தமிழ் நாட்டுப்புறவியல்

தமிழ் நாட்டுப்புறவியல், டி.தருமராஜ், கிழக்கு பதிப்பகம், விலைரூ.250. நாட்டுப்புறவியல் என்னும் தலைப்பில் நாட்டுப்புறக் கதைகளின் அணிவகுப்பை ஆய்வு நோக்கில் வழங்கும் நுால். தேவராட்டத்தை நடத்துவோர், நடத்தப்படும் ஊர்கள், ஆட்ட முறை என்று ஒவ்வொன்றையும் தெளிவுபடுத்துகிறது. தேவராட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் உருமி மேளத்தைத் தேவதுந்துபி என்று மாற்றுப்பெயர் கொண்டு குறிப்பிடுவதை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார். நாட்டுப்புறவியலை மானுடவியல் சிந்தனையுடன் இணைத்து உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கிறது. நாட்டுப்புறவியலில் புதிய அணுகுமுறையாக உள்ளது. உலகளாவிய நிலையில் நாட்டுப்புறவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை, தமிழ் வாசகர்களுக்கு எளிய நடையில் மொழிபெயர்த்து தந்துள்ளார். நாட்டுப்புறவியலில் […]

Read more

அழகிய இந்தியா

அழகிய இந்தியா தரம்பாலின் எழுத்துகளுக்கு ஓர் அறிமுகம், பி. ஆர். மகாதேவன், கிழக்கு பதிப்பகம், விலைரூ.300. பிரிட்டிஷ் ஆட்சி கால ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு, ஆங்கிலேயர் வருமுன்பே உன்னதமாக விளங்கிய இந்திய பாரம்பரியக் கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், காந்திக்கு முன்பான ஒத்துழையாமை இயக்கம், பஞ்சாயத்து ராஜ் பற்றி, காந்தியவாதி தரம்பால் எழுதிய நுால்களின் முன்னுரைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்ட நுால். இந்திய உன்னதங்களை எடுத்துரைக்கும் தரம்பாலின், ‘அழகிய மரம் – 18ம் நுாற்றாண்டில் இந்தியாவின் பாரம்பரியக் கல்வி, அழகிய நதி – இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், […]

Read more

செந்தமிழ் நாடும் பண்பும்

செந்தமிழ் நாடும் பண்பும், இரா. நாகசாமி, கிழக்கு பதிப்பகம், பக்.172, விலை ரூ.200. பொதுவாக வரலாறு எழுதப்படும்போது பெருமைகள் மிகைப்படுத்தப்படுவதும், சிறுமைகள் மறைக்கப்படுவதுமே வழக்கம். அவ்வாறின்றி, கடந்த கால தமிழா் வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ‘உள்ளது உள்ளபடி’ பதிவு செய்துள்ளாா் இந்நூலாசிரியா். இந்நூலில் ‘செந்தமிழ் நாடும் பண்பும்’ என்பதில் தொடங்கி, ‘தொல்காப்பியமும் தமிழா் வாழ்வும்’, ‘காலம்தோறும் தமிழா் திருமணம்’, ‘நடுகல் மரபு: உலகியல் மரபும் நாடக மரபும்’ உள்ளிட்ட முப்பத்தாறு தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் நாம் அறிந்திராத பல அரிய செய்திகள் […]

Read more

திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல்

திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.344, விலை ரூ.375. பண்டைய புத்தகங்கள், வரலாற்று மாந்தர்கள் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் திருக்குறள், அதன் ஆசிரியர் வள்ளுவர் தொடர்பான ஆராய்ச்சி விஷயத்தில் ஒரு பிரத்தியேக சிறப்பும் சர்ச்சையும் உண்டு. குறள் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரும், தங்களது உயர்வு நவிற்சியால், வள்ளுவனையும் குறளையும் தம்முடையதாக மட்டுமே ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுதான் சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் காரணமாகிவிடுகிறது. அறிவியலாளர்கள் குறைவாகவும், ஆர்வலர்கள் அதிகமாகவும் குறள் ஆராய்ச்சியில் இறங்கியதால் […]

Read more

தமிழகப் பாளையங்களின் வரலாறு

தமிழகப் பாளையங்களின் வரலாறு, மு. கோபி சரபோஜி, கிழக்கு பதிப்பகம், விலைரூ.150. பாளையம் – பாலாமு என்ற தெலுங்கு சொல்லுக்கு, ராணுவ முகாம் என்று பெயர். அதை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டவர்கள் பாளையக்காரர்கள். தென்தமிழகத்தில் குறிப்பாக, விசய நகரப் பேரரசு காலத்தில் பாளையங்கள் உருவாகின. சிற்றரசர்களாகவே வலம் வந்தனர். ஊர் பரிபாலனம் முக்கிய கடமையாக இருந்துள்ளது. விசயநகர அரசர்கள், நாயக்கர்கள், நவாப்புகள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உடன்பட்டும் மாறுபட்டும் நிலைநிறுத்திக்கொண்டனர். வரிப்பணம் செலுத்துவதும், வரி செலுத்தாமையும் நடந்துள்ளது. பாஞ்சாலங் குறிச்சியை ஆண்ட கட்டபொம்மன், ஆங்கிலேயருக்கு […]

Read more

அழகிய இந்தியா

அழகிய இந்தியா – தரம்பாலின் எழுத்துகளுக்கு ஓர் அறிமுகம்,  தரம்பால், தமிழில் – பி.ஆர். மகாதேவன், கிழக்கு பதிப்பகம், பக். 264, விலை ரூ. 300;    தரம்பாலின் எழுத்துகளுக்கு ஓர் அறிமுகம்தான் அழகிய இந்தியா என்ற இந்த நூல் என்றாலும் அவரைப் பற்றிய, அவருடைய எழுத்துகள் பற்றிய விரிவான சித்திரத்தை நம் முன்வைக்கிறது. பிரிட்டிஷார் வருவதற்கு முன்னரே இந்தியாவில் கல்வி நிலை உலகின் பிற பகுதிகளை விடச் சிறப்பாக இருந்தது; பிரிட்டிஷார் இங்கு வந்து பாரம்பரியக் கல்வி எனும் அந்த அழகிய மரத்தை […]

Read more

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை? ,  டி.தருமராஜ், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலை ரூ.180.     சமுதாயத்திற்கு ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி நிற்கிற பொது பிம்பங்கள் அவசியம். அப்படிப்பட்ட பொது பிம்பமாக இளையராஜா இருக்கிறார். அதனால் அவர் முதல்வர் வேட்பாளராக மாட்டார் என்பதை விளக்குகிறது நூலின் தலைப்பைக் கொண்ட கட்டுரை. இந்நூலில் 12 கட்டுரைகள்அடங்கியுள்ளன. ஏற்கெனவே தமிழ்த் திரைப்படப் பாடல்கள் தமிழ் மக்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கங்கள் எவை? இளையராஜா இசை அமைத்த பாடல்கள் அவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இந்நூலில் […]

Read more

அழகிய நதி

அழகிய நதி, பி. ஆர். மகாதேவன், கிழக்கு பதிப்பகம், விலைரூ.400.   வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற விடுதலைப் போராட்ட வீரர் தரம் பால். இந்தியா பற்றிய கனவுகளில் ஆழ்ந்த கருத்தை சிந்தித்தவர். இந்திய அளவிலும், உலக அளவிலும் அவரது ஆய்வுகளுக்கு வரவேற்பு இருந்துள்ளது. இந்த நுாலில், 18ம் நுாற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எவ்வாறு இருந்திருக்கின்றன என்பதை மிகவும் விரிவாக ஆவணங்களின் தரவுகளோடு எடுத்துரைக்கிறார். கணிதவியல், வானவியல் சிறந்திருந்ததை பிரிட்டிஷார் ஆவணங்களிலிருந்து எடுத்துக் காட்டி விளக்கும்போது, பெருமையை உணர்கிறோம். இந்தியாவில் […]

Read more

கஸ்டமர் சைக்காலஜி

கஸ்டமர் சைக்காலஜி,  சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம்,  பக்.152;  விலை ரூ.170;   வாடிக்கையாளர் உளவியலை அறிவதன் மூலம் அவரை வசப்படுத்தி நமது தொழிலை எப்படி அபிவிருத்தி செய்துகொள்ளலாம் என்பது இந்நூலில் விவரிக்கப்படுகிறது.வாடிக்கையாளருக்குத் தேவை இருந்தால் மட்டுமே பொருளை வாங்குவார். அவரை வசப்படுத்தி அதை வாங்கச் செய்துவிட முடியாது. ஆனால் தேவையை உணரச் செய்வதுதான் நல்ல வியாபார உத்தி. அதில்தான் உளவியலின் பங்களிப்பு வருகிறது. அடிப்படையான சில உளவியல் பாடங்களைக் கற்றுக் கொண்டால் போதும், வாடிக்கையாளர்கள் உங்கள் உள்ளங்கையில் அடங்கிவிடுவார்கள் என அழுத்திச் சொல்கிறார். […]

Read more

குணங்குடி மஸ்தான் சாஹிப்

குணங்குடி மஸ்தான் சாஹிப்,  நாகூர் ரூமி,  கிழக்கு பதிப்பகம், பக்.96. விலை ரூ.120. இந்திய சூஃபிகள் வரிசையில் வெளியிடப்பட்டுள்ள நூல், குணங்குடி மஸ்தான் சாஹிப். இஸ்லாமியராக இருந்தபோதிலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஞானியாக வாழ்ந்து மறைந்தவர் சுல்தான் அப்துல் காதிர் என்ற இயற்பெயரைக் கொண்டவரான குணங்குடி மஸ்தான் சாஹிப். அவரை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு கிடைக்கப் பெற்ற தரவுகளைத் தேவையானஅளவு பயன்படுத்தித் தக்க விதத்தில் முன்வைத்துள்ளார் ரூமி. அரபு உலக ஞானிகளுடன் ஒப்பிட்டுத் தொடங்கும்நாகூர் ரூமி, மருத்துவமும் மகத்துவமும் தமிழும் கலந்துறையும் சித்தராக மஸ்தான்பார்க்கப்படுவதைக் குறிப்பிடுகிறார். […]

Read more
1 2 3 4 19