தாடகை நாச்சி மீனாட்சி வரலாறு

தாடகை நாச்சி மீனாட்சி வரலாறு, சொக்கரமணகிரி தாசலிங்கம், பூமாயி பதிப்பகம், விலைரூ.250 ஆன்மிக அன்பர்களுக்கு அருட்கொடையாக வந்துள்ள இந்நுால், மாயாசக்தி அன்னை மீனாட்சியின் பெருமை பேசுகிறது. பக்தி பரவசமூட்டும் எளிய தமிழ் சொற்களால் சங்க காலத்து பாடல்கள் விளக்கப்பட்டு உள்ளன. முதல், இடை, கடை தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற புலவர்களை, ஞானிகளை, முனிவர்களை விளக்கும் விதம் அருமை. மதுரையை விட்டு பிரியும் போது நக்கீரர் பாடிய, ‘என்றினி மதுரை காண்பேம்…’ என்ற பாடலும், அதன் விளக்கமும் இதற்கு சான்று. ‘சர்க்கரை பந்தலில் தேன்மாரி’ போல […]

Read more

விண்ணோடும் முகிலோடும்

விண்ணோடும் முகிலோடும், பானுமதி கண்ணன், இருவாட்சி, விலைரூ.150 இருபத்தெட்டு அத்தியாயங்களில் புதிய கதைக்களத்தை அறிமுகம் செய்கிறது இந்த நாவல். ஆதிரை என்னும் பாத்திரத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்தாலும், பிற பாத்திரங்களையும் கவனமாகப் படைத்துள்ளார். மலையாள வாடை கலந்த ஒரு மொழிநடையைப் பேச்சு மொழியில் பயன்படுத்தியுள்ளது கனம் சேர்த்துள்ளது. சென்னைத் தமிழ் – அதிலும் கோடம்பாக்கம் தமிழும் கொலுவிருக்கிறது. எப்போதோ நடந்த அரியலுார் ரயில் விபத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒரு ரயில் விபத்தைக் காட்டி, தன் வரலாற்று அறிவுக்கு விளக்கம் தந்துள்ளார். சினிமாவில் இரண்டாம் நிலையில் நடிப்பவர்களும், […]

Read more

சிறுகாப்பியங்களில் திருக்குறள்

சிறுகாப்பியங்களில் திருக்குறள், ச.தண்டபாணி தேசிகர், லட்சுமி பதிப்பகம், விலைரூ.60 திருக்குறள் கருத்துக்கள் சொல்லப்படாத தமிழ் இலக்கியங்களே இல்லை எனலாம். இந்நுால் தமிழ் சிறு காப்பியங்களில் சொல்லப்பட்ட திருக்குறளின் கருத்துக்களை, எடுத்துக்காட்டு பாடல்களுடன் விளக்கிச் சொல்கிறது. இந்நுாலில் காப்பியங்களில் திருக்குறள், சூளாமணியில் வள்ளுவம், நீலகேசியில் வள்ளுவம், உதயணகுமார காவியத்தில் வள்ளுவம், யசோதர காவியத்தில் வள்ளுவம் என்ற தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்து உள்ளன. தமிழ் சிறு காப்பியங்களில் கதையையும், அதனுள் கூறப்பட்டுள்ள திருக்குறள் கருத்தையும் தெரிந்து கொள்ள பேருதவியாக உள்ளது. – ராமலிங்கம் நன்றி: தினமலர், 31/1/21 […]

Read more

வால்மீகி அறம்

வால்மீகி அறம், வால்மீகி அறம் நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க், விலைரூ.395 வால்மீகி எழுதிய காலம் தொட்டு, பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் வெளியாகி விட்டது. சில பல மாறுதல்களுடன் கம்பர் எழுதிய பிறகு, தமிழறிஞர்கள் இதை அக்குவேறு ஆணி வேறாக ஆய்வு செய்து விட்டனர். இதே அளவுக்கு நல்லி குப்புசாமி செட்டியார், ராமாயணத்தை ஆய்வு செய்து எழுதியுள்ளதுடன், ஒவ்வொரு அத்தியாயத்திலும், அந்த சம்பவத்துக்கான அறத்தையும் எழுதி, மனித இனம் ராமனை எப்படி பின்பற்ற வேண்டும் என்பதை சிறப்பாக காட்டியுள்ளார். ராமபிரான் பிறந்த தேதி, […]

Read more

பிடிச்சிருக்கா

பிடிச்சிருக்கா, ம. திருவள்ளுவர், இனிய நந்தவனம் பதிப்பகம், விலைரூ.150 வாழ்க்கை மேம்பாட்டிற்குத் தேவையான தத்துவங்களை விளக்கும் நுால். சுறுசுறுப்பாக இருப்பதற்கு உடற்பயிற்சி போதும். சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு மனப்பயிற்சியும், விழிப்புணர்வும் அவசியம் என்கிறார். உரிய நேரத்தில் ஆற்றலையும் தனித்திறமையையும் கண்டுபிடிக்காதவர் பின்தங்கிவிடுவர் என்கிறார். சாமானியன் என்று எண்ணிக் கொண்டிருக்காமல், கலாம் போல உயர்ந்த மனிதராக மாறியாக வேண்டும். அதற்கு உரிய ஆற்றல், திறமையை உரிய நேரத்தில் கண்டு உணர வேண்டும். காத்திருக்கப் பழக வேண்டும். பொறுமையை வளர்க்க வேண்டும். வெற்றியின் இலக்கணமாக தொடர் தோல்விகளுக்குத் […]

Read more

நம் குழந்தை பத்திரம்

நம் குழந்தை பத்திரம், அ.சங்கரலிங்கம், வாசகன் பதிப்பகம், விலைரூ.150 ‘நான் எப்படி படித்தாலும் மறந்து போய் விடுகிறது’ என, குழந்தைகளின் படிப்பு பயத்தின் பிரதிபலிப்புடன், ‘நம் குழந்தை பத்திரம்’ புத்தகம், பக்கங்களில் பாதம் பதித்து நடை பழகி வரிகளில் வாலிபனாகி ஓடுகிறது.பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்க வேண்டும் என பக்கத்திற்கு பக்கம் எளிமையாக படிக்கும் முறைகளை தெளிவாக பதிவு செய்து உள்ளார் எழுத்தாளர் சங்கரலிங்கம். புத்தக பக்கங்களை ஆக்கிரமித்துள்ள ஒவ்வொரு தலைப்புகளும். இன்றைய கல்வி முறையை காட்டுகிறது என்றாலும், படிப்பு ஒரு சுமையா […]

Read more

இருளைக் கிழித்தொரு புயற்பறவை

இருளைக் கிழித்தொரு புயற்பறவை, இளவேனில், கொற்றவை வெளியீடு, விலைரூ.250   ரஷ்ய நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கியின் குழந்தைப் பருவம் பற்றி விளக்கும் நுால் இது. சிறு வயதில் கார்க்கி அனுபவித்த சித்ரவதைகளையும், அவரைச் சுற்றி நடந்த நிகழ்வுகளையும் கண்முன் கொண்டு வருகிறார், ஆசிரியர் இளவேனில். கஷ்டப்பட்ட காலத்திலும், பல நுால்களை தேடித் தேடி படித்து, தன் அறிவையும், கலை, இலக்கிய புலமையையும் வளர்த்த விதத்தையும் படிக்கும் போது, பிற்காலத்தில் மிகச்சிறந்த எழுத்தாளராக உருவானதற்கான அடிப்படையை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி: […]

Read more

ராக்கெட் தாதா

ராக்கெட் தாதா, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர்வெளியீடு, விலைரூ.190 படுகை முதலாகப் பதினொரு கதைகளின் தொகுப்பு நுால். புதுமாதிரியாக எழுதுவதற்கு எடுத்த முயற்சியாக அத்தனை கதைகளும் இடம்பெற்றுள்ளன. மொழிநடை நம்மை இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்திற்கு இழுத்துச் செல்வது போல் அமைந்துள்ள தன்மையைக் காணமுடிகிறது. பத்திரிகையின் தேவைக்காக எழுதப்பட்ட கதைகள் இவை இல்லை; என்றாலும் ஒரு வகையான தேடலை எதிர்பார்த்துஎழுதப்பட்டுள்ளது என்பதை இலக்கிய வாசகர்கள் எளிதில் உணர்ந்து கொள்வர். தமிழ்ச் சிறுகதையின் புதிய பரிமாணத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள தொகுப்பு நுால். – முகிலை ராசபாண்டியன் நன்றி: […]

Read more

பாரதி ஓர் ஆச்சரியம்

பாரதி ஓர் ஆச்சரியம், ஜெ.கமலநாதன், குமரன் பதிப்பகம், விலைரூ.50 முண்டாசுக் கவி, மகா கவி, புரட்சிக் கவி என்றெல்லாம் சொல்லும்போதே நமக்குள் துடிப்பு கிளம்பும்! பாரதியைப் பற்றி அறிமுகம் தேவையில்லை; அவர் ஒரு ஆச்சரியம், அபூர்வம். அவர் சாகாவரம் பெற்ற எழுத்துகளால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மகா கவி இன்ப இல்லத்தை நாடிப் போகவில்லை; கவிதை இல்லத்தில் குடியேறி சமூக சீர்திருத்தச் சமையலைப் படைத்தவர். பாரதி ஓர் ஆச்சரியம் தான்!‘ அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே…’ என்று முழங்கிய பாரதி, ஐம்பூதங்களில் ஒன்றான தீ மீது பற்று […]

Read more

பழ மருத்துவம்

பழ மருத்துவம், வீ.செந்தில்குமார், கோரல் பதிப்பகம், விலைரூ.100 கனிகளில் அடங்கியுள்ள சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் பற்றிய விபரங்கள் என்ற முகப்புடன் வெளிவந்துள்ள நுால். உணவே மருந்து என்ற தத்துவ அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.நுாலில், 36 கட்டுரைகள் உள்ளன. பழங்களின் பயன்பாடு, அவற்றில் உள்ள நுண் சத்துக்கள் விபரம், உடலுக்கு அவை தரும் ஆற்றல் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. உணவில் கவனம் கொள்பவர்களுக்கு உதவும். நன்றி: தினமலர், 1/11/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more
1 32 33 34 35 36 240