கஸ்டமர் சைக்காலஜி

கஸ்டமர் சைக்காலஜி, சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், பக்.152; விலை ரூ.170. வாடிக்கையாளர் உளவியலை அறிவதன் மூலம் அவரை வசப்படுத்தி நமது தொழிலை எப்படி அபிவிருத்தி செய்துகொள்ளலாம் என்பது இந்நூலில் விவரிக்கப்படுகிறது. வாடிக்கையாளருக்குத் தேவை இருந்தால் மட்டுமே பொருளை வாங்குவார். அவரை வசப்படுத்தி அதை வாங்கச் செய்துவிட முடியாது. ஆனால் தேவையை உணரச் செய்வதுதான் நல்ல வியாபார உத்தி. அதில்தான் உளவியலின் பங்களிப்பு வருகிறது. அடிப்படையான சில உளவியல் பாடங்களைக் கற்றுக் கொண்டால் போதும், வாடிக்கையாளர்கள் உங்கள் உள்ளங்கையில் அடங்கிவிடுவார்கள் என அழுத்திச் சொல்கிறார். […]

Read more

நபிகளாரின் பொன்மொழிகள்

நபிகளாரின் பொன்மொழிகள், முஸ்னது அஹ்மத் , அரபு மூலம்: அபூ அப்தில்லாஹ் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்); தமிழில்: அ.அன்வருத்தீன் பாகவி, சா.யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி, ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷன், பாகம் 1; பக்.726; ரூ.650; பாகம் 2; பக்.872; ரூ.650; 1300 ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 780- களில் துர்க்மெனிஸ்தானில் பிறந்து ஈராக்கில் வாழ்ந்த இமாம் அகமது பின் ஹன்பல் என்பவர் தேடி ஆய்வு செய்து தொகுத்த முஸ்னது அஹ்மத் என்னும் நூல் தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு முதல் இரண்டு பாகங்கள் […]

Read more

அரசாங்க உத்தியோகம் பெறும் 12 ராசிகள்

அரசாங்க உத்தியோகம் பெறும் 12 ராசிகள்,  வி.ரவி, கற்பகம் புத்தகாலயம்,  பக்.296,  விலைரூ.250. குறிப்பிட்ட ஜாதகத்துக்குரிய ஒருவருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்குமா கிடைக்காதா? என்ற கேள்விக்கு ஜாதகத்திற்குத் தகுந்தாற்போல் காரணத்தை அறிந்து, பரிகார சாந்தி செய்து, இறைவனை வழிபட அவர்களின் குறைகள் தகர்க்கப்பட்டு அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என்பதை கிரக நிலைகள், தடைகள் உள்ளிட்ட பல்வேறு உதாரணங்களுடன் இந்நூல் விளக்குகிறது. தனியார் வேலை, சுய தொழில் முன்னேற்றம் பெறும் ஜாதகங்கள் மற்றும் பற்பல ஜோதிட ரகசியங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஜாதகக் கணக்கை அறிதல், ஜாதகக் கலையின் […]

Read more

குணங்குடி மஸ்தான் சாஹிப்

குணங்குடி மஸ்தான் சாஹிப், நாகூர் ரூமி; கிழக்கு பதிப்பகம், பக்.96; ரூ.120; இந்திய சூஃபிகள் வரிசையில் வெளியிடப்பட்டுள்ள நூல், குணங்குடி மஸ்தான் சாஹிப். இஸ்லாமியராக இருந்தபோதிலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஞானியாக வாழ்ந்து மறைந்தவர் சுல்தான் அப்துல் காதிர் என்ற இயற்பெயரைக் கொண்டவரான குணங்குடி மஸ்தான் சாஹிப். அவரை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு கிடைக்கப் பெற்ற தரவுகளைத் தேவையானஅளவு பயன்படுத்தித் தக்க விதத்தில் முன்வைத்துள்ளார் ரூமி. அரபு உலக ஞானிகளுடன் ஒப்பிட்டுத் தொடங்கும்நாகூர் ரூமி, மருத்துவமும் மகத்துவமும் தமிழும் கலந்துறையும் சித்தராக மஸ்தான்பார்க்கப்படுவதைக் குறிப்பிடுகிறார். திருமூலர், […]

Read more

சுக்கா… மிளகா… சமூக நீதி?

சுக்கா… மிளகா… சமூக நீதி? , ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு,  மருத்துவர் ச.ராமதாசு, செய்திப்புனல், பக்.512.  விலைரூ.500,  இட ஒதுக்கீடு என்றால் என்ன? இந்த உரிமையை நிலைநாட்ட எவ்வளவு போராட்டங்களும் தியாகங்களும் செய்யவேண்டி வந்தது என்பதை இந்நூல் விளக்குகிறது. ஒட்டுமொத்த இந்தியாவின் இடஒதுக்கீட்டு வரலாற்றையும் குறிப்பாக, கேரளா-தமிழ்நாடு-கர்நாடகா- ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றின் இட ஒதுக்கீட்டிற்கான வரலாற்றையும் எழுதியிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியில் பின் தங்கியோர் கல்வி மேம்பாட்டுக்காக 1885-இல் அளிக்கப்பட்ட நிதி உதவி; நீதிக்கட்சி ஆட்சியில் 1927-இல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான ஆணை வெளியிடப்பட்டது; 1935-இல் […]

Read more

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும்

எட்டுத்தொகையும் பண்பாட்டுச் சூழலியலும், முனைவர் ஆ.புஷ்பா சாந்தி, காவ்யா, பக்.279, விலை ரூ.280. சங்க இலக்கியங்களை அணுகப் பண்பாட்டுச் சூழலியல் பெரிதும் துணை புரிகிறது. தற்போது பல துறைகளிலும் சூழலியல் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. காரணம், சங்க காலமும் சரி, பண்டைத் தமிழ்ச் சமூகமும் சரி இயற்கையோடு இயைந்த வாழ்வையே கொண்டிருந்தது என்பதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அப்படி இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மட்டுமே மனிதகுலம் செழிக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள் சூழலியல் கோட்பாட்டாளர்கள். தற்போது உலகம் பல பேரிடர்களைச் சந்தித்து வருகிறது. […]

Read more

அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி

அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி, பேரா.கு.ஞானசம்பந்தன், பக். 368, விலை ரூ. 370. தமிழ் இலக்கண உலகிலும் இலக்கிய உலகிலும் பெரும்புலவராய்த் திகழ்ந்தவர் சோழவந்தான் அரசஞ் சண்முகனார். இவர் தொல்காப்பிய பாயிர விருத்தி, அன்மொழித்தொகை ஆராய்ச்சி, நுண்பொருள் கோவை, நவமணிக்காரிகை நிகண்டு போன்ற இலக்கண ஆய்வு நூல்களையும், சிதம்பர விநாயகர் மாலை. திருவடிப் பத்து, மாலைமாற்று மாலை, இன்னிசை இருபது, வள்ளுவர் நேரிசை உள்ளிட்ட படைப்பிலக்கியங்களையும் இயற்றியுள்ளார். பாண்டித்துரைத் தேவர் உருவாக்கிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். இவர் மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராகப் […]

Read more

நாடகமும் தமிழிசையும்

நாடகமும் தமிழிசையும் , டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், பக். 176; விலை ரூ. 150; தமிழ் இசையை பாமர மக்களிடமும் பரப்பிய பெருமை தமிழ் நாடகக் கலைஞர்களுக்கு உண்டு, நாடகமும் தமிழிசையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் நிறுவிக்காட்டும் ஆய்வு நூல். தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் தமிழிசைப் பாடல்கள், நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார், நாடகம் வளர்த்த தமிழிசை, நாடகம் வளர்த்த நால்வர், நூற்றாண்டு கண்ட நடிப்பிசை மாமணிகள், திரையிசையில் தமிழிசையின் பங்களிப்பு, சுதந்திரப் போராட்டத்தில் தமிழிசையின் பங்கு,  […]

Read more

தமிழ் நூல் தொகுப்புக் களஞ்சியம்

தமிழ் நூல் தொகுப்புக் களஞ்சியம், முனைவர் சுந்தர சண்முகனார், மணிவாசகர் பதிப்பகம்,  பக்.800; விலை ரூ.650;  மணிவாசகர் பதிப்பகத்தின் வைரவிழா வெளியீடாக இந்நூல் வெளிவந்திருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. ஒரு புறம் இது மகிழ்ச்சியான செய்தி என்றால், இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு. அதற்குக் கீழ்க்காணும் பதிவு துணைசெய்யும். பழைய புத்தகக் கடையில் கண்டெடுத்த அற்புதமான புத்தகங்களில் ஒன்று தமிழ்நூல் தொகுப்புக் களஞ்சியம். தமிழ் இலக்கியம் படிக்கும், இலக்கியத்தில் லயிக்கும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய, அவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். தமிழ் அகராதித் […]

Read more

உலக மக்களின் வரலாறு

உலக மக்களின் வரலாறு , கிரிஸ் ஹார்மன்; தமிழில்: நிழல்வண்ணன், மு.வசந்தகுமார்; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் , பக்.1088, விலை ரூ.750. வரலாறு என்பது ஆட்சியாளர்களின் வரலாறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்களுடைய காலம், அவர்களுடைய வழித்தோன்றல்களின் காலம் ஆகியவற்றின்போது நிகழ்ந்த நிகழ்வுகள் வரலாற்றுச் சம்பவங்களாகக் கருதப்பட்டன. ஆனால் இந்த நூல், இதற்கு மாறாக வரலாற்றை மக்களின் வரலாறாகக் காண்கிறது. மனிதன் உயிர் வாழ்வதற்காக மேற்கொண்ட வேட்டையாடுதல், விவசாயம் செய்தல் ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்கள், நிலையான குடியிருப்புகள் தோன்றியது, நேரடி உழைப்பில் […]

Read more
1 18 19 20 21 22 180