மாடர்ன் சவுத் இந்தியா

மாடர்ன் சவுத் இந்தியா, ராஜ்மோகன் காந்தி, அலெப் புக் கம்பெனி, விலை: ரூ.799 பதினாறாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கி 2018 வரையிலான காலகட்டத்தின் தென்னிந்திய வரலாற்றைச் சுருங்கக் கூறும் முயற்சியாக ராஜ்மோகன் காந்தியின் இந்நூல் அமைகிறது. 16-ம் நூற்றாண்டில் தக்காணப் பீடபூமியின் பீஜப்பூர், அகமத் நகர், கோல்கொண்டா, பிடார் சுல்தான்கள் ஒன்றிணைந்து, மத்திய காலப் பகுதியின் மிகப் பெரும் அரசான விஜயநகர ஆட்சிக்கு முடிவுகட்டினர். அதைத் தொடர்ந்து வலுகுன்றிய நாயக்கர்கள், சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் இவர்களின் பரஸ்பரப் பகைமையை ஐரோப்பிய வர்த்தக கம்பெனிகள் […]

Read more

நவீன அரசை காந்தி எப்படிப் பார்த்தார்?

நவீன அரசை காந்தி எப்படிப் பார்த்தார்?, காந்திஸ் பொலிட்டிக்கல் ஃபிலாஸஃபி: எ க்ரிட்டிக்கல் எக்ஸாமினேஷன், பிக்கு பாரேக், பால்கிரேவ் மேக்மில்லன் – 1989, விலை: ரூ.1,895 காந்திய ஆய்வுகளில் பிக்கு பாரேக் எழுதிய ‘காந்தியின் அரசியல் தத்துவம்: ஒரு நுண்ணாய்வு’ (Gandhi’s Political Philosophy: A Critical Examination) என்ற ஆங்கில நூல் குறிப்பிடத் தக்க ஒன்று. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்நூல் முன்வைத்த சில வாதங்கள் இன்றைய காலத்தில் கேள்விகளாக மீண்டும் எழத் தொடங்கியிருக்கின்றன. காந்தியின் அரசியல் தத்துவ நிலைப்பாடுகள் […]

Read more

இசை எனும் நீர்

இசை எனும் நீர், நினைவின் ஆழியில் அலையும் கயல்கள், ரவிசுப்பிரமணியன், போதிவனம் பதிப்பகம், விலை: ரூ.150. நல்லவற்றை அடையாளம் காணுதல் ஒரு கலை. தனக்கானதைக் கண்டடைந்து, அதைத் தன்னுணர்வாக மாற்றி பாடுபொருளின் பன்முகத்தன்மையை நம் பயணிப்புக்கு ஏதுவாக மாற்றம்கொள்ளவும் செய்திடுகிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன். அன்றாடங்களில் நிகழும் சம்பவங்களில் கவிதைக்கான விதையைத் தேர்வுசெய்தல், திறம்பட மொழியில் பிணைத்தல், இசை எனும் நீரால் ஈரப்படுத்துதல் எனும் தொடர் செயல்பாடுகளால் தன் படைப்புகளுக்கு முழுமை தருகிறார் ரவிசுப்பிரமணியன். இயல்பில் அவர் பாடகராக இருப்பது அவரின் கவிதைகளுக்குக் கூடுதல் பலமாக […]

Read more

கர்ணன்: காலத்தை வென்றவன்

கர்ணன்: காலத்தை வென்றவன், சிவாஜி சாவந்த், தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் வெளியீடு, விலை: ரூ.899. இந்திய இலக்கிய மரபில் அதிக நிழற்பிரதிகளைக் கொண்ட பேரிலக்கியம் மகாபாரதம். அச்சு யுகத்தில் மகாபாரதத்தின் வெவ்வேறு நிழற்பிரதிகள் அதிக அளவில் உருவாகத் தொடங்கின. நவீன இலக்கியம் மகாபாரதத்தைத் தொடர்ந்து மீள்வாசித்துவருகிறது. அவ்விலக்கியத்தின் கதாபாத்திரங்கள் குறித்துத் தனித்தனிப் புனைவுகள் தொடர்ந்து எழுதப்படுகின்றன. அவ்வகையில், கர்ணனைப் பற்றி மராட்டிய எழுத்தாளர் சிவாஜி சாவந்த் எழுதிய நாவல் ‘மிருத்யூஞ்ஜயா’. இதை ‘கர்ணன்: காலத்தை வென்றவன்’ என்ற பெயரில் சிறப்பாகத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் […]

Read more

அந்த விளக்கின் ஒளி பரவாதது

அந்த விளக்கின் ஒளி பரவாதது,  அகச்சேரன், புது எழுத்து, விலை: ரூ.50. குறைவாகவே எழுதினாலும் அதில் ஒரு திருப்தி காண்பவர் அகச்சேரன். அவருடைய ‘அன்பின் நடுநரம்பு’ கவிதைத் தொகுப்பு வெளியாகி 7 ஆண்டுகள் கழித்து இந்த நூல் வெளியாகியிருக்கிறது. மொத்தம் 29 கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ‘சிறியதே அழகு’ என்பதற்கொப்ப தொகுப்பும் சிறியது, கவிதைகளும் சிறியவை. காலத்துக்கேற்ப கவிதைகளில் பல்வேறு போக்குகள் ஏற்பட்டாலும் சில விஷயங்கள் மட்டும் கவிதைகளுக்கு என்றும் மாறாதவை. அவற்றுள் இருத்தலின் பதைபதைப்பும் ஒன்று. நவீன மனிதனுக்கு ஒவ்வொரு பொழுதின் […]

Read more

ஏ.ஜி.கே. எனும் போராளி

ஏ.ஜி.கே. எனும் போராளி, தொகுப்பு: மு.சிவகுருநாதன், பன்மை வெளியீடு, விலை: ரூ.290 கீழத்தஞ்சையில் விவசாயத் தொழிலாளர்களைப் பண்ணையடிமைகளாக வைத்திருந்த நிலவுடையாளர்களுக்கு எதிராகப் போராடி, உழைக்கும் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தந்த முதன்மையான தலைவர்களில் ஒருவர் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன்(1932-2016). பெரியாரியத்தையும் மார்க்ஸியத்தையும் தனது வழிகாட்டும் கொள்கைகளாக ஏற்றுக்கொண்டவர். இரண்டுக்கும் இடையில் இணக்கம் கண்ட முன்னோடி. திராவிட, மார்க்ஸிய விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் வழியே மக்கள் போராட்டங்களை முன்னின்று ஒருங்கிணைத்தவர். கூடவே, தமிழ்த் தேசிய உணர்வையும் ஏற்றுக்கொண்டவர். 44 உயிர்களைக் குடித்த வெண்மணிக் கொடுமைக்குக் காரணம் கூலி உயர்வுப் போராட்டம் […]

Read more

உயிர் வளர்க்கும் திருமந்திரம் – 2

உயிர் வளர்க்கும் திருமந்திரம் – 2, கரு.ஆறுமுகத்தமிழன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.225 திருமந்திரம் திருமுறைகளில் வரிசைப்படுத்தப்பட்டாலும் அது முன்னிறுத்துவது மெய்யியல் விசாரணையைத்தான். உலகின் தோற்றத்தை, அதன் இயக்கத்தை, உயிரை, உடலை, உணர்வை விரிவாகப் பேசும் திருமந்திரம் சைவ சித்தாந்தத்துக்கு மட்டுமல்ல; தமிழ் சித்தர் மரபுக்கும் மூல நூல். ‘ஆனந்தஜோதி’ இணைப்பிதழில் வாரந்தோறும் இலக்கியமும் மெய்யியலும் பின்னிப் பிணைந்த தனிநடையில் கரு.ஆறுமுகத்தமிழன் எழுதி புத்தகமாக வெளியான முதல் தொகுப்பானது வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது இரண்டாம் பாகம் வந்திருக்கிறது. யோக […]

Read more

இரவு எலீ வீஸல்

இரவு, எலீ வீஸல், தமிழில்: ரவி, தி. இளங்கோவன், எதிர் வெளியீடு, விலை: ரூ.230 மறதிக்கு எதிராக நினைவின் கலகத்தை ஒத்தது அதிகாரத்துக்கு எதிராக மனிதன் நடத்தும் யுத்தம் என்ற மிலன் குந்தேராவின் கூற்றுக்கு மிகச் சரியாகப் பொருந்தும் ஆக்கம் எலீ வீஸல் எழுதிய ‘இரவு’ சுயசரிதை. தற்போது ருமேனியாவாக இருக்கும் நாட்டில் சிகெட் என்னும் சிறுநகரத்தில் 1928-ம் ஆண்டு பிறந்த எலீ வீஸல், சிறுவனாக இருந்தபோதே யூத வதைமுகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பெற்றோரையும் சகோதரியையும் அங்கேயே பறிகொடுத்தவர். சென்ற நூற்றாண்டில் யூதர்கள் மீது […]

Read more

நீதி: ஒரு மேயாத மான்

நீதி: ஒரு மேயாத மான், கே.சந்துரு, போதிவனம் வெளியீடு, விலை: ரூ.200. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘இந்து தமிழ்’ உள்ளிட்ட இதழ்களில் எழுதிய 37 கட்டுரைகளின் தொகுப்பு. தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளுடன் இயற்றப்படுகிற பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள், ஊடகச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல்கள், காவல் துறை நிகழ்த்தும் போலித் தற்காப்புக் கொலைகள், மதச்சார்பின்மைக் கோட்பாடு எதிர்கொள்ளும் சவால்கள், வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ராணுவச் சட்டங்கள், வெளிப்படைத் தன்மையற்ற நீதிபதி நியமனங்கள் என இந்திய அரசமைப்பின் அடிப்படைகள் […]

Read more

உடல்மொழியின் கலை

உடல்மொழியின் கலை, வெளி ரங்கராஜன், போதிவனம் பதிப்பகம், விலை: ரூ.120   கலை, இலக்கியம், நாடகம் தொடர்பான வெளி ரங்கராஜனின் சமீபத்திய கட்டுரைத் தொகுப்பு இது. நேரடிக் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாக மொத்தம் 22 கட்டுரைகள். கலை வடிவங்களை ஆவணப்படுத்துவதன் வழியாக சமூக வரலாற்றைப் பேசும் புத்தகமாகவும் இந்நூலை வாசிக்க இடமுண்டு. பிரதிகள் சார்ந்ததாக மட்டுமல்லாமல் நபர்களும், அரசு நிறுவனங்களின் நடவடிக்கைகளும், சமூகத்தின் பிரதிபலிப்புகளும் விவாதமாகியிருப்பது இந்நூலின் தனித்துவம் எனலாம். நன்றி: தமிழ் இந்து, 2/1/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000029820_/ இந்தப் புத்தகத்தை […]

Read more
1 2 3 33