சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும், ராஜ்கௌதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.270 எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் எண்ணத்தையும், போக்கையும் அவரது படைப்புகள் வாயிலாகக் கண்டறியும் முயற்சியின் வெளிப்பாடு தான் இந்த நுால். எல்லாவற்றையும் தன் கண்ணோட்டத்திற்குள் நுணுகிப் பார்க்கும் பார்வையை, சுந்தர ராமசாமியின் கருத்தாகக் காணமுடிகிறது. ‘சுந்தர ராமசாமியின் சிறுகதைகள், விமர்சன – விவாதக் கட்டுரைகள் முழுவதையும் படித்து அசை போட்ட பின், புளிய மரம் தந்த உற்சாகம் கிடைக்கவில்லை’ என, தன் என்னுரையிலேயே சுருங்கிய வடிவத் திறனாய்வாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர். ‘சு.ரா.வுக்கு […]

Read more

சுவடுகள் மறையாத பயணம்

சுவடுகள் மறையாத பயணம், பெ.சிதம்பரநாதன், பழனியப்பா பிரதர்ஸ், விலைரூ.300 வள்ளலாகிய அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா ஒரு மா மனிதர். அவருடன் நெருங்கிப் பழகும் பேறு பெற்ற சிதம்பரநாதன், அருட்செல்வரின் பல்வேறு முகங்களைப் பதிவு செய்கிறார். வேளாண் உற்பத்தி, தொழில் மேம்பாடு, மொழிப் பிரச்னை, வெளியுறவுக் கொள்கை, உலகமயமாதல், இட ஒதுக்கீடு, கல்வி மறுமலர்ச்சி, மதச்சார்பின்மை, சமூகப் பிரச்னைகள், சமூக சேவை எனப் பல பிரச்னைகளுக்குத் தம் அறிவுத்திறனாலும், அனுபவத்தாலும், தொழில் நுட்பத்தாலும் காந்தியக் கொள்கை வழி நின்று தீர்வுகளைச் சொன்னவர் அருட்செல்வர். ஒரு […]

Read more

இராஜாஜி

இராஜாஜி, ம.பொ. சிவஞானம், ஏ.கே.எல்., பதிப்பகம், விலைரூ.165 மூதறிஞர் ராஜாஜி பற்றி செங்கோல் இதழில், 1985 முதல், 1987 வரை எழுதப்பட்ட, 41 கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். 130 நுால்களை எழுதியுள்ள ம.பொ.சி., இந்நுால் அவற்றிலிருந்து தனிப்பட்ட ஒன்று எனக் கூறியுள்ளார். ராஜாஜியின் முதல் நுாலான, ‘ஸோக்ரதர்’ – சாக்ரடீஸ் மூலம் அவரின் எழுத்திலும், விடுதலைப் போராட்டத் தலைவர் என்பதன் மூலம் பேச்சிலும் ஈடுபாடு கொண்டு, பின் அவரையே குருவாக ஏற்ற ம.பொ.சி., ராஜாஜியின் அரசியல், ஆன்மிகம், குணநலன்கள், ஆட்சித் திறன் போன்றவற்றை இந்நுாலின் […]

Read more

மனம் கவரும் மகாபாரத கதைகள்

மனம் கவரும் மகாபாரத கதைகள், கமலா கந்தசாமி, சிந்தாசேகர், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 154, விலை 50ரூ. இந்தியாவுக்கும் புகழ் சேர்க்கும் இதிகாசம் மகாபாரதம். அது எழுதப்பட்ட விதம், அதில் உள்ள கதைகள், பாத்திரங்கள் சார்ந்த விளக்க கதைகள் என, 28 தலைப்புகளில் எழுதப்பட்டு உள்ளது. அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக தயாரிக்கப்பட்டு உள்ளது. நன்றி: தினமலர், 15/3/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கனவும் விடியும்

கனவும் விடியும், அ.வெண்ணிலா, சாகித்ய அகாடமி, பக்.224, விலை 200ரூ. இந்நுாலில், முதன்முறையாய் பெண்ணே தன் உடலைப் பற்றி எழுத்தாணியால் எழுத முயன்று, ஆழக் கடலில் முத்தெடுத்துள்ளாள். ‘ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும், சிசு கண்ட அதிர்வில் குருதியின் பாலையும் சாறெடுக்கின்றன. ஒரு நிறைவேறாத காதலின் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணீர்த் துளியாய்த் தேங்கித் தளும்புகின்றன!’ என்ற கவிதை வரிகள், ‘தாய்மையின் ஊற்றுக் கண்ணாய் போற்றப்படும் முலைகள்’ பெண்ணுக்குத் தோன்றும் விதம் ஆச்சர்யமூட்டும். நவீன அடையாளம் கொண்ட பெண்கவிகளின் கவிதைகள் தொகுக்கப்பட்ட நுால் எனலாம். இருபதாம் […]

Read more

மருக்கொழுந்து – 2 தொகுதிகள்

மருக்கொழுந்து – 2 தொகுதிகள், கொத்தமங்கலம் சுப்பு கவிதைகள், லஷ்மி இராமச்சந்திரன், மீனாட்சி பதிப்பகம், விலைரூ.800 தில்லானா மோகனாம்பாள் என்ற கதையை எழுதியவர் பிரபல எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு. அந்த கதை தமிழகத்தை கலக்கியது. சினிமாகவும் வந்து கவர்ந்தது. அவர் சிறந்த கவிஞராகவும் இருந்தார். அவர் புனைந்துள்ள கவிதைகளை, தொகுத்து நுாலாக்கியுள்ளார், அவரது மகள் லஷ்மி. இரு புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. முதல் தொகுதியாக உள்ள புத்தகத்தில், பண்டிகை, அறிவுரை, காதல், நாட்டு நடப்பு, நாட்டுப்பற்று என்ற பொருண்மைகளை பேசுகிறது. எளிய நடையில் அமைந்துள்ளன. ‘கார் […]

Read more

மருதநாயகம்

மருதநாயகம், சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், விலைரூ.500 அ.மாதவையாவின் கான்சாயபு கம்மந்தான், துர்க்காதாஸ் எஸ்.கே. ஸ்வாமியின் கான்சாகிபு கம்மந்தான், பேரா. ந.சஞ்சீவியின் கும்மந்தான் கான்சாகிபு, பேராசிரியர் ந.வானமாமலையின் கான்சாகிபு சண்டை, முனைவர் ந.இராசையாவின் மருதநாயகம் உண்மை வரலாறு என்னும் ஐந்து நுால்களையும் ஒன்றாக பதிப்பித்து தொகுப்பாக வந்துள்ள நுால். மருதநாயகம் வரலாற்றை, நுாலில் முதல் பகுதியில், 35 பக்கங்களில் விரிவாக எழுதியுள்ளார் பதிப்பாசிரியர். அது ஒரு தனி வரலாற்று நுாலாகும் அளவிற்கு அமைந்துள்ளது. மருதநாயகம் யார், எந்த மதத்தைச் சேர்ந்தவர், எப்படிப்பட்டவர் போன்ற கேள்விகளுக்கு எல்லாம் […]

Read more

நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர் தான்

நீங்களும் ஒரு நிமிட சாதனையாளர் தான், லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.200. நேரத்தின் முக்கியத்துவம் உணர்ந்தால் முன்னேற்றம் சுலபமாகும். இந்த பேருண்மையை, பொருண்மையாக்கியுள்ள நுால். கவரும், 91 தலைப்புகளில் தொகுக்கப்பட்டு உள்ளது. ‘குமுதம்’ இதழில் தொடராக வந்தது. படித்தால், முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை உடையும். அன்றாடம் தவறும் சிறு விஷயங்களையும் கவனித்து, அனுபவத்துடன் கோர்த்து, வாழ்க்கை பாடமாக எழுதப்பட்டுள்ளது. சுலபமாக புரியும் மொழிநடையில் உள்ளது. ‘புத்தகம் வாங்குவது செலவல்ல, முதலீடு. ஒரு புத்தகத்தில் கிடைக்கும் அனுபவப்பாடம், வாழ்க்கை பார்வையையே மாற்றிவிட வல்லது. இந்த புதிய […]

Read more

ஒளி வித்தகர்கள்

ஒளி வித்தகர்கள், ஜா.தீபா, டிஸ்கவரி புக் பேலஸ், விலைரூ.150 கதையை காட்சி வடிவில் கண்முன் நிறுத்துவதில் முக்கிய பங்காற்றுபவர் ஒளிப்பதிவாளர். இயற்கை வளங்கள், விலங்குகள், அவற்றின் உடல் அசைவுகள், குணாதிசயங்கள், மனிதர்களின் ஆசாபாசங்களை நுட்பமாக காட்டுவது, அந்த கலையின் பரிணாமம். ஒளிப்பதிவு கலை பற்றி பேசுகிறது. ‘மாஸ்டர்ஸ் ஆப் லைட்’ என்ற ஆங்கில நுாலின், தமிழாக்கம். கதை காட்சியை, ஒரு நாளில் எந்த நேரத்தில் எந்த ஒளியில் எடுத்தால் சிறப்பாக இருக்கும்; ஒளிப்பதிவாளருக்கு, ஓவியம் எப்படி உதவி செய்யும்; கேமரா நகர்வு எப்படி இருக்க […]

Read more

சிந்தனை செய் மனமே

சிந்தனை செய் மனமே, டாக்டர் து.சி.இராமையா, நெய்தல் பதிப்பகம், விலைரூ.150 கூட்டாஞ்சோறு போல கவிதை, பாட்டு, துளிப்பா, கட்டுரை, துணுக்கு, சிறுகதை, பாரம்பரிய உணவுகள் என பல்சுவையாக படைக்கப்பட்டுள்ள நுால்; உருக்கமான கட்டுரைகளும் உண்டு. ‘என்னை குனிந்து பார் உன்னை பிறர் அண்ணாந்து பார்க்கும் நிலைக்கு வைப்பேன்’ என, முன்னாள் ஜனாதிபதி, மறைந்த அப்துல் கலாம் பற்றிய குறுங்கவிதையும் இந்த நுாலில் உள்ளது. – சுப வெங்க் நன்றி: தினமலர், 6/9/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030691_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more
1 35 36 37 38 39 240