என் ஜன்னலுக்கு வெளியே

என் ஜன்னலுக்கு வெளியே, மாலன், கவிதா பப்ளிகேஷன், விலைரூ.300 வார இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘இன்னும் கொஞ்சம் இனிப்பு சேராதா?’ முதல், ‘கனவுகளும் கருகலாமா?’ என்பது வரை, 71 தலைப்புகளில் சமூகம் குறித்து பேசும் நுால். உறவு, குழந்தை மனம், காதல், கனவு, கலை, நம்பிக்கை, சாதனையாளர்கள், சிறந்த மனிதர்கள், அரசியல், ஆன்மிகம், ஊடகம், பிரபலங்கள், சமூக சூழல், வாழ்வியல் குறித்த தலைப்புகளில் எழுதி உள்ளார். தமிழகம் முதல், உலக அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் வரை, அவர்களின் குணங்கள், அதிகாரம், அரசியல் தந்திரங்களை […]

Read more

பேராசிரியர் சாலை இளந்திரையன் புலமை நலம்

பேராசிரியர் சாலை இளந்திரையன் புலமை நலம், முதுமுனைவர் பால் வளன் அரசு, கதிரவன் பதிப்பகம், விலைரூ.150 அறிவியக்க பேரவை தலைவராகவும், டில்லி பல்கலைக் கழக தமிழ்த் துறை தலைவராகவும் பணியாற்றியவர் பேராசிரியர் சாலை இளந்திரையன். அறிவியல் ரீதியான சிந்தனையை வளர்க்க முயன்றனர். அவரது இணையர் பேராசிரியை சாலினி இளந்திரையனுடன் இந்த பணியில் ஈடுபட்டு வந்தார். இவர்களின் தமிழ் மற்றும் அறிவியக்கத் தொண்டு மற்றும் வாழ்க்கை பற்றி எடுத்துக் கூறும் நுால். சிறு கிராமத்தில் பிறந்து, கல்வியால் உயர்ந்தவர். உரைவீச்சு என்ற அறிவு எழுச்சிக் கவிதைகள் […]

Read more

தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம்

தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம், முனைவர் தேவிரா, நந்தினி பதிப்பகம், விலைரூ.300. தமிழ் இலக்கிய வரலாற்று செய்திகளை சிறிய தகவல்களாக தொகுத்து கூறும் நுால். பத்தி அமைப்புக்கு உட்படாமல் தகவல் அமைப்புடன் உள்ளது. ஒரு தகவல் இரண்டு அடிக்குள் சொல்லப்பட்டுள்ளது. மத்திய அரசு குடிமைப்பணி தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணி, பேராசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு போன்றவற்றுக்கு தயாராவோருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில், இலக்கியங்கள், இலக்கணங்கள், நாட்டுப்புறவியல், பிற்கால புலவர்கள், உரையாசிரியர்கள், உரைநடை, திறனாய்வு, பெண்ணியம், இதழ்கள், இயக்கங்கள், மாநாடு, […]

Read more

கர்ஜனை

கர்ஜனை (பாகம் – 1) (பாகம் 2), இளையவேள் ராதாரவி, நக்கீரன் பதிப்பகம், விலைரூ.560 நடிகர் ராதாரவியின் வாழ்க்கை சம்பவங்களை சுவாரசியமாகக் கூறும் நுால். இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. ‘நக்கீரன்’ இதழில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பு. பிரபல நடிகர் எம்.ஆர்.ராதா, சிறையில் இருந்து விடுதலையானதில் இருந்து துவங்குகிறது. தகவல்கள் பரபரப்பு சார்ந்து தொகுக்கப்பட்டுள்ளன. இயல்பான செய்தி மொழியில் மொத்த வாழ்க்கை வரலாறும் சொல்லப்பட்டு உள்ளதால், வாசிக்க சுலமாக உள்ளது. முதல் புத்தகம் 60 இயல்களைக் கொண்டுள்ளது. இரண்டாவது பாகம், துணிவே துணை என நம்பிக்கை […]

Read more

101 கேள்விகள் 100 பதில்கள்

101 கேள்விகள் 100 பதில்கள், முனைவர் சு.தினகரன், அறிவியல் வெளியீடு, விலைரூ.80. பொதுமக்களிடையே அறிவியல் ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள நுால். கேள்வி – பதில் பாணியில், அறிவியலுக்கு விளக்கங்கள் அமைந்துள்ளன. சாதாரணமாக அன்றாடம் எழும் கேள்விகளை, மிக எளிமையாக விளக்கி புரிய வைக்கிறது இந்த நுால். மழை நேரத்தில் எவ்வாறு கொசு சமாளிக்கிறது என்ற கேள்விக்கு தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சூழலியலை மிக எளிய அறிவியல் உண்மைகள் மூலம் விளக்குகிறது. அனைத்து தரப்பினரும் வாசிக்க வேண்டிய நுால். நன்றி: தினமலர், 31/10/21 இந்தப் […]

Read more

ஜானகிராமம்

ஜானகிராமம், கல்யாணராமன், காலச்சுவடு பதிப்பகம், விலைரூ.1175. பிரபல எழுத்தாளர் தி.ஜானகிராமனின் படைப்புகள் பற்றிய ஆய்வு மற்றும் அலசல் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். அவரது பிறந்த நாள் நுாற்றாண்டு நிறைவடைந்ததை ஒட்டி, நினைவாக வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பில், 102 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஒன்று ஆங்கிலத்தில் உள்ளது. ஜானகிராமன் படைப்புகளை படித்து நுட்பங்களை உள்வாங்கி, கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. பல்வேறு பார்வைகள் இடம்பெற்றுள்ளன. ஒரே படைப்பை பற்றி, பல கோணங்களில் அலசல்களும் உள்ளன. பேராசிரியர், எழுத்தாளர், வாசகர், மொழிபெயர்ப்பு வல்லுனர், பத்திரிகையாளர், சமூக செயல்பாட்டாளர் என பல தரப்பினரும் […]

Read more

நாம் வணங்கும் சித்தர்கள்

நாம் வணங்கும் சித்தர்கள், த.உத்திரகுமாரன், பூம்புகார் பதிப்பகம், விலைரூ.575. பரந்த மனப்பான்மையுடன் வாழ்ந்த சித்தர்களின் ஆன்மிகக் கருத்துகளை தெளிவாக, எளிய தமிழ் நடையில் விளக்கும் நுால். பெயர் மட்டுமே தெரிந்த சித்தர்களின் வரலாறும், அவர் தம் கொள்கைகளையும் தெரிந்து கொள்ளலாம். படிப்போருக்கு இன்பம் பயக்கும். ஜாதிப் பாகுபாடு கூடாது என்பதை சிவவாக்கியர், அவ்வையார், பாரதியார், குதம்பைச்சித்தர் பாடல்கள் மூலம் விளக்குகிறார்; அஷ்டமா சித்திகள் எட்டையும் விளக்கியுள்ளார்; அஷ்டாங்க யோகங்களையும் விளக்கி, தத்துவங்கள் 96 என்பதை பட்டியலிட்டுள்ளார். திருக்குறளுடன் ஒப்பிட்டுள்ளார். அபிராமி பட்டர், ராமலிங்க அடிகளார் […]

Read more

திறனாய்வியல்

திறனாய்வியல், ச. சிவகாமி, மாதவி பதிப்பகம், விலைரூ.100. திறனாய்வு செய்வது எப்படி என்ற வினாவிற்கு ஏற்ற விடையாய், வருங்காலத் திறனாய்வாளருக்கும் வாசல் திறக்கிறது. ஆய்வுக் கட்டுரை ஆக்கம் என்னும் முன்னுரையாய் அமைந்த முதல் கட்டுரை, திட்டமிடல், செயல்படல், முழுமையாக்கல் எனத் திறனாய்வுக் கட்டுரை எவ்வாறெல்லாம் அமைய வேண்டும் என்பதை விரிவாக விளக்கிச் செல்கிறது. பொருண்மைச் சிந்தனை என்ற கட்டுரை, எவ்வகைப் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்பதை முன்வைக்கிறது. திருவுந்தியார் என்னும் கட்டுரை, சைவ இலக்கியத்தை -சைவ சித்தாந்தத்தை ஆய்கிறது. நாட்டுப்புறவியலின் தோற்றமும், வளர்ச்சியும் என்ற […]

Read more

தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு தினமலர் வாரமலர் அந்துமணி பதில்களின் பங்கு

தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு தினமலர் வாரமலர் அந்துமணி பதில்களின் பங்கு, ரஜனி ரஜத், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150. தினமலர் வாரமலர் இதழில் வெளியாகும், அந்துமணி கேள்வி – பதில்கள் பகுதியை பற்றிய ஆய்வு நுால். அரசியல், திரைப்படம், நாட்டு வளர்ச்சி, பொருளாதாரம், அறிவியல், சுற்றுப்புறச் சூழல், குடும்பம், பெண்கள் பற்றி அந்துமணி பதில்களை வகைப்படுத்தி அலசப்பட்டுள்ளது. சமுதாய விழிப்புணர்வு, பெண்கள் முன்னேற்றம், சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நாட்டுப்பற்று, மொழிப்பற்று போன்றவற்றில் அந்துமணி பதில்கள் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. […]

Read more

தானம், கொடை செட்டில்மெண்ட்

தானம், கொடை செட்டில்மெண்ட், அ.பரஞ்ஜோதி, ராஜாத்தி பதிப்பகம், விலைரூ.110. தான ‘செட்டில்மென்ட்’ எழுதுவது என்பது, பல சட்டங்களுடன் தொடர்புள்ளது. அவற்றை எல்லாம் புரிந்து கொள்வது கடினம். பல சட்ட நுால்களையும் உன்னிப்பாகப் படித்தால் தான், இந்த சட்டத்தின் அடிநாதம் புலப்படும். பல சட்டங்களையும் படிக்கும் சிரமத்தை போக்கும் வகையில், பல சட்டங்களில் உள்ள விதிகளையும் இணைத்து தயாரிக்கப்பட்டுள்ளது இந்த நால். தானம், கொடை வழங்குவதற்கான விதிகளை எளிமையாக விளக்குகிறது. சட்ட விளக்கங்களுடன், செயல் மாதிரிகளும் தரப்பட்டுள்ளன. எளிமையான விவரிப்பு, தானம், கொடை வழங்கும் பொருள் […]

Read more
1 12 13 14 15 16 240