ரோமானிய மாவீரன் ஜூலியஸ் சீசர்

ரோமானிய மாவீரன் ஜூலியஸ் சீசர், கமலா கந்தசாமி, நர்மதா பதிப்பகம், விலைரூ.100. ரோமானிய வீரன் ஜூலியஸ் சீசர் வீரத்தை பேசும் நுால். வரலாற்றைப் புரட்டினால் தான், வருகின்ற தலைமுறைக்கு வீரமும் விவேகமும் சேரும் என்ற உணர்வுடன் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றில், செனட், கீழ் சபை, மேல் சபை, நீதிமன்றம் போன்ற அமைப்பை, அன்றைய ரோம் நிறுவியது. பதவிப் பித்தும், லஞ்சமும் அங்கு தான் ஊன்றப்பட்டன. நீதிபதி லஞ்சம் வாங்கினால், மரண தண்டனை என்ற விதியும் இருந்தது. தமிழகத்திலிருந்து மிக மெல்லிய ரோசலின் துணி ரோமுக்கு ஏற்றுமதி […]

Read more

சுத்தம் சுகம் தரும்

சுத்தம் சுகம் தரும், ஆர்.ஜான்ராபர்ட், ஜான்சன் பதிப்பகம், விலைரூ.80. சுகாதாரம் பற்றி எளிமையாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். முதலில், ‘சுகாதாரம் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் துவங்குகிறது. சுகாதார நடைமுறைகளின் முக்கியத்துவம் இதில் வலியுறுத்தப்படுகிறது. அடுத்து, ‘உணவுப் பழக்கமும் சுகாதாரமும்’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. உணவுக்கு உள்ள முக்கியத்துவம் இதில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்து, ‘வீட்டினுள் சுகாதாரம்’ என்ற தலைப்பில் கட்டுரை உள்ளது. குடும்பத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய தகவல்கள் இந்நுாலில் அடங்கியுள்ளன. – மலர் […]

Read more

அஞ்சலட்டை கதைகள்

அஞ்சலட்டை கதைகள், அழகியசிங்கர், விருட்சம் வெளியீடு, விலைரூ.90. ஒற்றை அஞ்சலட்டை ஆயிரம் கதைகளைச் சொல்லும். அவை உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவை. ரகசியமற்று வெளிப்படையாக இருப்பது எவ்வளவு உற்சாகம் தரவல்லது என்பதை உணர்த்தும் அற்புத அடையாளம். அதில் எழுதிய அனுபவம் பற்றிய நுால்.அஞ்சலகத்தில், ஒவ்வொரு முறையும் நுாறு அஞ்சலட்டைகளை வாங்குகிறார் ஆசிரியர். எதுவும் எழுதப்படாத அதன் மவுனத்தை, மணிக்கணக்கில் பார்த்துச் சிலாகிக்கிறார். பின்னொரு நாளில், அதில் கடிதம் எழுதுகிறார். பதில் இல்லை. ஆயிரம் கதை சொல்லும் அஞ்சலட்டையில், ஒரு குறுங்கதை எழுதினால் என்ன எனத் […]

Read more

கேள்வி? பதிலில்! முதியோர் நல மருத்துவம்

கேள்வி? பதிலில்! முதியோர் நல மருத்துவம், டாக்டர் வி.எஸ்.நடராஜன், வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, விலைரூ.120. முதியோர் நலத்தில் அக்கறையுடன் எழுதப்பட்டுள்ள நுால். வயது முதிரும் போது ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை எளிய நடையில் கேள்வி பதில் பாணியில் விளக்குகிறது. இந்த நுாலில், 22 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதய நலம், நீரிழிவு நோய், மூட்டு எலும்புகளின் நலம் என உடல் உறுப்புகளை தனித்தனியே சுட்டி, அவற்றை பேணும் வழிமுறைகளை எழுதியுள்ளார். முதுமை பருவத்தை மகிழ்ச்சியாக கழிக்கும் வகையில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. […]

Read more

சின்ன அரும்பு மலரும்

சின்ன அரும்பு மலரும், கவிஞர் சுபஸ்ரீ சுப்ரமணியம், சுபஸ்ரீ பதிப்பகம், விலைரூ.150. சிறுவர்கள் பாட ஏற்ற வகையில் எழுதி தொகுக்கப்பட்டுள்ள சந்தப் பாடல்களின் தொகுப்பு நுால். மிகச் சாதாரணமான பொருள்களில் பாடப்பட்டுள்ளன; அனைத்திலும் சந்தம் பொதிந்துள்ளன. உற்சாகமாக பாட ஏற்ற வகையில் உள்ளன. பாடல்கள் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளன. குழந்தைகளின் முன் இனிமையாக பாடி கற்றுக் கொடுத்து அறிவூட்ட உதவும் நுால். – ஒளி நன்றி: தினமலர், 6/3/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

ஆகவமல்லன்

ஆகவமல்லன், ருக்மணி சேஷசாயி, சாயி பதிப்பகம், விலைரூ.100. வீரம், காதல், பகை இவைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட மூன்று நாடகங்கள். மூன்றிலும் முக்கியமாக பொறாமைதான் மையப்புள்ளி. சோழஎதிரியை வீழ்த்த தன்னையே பகடைக்காயாக ஆக்குகிறார் ஒரு பெண். அவள் மையலில் விழுந்த ஆகவ மல்லன் தன் சொந்த மகனையும் எதிர்த்து என்ன ஆனான் என்பதை சொல்கிறது. கவி காளிதாசனை மணப்பதற்காக காதலியை பலிகடா ஆக்கிய பெண்ணை ‘தாய்வீடு’ நாடகமும் நன்கு படைக்கப்பட்டுள்ளது. கணவனைக் கொன்றவனை பழி வாங்க காத்திருந்த பெண், அந்தப் பகைவனாலேயே தன்மானம் காத்த […]

Read more

ஐம்பெருங் காப்பியங்களில் தமிழர் வாழ்வியல்

ஐம்பெருங் காப்பியங்களில் தமிழர் வாழ்வியல், கவிஞர் ஒளவை நிர்மலா, விழிச்சுடர் பதிப்பகம், விலைரூ.300. ஐம்பெருங் காப்பியங்களில் காணக் கிடக்கும் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகளை அழகுபடக் கூறியுள்ள நுால். தமிழரின் சமுதாயக் கட்டமைப்பு, அரசியல் நிர்வாகம், நீதி நெறிகள், குடும்ப உறவுகள், விளையாட்டுகள், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள், கலைகள், விழுமியங்கள் மேற்கோள் சான்றுகளுடன் விவரிக்கப்பட்டு உள்ளன. குடிமக்கள் ஆறில் ஒரு பங்கு அரசுக்கு வரி செலுத்தியதை சீவகசிந்தாமணி கூறுகிறது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தபோது வரி வேண்டாமென, திறை விலக்கு அளித்து உள்ளான். கோவில் […]

Read more

பாறுக் கழுகுகளைத் தேடி

பாறுக் கழுகுகளைத் தேடி, சு.பாரதிதாசன், கலம்க்ரியா, விலை குறிப்பிடப்படவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்குள் உலகில் கிட்டத்தட்ட மறைந்துவிட்ட கழுகு இனம் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். அழிவின் விளிம்பில் இருக்கும் ஓர் உயிரினத்தை மீட்டு காக்க முடியும் என்பதை நிரூபிக்கும் தகவல்கள் அடங்கியுள்ளன. இந்தியா முழுதும் பரவலாக காணப்பட்ட பாறு என்ற கழுகு இனம் தற்போது அருகிவிட்டது. அதை காக்கும் பணியில் கண்ட அனுபவத்துடன் கழுகு இனம் பற்றிய அரிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நுால் தமிழ், ஆங்கிலம் என இரு மொழியில் உள்ளது. மொத்தம் […]

Read more

எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர்., முனைவர் ராஜேந்திரன், மெரினா புக்ஸ், விலைரூ.1800 தமிழ்த்திரை உலகில் புரட்சி நடிகராக, தமிழக ஆட்சி கட்டிலில் முதல்வராக, பொன்மனச் செம்மலாக, ஏழைப் பங்காளனாக விளங்கிய மருதுார் கோபால ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆரின் வாழ்க்கை நிகழ்வுகளை முழுமையாக தொகுத்து எழுதப்பட்டுள்ள நுால். குடும்ப உறுப்பினராக நேரில் சந்தித்த அனுபவம், எம்.ஜி.ஆர்., அளித்த பேட்டிகள், அவருடன் பழகியவர்கள் தந்த அனுபவக் கட்டுரைகள், அரசு மற்றும் சினிமா துறை சார்ந்த ஆவண ஆதாரங்களின் துணை கொண்டு தொகுத்து எழுதப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., வாழ்வில் திருப்பு முனைகளைக் காட்டும் போட்டோக்களும், […]

Read more

சங்ககாலச் செங்கண்மா மூதூர்

சங்ககாலச் செங்கண்மா மூதூர், க.மோகன்காந்தி, பாரதி புக் ஹவுஸ், விலைரூ.170. தமிழர் பண்பாட்டு சிறப்பை கூறும் 16 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். செங்கம் பகுதியை 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட நன்னன் சேய் நன்னனின் சிறப்பு, நாட்டு வளம், செய்யாறு ஆகியவை பற்றி விளக்கப்பட்டுள்ளது. செங்கம் என்ற பகுதி அப்போது, ‘செங்கண்மா’ என வழங்கப்பட்டுள்ளது. பத்துப்பாட்டு நுாலான மலைபடுகடாம், நன்னனின் சிறப்புகளை கூறுவதையும் தெளிவுபடுத்தி உள்ளது. சங்க காலத்தின் சமூக நிலையை அறிந்து கொள்ள உதவுகிறது. மேலும், சங்க கால பொருளாதார நிலையைக் […]

Read more
1 3 4 5 6 7 240