வாழ்வரசி

வாழ்வரசி, அப்துற் – றஹீம், யூனிவர்சல் பப்ளிஷர்ஸ், விலைரூ.140 சீன எழுத்தாளர் படைத்த நாவலின் தமிழாக்கம் தான் வாழ்வரசி. மூன்று தலைமுறைக்கு உட்பட்ட சீன மருத்துவத்தையும், மக்கள் வாழ்வியலையும் உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கிறது. வாங் – குங் என்னும் மூன்று தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த சீன மருத்துவருக்கும், அவரது பேத்தியான சியோ – சென் என்னும் மருத்துவருக்கும் இடையே உள்ள இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது. பழைமையும், புதுமையும் கைகோர்த்து நிற்பதாக நாவல் நிறைவடைகிறது. சீனாவில் படைப்பிலக்கியம் எவ்வாறு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. எளிய தமிழ் நடையில் […]

Read more

இஸ்லாமியக் கலைப்பண்பு

இஸ்லாமியக் கலைப்பண்பு, முஹம்மது மர்மடியூக் பிஃக்தால், தமிழில் ஆர்.பி.எம்.கனி, யூனிவர்சல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 208, விலை 100ரூ. இஸ்லாமைப் பற்றிய தெளிவான அறிவைப் பெருக்கிக்கொள்ள வெளியாகியுள்ள பல அரிய நூல்களில் இந்நூலும் ஒன்று. இஸ்லாத்தில் வகுத்துள்ள வாழ்க்கை நெறிகள், எவ்வாறு எக்காலத்துக்கும் பொருத்தமாக உள்ளன என்பதைப் பற்றியும், உலக மேம்பாட்டுக்கு இஸ்லாம் எப்படி ஜீவசக்தியாய் வழிகாட்டுகிறது என்பதைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. பல இடங்களில் புனித குர்ஆனுடைய வசனங்களைத் தமிழில் மொழி பெயர்த்து அதற்கு விளக்கமும் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கப் பிறந்த நூலாசிரியர், பல […]

Read more

வரலாற்றில் ஒளைவை

வரலாற்றில் ஒளைவை, முனைவர் ஜோ.ஆர், இலட்சுமி, மதன்மோகினி பதிப்பகம், பக். 184, விலை 150ரூ. தமிழகம் மறக்க இயலாத பெண்பாற் புலவர் அவ்வையார் ஆவார். ஆத்திசூடியிலிருந்து அசதிக் கோவை வரை பல நூல்கள் இயற்றியவர். அறம், மறம், ஆன்மிகம் என, பன்முகப் பார்வையுடன் அவ்வை நூல்கள் திகழ்கின்றன. இந்நூலில் அவ்வையார் குறித்த பல செய்திகள், சுவைபடக் கூறியுள்ள பாங்கைக் காண்கிறோம். அவ்வை என்ற சொல்லின் பொருளும், அவரின் நோன்பும், வழிபாடுகளும் அவர் குறித்த செவி வழிச் செய்திகளும், அவ்வையின் ஆதிக்கம், வரலாற்று நோக்கில் கூறப்படும் […]

Read more