லவ குசா

லவ குசா, தி.செல்லப்பா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150. விசேஷம் இது வித்தியாசம் என்ற பெயரில் தமிழக கோவில்களின் அதிசய வரலாறு, செல்லும் வழி குறித்து எழுதிய செல்லப்பாவின் இரண்டாவது புத்தகம். கர்ப்பிணியாய் கானகம் சென்ற சீதாவின் வயிற்றில் பிறந்த கன்றுக்குட்டிகளாம் லவன், குசன் பற்றிய அழகான தொகுப்பு இது. இக்கதையில் மணமுடிக்கும் போது சீதாவின் வயது, கானகம் சென்ற போது வயது, மகப்பேறின் போதுள்ள வயதை குறிப்பிடுவது அரிய தகவல். பொறுமையின் சிகரமான சீதா ஏன் பொங்கி எழுந்தாள்… வானளாவ […]

Read more

தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு

தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு, மு.கனகலட்சுமி, சிவசக்தி பதிப்பகம், விலைரூ.500. தமிழ் மொழியை எளிதாக கற்பிக்கும் வகையில் நுட்பமாக ஆய்வு செய்து, உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி நுால். பெற்றோரும், ஆசிரியரும் பயன்படுத்த தக்க வகையில் உள்ளது. பின்தங்கிய கிராம அரசுப்பள்ளி மாணவ –மாணவியரிடம் சோதனை முறையில் அமல்படுத்தி, மேம்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அதிகாரியின் பாராட்டும் பெற்றுள்ளது. தாய்மொழி கற்பித்தலில், பெற்றோர், ஆசிரியருக்கு உள்ள பங்கை துல்லியமாக உணர்த்தி, எளிய அணுகு முறையில் பாடங்கள் எழுதப்பட்டுள்ளன. புரிந்து கற்க ஏதுவாக, 45 நாட்களுக்கு […]

Read more

தியாகச் செம்மல் காமராஜ்

தியாகச் செம்மல் காமராஜ், சாவி, நர்மதா பதிப்பகம், விலைரூ.75. மறைந்த காமராஜரின் அரசியல் வாழ்வை விவரிக்கும் நுால். பத்திரிகையாளர் சாவி, நேரடியாக பார்த்தவற்றை பதிவு செய்துள்ளார். கேள்வி – பதிலாகவும் உள்ளது. பதவியில் இருந்து விலகுவதால், அசவுகரியங்கள் ஏற்படாதா என்ற கேள்விக்கு, ‘ஓய்வூதியத்தில் வீட்டு வாடகை, வரி போக, 1,000 ரூபாய் மீதமிருக்கும். அதில், காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்கு சென்று வரும் செலவு, 600 ரூபாய்; மீதமுள்ள, 400 ரூபாயை என் செலவுக்கும், தாய்க்கும் அனுப்பியது போக, மீதி பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து விடுவேன்…’ […]

Read more

திருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்

திருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும், பதிப்பக வெளியீடு, அருணா பப்ளிகேஷன்ஸ்,விலைரூ.220. திருமூலர் அருளிய திருமந்திரம் நுால் மறு அச்சாக்கம் செய்யப்பட்டுள்ளது. பத்தாம் திருமுறையாகப் போற்றப்படும் இந்த நுாலின் மூல வடிவம் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. எளிதாக படிக்கும் வகையில், வடிவமான எழுத்துக்களில் உரிய துணைத் தலைப்புகளுடன் அமைந்துள்ளது. எளிதில் பழுதாகாத வகையில் கெட்டி அட்டை அமைப்புடன், புத்தகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாக்கப்பட வேண்டிய நுால். நன்றி: தினமலர்,20/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

63 நாயன்மார்கள் வரலாறு

63 நாயன்மார்கள் வரலாறு, சிவ.இராஜேஸ்வரி இராசா, பார்த்திபன் பதிப்பகம், விலைரூ.50 சிவன் அடியார்களின் பக்தியும், தொண்டும் சிறப்பாக கதை வடிவில் பேசப்படுகிறது. ஒவ்வொரு நாயன்மாரின் வரலாற்றையும் படத்துடன் தந்துள்ளார். அரசன், அரசி, அமைச்சர், செல்வர், வணிகர், வண்ணார், குயவர், பாணர், மீனவர் என பலர் பக்தியுடன் சிவபதம் பெற்றதை சுருக்கமாக எழுதியுள்ளார். சிவனடியார் பிறந்த ஊர், முக்தி பெற்ற ஊர், சம்பவம் நிகழிடம் என தொகுத்துள்ளார். -– முனைவர் மா.கி.ரமணன். நன்றி: தினமலர்,20/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

தி பேர்ல் கனபி

தி பேர்ல் கனபி – ஆங்கிலம், கே.பரமசிவம், ஆசியவியல் நிறுவனம், விலைரூ.500. சங்க காலத்துக்குப் பின், பெரிதும் அறியப்படாத தொகுப்பாக விளங்குவது பாண்டிக்கோவை; 325 பாடல்களின் திரட்டு. அகம், புறம் கலந்த எதுகை சிறப்பமைந்த அழகிய பாக்களை உள்ளடக்கியவை. இனிமையான நான்கடி செய்யுள்களைக் கொண்டது. தலைவனும், தலைவியும் கொண்ட காதல் வேட்கையின் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தி வீரத்தையும் பின்னிய பாடல்கள் படிக்க இதமானவை. எளிமையான ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இலக்கியச் செழுமை, இலக்கணப் புனைவுகளை உள்வாங்கி கருத்துக்குப் பொருந்தக்கூடிய சொற்களைத் தேர்ந்து, தமிழ்ப் பண்பாட்டுக் […]

Read more

நம்மாழ்வார்

நம்மாழ்வார், வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. கயிற்றில் வித்தை காட்டும் கழைக் கூத்தாடி போல, எழுத்தில் வித்தை காட்டி நம்மை ஆட்டுவிப்பவர் நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. அவர் வார்த்தைகளை படித்துக் கொண்டு வேறெதையும் சிந்திக்க முடியாது. அந்த வார்த்தைகள் படமாக மனக் கண்ணில் விரிந்து சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, அழ வைத்து நாடகமாடும். இது, அவரது வார்த்தைகளுக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம். சான்றின் ஒரு பருக்கையாக கிஸ்னா… என் கூட்டுக்காரா… ஆச்சார்யா கதாபாத்திரங்களைச் சொல்லலாம். அழகனை, […]

Read more

என்னை வளர்த்த சான்றோர்

என்னை வளர்த்த சான்றோர், டி.கே.எஸ். கலைவாணன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.175 பிரபல நடிகர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது மகன், குழந்தைப் பருவம் பற்றி எழுதியுள்ள அனுபவ நுால். தாய், தந்தை மற்றும் ஆசான்களுடன் பழகிய நாட்களை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். புகழ் பெற்ற குடும்பத்தில் பிறந்த சிறுவனின் இளமைக் காலம் மிளிர்கிறது. சம்பவங்கள், நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிரகாசித்த நட்சத்திரங்களின் இயல்புகளை, அனுபவச் சுவட்டில் இருந்து கொட்டியுள்ளார். பணிவும், நெருக்கமும் வெளிப்படுகிறது; நகைச்சுவை படர்கிறது. பிரபலமாக இருந்த கலைவாணர், இசைத்தமிழ் அறிஞர் சம்பந்தன், […]

Read more

அழகிய நதி

அழகிய நதி, பி. ஆர். மகாதேவன், கிழக்கு பதிப்பகம், விலைரூ.400.   வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற விடுதலைப் போராட்ட வீரர் தரம் பால். இந்தியா பற்றிய கனவுகளில் ஆழ்ந்த கருத்தை சிந்தித்தவர். இந்திய அளவிலும், உலக அளவிலும் அவரது ஆய்வுகளுக்கு வரவேற்பு இருந்துள்ளது. இந்த நுாலில், 18ம் நுாற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எவ்வாறு இருந்திருக்கின்றன என்பதை மிகவும் விரிவாக ஆவணங்களின் தரவுகளோடு எடுத்துரைக்கிறார். கணிதவியல், வானவியல் சிறந்திருந்ததை பிரிட்டிஷார் ஆவணங்களிலிருந்து எடுத்துக் காட்டி விளக்கும்போது, பெருமையை உணர்கிறோம். இந்தியாவில் […]

Read more

ஒரு மோகினியின் கதை

ஒரு மோகினியின் கதை, பூவை.எஸ்.ஆறுமுகம், வைகுந்த் பதிப்பகம், விலைரூ.110 பத்து சிறுகதைகளைக் கொண்ட நுால். கதைகள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்திச் செல்கின்றன. மரபு வழிக் கதை சொல்வனவாய் அமைந்துள்ளன. சந்தர்ப்பச் சூழ்நிலையில் பெண்கள் படும் அவலம், ஆணாதிக்கம் அவர்களை அடிமைப்படுத்த முயலுதல், பெண்களின் சமயோசிதம் முதலான போக்குகளில் கதை சொல்லப்படுகிறது. ஒரு மோகினியின் கதையில், தாசி அழகால் ஈர்க்கப்பட்டு வாழ்வில் குறுக்கிடும் இளைஞர்கள் பற்றியது. காதல் பொல்லாதது என்ற கதையில், மனைவியை மிகவும் நேசிக்கும் ஒருவன், இள வயது தோழியையும் விரும்புவதை சொல்கிறது. சில […]

Read more
1 29 30 31 32 33 240