வாழ்வரசி

வாழ்வரசி, அப்துற் – றஹீம், யூனிவர்சல் பப்ளிஷர்ஸ், விலைரூ.140 சீன எழுத்தாளர் படைத்த நாவலின் தமிழாக்கம் தான் வாழ்வரசி. மூன்று தலைமுறைக்கு உட்பட்ட சீன மருத்துவத்தையும், மக்கள் வாழ்வியலையும் உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கிறது. வாங் – குங் என்னும் மூன்று தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த சீன மருத்துவருக்கும், அவரது பேத்தியான சியோ – சென் என்னும் மருத்துவருக்கும் இடையே உள்ள இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது. பழைமையும், புதுமையும் கைகோர்த்து நிற்பதாக நாவல் நிறைவடைகிறது. சீனாவில் படைப்பிலக்கியம் எவ்வாறு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. எளிய தமிழ் நடையில் […]

Read more

நவீன நீர்வழிச்சாலையும் இதற்கான முயற்சிகளும்

நவீன நீர்வழிச்சாலையும் இதற்கான முயற்சிகளும், பொறியாளர் ஏ.சி.காமராஜ், மணிமேகலை பிரசுரம், விலைரூ.230 கங்கையிலிருந்து கன்னியாகுமரி வரை நீர்வழிப்பாதை ஏற்படுத்த முன்னோடித் திட்டமாக உருவாக்க எடுத்த உழைப்பை எடுத்துரைக்கும் நுால். முயற்சிக்கு இடையே சந்தித்த அரசியல் தலைவர்கள் பற்றியும், அவர்களது நேர்மைத் திறம் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார். காமராஜர், ராமகிருஷ்ண ஹெக்டே, அப்துல் கலாம், தமிழக முதல்வர்கள் என்று பலருடன் கொண்டிருந்த தொடர்புகளையும், அவர்களிடம் எடுத்துரைத்த தேசிய நதிநீர் இணைப்பு தொடர்பான திட்டங்களையும் எளிய தமிழில் எடுத்துரைத்துள்ளார். இந்தியாவில் நீர் மேலாண்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை […]

Read more

சுதந்திர போராட்ட தியாகி தியாகராஜன் வரலாறு

சுதந்திர போராட்ட தியாகி தியாகராஜன் வரலாறு, தியாக சத்தியமூர்த்தி, சிவகாமி பதிப்பகம், விலைரூ.250 இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் கோவில்களும் போராட்ட மையங்களாக விளங்கியுள்ளன. விடுதலை தாகத்தால் சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய தியாகி தியாகராஜன் வாழ்க்கை வரலாற்றை, தொல்லியல் அறிஞர் தியாக சத்தியமூர்த்தி ஆங்கிலத்தில் தொகுப்பு நுாலாகப் படைத்துள்ளார். தமிழில், வகுளா வரதராஜன் மொழி பெயர்த்துள்ளார். எளிய நடையில், நேரடியாக பேசுவது போல் அமைந்துள்ளது. தியாகி தியாகராஜனின் 88 ஆண்டு கால வாழ்க்கையை அவர் எழுதிய குறிப்புகளில் இருந்து, […]

Read more

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம், டி.வி.ராதாகிருஷ்ணன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.230 பகவான் கண்ணனின் அருள் நிறைந்த வரலாறு பாகவதம். உயிர் இனங்களின் பரிணாம வளர்ச்சியை, திருமாலின் அவதாரமாகக் காட்டுகிறது. விஷ்ணுவின் 20க்கும் மேற்பட்ட அவதாரங்களையும், அவதார தத்துவங்களையும், உபதேசங்களையும் சொல்கிறது. கபில அவதாரம் உபதேசிக்கும் சாங்கிய யோகம், எந்த தத்துவமும் சொல்லாத புதுமையானது. கண்ணனைச் சரண் புகுந்தால் மன நிறைவும், குடும்ப வளமும், சமுதாய நலமும் பெறலாம் என்கிறது பாகவதம். பத்து ஸ்கந்தங்களாக பிரிக்கப்பட்டு, 119 தலைப்புகளில் சுவையான கிருஷ்ண லீலைகள் பேசப்படுகின்றன. விஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களுடன், […]

Read more

மகரிஷிகள்

மகரிஷிகள், ஆர்.கல்யாணி மல்லி, ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.200. அகத்திய முனிவர் துவங்கி, ஜகத்குரு சங்கராச்சாரியார் மஹா பெரியவர் வரை, 41 கட்டுரைகள் மகரிஷிகளின் வரலாற்றைக் கூறுகின்றன. ஆற்றல் அற்புதங்களை விரிவாகப் பேசுகிறது. சிவபெருமானின் திருமணத்தின் போது இறைவன் அருளாணையின் வழி, அகத்தியர் தெற்கே வந்து பூமியை சமநிலைப்படுத்திய விந்திய மலை பூமியை ஒட்டியவாறு இருப்பது, கடல் நீர் முழுவதும் வற்றச் செய்து பருகியது போன்ற ஆற்றல்களை எளிய நடையில் விளக்குகிறது. துர்வாசர் யார்? அவர் எப்படி வந்தார். அவர் செய்த வீர தீரச் […]

Read more

தெய்வம் நின்று கொல்லும்!

தெய்வம் நின்று கொல்லும்!, கவிமாமணி அழகு சக்தி குமரன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.100. செறிவான கருத்துகளுடன் ஒரே மூச்சில் படிக்க ஏற்ற 20 சிறுகதைகள் அமைந்துள்ளன. கணவனும், மனைவியும் மாறி மாறி பொய் பேசி நடிக்கும் காட்சியை காட்டும் சிறுகதை, நல்ல காரியத்திற்காக பொய் சொன்னால் தவறில்லை என்ற திருக்குறள் கருத்தோடு கதை முடிகிறது. ஊரார் பணத்தைக் கொள்ளையடித்தவன் விபத்தில் மாட்டி மாய்கிறான் என்ற கருத்தை மையமாக வைத்து புனையப்பட்டுள்ளது. பாதை தவறிய சிறுவனை நல்வழிப்படுத்திய பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்ற சிறுகதை, […]

Read more

அபிதா

அபிதா, லா.ச. ராமாமிருதம், அர்ஜித் பதிப்பகம், விலைரூ.60. காட்சிகளையும், மன உருக்கத்தையும் முன்னிலைப் படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல். அம்பிகையை பல நாமங்களில் வியந்து, அடைந்துவிடத் துடிக்கும் வர்ணனையுடன் கூடியது. சம்பவங்களை அல்ல, காட்சிகளையே நாவல் கண்முன் விரிக்கிறது. வழக்கமான கதை படிப்பது போல் அல்லாமல், நுட்மான ஆன்மிக அனுபவத்தை தரவல்லது. இயற்கையோடான பயணத்தை வண்ணமயமாக காட்சிப்படுத்துகிறது. நெகிழ்வுகளுடன் வாசித்து உருக ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள வித்தியாசமான நுால். – மலர் நன்றி: தினமலர், 30/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

கீரைகள்

கீரைகள், மு.ந. புகழேந்தி, கோரல் பதிப்பகம், விலைரூ.70. கீரைத் தோட்டம் ஒரு மருந்து பெட்டி என, பிரபல எழுத்தாளர் டால்ஸ்டாய் கூற்றுக்கு ஏற்ப, கீரைகள் பற்றி விளக்கம் தரும் நுால். கீரை உணவின் சிறப்பு பற்றி முதல் கட்டுரை உணர்த்துகிறது. தொடர்ந்து அகத்தி கீரையில் துவங்கி, ஆரை, கரிசலாங்கண்ணி, வெந்தயக்கீரை, வள்ளக்கீரை வரை பல வகை கீரைகளின் அடிப்படை தகவல்கள், சத்துகள், உண்ணும் முறை என விரிவாக தரப்பட்டுள்ளது. நலம் மிக்க வாழ்வுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கீரை உணவு பற்றி அடிப்படை அறிவை […]

Read more

தொட்டிலோசை

தொட்டிலோசை, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், விலைரூ.150. தாய்மையை நெகிழ்ந்து போற்றி எழுதப்பட்டுள்ள புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். கவிஞர் வைரமுத்துவின் முன்னுரையுடன் உள்ளது. முதலில், ‘அம்மா இது நீ உறங்க நான் இசைக்கும் தாலாட்டல்ல; உன்னை வணங்க நான் வடிக்கும் பாராட்டு’ என துவங்குகிறது. தொடர்ந்து தாய்மையின் தன்னிகரற்ற பண்புகளை, தியாகத்தை கூர்மையான வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறது. இடையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் கவிஞர்கள் வாலி, சிற்பி, மு.மேத்தா என பிரபலங்கள், தங்கள் தாய் குறித்து எழுதியுள்ள கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தாய்மையை எண்ணி […]

Read more

நா.வானமாமலை நுாற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்

நா.வானமாமலை நுாற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள், இரா.காமராசு, சாகித்ய அகடமி, விலைரூ.315. சாகித்ய அகாடமி தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றுக்குப் பெரும்பாங்காற்றிய ஆளுமைகளுக்கு நுாற்றாண்டு நினைவு விழாக்களை நடத்தியது. அந்த வகையில் பேராசிரியர் நா.வானமாமலை நுாற்றாண்டு விழாவையொட்டி நடத்திய கருத்தரங்க கட்டுரைகளின் தொகுப்பு நுால். சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் வீ.அரசு, நா.வா.,வின் ஒட்டுமொத்த பங்களிப்புகள் குறித்த நுட்பமான மதிப்பீட்டையும், தமிழாய்வுகளில் அவரது இடத்தையும், ‘பேராசிரியர் நா.வானமாமலையின் அரை நுாற்றாண்டு காலப்பயணம்’ என்ற கட்டுரையில் முன்வைக்கிறார். பெரியார் பல்கலைக் கழகத்தின் […]

Read more
1 6 7 8 9 10 240