நாகா சரித்திரம் வாழும்போதே வரலாறு

நாகா சரித்திரம் வாழும்போதே வரலாறு, நரேன், நீல் கிரியேட்டர்ஸ், பக்.224, விலை ரூ.100. சிறப்பு ஒலிம்பிக்ஸ் ஏசியா பசிபிக்கின் தலைமை மேலாளர் நாகராஜனின் வாழ்க்கை குறித்த புத்தகம். மனவளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுத் துறையில் முன்னேறுவதற்காக நாகராஜன் எடுத்த பல்வேறு முயற்சிகள் குறித்து பேசுகிறார் நூலாசிரியர். நாகராஜனின் குடும்பம், பிரபலங்களுடனான அவருடைய நட்பு, அவரது வாழ்க்கையின் திருப்புமுனைகள் என அவருடைய வாழ்வின் முக்கிய தருணங்கள் இந்நூலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. இடையிடையே கதைகள், சம்பவங்கள், கவிதைகள் மூலமாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு பயணிக்கிறது புத்தகம். மனவளர்ச்சி குன்றியவர்களையும் பொது […]

Read more

மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்

மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்,  இடைமருதூர் கி.மஞ்சுளா, மணிவாசகர் பதிப்பகம், பக்.368, விலை ரூ.300.  சைவ சமயத்தின் கருவூலமாகத் திகழும் பன்னிரு திருமுறையில் எட்டாம் திருமுறையாக வைத்துப் போற்றப்பெறுபவை மணிவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும். இவ்விரு நூல்களிலும் இடம் பெற்றுள்ள அகமரபுச் செய்திகள் அமைந்த பாடல்களின் நுட்பங்களை ஆய்ந்து எழுதப்பட்ட முனைவர் பட்ட ஆய்வு நூல் இது. திருவாசகத் தேன் என்பது உலக வழக்கு. இந்நூலாசிரியர், திருவாசகம் மட்டுமல்ல, திருக்கோவையாரும் தேன்தான் என்கிறார். திருவாசகத்தேன் உணவாகவும், திருக்கோவையார் தேன் மருந்தாகவும் விளங்குகிறது என்று நயம்படக் கூறுகிறார். […]

Read more

படேல் நேரு

படேல் நேரு – விடுதலை நெருப்பும் எதிரெதிர் துடுப்பும், மீனாட்சி புத்தக நிலையம், ஜெகாதா, பக். 288, விலை ரூ. 250. சுதந்திரத்திற்கு முன்பும்பின்பும் நேருவும் படேலும்எதிரெதிர் கருத்துகளைக் கொண்டிருந்ததையும், படேல், நேரு இருவரின் மீதும் காந்தியடிகள் கொண்டிருந்த பற்றுதலையும், நம்பிக்கையையும் விவரித்துக் கூறும் நூல். சுதந்திரம் பெற்ற பின் இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதிலும் படேல்-நேருவிடையே வேறுபட்ட கருத்துகள் இருந்தன. முதலாளித்துவ சமூகம் பயனுள்ளது என்பதில் படேல் உறுதியாக இருந்தார். புதிய சோஷலிச உலகம் என்ற நேருவின் கனவை படேல் நிராகரித்தார். நாட்டு […]

Read more

பெண்

பெண் (இந்தியப் பெண் எழுத்தாளர் சிறுகதைகள்), தொகுப்பாசிரியர் சு.மல்லிகா, நிவேதிதா நல்வாழ்வு கல்வி அறக்கட்டளை , பக்.176,  விலை ரூ. 200 . இந்தியப் பெண் எழுத்தாளர்களின் இலக்கியப் பங்களிப்பை எடுத்துக்காட்டும் சிறுகதை தொகுப்பு இந்நூல். இத்தொகுப்பில் தமிழ் முதல் உருது வரை 12 இந்திய மொழிகளின் கதைகள் இடம் பெற்றுள்ளன. சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டவிதமும் சரி, அவற்றின் இயல்பான மொழிபெயர்ப்பும் சரி அவற்றை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டுவதாக உள்ளது. குறிப்பாக வாஸந்தி, லலிதாம்பிகா அந்தர்ஜனம், அமிர்தா ப்ரீதம், ஆஷா பூர்ணா தேவி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க […]

Read more

தேவேந்திர குல வேளாளர் வரலாறு

தேவேந்திர குல வேளாளர் வரலாறு, தே.ஞானசேகரன், காவ்யா பதிப்பகம்,  பக்கம் 160,  விலை ரூ.170 . கடந்த 2000-ஆம் ஆண்டு மள்ளர் சமூக வரலாறு என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்தநூல், தற்போது தேவேந்திரகுல வேளாளர் வரலாறு என்ற பெயரில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மருத நில உழவர் பெருமக்களான தேவேந்திர குல வேளாளர்களின் தோற்ற வரலாறு 12 கதைகள் மூலமும், தொல்காப்பியச் சான்று, இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகள், நாட்டுப்புற வழக்காறு, பள்ளு நூல்கள், சடங்கு பாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் தொகுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் […]

Read more

பாண்டிய மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு

பாண்டிய மண்டலத்தில் பெளத்தம் வரலாற்று ஆய்வு, மு.நீலகண்டன், கனிஷ்கா புத்தக இல்லம்,  பக்.202, விலை ரூ.180. தொன்மைக்கால பாண்டிய மண்டலம் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களைக் கொண்டதாக இருந்தது. கி.மு. 3 – ஆம் நூற்றாண்டில் பெளத்தம் பாண்டிய மண்டலத்துக்கு வந்திருக்கலாம் என்று கூறும் நூலாசிரியர், பாண்டிய மண்டலத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பெளத்த சமயமும், சமண சமயமும் உயர்ந்தநிலையில் இருந்திருக்கின்றன; நாட்டின் பல பகுதிகளில் பெளத்த விகாரங்கள் அமைக்கப்பட்டன; புத்த பள்ளிகள் இருந்தன என்கிறார். அதற்கான பல வரலாற்று ஆதாரங்களை எடுத்துக் காட்டுகிறார். […]

Read more

தமிழ்த் திரையிசை ஆளுமைகள்

தமிழ்த் திரையிசை ஆளுமைகள்,  ஞா.கற்பகம், கற்பக வித்யா பதிப்பகம், பக்.400, விலை ரூ.300.   தமிழ்மொழியில் முதல் பேசும் படம் 1931 – ஆம் ஆண்டில் வெளியானது. அதற்கு முன்னர் மெளனப் படங்களே வெளிவந்தன. தமிழ்த் திரைப்படம் பேசத் தொடங்கிய, பாடத் தொடங்கிய 1931 முதல் 2000 -ஆம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் தமிழ்த் திரைப்பட உலகில் பணியாற்றிய 61 இசையமைப்பாளர்கள், 64 பாடகர்கள், 54 பாடகிகள், 22 இசைக்கருவி இசைக்கும் கலைஞர்கள் என மொத்தம் 201 பேரைப் பற்றிய தகவல்கள் இந்நூலில் தொகுத்துக் […]

Read more

அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை

அப்துல்கலாம் நினைவுகளுக்கு மரணமில்லை,  ய.சு. ராஜன், ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர்,  பதிப்பாசிரியர் – சிற்பி பாலசுப்பிரமணியம், அருட்செல்வர் நா. மகாலிங்கம் , பக்.724, விலை ரூ.600. விண்வெளித்துறையில் அப்துல்கலாமுடன் பயணித்த, அவரது நெருங்கிய நண்பரான விண்வெளி விஞ்ஞானி யக்ஞசுவாமி சுந்தர்ராஜன் என்கிற ய.சு. ராஜன் மற்றும் அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயரும் இணைந்து அப்துல்கலாமைப் பற்றிய பலரும் அறியாத தகவல்களின் களஞ்சியத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் உயர்ந்ததற்கான பின்னணியை இந்நூல் விளக்குகிறது. கலாமின் முன்னோர்கள் குறித்தும் […]

Read more

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சர்யமூட்டும் பெண்கள்

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சர்யமூட்டும் பெண்கள், ப.ஜெயக்குமார், உமாதேவி பதிப்பகம், பக்.144; விலை ரூ. 200. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஆண்கள் அறுபது பேர்; பெண்கள் மூவர். காரைக்கால் அம்மையார், இசைஞானியார், மங்கையர்க்கரசியார் மூவரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் நேரிடையாக (திருத்தொண்டத் தொகையில்) குறிப்பிடப்பட்டவர்கள். ஆனால், நாயன்மார்கள் பலரது வாழ்க்கையில் அவர்களுக்குப் பெருமளவில் உதவியதுடன், அவர்களை இறையருளுக்குப் பாத்திரமாக்கிய இல்லத்தரசிகள், சகோதரி, மகள் போன்றோரின் சிறப்புகளை உலகறியவில்லை என்பதுடன், நாம் உலகத்தாருக்கு உணர்த்தவில்லை என்பதுதான் உண்மை. அந்த அருஞ்செயலை இந்நூல் செய்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட மூன்று பெண் […]

Read more

தருமபுரி முதல் பூடான் வரை

தருமபுரி முதல் பூடான் வரை, வரலாற்றுத் தடங்களின் வழியே, இரா.செந்தில், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.104, விலை ரூ.120; தருமபுரியில் மருத்துவராக உள்ள நூலாசிரியர், பயணங்களின் பயனை அறிந்தவர் மட்டுமல்ல; அதற்கான நெறிமுறைகளையும் அனுபவத்தால் உணர்ந்தவர். தனது பூடான் வரையிலான மகிழுந்துப் பயண அனுபவத்தை நூலாகத் தந்திருக்கிறார். தருமபுரியில் தொடங்கி நாட்டின் பல மாநிலங்கள் வழியே காரில் பயணித்து, அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைச்சூழல், விருந்தோம்பல், சரித்திர நிகழ்வுகள் ஆகியவற்றை ஆங்காங்கே பதிவு செய்யும் நூலாசிரியரின் நுட்பம் பாராட்டுக்குரியது. குறிப்பாக, இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு […]

Read more
1 17 18 19 20 21 180