திருக்கயிலையில் நாதோபாஸனை

திருக்கயிலையில் நாதோபாஸனை, ஜெமினி ராமமூர்த்தி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. திருக்கயிலை யாத்திரை செல்ல விரும்பும் இந்திய யாத்ரீகர்களுக்கு, நினைத்த போதெல்லாம் செல்ல முடியாது. கயிலையும் மானஸரோவரும் இந்தியாவில் இல்லை; இரண்டுமே மேற்கு பகுதியில் உள்ள இமயத்தில் இருக்கின்றன. அப்படிப்பட்ட புனித தலங்களை பல சிரமங்களுக்கு இடையே நேரில் சென்று தரிசித்து, அந்த அனுபவங்களை எளிய நடையில் அனைவரும் புரிந்து அனுபவிக்கும் வகையில் ஜெமினி ராமமூர்த்தி எழுதியுள்ளார். நாமே நேரில் சென்று அந்த தலங்களை தரிசித்த அனுபவத்தை, இந்த நுாலைப் படிப்பதன் […]

Read more

மந்திர பூமி

மந்திர பூமி, ஞாநி, குகன் பதிப்பகம், விலைரூ.300. மாயாஜாலக் கதை நுால். கதிர் மாறனை கதைத் தலைவனாகக் கொண்டு வாழ்வில் சந்திக்கும் எதிர்பாராத திருப்பங்களையும், சாகச சம்பவங்களையும் விளக்கும் நுால். இதில் சொல்லப்பட்டுள்ள நிகழ்ச்சிகள், இடம், காலம் அனைத்தும் கற்பனையே என்றாலும், அவை படிப்போரை வேறு ஓர் உலகத்திற்கு அழைத்து சென்று மகிழ்வூட்டி தன்னம்பிக்கையை கொடுக்கிறது. இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் மகிழ்வை தரும் நுால். – ராமலிங்கம் நன்றி: தினமலர், 6/3/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

வரம் தரும் அன்னை

வரம் தரும் அன்னை, பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.190. இந்து கடவுள் என்றால் இந்தியாவிலிருந்து தான் வரமுடியுமா… பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம்; மகாகாளி உருவெடுக்கலாம்; சரஸ்வதி வீணை மீட்டலாம். மகாலட்சுமி அருட்கடாட்சம் தரலாம் என்பதை உணர்த்தும் நுால். பிரான்சில் இருந்து வந்த மிர்ரா, அன்னையாக மகான் அரவிந்தர் அடியொற்றி, தத்துவங்களை பின்பற்றி நடந்தவர். நீ நீயாய் இரு என்பது தான் அன்னை சொல்லும் வேதம். உண்மை, அன்பு, பாசம் என நற்பண்புகளுடன் விளங்குவது தான் நீயாக இருப்பதன் அவசியம். […]

Read more

பாபாயணம்

பாபாயணம், ஜி.ஏ. பிரபா, விகடன் பிரசுரம், விலைரூ.350. ஷீரடி சாய்பாபா பற்றி ஏராளமான நுால்கள் வந்த வண்ணமாக உள்ளன. பாபா பற்றி, ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். பாபாவின் அற்புதமான நிகழ்வுகள், அருட்செயல்கள் அனைத்தும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷீரடியில் காலை ஆரத்தியில் துவங்கும் இதில், ‘பாபாவும் நானும்’ என்ற தலைப்பில் பிரபலமானவர்களின் அனுபவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பாக உள்ளன. பக்கம் பக்கமாக பாபாவின் படங்கள் பரவசம் ஊட்டுகின்றன. பாபாவின் பக்தர்களுக்கு நல்ல படைப்பு. – பின்னலுாரான் நன்றி: […]

Read more

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், முல்லை முத்தையா, முல்லை பதிப்பகம், விலைரூ.50 வ.உ.சிதம்பரனார் 150ம் பிறந்த நாளை ஒட்டி, சிறப்பு வெளியீடாக வந்துள்ள நுால். வ.உ.சி., பற்றி பல அறிஞர்களின் தொகுப்பு நுால். இந்த நுாலில், 22 தலைப்புகள் உள்ளன. கவிஞர் பாரதி உட்பட பல தமிழறிஞர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் கூறிய, எழுதிய ஆக்கங்கள் இதில் உள்ளன. அவரது உயர்ந்த உள்ளத்தையும், தியாகத்தையும் சுட்டுகின்றன. பாதுகாக்கத்தக்க ஆவணமாக உள்ளது. – வசந்தன் நன்றி: தினமலர், 24/10/22.. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

வியப்பூட்டும் வழிபாடுகள்

வியப்பூட்டும் வழிபாடுகள், பெ.பெரியார் மன்னன், விவேகா பதிப்பகம், விலைரூ.145. வித்தியாசமான 50 கோவில்கள் பற்றியும், அவற்றின் வழிபாட்டு முறை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்துள்ள இந்த நுாலில், அந்தச் சுவாமிகளின் படத்தையும் தெளிவான தகவல் கொண்ட நுால். இதில் இடம்பெற்றுள்ள கோவில்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாரத்தில் உள்ளவை. கல்வராயன் மலையில் ராமனைக் கரியராமன் என்று குறிப்பிடுகின்றனர். கல்வெட்டையும் கடவுளாக வணங்குகின்றனர். அந்தக் கல்வெட்டை வணங்கினால் நோய் தீர்ந்துவிடும் என்னும் நம்பிக்கையும் இந்தப் பகுதியில் நிலவுகிறது. ஓர் ஊரில் எட்டுக்கை அம்மன் சிலை 45 அடி […]

Read more

நுண்ணுயிர் எதிரி

நுண்ணுயிர் எதிரி, கே.நித்தியானந்தன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலைரூ.150. உலகையே ஆட்டி படைத்த கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக, அறிவியல், உளவியல் ரீதியாக தொகுக்கப்பட்ட நுால். வைரஸ் தொடர்பான செய்திகள், ஊடகங்களில் அதிகம் இடம் பிடித்தன. ஆனால், சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் அதிகம் பரவின. இதனால், மக்கள் குழப்பம், பயம் அடைந்தனர். இவை, ஐந்து அத்தியாயங்கள் வழியாக விவரிக்கின்றன. வைரசின் தோற்றம், பரவல், உடல், மனநல பாதிப்புகள், தடுப்பு மருந்து உருவாக்கம், சர்வதேசம் சந்தித்த பிரச்னைகள், மக்களின் வாழ்வியல் சோதனைகள் போன்ற தொடர் […]

Read more

மனம் எனும் வனம்

மனம் எனும் வனம், மாலன், கவிதா பப்ளிகேஷன், விலைரூ.60. வனத்தின் வாசல் என்ற தலைப்பிலேயே உள்ள கவிதைகளின் தலைப்புகளை அறிமுகம் செய்த ஆசிரியரின் கவித்துவம் புலப்படுகிறது. எழுத்து இதழில் கவிதை பயணம் துவங்கிய மாலன், கதாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர், பத்திரிகையாளர் என்று பன்முகம் காட்டி ஜெயித்தவர்; புதுக்கவிதைகளிலும் ஜெயித்து உள்ளார். கொரோனா பற்றி பாடுகிறார்; குறும்பு கொப்பளிக்கிறது. என் கவிதையைப் போல நீ எடை குறைவு எனினும் வீரியம் அதிகம்! கொரோனா மற்றும் கவிதைக்கும் எடை குறைவு தானாம். தாக்கும் சக்தி மிக அதிகமாம். […]

Read more

திருப்பாவை நாச்சியார் திருமொழி

திருப்பாவை நாச்சியார் திருமொழி, வே.சாய் சத்தியவதி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.120. சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் நோன்பிருந்து பாடிக் கொடுத்த திருப்பாவை முப்பது பாடல்களையும் புரிந்துகொள்ளும்படி, எளிய நடையில் விளக்க உரை கொடுக்கப்பட்டுள்ள நுால். அதுமட்டுமல்ல, நாச்சியார் திருமொழி பதினான்கையும் சந்தி பிரித்து தந்துள்ளது மிக அருமை. இதில் ஆறாம் பத்து பாடல்கள் கண்ணபிரான் தன்னை மணம் செய்த கனவைச் சொல்லும் பாடல்கள். அம்மி மிதிக்கக் கனாக் கண்டால் திருமணம் கைகூடுமே! – சீத்தலைச்சாத்தன் நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

காலங்களில் அவள் வசந்தம்

காலங்களில் அவள் வசந்தம், காஞ்சி பாலச்சந்திரன், பானு பாலா பதிப்பகம், விலைரூ.250. இரு நாவல்களை உள்ளடக்கிய நுால். படிப்பவர்களின் மனதில் தத்ரூபமாக காட்சிகளை கொண்டு சேர்க்கின்றன. முழுதும் படித்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு கதைகள் அமைந்துள்ளன. கேசவன், கமலா, மஞ்சரி என்னும் கதாபாத்திரங்கள், காலங்களில் அவள் வசந்தம் என்னும் நாவலின் உயிரோட்டமாக அமைந்துள்ளன. இரண்டாம் நாவலான, ‘பூர்ணிமா’வில் பெண்ணின் வாழ்க்கை கதையும், ஏன் சிறைக்கு சென்றாள் என்பதையும் எடுத்துரைக்கிறது. – வி.விஷ்வா நன்றி: தினமலர்.24/10/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more
1 4 5 6 7 8 240