நெய்தல் சொல்லகராதி

நெய்தல் சொல்லகராதி, குறும்பனை சி.பெர்லின், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.315 தமிழகத்தின், கடலோரத்தில் மீன்பிடித் தொழிலை பிரதானமாகக் கொண்டு வாழும் மக்களின் உயர்ந்த பண்பாட்டை சொல்லும் நுால். மிகத் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் பயன்படுத்தும் கலைச் சொற்கள், மீன்களின் பெயர்கள், கடல் பாறைக் கூட்டங்களின் பெயர், கடலுக்கு அமைந்த பெயர்கள், நெய்தல் சமூகங்களின் பண்பாட்டு உயர்வு, நட்சத்திரங்களை அடையாளம் காணும் விதம், கடலில் வீசும் காற்றின் வகைமைகள், கடலோர பழமொழிகள், கடல் தொழிலுக்கு உதவும் கருவிகள், மீனவப் பெண்களின் விளையாட்டுப் பாடல்கள், […]

Read more

ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை, சைலேந்திர சர்மா, கிரி டிரேடிங் ஏஜன்சி பிரைவேட் லிமிடெட், விலைரூ.150 இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் உள்ள பண்டைய யோக பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால், கிருஷ்ணரை நேரில் காணும் பாக்கியம் கிடைக்கும் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 7/2/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%ef%bb%bf1000000027342_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திருப்புகழ்த் திருத்தலங்கள்

திருப்புகழ்த் திருத்தலங்கள், ஆ.கோமதி நாயகம், அழகு பதிப்பகம், விலைரூ.350 மறுபதிப்பாக வந்துள்ளது. அருணகிரி நாதர் அருளிய திருப்புகழில் பாடிய, 201 தலங்களைப் பற்றியும், வைப்புத் தலங்கள், முருகன் தலங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. அருணகிரி நாதர் வரலாற்றோடு மாவட்டங்கள் தோறும் இத்தலங்கள் அமைந்துள்ள விபரமும் அடங்கி இருக்கிறது. முருகனுக்கு உரிய மந்திரங்கள், யந்திரங்கள், விரதங்கள் போன்றவை விளக்கப்பட்டுள்ளன. நன்றி: தினமலர் இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030996_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

எத்தனை கோணம் எத்தனை பார்வை

எத்தனை கோணம் எத்தனை பார்வை, சீத்தலைச்சாத்தன், ஒப்பிலாள் பதிப்பகம், விலைரூ.99. கவிஞர் கண்ணதாசனின் பார்வைகள் பற்றி ஐந்து தலைப்புகளில் மிளிரும் நுால். கண்ணதாசனின் அனுபவங்களும் பளிச்சிடுகின்றன. என்ன துணிச்சல், யாருக்கு வரும் இந்தத் துணிச்சல், மணவிழாப் பாட்டு கேள்விப்பட்டது உண்டு. ஆனால், இறந்த பின் இறுதி ஊர்வலத்தில் பாட, 1966ல் எழுதிய மரண சாசனம், ஏழு பாடல்களில் எழுதியுள்ளார் கண்ணதாசன். கண்ணதாசன் வாழ்வில் நிகழ்ந்த பல ருசிகரமான தகவல்களைத் தருகிறது. – பேராசிரியர் இரா.நாராயணன் நன்றி: தினமலர், 3/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

வேத கணிதம் செயல்முறைகள்

வேத கணிதம் செயல்முறைகள், மு.தனசேகரன், ஆசிரியர் வெளியீடு, விலைரூ.275 வேதக் கணிதம் என்பது வேகக் கணித முறையாகும். கருவியால் செய்து முடிக்கும் கணிதத்தை, மனதால் வினாடியில் முடித்துக் காட்டுகிறது. கணினி, கால்குலேட்டருக்கு அடிமையான மூளையை, வேதக் கணித முறையால் மீட்டு விடலாம் என்கிறது இந்த நுால். மாணவருக்கு பெரிதும் பயன் தரும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதர்வண வேதத்தில் இக்கணிதத்தில், 16 சூத்திரங்களும், 13 உபசூத்திரங்களும் உள்ளன. இவற்றை, புரி கோவர்த்தன மடத்து சங்கராச்சாரியார் உருவாக்கினார். வேதக் கணிதம் மூலம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், […]

Read more

சிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள்

சிவபெருமான் அடியார்களுக்கு அருளிய அருட்கோலங்கள், மருத்துவர் கைலாசம் சுப்ரமண்யம், வானதி பதிப்பகம், விலைரூ.125. அளவிலா பக்தி செலுத்தும் அன்பர்களுக்கு தேவை அறிந்தும், சூழலுக்குப் பொருத்தமாக வெளிப்பட்டு அருள் செய்கிறான் இறைவன். உடல் சார்ந்த நோய்களுக்கு, உள்ளம் சார்ந்த இறை நம்பிக்கை மருந்தாக அமையலாம் என உணர்த்துகிறது நுால். நாயன்மார்களுடன் இறைவன் நடத்திய திருவிளையாடல்களின் சுருக்கமே என கூறியுள்ளது, உண்மைத் தன்மையை உணர்த்துகிறது. சுந்தரரை சிவபெருமான் தடுத்தாட்கொண்டது, திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்தது, பரவையார் வீட்டிற்குத் துாது போனது, திருநாவுக்கரசருக்கு சூலை நோய் கொடுத்து சிவநெறிக்கு மாற்றியது […]

Read more

தங்கையின் அழகிய சினேகிதி

தங்கையின் அழகிய சினேகிதி, குரு அரவிந்தன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலைரூ.200 சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதைகளில் இலங்கைத் தமிழ் எல்லா இடங்களிலும் இடம்பெற்று, புது அனுபவத்தை வழங்குகிறது. அண்ணனும், தங்கையும் எப்போதும் எலியும், பூனையுமாகத்தான் இருப்பர் என்பதைத் தெரிவிக்கும், ‘தங்கையின் அழகிய சினேகிதி’ என்னும் கதையில், காதலை மையமாக வைத்துக் குடும்பச் சூழலை பின்னிக் காட்டியிருக்கிறார். திருமண பந்தத்திற்கு முன் காதல் என்னும் ஈர்ப்பு, பலரது வாழ்க்கையில் புகுந்து வெளியேறியிருக்கும். அந்த ஈர்ப்பு, படுக்கை வரைக்கும்கூட இழுத்துச் சென்றிருக்கும். அந்தக் காதலில் பிரிவு […]

Read more

பலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்

பலன் தரும் பரிகாரத் திருத்தலங்கள்,  அறந்தாங்கி சங்கர், அறந்தாங்கி சங்கர் பதிப்பகம், விலைரூ.150 திருக்கடையூர் அபிராமி அம்மன் துவங்கி, 41 பரிகாரத் திருத்தலங்களை விளக்குகிறார். தலை எழுத்தை மாற்றி அமைக்கும் திருத்தலமாகத் திருப்பட்டூர் ஈசன்; திருமணத்தை நடத்தி வைக்கும் திருமணஞ்சேரி; பல நோய்கள் தீர்க்கும் பல திருத்தலங்கள்; ராகு, கேது தோஷ நிவர்த்தித் தலங்கள்; கடன்தொல்லைகளை தீர்க்கும் திருச்சேறை ரிணவிமோசன லிங்கேஸ்வரர் என்ற சிறப்பானதொரு தகவல். இழந்த பதவி கிடைக்க அச்சிறுபாக்க ஆட்சி புரீஸ்வரர் திருக்கோவில்; திருமணத் தடைகள் நீக்கும் திருவிடந்தை பெருமாள்; சனி […]

Read more

தமிழ் – தமிழ் அகராதி

தமிழ் – தமிழ் அகராதி, தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.250 சொற்களின் பொருளை உணர அகராதி துணை செய்கிறது. அரிய தமிழ் சொற்களுக்கு பொருள் கூறும் வகையில் இந்த அகராதி தயாரிக்கப்பட்டுள்ளது. அகர வரிசைப்படி சொற்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சிவா என்ற சொல்லுக்கு, கடுக்காய், கீழ்க்காய்நெல்லி, நெல்லி, பங்கம்பாலை, வன்னி என்ற சொற்கள் பொருளாகக் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினமலர், 31/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

உலக சாதனை படைத்த விளையாட்டு வீராங்கனைகள்

உலக சாதனை படைத்த விளையாட்டு வீராங்கனைகள், சூர்யகுமாரி, நர்மதா பதிப்பகம், விலைரூ.90 உலக அளவில் சாதனை படைத்த விளையாட்டு வீராங்கனைகளின் வாழ்க்கை குறிப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தொகுப்பு நுால். சாதனைக்கும் துாண்டும் வகையில் அமைந்துள்ளது. 37 வீராங்கனைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. தகவல் மிக எளிமையாக சொல்லப்பட்டுள்ளது. வாழ்வில் முன்னேறத் துடிப்போருக்கு வழிகாட்டும் வகையில் உள்ளது. பெண்கள் ஏற்றமிகு வாழ்வில் நடை போட துணை புரியும். நன்றி:தினமலர், 17/1/2021 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more
1 31 32 33 34 35 240