நீர் உயிரின் வேர்

நீர் உயிரின் வேர், சான்றோர் தளம், அமிர்தம் பீட்டர் ராசன், விலைரூ.90. நீர் குறித்த துல்லியமான விபரங்கள் அடங்கிய நுால். அறிவியல் பார்வையுடன் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் அடங்கியுள்ளன.புத்தகத்தில், ஐந்து இயல்கள் உள்ளன. நீர் என்பது என்ன என்பதில் துவங்கி, அதன் அளவு, தரம், நீரை சீராக்கும் முறைகள், நீர் மேலாண்மை, விவசாயம் என முறைப்படுத்தி தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தெளிவான அறிவியல் தகவல்களுடன் தரப்பட்டுள்ளது. அறிவைத் திறக்கும் வகையில் அமைந்துள்ளது. நீரின்றி அமையாது இவ்வுலகு என்பதை தெள்ளத்தெளிவாக விவரித்து, […]

Read more

உலகத் தமிழ்த் துாதர் தனிநாயகம் அடிகளார்

உலகத் தமிழ்த் துாதர் தனிநாயகம் அடிகளார், பால்வளன் அரசு, கதிரவன் பதிப்பகம், விலைரூ.120. ஈழத்தில் பிறந்து, தமிழகத்தில் முறையாகத் தமிழ் ஆய்வு மேற்கொண்டு, மலேஷியாவில் பேராசிரியராக வீற்றிருந்தவர் சேவியர் தனிநாயகம் அடிகளார். பன்மொழிப் புலவராகவும், பன்னாட்டுத் தமிழ்த் துாதராகவும், உலகத் தமிழாய்வு மன்ற நிறுவனராகவும், உலகத் தமிழ் மாநாடுகளின் அமைப்பாளராகவும், தமிழ்ப் பண்பாடு என்னும் ஆங்கில முத்திங்கள் இதழின் ஆசிரியராகவும் விளங்கியவர். ஐரோப்பியப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் தமிழ் ஆய்வுச் சொற்பொழிவுகள் ஆற்றியவர். அவரது அரும் பணிகள் பற்றிச் சொல்லும் நன்னுால். தேவநேயப் பாவாணர், […]

Read more

ஸ்ரீபாஷ்யம் பேருரை

ஸ்ரீபாஷ்யம் பேருரை, க. ஸ்ரீதரன், நர்மதா பதிப்பகம், விலைரூ.950 அகிலத்து மாந்தர் அனைவரையும் சமமாகவே பாவித்து வாழ்ந்த, ஆன்மநேய முனிவர் ஸ்ரீராமானுஜர், 1,000 ஆண்டுகள் கடந்தும் அழியாப் புகழோடு நிலைப்பவர். பாதராயண மகரிஷி சமஸ்கிருதத்தில் இயற்றிய பிரம்ம சூத்திரத்திற்கு, ராமானுஜரால் வழங்கப்பட்ட பேருரையே ஸ்ரீபாஷ்யம் நுால். பிரம்மம் என்பதற்கு ஒப்புயர்வற்ற பொருள் அல்லது அனைத்தையும் வளர்க்கின்ற பொருள் என்று விளக்கம் தந்து, பிரம்ம சூத்திரங்கள் நுட்பமாக விளக்கப்படுகின்றன. சூத்திரங்களைப் புரிந்து கொள்ள எளிய உரைகள் தேவைப்பட்ட நிலையில், உருவாக்கப்பட்ட ஐந்து வகை உரைகளில் ஒன்று […]

Read more

ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு

ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு, ஜெயமோகன், தன்னறம் நுால்வெளி, விலைரூ.100. பிறக்கும் குழந்தையை, குருவாக பாவித்து எழுதப்பட்டுள்ள நுால். நெகிழ்ச்சி தருகிறது. மழலை உலகில் கற்றுக்கொள்ள பல்லாயிரம் உண்டு என்பதை அனுபவமாக வெளிப்படுத்துகிறது. அனுபவம் சுயம் சார்ந்து வெளிப்படுகிறது. மகிழ்ச்சியும், பிணைப்பும் நிறைந்த அன்பு வெளியைக் காட்டுகிறது. உணர்வின் தொடர்பை விளக்குகிறது. குழந்தையின் செயல்கள் மீது நுட்பமான அவதானம் வெளிப்பட்டுள்ளது. சிந்தனையைத் தொடும் வகையில் உள்ளது. – மலர் நன்றி: தினமலர், 4.4.21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609இந்தப் […]

Read more

பச்சையம் என்பது பச்சை ரத்தம்

பச்சையம் என்பது பச்சை ரத்தம், பிருந்தா பார்த்தசாரதி, படைப்பு பதிப்பகம், விலைரூ.100. தாவரங்களை கருப்பொருளாகவும், உரிப்பொருளாகவும் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். இயற்கையை எண்ணி எழுதியுள்ளார் நுாலாசிரியர். நீண்ட முன்னுரையுடன் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மண்ணைத் தோண்டி கிழங்கு எடுத்தேன்; கருணையின் வாசனை என்று ஒரு கவிதை. புலி உறுமியது; பயப்படாமல் நிமிர்ந்தே நிற்கிறது சிறு புல் போன்ற சுவாரசியமான சிறு கவிதைகள் உள்ளன. வங்காரி மாத்தாய், பூக்கோ போன்ற சூழல் பாதுகாப்பு முன்னோடிகளின் பொன்மொழியும் தொகுப்பில் உள்ளது. நன்றி: தினமலர், 4.4.21 இந்தப் […]

Read more

அமுதே! தமிழே! அருமருந்தே!

அமுதே! தமிழே! அருமருந்தே!, மா.கி.ரமணன், பூங்கொடி பதிப்பகம், விலைரூ.180. எளிய தமிழில், 27 கட்டுரைகளில் பக்தி இலக்கியச் சிந்தனைகளைப் படைத்துள்ளார். உடல் நோய்க்கும், மன நோய்க்கும் மருந்து வழங்கும் வல்லமை படைத்தது திருக்குறள் என துவங்கி, திரையிசைக் கவியரசர் மூவர் என்ற கட்டுரையுடன் நிறைவு செய்து உள்ளார். தமிழ் மொழியின் பழமை முதற்கொண்டு புதுமை வரை, படையல் ஆக்கியுள்ளார். திருமந்திரத்தில் உடல் நோய், மன நோய், மூளை நோய், பிறவி நோய் நீக்கும் மருத்துவ முறைகள் சொல்லப்பட்டுள்ள தன்மையை விளக்கியுள்ளார். இசையால் இசைவான் இறைவன் […]

Read more

இதுதான் வைரல்

இதுதான் வைரல், ஹேமபிரபா, பாரதி புத்தகாலயம், விலைரூ.90. அறிவியல் பார்வையில் கொரோனா வைரஸ் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். தகவல்கள் முழுமையாக உள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிபவரே எழுதியுள்ளார். வைரஸ் குறித்த வதந்திகளையும் விளக்கி தெளிவு ஏற்படுத்துவம் வகையில் அமைந்துள்ளது. தொற்று பரவல் குறித்து அறிவியல் ரீதியாக விளக்கி, நுட்பமான வகையில் தகவல்களை எளிய நடையில் விவரித்துள்ளார். வைரஸ் பரவும் விதத்தை விளக்கி, கட்டுப்படுத்துவதில் கடைப் பிடிக்க வேண்டிய நடைமுறை, முன் எச்சரிக்கை செயல்பாடுகள் குறித்தும் விளக்கியுள்ளார். பெருந்தொற்று நிலவும் காலத்தில், விழிப்புணர்வு […]

Read more

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், கற்பகவித்யா பதிப்பகம், விலைரூ.120. தினத்தந்தி அதிபர் மறைந்த பா.சிவந்தி ஆதித்தனார் வாழ்க்கை வரலாறை சுருக்கமாக சொல்லும் நுால்; 27 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் தொடருக்கு ஏற்ப, சி.பா.ஆதித்தனாரின் பத்திரிகை கொள்கையை அப்படியே பின்பற்றினார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார். அத்தியாயங்களின் நிறைவில் சி.பா.ஆதித்தனாரின் படமும், அவரது பொன்மொழிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பேசுவதில் மட்டும் அல்ல, எழுதுவதிலும் தனிச்சிறப்பு பெற்றவர் வானொலி அண்ணா என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்த நுால். நன்றி: தினமலர், […]

Read more

நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?, முனைவர் ப.பாலசுப்ரமணியன், அழகு பதிப்பகம், விலைரூ.130 தேர்வாளர்கள் ஒரு கேள்வியை கேட்டு முடிக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். குறுக்கே நீங்கள் பேசக் கூடாது. அது கேள்வி கேட்போருக்கு அதிருப்தியை அளிக்கும். கேள்விகள் கேட்கப்படும்போது அவற்றை ஆர்வத்துடன் செவி மடுக்க வேண்டும். முகத்தை உற்சாகமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அளவற்ற ஆர்வம் தான் தேர்வு நடத்துவோரை அதிகமாக ஈர்க்கும். உற்சாகத்தோடு பணி செய்யும் நபர் என்ற நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் நுாலாசிரியர் சொல்லும் அறிவுரைகள் பயன் உள்ளவை! […]

Read more

அறிஞர் கோவை ஞானி கடிதமும் கருத்தும்

அறிஞர் கோவை ஞானி கடிதமும் கருத்தும், சிலம்பு நா.செல்வராசு, அனிச்சம் வெளியீடு, விலைரூ.20. கோவை ஞானி – சிலம்பு செல்வராசு இடையே நடந்த கடித தொடர்பு விபரம் முதற்பகுதியாகவும், தமிழின் ஆக்கம் தடையும் விடையும் என்ற கட்டுரை இரண்டாம் பகுதியாகவும் அமைந்த குறுநுால். காரசார விவாதத்துக்குரிய நுால். தமிழின உள் முரண்பாடுகள் குறித்தும், இனவரைவியல் குறித்தும் பேசும் கட்டுரை கவனிக்கத்தக்க ஒன்றாகும். தமிழர் வாழ்வியல் சடங்குகளில் செய்த மாற்றங்கள், எத்தகு பயனை விளைவித்து வருகின்றன என்பதை எடுத்துக்காட்டும் கட்டுரை குறிப்பிடத்தக்கது. தமிழின ஆக்கத்திற்கான தடைகள் […]

Read more
1 20 21 22 23 24 240