திருமணமும் ஒழுக்கநெறிகளும்

திருமணமும் ஒழுக்கநெறிகளும், முனைவர் சி.ஸ்ரீராம், காவ்யஸ்ரீ பப்ளிஷர்ஸ், விலைரூ.350 இயற்கை வடிவமைத்த திருமண உறவின் அருமைகளைப் பாலியல் வேட்கையின் பின்னணியில் உலகளாவிய பார்வையில் ஆய்ந்து, நோபல் பரிசு பெற்ற அறிஞர் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் எழுதிய ஆங்கில நுாலின் மொழிபெயர்ப்பு வடிவம். பாலியல் உறவு என்பது உணவு, குடிநீர் மீதான வேட்கை போன்றதே என முன்மொழிந்து, உணர்வியல் போக்குகளை உற்றுநோக்கி, மூட நம்பிக்கைகளை முற்றிலும் மறுதலித்துத் தெளிவான கண்ணோட்டத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்க கால சமூகத்தில் தனிநபர் உணர்வு, காதல், குடும்பம், நாடு எனும் பல […]

Read more

பார்த்தது கேட்டது படித்தது! பாகம் 5

பார்த்தது கேட்டது படித்தது! பாகம் 5, அந்துமணி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.600 தினமலர் – வாரமலர் இதழில், வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது, அந்துமணி எழுதி வரும், பா.கே.ப., என்ற, ‘பார்த்தது கேட்டது படித்தது’ பகுதி. இந்த பகுதியில் வெளியான கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ஏற்கனவே மூன்று புத்தகங்களாக வந்துள்ளன. நான்கு மற்றும் ஐந்தாவது தொகுதிகளை, தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது. புத்தகங்களின், ‘என்னுரை’ பகுதியில், பா.கே.ப., பகுதியை தன் டைரி என குறிப்பிட்டுள்ளார் அந்துமணி. சாதாரண மனிதனின் […]

Read more

விவேகானந்தம்

விவேகானந்தம், சுஜாதன், காவ்யா, விலைரூ.350. இந்திய பண்பாட்டின் ஞான ஒளி கோபுரம் என அழைக்கப்படுபவர் சுவாமி விவேகானந்தர். அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல். மலையாள மூலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து உள்ளார், ப.விமலா. இந்த பூ உலகில், 39 ஆண்டுகளே வாழ்ந்தார் விவேகானந்தர். அடிப்படை வளர்ச்சிகள் கூட காணாத காலக்கட்டத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து, ஞானம் பெற்றவர்; வெளிநாடுகளிலும் பயணம் செய்து ஞானத்தை பரப்பியுள்ளார். அந்த மகத்தான பயணங்களையும், அதன் அடியொற்றிய வாழ்க்கையையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது […]

Read more

அறிவோம் ஆன்மிகம்

அறிவோம் ஆன்மிகம், சத்தியவதனா, சத்யா பதிப்பகம், விலைரூ.150 மன அமைதிக்கும், ஒழுக்க நெறிகளுக்கும் துணையாக அமையும் நுால். எத்தனை முறை படித்தாலும், சலிப்பு ஏற்படுத்தாத, 30 கட்டுரைகள் உள்ளன. தர்மத்தின் அளவுகோல் கருத்தும், கல்வி வளம்தரும் கோவில் விளக்கமும், கீதை உபதேசத்தை ஏன் கிருஷ்ணர் செய்தார் என்பது குறித்து எழுதப்பட்டு உள்ளது. வள்ளலாரின் போதனைகளை பட்டியலிடுகிறது. காளிதாசனின், ‘சியாமளா தண்டகம்’ தோன்றிய விதமும், நந்தி பற்றிய குறிப்புகளும் விளக்கமாக உள்ளன. குடும்பத்தில் சண்டை போடாமல் இருந்தால் கிடைக்கும் பலனும், தேர்த் திருவிழாவின் நன்மையும் பயனுள்ளதாக […]

Read more

தொல்காப்பியரின் வண்ணக்கோட்பாடும் சங்க இலக்கியமும்

தொல்காப்பியரின் வண்ணக்கோட்பாடும் சங்க இலக்கியமும், முனைவர் ப.ஞானமணி, காவ்யா, விலைரூ.350 தொல்காப்பியத்தில் யாப்பியல் கோட்பாடுகளில் குறிப்பிடப்படும் வண்ணம் குறித்து விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நுால். ஆய்வில் அசை, சீர் பற்றிய அரிய தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொல்காப்பியரின், 20 வண்ணங்கள் மற்றும் அவிநயனார் கூறும், 100 வண்ணங்களையும் எடுத்துக் காட்டி விவரித்திருப்பதோடு, பண்டைய இலக்கண ஆசிரியர்களின் ஏற்புடைக் கருத்துகளையும், முரண்களையும், மறுப்புகளையும் முன்வைத்து சங்கப்பாடலில் எடுத்துக்காட்டுகளும் தந்திருப்பது சிறப்பு. வல்லிசை, மெல்லிசை, இயைபு, அளபெடை, நெடுஞ்சீர், குறுஞ்சீர், சித்திர, நலிபு ஆகிய எழுத்தடிப்படை வண்ணங்கள், […]

Read more

பட்டா? பத்திரம்? அனுபவம்?

பட்டா? பத்திரம்? அனுபவம்?, அ.பரஞ்சோதி, ராஜாத்தி பதிப்பகம், விலைரூ.110. நில உரிமைக்கான ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்கும் நுால். கேள்வி – பதில் பாணியில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. நில உடைமை ஆவணமான, ‘பட்டா’ இல்லாமல், நிலத்தை விற்பனை பத்திரம் பதிவு செய்ய முடியாது என்ற உண்மையுடன் துவங்குகிறது. பட்டா, பத்திரம், நில அனுபவம் பற்றி விளக்கமாக, சட்ட விதிகளின் படி விளக்குகிறது. நிலம் வைத்திருப்போர், நிலம் வாங்க விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை உள்ளடக்கிய நுால். – பாவெல் நன்றி: தினமலர், 19/11/21. இந்தப் […]

Read more

ஓஷோ – தத்துவ விளக்கக் கதைகள்

ஓஷோ – தத்துவ விளக்கக் கதைகள், மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், விலைரூ.140. ஓஷோவின் 70 குறுங்கதைகள் வாயிலாக கருத்துகள் அழகிய வடிவில் நுாலாக்கப்பட்டுள்ளது. பதவி ஆசையைப் பற்றிய கண்ணோட்டத்தை மகாத்மா காந்தி அணுகிய முறை; ரோஜாச் செடியை முன்வைத்து உணர்த்தும் தடைகளுக்குப் பயப்படாதீர்கள் என்ற தலைப்பில் அமைந்த கருத்து; நல்ல மனம் மட்டுமே நாம் சென்று அடையக்கூடிய நல்ல பாதையைக் காட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மன்னனுக்கும், சோதிடருக்கும் இடையே நடக்கும் உரையாடல் போன்றவை சிறப்பாக உள்ளன. ஜமீன்தாருக்கு உழைப்பின் பெருமையை உணர்த்திய பட்டறைக்காரனின் […]

Read more

உலகப் பெருமக்கள் காசு பிள்ளை கட்டுரைகள்

உலகப் பெருமக்கள் காசு பிள்ளை கட்டுரைகள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலைரூ.300. எம்.எல்.பிள்ளை, பூசைப்பிள்ளை, தமிழ்க்காசு என்ற பெயரிலும் போற்றப்பட்டவர் கா.சு.கா., காசு பிள்ளை என்ற கா.சுப்பிரமணிய பிள்ளை; அவரது கடைசி காலத்தில், ‘காசில்லாத காசு’ என்ற கேலிக்கும் உள்ளானவர். சைவம், சட்டம், இலக்கியம் என்ற அறிவுத் துறைகளில் காலம் முழுதும் இயங்கி வந்தார். இவரது ஆய்வு முறையை மூல முறை, ஒப்பீட்டு முறை, தருக்க முறை என பகுப்பார் பேராசிரியர் கருவை பழனிசாமி. தமிழுக்குப் பெருமை தேடியவர்; அதன் மேன்மையை நிறுவியவர்; தன்னலங்கருதாது உழைத்தவர். […]

Read more

நல்லன எல்லாம் அருளும் நாரத புராணம்

நல்லன எல்லாம் அருளும் நாரத புராணம், பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.220. நாரதர் கலகம் நன்மையில்தானே முடியும். அது தேவலோகமோ, பூலோகமோ… மக்களுக்காகவே, மற்றவர்களுக்காகவே ஆன்மிகத் தொண்டு செய்த பிரம்ம தேவனின் – புதல்வர்நாரதர் பற்றிய முழுமையான தொகுப்பு இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நாரதரின் பெருமைகள், தவ வலிமை, மானிடப் பிறப்பு, மறு பிறப்பு, தேவலோக வரவேற்பு, திரிலோக சஞ்சாரி, அகங்கார நாரதர்… என மாண்புகள் சொல்லப்படுகின்றன. நாரதரைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் கலகங்களையும், அவற்றின் […]

Read more

பார்த்தது கேட்டது படித்தது – பாகம் 6

பார்த்தது கேட்டது படித்தது – பாகம் 6, அந்துமணி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.300. ஒரு சின்ன பூனைக் குடும்பம்; அதுல, அம்மா, அப்பா, ஒரு குட்டிப் பூனைன்னு அன்பு அன்பா குடும்பம் நடந்துச்சாம்… ஒரு நாள், அப்பா பூனை செத்துப் போச்சாம். அப்போ அம்மா பூனையும், குட்டி பூனையும் அப்பாவோடு பேசி மகிழ்ந்த வார்த்தைகளைச் சொல்லிச் சொல்லி அழுதுச்சாம்… அது ரெண்டும் என்ன சொல்லி அழுதுச்சுன்னு சொல்லுங்க பார்ப்போம்? ரஜினி சாரை போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொன்னா, எப்பவுமே தலையை […]

Read more
1 11 12 13 14 15 240