மகடூஉ முன்னிலை (பெண் புலவர் களஞ்சியம் – ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை)

மகடூஉ முன்னிலை (பெண் புலவர் களஞ்சியம் – ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை), முனைவர் தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், சென்னை – 29, பக்கம் 704, விலை 300ரூ. இத்தனை நாள்களாக இப்படியொரு, ‘பெண்புலவர் களஞ்சியம்’ வெளிவராதா என்று ஏங்கியவர்களின் ஏக்கத்தைப் போக்கியிருக்கிறது இந்நூல். நூலகங்களில் மட்டுமே காணக்கிடைக்கக்கூடிய பெண்பாற் புலவர்கள் பற்றிய தகவல்களைக் களஞ்சியமாக்கியிருக்கிறார் நூலாசிரியை. அட்டைப்படமே அசத்துகிறது. நீண்ட நெடுங்காலமாக அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட ‘கயமனார்’ என்ற புலவர் ஆணா? பெண்ணா? என்ற சந்தேகத்தை – சர்ச்சையை இந்நூல் நிவர்த்தி செய்துள்ளது. அதுமட்டுமல்ல, […]

Read more

யாளி

அமிர்தம் தொகுதி 1,  நிவேதிதா புத்தகப் பூங்கா, 6/11, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி. நகர், சென்னை – 75, பக்கம் 184, விலை 90 ரூ. ‘ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா’ என்று நம்மிடையே கூற்றொன்று உண்டு. ஒரு சாண் வயிறுக்கு படித்தவன், பாமரன், ஏழை, பணக்காரன் என்கிற எந்தப் பேதமும் இல்லை. பிறப்பு, இறப்புக்கு நடுவில் அனைவருக்கும் பொதுவானதான உணர்வு பசி. மொத்தம் இத்தொகுப்பில் உள்ள 14 சிறுகதைகளும் 14 ரகம். அத்தனையும் தனி ரகம். […]

Read more

வீரக் கண்ணகி

வீரக் கண்ணகி- ம.பொ.சிவஞானம்; பக்.160; ரூ.100; ம.பொ.சி.பதிப்பகம், சென்னை-41 சிலம்புச் செல்வர் எனப் புகழ்பெற்ற ம.பொ.சிவஞானம் சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதியுள்ள நூல். சிலப்பதிகாரத்தின் தனிச் சிறப்புகளை விளக்கும்விதமாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. சிலப்பதிகாரத்துக்கும் மணிமேகலை, இராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்குகிறார். இளங்கோவடிகள் எந்தச் சமயத்தையும் சாராதவர்; கண்ணால் காணக் கூடிய திங்கள், ஞாயிறு, மழை போன்ற இயற்கை சக்திகளை வணங்கியிருக்கிறார் என்றும் அதே சமயம் நாட்டின் நடைமுறையைப் புலப்படுத்த ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை ஆகியவற்றை இயற்றினார் என்றும் […]

Read more

வரப்பெற்றோம் – தினமணி – 16.07.2012

இந்திய இலக்கியச் சிற்பிகள் ரா.பி.சேதுப்பிள்ளை – ச.கணபதி ராமன்; பக்.146; ரூ.50; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,சென்னை-18. லட்சுமிக்குட்டி – கண்மணி ராசா; பக்.96; ரூ.40; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98 ஐ.ஏ.எஸ். வெற்றி உங்கள் கையில் – நெல்லை கவிநேசன்; பக்.208; ரூ.100; குமரன் பதிப்பகம், சென்னை-17. கையருகே நிலா – மயில்சாமி அண்ணாதுரை; பக்.282; ரூ.250; கலாம் பதிப்பகம், சென்னை-4 மனிதப் போக்கு – ஒரு பார்வை – என்.இராஜசேகர்; பக்.192; […]

Read more

இந்தியச் சிறுகதைகள் (1900-2000)

இந்தியச் சிறுகதைகள் (1900-2000), தொகுப்பாசிரியர்-இ.வி.ராமகிருஷ்ணன், தமிழில்-பிரேம், பக்.549, சாகித்ய அகாதெமி, தேனாம்பேட்டை, சென்னை-18. இருபத்து ஏழு இந்திய மொழிகளில் இருந்து மிகச்சிறந்த கதைகளை தேர்வு செய்து வாசகர்களுக்கு புதிய வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது இந்நூல். ஒவ்வொரு மாநிலங்களிலும் வாழும் மக்களின் வேறுபட்ட தன்மைகள், சிக்கல்களை பிரதிபலிக்கும் கதைகள். புனிதங்கள், புனிதமற்றவை, மேல்தட்டு சிந்தனைகள், ஒடுக்கப்பட்டவர்களின் சிந்தனைகள் எனப் பல நிலைகளைத் தெளிவாகப் படம் பிடித்து காட்டுகின்றன இந்தக் கதைகள். இந்திய மொழிகளில் இந்நூற்றாண்டின் சில பத்தாண்டுகளில் எழுதப்பட்ட இச் சிறுகதைகள் கொந்தளிப்பில் இருந்த ஒரு தேசத்தின் […]

Read more
1 178 179 180