தொல்குடி

தொல்குடி, நாஞ்சில் நாடன், தமிழினி, விலைரூ.130 நுாலாசிரியரின் சிறுகதைகள், பல்வேறு இதழ்களில் அரங்கேறி, பலரது பாராட்டை பெற்று, தனி நுாலாக தொகுக்கப்பட்டுள்ளது. இதில், 16 சிறுகதைகள் இடம்பெற்று உள்ளன. நுாலாசிரியர், இலக்கியத்தில் மிகுந்த புலமை பெற்றுள்ளவர் என்பது, ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது புலப்படுகிறது. இவரது சொல்லாடலும், எழுத்தாற்றலும் படிப்பவர்களை தம்முள் ஈர்த்துக் கொள்ளும் என்பது நிச்சயம் நன்றி: தினமலர், 8/3/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000028493_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

மாமன்னன் ராஜராஜன்

மாமன்னன் ராஜராஜன், குன்றில் குமார், அழகு பதிப்பகம், விலைரூ.170. இன்று தமிழர் வாழ்வின் பண்டைய பெருமைகள் உலகளாவி பரவி இருப்பதற்கு ஆணிவேராக நின்று காத்தவர்கள் சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் எனலாம். சோழ நாடானது வேள் மண்டலம், வேள் தேசம், நாக மண்டலம், பொன்னி மண்டலம், காவிரி நாடு, கிள்ளி மண்டலம் வளவன் மண்டலம் என்று பல்வேறு பெயர்களோடு அமைந்து ஊர்களின் பெயர்கள், ‘கோட்டை’ என்று கொண்டதாக இருந்தது சோழநாடு. வையை நாடு, பாண்டி மண்டலம் என்பதாக பாண்டியநாடு அமைந்து ஊர்களின் பெயர்கள் […]

Read more

இனிய இணையதள நுாலகம்

இனிய இணையதள நுாலகம், முனைவர் ப.பாலசுப்ரமணியன், சங்கர் பதிப்பகம், விலைரூ.110 பல துறைகளில் நுழைந்த அறிவியல் வளர்ச்சி, இப்போது நுாலகத் துறையிலும் புகுந்து, நுாலகத்தின் பயன்பாட்டை பலருக்கும் அறிமுகப்படுத்தி வளர்ந்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள நுாலகங்கள் பெற்றுள்ள அதீத வளர்ச்சி, நம் நாட்டு நுாலகங்களிலும் அமைந்துள்ளதை விளக்கமாக இந்நுாலில் விவரித்துள்ளார், நுாலாசிரியர். அதில் குறிப்பாக, இணையதளத்தில் பல நுால்கள் வெளியாகி, வாசகர்கள் மத்தியில் உலா வருவதையும், ஒரு எழுத்தாற்றலின் படைப்பு, இணையதளம் மூலம், வெளிநாட்டில் உள்ளவர்களும் அறிந்து கொள்ள முடிவதையும் விவரித்துள்ளார். நன்றி: தினமலர், 1/3/20 […]

Read more

சங்கிலிப் பூதத்தான்

சங்கிலிப் பூதத்தான், நாஞ்சில் நாடன், விஜயா பதிப்பகம், விலைரூ.145 மொத்தம், 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் இடம்பிடித்துள்ள கதைகள், ஆனந்த விகடன் இதழில் அவ்வப்போது வெளியாகி, வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்றவை. ஒவ்வொரு சிறுகதையும், எளிய மக்களின் வாழ்க்கை போராட்டத்தை வலி(மை)யாக எடுத்துக் காட்டுகிறது. நன்றி: தினமலர், 8/3/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000026410_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திரைக்கவித் திலகம் 100

திரைக்கவித் திலகம் 100, வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம், பரணி பதிப்பகம், விலைரூ.250 கலைமாமணி அறிஞர் அ.மருதகாசி திரைக்கதைப் பாடல்களில் முத்திரை பதித்தவர். அவரைப்பற்றிய இந்த நுாலை வானொலி அண்ணா ஞானப்பிரகாசம், நுாற்றாண்டு விழாவைக் கருதி படைத்திருக்கிறார். அவர் எழுதிய எளிய தத்துவப்பாடல்கள் காலத்தில் நின்று நிற்பவை. மொழி அறிவும் இசை அறிவும் கொண்ட அவர், ‘மெட்டுக்குப் பாட்டு எழுதுவதில் முதன்மையானவர்’ என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார். ‘கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்… அறிவை நம்பு உள்ளம் தெளிவாகும்’ என்ற பாடல் நினைத்ததை முடிப்பவன் படத்திற்கு […]

Read more

மரக்குட்டி

மரக்குட்டி, கி.ரவிக்குமார், பாவைமதி வெளியீடு, விலைரூ.90 வாழ்வை விசாரித்து எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். 12 கதைகளைக் கொண்டுள்ளது. நவரசங்களை எழுத்தில் வடித்துள்ளார்.கதாபாத்திரங்களுடன், மரம், பறவைகள் குறித்தும் எழுதியுள்ளார். வியக்கும் வகையில் ஒப்பீடுகள் உள்ளன. கதைகளில் சமூக சிந்தனை பரவலாக உள்ளது. நன்றி: தினமலர், 17/5/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மறக்க முடியுமா?

மறக்க முடியுமா?, எம்.கே.நடராஜன், லட்சுமி பதிப்பகம், விலைரூ.200 பர்மாவில், இரண்டாம் உலகப் போர் அனுபவத்துடன் துவங்குகிறது புத்தகம். வாழ்க்கையை, தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்ட விதம் விவரிக்கப்பட்டுள்ளது. போரற்ற, நோயற்ற நிலை நோக்கி நகர துாண்டும் தொகுப்பு நுால். புத்தகத்திலிருந்து… பர்மா நாட்டில், மீங்கேயில், 1940ல் வசித்தோம். தமிழரை, ‘கள்ளா’ என்று அழைப்பர். பள்ளியில், 5ம் வகுப்பில் இருந்தேன். பேரிரைச்சலுடன் விமானங்கள் பறந்தன. தலை தெறிக்க ஓடினோம். 40 ஜப்பானிய விமானங்கள் குண்டுகளை பொழிந்தன. அன்று மூடிய பள்ளி திறக்கவேயில்லை. ஆங்கிலேய அதிகாரிகள் பர்மாவை விட்டு வெளியேற […]

Read more

தமிழ் இலக்கிய அகராதி

தமிழ் இலக்கிய அகராதி, பாலுார் கண்ணப்ப முதலியார், வைகுந்த் பதிப்பகம், விலைரூ.625 பள்ளி, கல்லுாரிகளில், தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவ – மாணவியருக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட அகராதி நுால். பழந்தமிழ் இலக்கிய சொற்களை, புரிந்து பொருள் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இலக்கிய மொழிக்கு மட்டுமின்றி, வழக்கு மொழிக்கான பொருளும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் சொல்லகராதியாக மட்டுமின்றி, தொகை சொற்கள், தொடர் மொழி விளக்கங்கள், பிரபந்தங்கட்குரிய விளக்கங்கள், நுால், புலவர்கள் பற்றிய குறிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. பழந்தமிழ் நுால்கள் பற்றியும், அவற்றை இயற்றியவர் பற்றி அறியவும் உதவும். […]

Read more

பீனிக்ஸ் பெண்கள்

பீனிக்ஸ் பெண்கள், வினிதா மோகன், எழிலினி பதிப்பகம், விலைரூ.250 உலக அளவில் தன்னம்பிக்கை ஊட்டும் பெண்களின் வெற்றி வாழ்க்கை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. 20 பேர் பற்றி எழுதப்பட்டுள்ளது. முதல் கட்டுரையே, தமிழகத்தில் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பற்றியது. சுருக்கமான வாழ்க்கை வரலாற்றுடன், சாதனையை வியந்து எழுதப்பட்டுள்ளது. பல துறைகளில் மிளிர்ந்த பெண்களின் வியப்பான வாழ்க்கை, சாதனை புரிய துாண்டுதல் என நம்பிக்கை தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பதின்பருவ சிறுமியர், லட்சியப் பாதை வகுக்க உதவும் .நன்றி: தினமலர், 17/5/20 இந்தப் […]

Read more

கில்கமெஷ் காவியம்

கில்கமெஷ் காவியம், ஸ்டாலின், சாகித்ய அகடமி, விலைரூ.190. மெசபடோமிய நாகரிகத்தைக் காட்டும் இக்காவியம் அக்கேடிய மொழியில், கி.மு., 130ல் பெல் அஹிஉகூர் எழுதினார். கொடுங்கோல் அரசர் கில்கமெஷ் ஆட்சியில், மக்கள் கொடுமைக்கு ஆளாகின்றனர். கில்கமெசிற்கு எதிராக தெய்வங்கள் என்கிடுவை உருவாக்குகின்றன. காட்டில் கொடிய விலங்குகளுடன் வாழும் என்கிடு, அவரை மாற்றுகிறார். முடிவில் கில்கமெஷ் மனம் மாறி, தெய்வங்களின் மறைபொருளை கூறுகிறார். யூப்ரடீஸ், டைகிரீஸ் ஆற்றங்கரைகளில், கி.மு., 2800க்கும் – கி.மு., 2500க்கும் இடைப்பட்ட காலத்தில் கிஷ் பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரைக் கதை இது. […]

Read more
1 34 35 36 37 38 240