நிலைகெட்ட மனிதர்கள்

நிலைகெட்ட மனிதர்கள், க.முத்துக்கிருஷ்ணன், சந்தியா பதிப்பகம், பக்.168, விலை ரூ.170. சினிமா, அரசியல், இலக்கியம் ஆகிய மூன்று துறைகளும் எவரொருவரையும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாது. இத்துறைகளில் பேரும் புகழும் ஈட்டுவது எளிதல்ல. கடும் உழைப்பும் முயற்சியும் இருந்தாலொழிய வெற்றி பெற இயலாது. ஆனாலும் எவ்வித அடிப்படை அறிவும் புரிதலும் இல்லாத சிலர் இத்துறைகளில் கோலோச்சுவது மட்டுமல்லாது கோடிக்கணக்கில் பணமும் ஈட்டுகின்றனர் என்பதையும் மறுக்க இயலாது. அப்படியானவர்களைப் பகடி செய்து புனையப்பட்ட நாவல்தான் ‘நிலைகெட்ட மனிதர்கள்’. மளிகை மண்டி முதலாளி, அவருடைய வேலைக்காரன், மளிகை […]

Read more

என் பார்வையில் இந்திய அரசியல்

என் பார்வையில் இந்திய அரசியல் , அ.பிச்சை, சந்தியா பதிப்பகம், பக்.134, விலை ரூ. 130.   இந்திய நாடு விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15 அன்றும் அதற்கு முந்தைய நாளிலும் தொடங்கி, நாட்டின் 73 -ஆவது விடுதலை நாளைக் கொண்டாடிய கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 வரை நாட்டில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளை வெவ்வேறு தலைப்புகளில் சுவையான கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். சுதந்திர இந்தியாவில் ஜவாஹர்லால் நேரு முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்காமல் சர்தார் வல்லபபாய் பட்டேல் பொறுப்பேற்றிருந்தால் நாடு எப்படி […]

Read more

நேமிநாதம் காலத்தின் பிரதி

நேமிநாதம் காலத்தின் பிரதி, நா.அருள்முருகன், சந்தியா பதிப்பகம், பக்.232, விலை ரூ.230. தொல்காப்பியத்திற்குப் பிறகு இலக்கண நூல்கள் பல வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்று, சமணரான குணவீர பண்டிதரால் எழுதப்பட்ட நேமிநாதம். “நேமிநாதம் குறித்து ஓரிரு நூல்கள் வந்திருந்தாலும் அவை உள்ளடக்கம், ஒப்பீடு அளவிலேயே நின்றுவிட்டன. நேமிநாதத்தைத் தனியொரு பனுவலாகக் கொண்டு அதன் கொடுக்கல் வாங்கல் பற்றி முழுமையான சிந்தனை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை’ என்ற நூலாசிரியரின் மனக்குறை, இந்த ஆய்வின் மூலம் ஓரளவு தீர்ந்திருக்கிறது. நேமிநாதத்தின் இலக்கண வெளிப்பாடு, நேமிநாதத்துக்கும் வீரசோழியத்துக்கும் இடையேயான வேறுபாடுகள், நேமிநாதம் […]

Read more

மதுரையின் அரசியல் வரலாறு 1868

மதுரையின் அரசியல் வரலாறு 1868, ஜே.எச்.நெல்சன், தமிழில்: ச.சரவணன், சந்தியா பதிப்பகம், விலை: ரூ.360 தமிழக நகரங்களில் நீண்ட காலம் தலைநகரமாக விளங்கிய சரித்திரப் பெருமை மதுரைக்கு உண்டு. மதுரை என்பது நிலமும் மக்களும் சார்ந்த வெறும் நகரம் மட்டுமல்ல; கடல் கொண்ட முதலாம் தமிழ்ச் சங்கக் காலத்தை இன்னமும் நினைவுறுத்திக்கொண்டிருக்கும் தொன்மமும்கூட. மதுரையைப் பற்றிய வரலாற்று நூல்களுள் ஜேம்ஸ் ஹென்ரி நெல்சனின் ‘மதுரா கன்ட்ரி மானுவல்’ குறிப்பிடத்தக்க ஒன்று. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உதவும் நோக்கில், மாவட்ட விவரச்சுவடிகள் […]

Read more

இலக்கியச் சாதனையாளர்கள்

இலக்கியச் சாதனையாளர்கள், க.நா.சுப்ரமண்யம், சந்தியா பதிப்பகம், விலை: ரூ.175 க.நா.சு. வரைந்த உயிர்க்கோடுகள். நகுலன், ‘அதிகமாகப் பேசாமல் நிதானமாகப் பதற்றமின்றி ஒருவருடன் இருப்பது ஒரு தத்துவம்’ என்று ‘ஐந்து’ கவிதைத் தொகுதியில் எழுதியிருப்பார். இன்னொருவருடன் அல்ல, தன்னுடனேயே ஒருவர் பேசாமல் இருக்க முடியக் கூடிய சூழல் தொலைந்துவிட்ட இந்த நாட்களில், க.நா.சுப்ரமண்யம் எழுதியிருக்கும் இந்த நூலில் 41 எழுத்தாளுமைகளைப் பற்றிய சிறு கட்டுரைகளின் முக்கியத்துவம் புலப்படுகிறது. க.நா.சு.வால் அப்படி இருக்க முடிந்ததோடு அவர்களைத் துல்லியமாக மதிப்பிடவும் முடிந்திருக்கிறது. தமிழில் கடந்த நூற்றாண்டில் நுண்கலை, இலக்கியத் […]

Read more

துர்க்கையின் புதுமுகம்

துர்க்கையின் புதுமுகம், என்.சண்முகலிங்கன், தமிழில் பக்தவத்சல பாரதி, சந்தியா பதிப்பகம், விலை 190ரூ. மாறும் சமூகங்கள் மாறும் வழிபாடுகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய கிராமமான தெல்லிப்பழையில், கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் துர்க்கை வழிபாடு தொடங்கப்பட்டு ஈழம் முழுவதும் துர்க்கை அம்மன் கோயில்களும் வழிபாடும் பரவியது தொடர்பான சமூகவியல், மானுடவியல் ஆவணம் இந்நூல். தாய் தெய்வ வழிபாடுகள் தொடரும் மரபும் அதற்கான சமூகக் காரணங்களையும் பேசும் முக்கியமான மானுடவியல் நூல் இது. தென்னிந்திய, தமிழ் சமய, கலாச்சாரம் மரபுகளுடன் தொன்மையான உறவு கொண்டவர்கள் ஈழத் […]

Read more

சில பெண்கள் சில அதிர்வுகள் வேத, இதிகாச, புராண காலங்களில்,

சில பெண்கள் சில அதிர்வுகள், வேத, இதிகாச, புராண காலங்களில்,  ஹேமா பாலாஜி, சந்தியா பதிப்பகம், பக்.184, விலை ரூ.140. தினமணி டாட் காமில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வேத காலம் தொட்டு புராண காலம் வரை வாழ்ந்த குறிப்பிடத்தக்க சில பெண்களின் உயர்வான பண்புகளை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. யாக்ஞவல்கியரின் மனைவியான மைத்ரேயி, யாக்ஞவல்கியரை தனது தத்துவஞானக் கேள்விகளால் திணறடித்த கார்கி வாசக்னவி போன்றவர்களைப் பற்றி மட்டுமல்ல, கெட்டவர்களாக பலரால் கருதப்படுகிற கைகேயி, மண்டோதரி, காந்தாரி, சூர்பனகை ஆகியோரின் உயர்ந்த பண்புகளையும் இந்நூல் […]

Read more

மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதெல்லாம், சி.வீரரகு, சந்தியா பதிப்பகம், விலை 150ரூ. மனைவி என்பவள் கணவனை அலுவலகத்திற்கும், மகளை கல்லுாரிக்கும், மகனை பள்ளிக்கும் அனுப்பி வைக்கும் வரை ஓயாது உழைப்பவள். சுருங்கச் சொல்லின் அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது. பெண்ணின் பெருமை குறித்து முதல் ஆறு அத்தியாயங்களில் பேசும் ஆசிரியர், பிறகு வரலாற்றுச் சிறப்பு மிக்க தம்பதியர் குறித்தும் பேசுகிறார். மனை மாட்சி பேசும் மங்கல நுால்! நன்றி: தினமலர், 15/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

காந்தியும் பகத் சிங்கும்

காந்தியும் பகத் சிங்கும், வி.என்.தத்தா, தமிழில்: அக்களூர் இரவி, சந்தியா பதிப்பகம், பக்.160, விலை ரூ.160. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சைமன் கமிஷன் வருகையை எதிர்த்துப் போராடிய லாலா லஜபதி ராய் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் சாண்டர்ஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப் பழி வாங்கும்விதத்தில் பகத் சிங்கும் நண்பர்களும் சாண்டர்ûஸச் சுட்டுக் கொன்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக 1929 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 -ஆம் தேதி தில்லி மத்திய சட்டசபையில் பகத் சிங், தத் ஆகியோர் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். அதனையொட்டி […]

Read more

வேதாந்த மரத்தில் சில வேர்கள்

வேதாந்த மரத்தில் சில வேர்கள்,  கா.வி. ஸ்ரீநிவாஸமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.80, விலை ரூ.80. நூற்பெயர் குறிப்பிடும் வேதாந்த மரம் மகாகவி பாரதியாரேதான்! அந்த மகாமரத்தின் சில வேர்களை மட்டுமே கண்டு இன்புற்று இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள கட்டுரைகளைப் படைத்ததாக ஆசிரியர் கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி குறிப்பிடுகிறார். இந்நூலில் இடம் பெற்றுள்ள ஏழு மணியான கட்டுரைகளைச் சிந்தனைக் கோவைகள் எனலாம். “மந்திரம் போல் வேண்டுமடா என்ற கட்டுரையில், சொல் என்பது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வெறும் ஊடகம் அல்ல, அதற்கு திடமான உருவமும் செயலும் உண்டு என்பதாக […]

Read more
1 2 3 10