மனித தெய்வம்!

மனித தெய்வம்!, கே.சித்தார்த்தன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.160. சில நாடகங்கள் படிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும். சில நடிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும். இது படிக்கவும் நடிக்கவும் ஏற்ற நாடகம். பாடல்களும் உண்டு. வழக்கமான கதை தான் என்றாலும் காட்சியமைப்பில் விறுவிறுப்பை கூட்டி எழுதியிருக்கிறார். காதலித்தவனை மணக்க முடியவில்லை. காதலித்தவனை இன்னொருத்தி மணப்பதற்கு ஒரு ட்விஸ்ட் வைத்து இருக்கிறார். நாடகத்தை காட்சி அமைப்பு, நடிகர்களின் பட்டியல் என 50 காட்சிகளாக எழுதி இருப்பது சிறப்பு. எத்தனை பேர் நடிக்கத்தேவை; அதில் எத்தனை பெண் பாத்திரங்கள் என்ற விளக்கக் குறிப்பு சிறப்பாக […]

Read more

தமிழரின் தோற்றமும் பரவலும்

தமிழரின் தோற்றமும் பரவலும், புலவர் கா.கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.120. சென்னைப் பல்கலைக் கழகத்தில், வி.ஆர்.ராமச்சந்திர தீட்ஷிதர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நுால். இவர், 1940 நவம்பர் 29, 30ம் தேதிகளில் நிகழ்த்திய சொற்பொழிவே நுால் வடிவம் பெற்றுள்ளது. அது தமிழாக்கம் பெற்றுள்ளது. பழந்தமிழ் நாகரிகத்தின் வரலாற்று ஆசிரியர்கள் என்னும் தலைப்பில், ‘திராவிடர்கள், தென் இந்தியாவுக்கு வந்து குடியேறியவர்கள் என்ற கொள்கை வலுவான அடிப்படையைக் கொண்டிருப்பதாகவும், அதுவே முடிந்த முடிவாகி விட்டதாகவும் தோன்றுகிறது’ என்று கூறுகிறது. குள்ள வடிவம், கறுத்த தோல், நீண்ட […]

Read more

ஊகானில் தொடங்கிய ஊரடங்கு

ஊகானில் தொடங்கிய ஊரடங்கு, திண்டுக்கல் ஜம்பு, அழகு பதிப்பகம், விலைரூ.180. கோவிட் – 19 தோற்றம், வளர்ச்சி, உலகை விழுங்கிய மரண விபரங்கள், தொடரும் அவலங்களை அளந்து காட்டும் நுால். கடந்த 1918ல் வந்த, ‘ஸ்பேனிஷ் ப்ளூ’ பெருந்தொற்றால் ஐந்து கோடி பேர் மாய்ந்தனர். பின் வந்த கொரோனா வைரசால் பாதிப்பு உச்சம் தொட்டதாகக் கூறியுள்ளார். வைரஸ் சீனா ஊகானிலிருந்து வந்தது என்பது ஊகமா, உண்மையா, ஜப்பான் அணுகுண்டு போல், கொரோனா அணுகுண்டும் பாதிப்பு தருமா, தடுப்பு ஊசி அலாவுதீனின் அற்புத விளக்கா, உயிரியல் […]

Read more

கர்ம வீரர் காமராஜர்

கர்ம வீரர் காமராஜர், நல்லாசிரியர் கள்ளிப்பட்டி சு.குப்புசாமி, ஏகம் பதிப்பகம், விலைரூ.55 தென்னாட்டு காந்தி, கர்ம வீரர், பெருந்தலைவர், கல்விக்கண் திறந்தவர், ஏழைப் பங்காளன் என்றெல்லாம் அறியப்பட்டவர் காமராஜர். வாழும் வரை வழிகாட்டியாக திகழ்ந்தார். ஏழை எளிய மக்கள் உயர்வுக்கு உழைத்து வந்தார். இந்திய அளவில் வளர்ச்சிக்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர். சேவையில் சாதனை படைத்த காமராஜரின் வாழ்க்கை சுருக்க வரலாறு, சிறு கையேடாக தயாரிக்கப்பட்டுள்ளது. அவர் ஆற்றிய தொண்டின் முக்கிய பகுதிகள் இதில் சொல்லப்பட்டு உள்ளன. அவரது வாழ்வை சுருக்கமாக அறிந்து கொள்ள […]

Read more

கோமாவில் நான்

கோமாவில் நான், பேராசிரியர் மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.150. ‘கோமாவில் இருக்கானா… எல்லாம் சரியாய் போயிடும்’ என, உறவினர் உடல் நலம் குறித்து, சாமியார் யாராவது குறி சொன்னால் நம்பி விடுவீர்கள் அல்லவா? உண்மையிலேயே அவர் சரியாகி விட்டாரா? அந்த சாமியார் எதற்காக அப்படி சொன்னார்? கோமா என்றால் என்னவென்று அவருக்கு தெரியுமா அல்லது உங்களுக்கு தான் தெரியுமா? கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன் திரைப்படத்தில், ஐஸ்வர்யா ராயின் தாத்தாவாக நடித்தவர், பக்கவாதம் ஏற்பட்டு படுத்திருப்பார். அவரைப் பார்த்தால், கோமாவில் படுத்தவர் போலவே இருப்பார். […]

Read more

பரஞ்சுடர்

பரஞ்சுடர், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஓங்காரம், விலைரூ.301. ஆன்மிக கருத்துகள் நிறைந்த நுால். வாழ்க்கையை அஞ்ஞானத்திற்கும், பொருளீட்டுவதற்கும், காமத்திற்கும் பயன்படுத்துவதை விடவும், மெய்ஞ்ஞான பொருளாகிய இறைவனை அடைய, தியானம் செய்து வாழ வேண்டும். பிறரையும் வாழ வைக்க வேண்டும். அமாவாசைக்கு அடுத்த பதினைந்து நாட்கள் ஏறுமுகம்; இதை ஆரோகணம் என்பர். இந்த காலகட்டத்தில், புண்ணியங்கள் செய்ய வேண்டும். பவுர்ணமியிலிருந்து அடுத்த பதினைந்து நாட்கள் இறங்குமுகம்; இதை அவரோகணம் என்பர். இந்த காலகட்டத்தில், பாவத்திற்காகப் பரிகாரம் செய்ய வேண்டும் என பதிவு செய்துள்ளார். உடல், உள்ளத் […]

Read more

அம்பிகாபதி – அமராவதி காதல் காவியம்

அம்பிகாபதி – அமராவதி காதல் காவியம், அ.மு.சம்பந்தம் நாட்டார், மணிமேகலை பிரசுரம், விலைரூ.375. மனித நாகரிகம் துவங்கிய காலத்தில் இருந்தே உயிர்ப்புடன் உள்ள காதலை முன்னிருத்தியுள்ள காவியம். கல்வி கற்க கம்பன் வீட்டிற்கு வந்து சென்ற மன்னன் மகள் அமராவதி, அம்பிகாபதியிடம் காதலைக் கற்றுக் கொண்டாள். இந்த காதலை அறிந்த மன்னன், அம்பிகாபதியைக் கைது செய்து குற்றவாளியாக்கினான். சிற்றின்பம் கலக்காமல் நுாறு பாடல்கள் பாடினால், அம்பிகாபதி கிடைப்பாள் என்று ஒரு போட்டியை அறிவிக்கிறான் மன்னன். கடவுள் வாழ்த்தையும் சேர்த்து நுாறு பாடல்களை பாடியவனை, ஆரத்தழுவிக் […]

Read more

எண்ணங்கள் ஆற்றல் மிக்கவை

எண்ணங்கள் ஆற்றல் மிக்கவை, எம்.பொன்னுசாமி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.110. உளவியல் கட்டுரைகளின் தொகுப்பு நுால். தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கில் அமைந்தவை. ஆசிரியரின் பணி ஓய்வுக்குப் பின் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே உள்ள வார்த்தைத் தோரணங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. அவற்றில், ‘மனதைக் கட்டுப்படுத்துதல் என்பது எளிதான செயல் அல்ல. காரணம், மனதில் ஆசைகள், விருப்பங்கள், நோக்கங்கள் பல உள்ளன. மனதைக்கட்டுப்படுத்த, உலகியல் சார்ந்த ஆசைகளை நீக்கிவிடல் முதல்படி’ என எழுதியுள்ளார். தன்னம்பிக்கைக் கருத்துகள் முழுதும் விரவிக் கிடக்கின்றன. இன்றைய இளைஞர்களுக்கு பயனுள்ள வழிகாட்டி நுால். – வி.விஷ்வா […]

Read more

தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்

தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் (உரை விளக்கத்துடன்), கே.கே. இராமலிங்கம், நர்மதா பதிப்பகம், விலைரூ.240 அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழ் பாடல்களின் பொருளை உணர்ந்து ஓதி மகிழ்வதற்கேற்ப, உரை விளக்கம் வழங்கப்பட்டுள்ள நுால். துவக்கத்தில் அருணகிரி நாதரின் வரலாறு தரப்பட்டு உள்ளது. இளம் பருவத்தில் பெண் மோகம் கொண்டு அலைந்திருந்தவர், பின்னாளில் உணர்ந்து, முருகனருள் நாடித் தவமிருந்து, அளவிலாப் புலமை பெற்றதிலிருந்தே தடுத்தாட் கொள்ளப்பட்டது புலனாகிறது. அருணகிரி நாதர் இயற்றிய பல ஆன்மிகப் பாடல் நுால்களில் ஒன்று திருப்புகழ். முருகனே கேட்டு மயங்க வல்ல […]

Read more

தமிழ்த் தாத்தா உ.வே.சா.வும் பெரம்பலூரும்

தமிழ்த் தாத்தா உ.வே.சா.வும் பெரம்பலூரும், ஜெயபால் இரத்தினம், விச்சி பதிப்பகம், விலைரூ.150. தமிழ் இலக்கண, இலக்கிய நுால்கள் மற்றும் தமிழக வரலாற்று மீட்பிற்குப் பெரும் பங்காற்றியவர் உ.வே.சா., அவரது இளமைக் காலமும் துவக்க நிலை தமிழ்க் கல்வியும், பெரம்பலுார் மாவட்டத்தில் சில கிராமங்களோடு பின்னிப் பிணைந்திருந்தது. பிறந்தது தஞ்சை மாவட்டமாக இருந்தாலும், கற்றதும், அவரது குடும்பத்தை தாங்கிப் பிடித்ததும், பெரம்பலுாரே என சான்றுகளோடு நிறுவப்பட்டுள்ளது. உ.வே.சா.,வின் தந்தை அரியலுார் ஜமீனில் பணியாற்றியது, அந்த ஜமீன் நொடித்துப் போனது போன்ற விபரங்கள் உள்ளன. அக்காலகட்டத்தில், அந்த […]

Read more
1 2 3 4 5 6 240