய காலகட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் என இந்திய ஓவியங்களை விரிவாக அறிமுகப்படுத்தும் நூல் இது. இது தனிநபர்களின் ஓவியங்களைப் பற்றியது அல்ல; ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஓவியங்களைப் பற்றியது. அதனாலேயே அரவக்கோனின் கட்டுரைகள் வழி ஓவியங்களோடு சேர்த்து ஒரு காலகட்ட சமூக வரலாற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது. ஓவியங்கள் குறித்துப் பரவலான விவாதம் நடைபெறாத நம் சூழலில், இந்நூலின் […]

Read more

தமிழ் அறிஞர்கள்

தமிழ் அறிஞர்கள், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.440, விலை ரூ.500. தமிழின் இன்றைய நிலைக்குக் காரணமான தமிழ்அறிஞர்கள் 36 பேர் தமிழுக்காற்றிய அரும்பணிகளைப் பற்றி விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது . உ.வே.சாமிநாத அய்யர், அ.ச.ஞானசம்பந்தன், ஒளவை துரைசாமிப் பிள்ளை, பாரதியார், பாரதிதாசன், தேசிக விநாயகம் பிள்ளை, ஜி.யு.போப், தேவநேயப் பாவாணர், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், வ.வே.சு.ஐயர், நீதியரசர் மு.மு.இஸ்மாயில் உள்ளிட்ட முப்பத்தாறு தமிழறிஞர்களின் வாழ்க்கைச்சம்பவங்கள், அவர்கள் எழுதிய நூல்கள், அவர்களின் கருத்துகள், அவர்கள் பங்கு கொண்ட இயக்கங்கள் என விரிந்து செல்கிறது. நூலாசிரியர் எழுதிய நீண்ட […]

Read more

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்,மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. அரிஸ்டாட்டில், அங்குலிமாலா, ஆப்பிரிக்கா, முள்ளம்பன்றி, அசோக என்று ரசிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் பல தலைப்புகளை அறிமுகம் செய்கிறது இந்நூல். கதை வடிவில் எளிமையாகவும் சுவையாகவும் எழுதப்பட்டுள்ளது. வாசிக்க மட்டுமல்ல, நம் உலகை நேசிக்கவும் இந்நூல் உதவும். நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789386737748.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சிலைத் திருடன்

சிலைத் திருடன், எஸ்.விஜயகுமார், தமிழில் பி.ஆர்.மகாதேவன், கிழக்கு பதிப்பகம், பக். 240, விலை 250ரூ. நம் கண் முன் நடந்துகொண்டிருக்கும், ஒரு குற்றச் செயலாக சிலைத்திருடன் நாவல், விறுவிறுப்பாக நகர்கிறது. இந்தியாவின், பழம்பெருமை பேசும் சிலைகள், மாயமாவதும், அவை உலக அருங்காட்சியங்களில் பளபள ஒளியில் மிளிர்வதும், அதைப் பற்றிய குறைந்தபட்ச வருத்தம் கூட இல்லாமல் நாம் இருப்பதும் எப்படி. இதைத்தான் சிலைத்திருடன் உரைக்கிறான். நன்றி: தினமலர், ஜனவரி 2019. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9788184939491.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

ஒல்லி பெல்லி

ஒல்லி பெல்லி, டாக்டர் கு.கணேசன் , கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. உடல் பருமன் ஆபத்தானது என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ள அதே நேரம், அதிலிருந்து விடுபடுவதற்கு ஆபத்து நிறைந்த வழிகளை நாடும் போக்கும் அதிகரித்துள்ளது. தொப்பையைக் குறைப்பது, உடல் பருமனால் விளையும் நோய்கள்குறித்த விழிப்புணர்வைப் பெறுவது, அதற்கான சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது, எடையைக் குறைப்பதற்கான சுயமுயற்சிகள் ஆகியவற்றை உரையாடலைப் போன்ற சுவாரஸ்யமான பாணியில் விளக்கும் நூல். அலோபதி மருத்துவத்தில் 30 ஆண்டு அனுபவம் பெற்ற டாக்டர் கு.கணேசன் ‘கல்கி’, வார இதழில் எழுதிய கட்டுரைகளின் […]

Read more

பின்லாந்து காட்டும் வழி

பின்லாந்து காட்டும் வழி, தொகுப்பு இல்க்கா டாய்பாலே, தமிழில் காயத்ரி மாணிக்கம், கிழக்கு பதிப்பகம், விலை 300ரூ. எது வளர்ச்சி? பொருளாதார வளர்ச்சியும் தொழில்நுட்ப மேம்படுத்தலும்தான் முன்னேற்றம் என்று பரவலாக நம்பப்படுகிறது. அத்தகைய நம்பிக்கையில் இரந்து விடுபட்டுச் சமூக வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுவதே உண்மையான முன்னேற்றம் என்று உணர்ந்த நாடுகளில் ஒன்று பின்லாந்து. அங்கு ஏற்பட்ட திகைக்க வைக்கும் 108 சமூகக் கண்டுபிடிப்புகளைப் பேசுகிறது 17 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பின்லாந்து காட்டும் வழி புத்தகம். நன்றி: தமிழ் இந்து, 15/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

இந்திய ஓவியம் ஓர் அறிமுகம்

இந்திய ஓவியம் ஓர் அறிமுகம், அரவக்கோன், கிழக்கு பதிப்பகம், விலை 250ரூ. சுவர் ஓவியங்கள், பழங்குடியின ஓவியங்கள், கிராமிய ஓவியங்கள் தொடங்கி ஒவ்வொரு மாநிலவாரியாக இந்திய ஓவியங்களை விரிவாக அறிமுகப்படுத்துகிறார் மூத்த ஓவியர் அரவக்கோன். பல்வேறு விதமான ஓவிய பாணிகள், அதன் வரலாற்றுப் பின்னணி என நீண்ட விவாதங்களையும் இந்தப் புத்தகத்தில் முன்னெடுத்திருக்கிறார். நன்றி: தி இந்து, 11/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9789386737441.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more
1 2 3 4 5 6 19