மலையாளக்கரையினில் இஸ்லாம்

மலையாளக்கரையினில் இஸ்லாம், செ.திவான், ரெகான் சுலைமான் பதிப்பகம், விலைரூ.200 கேரளாவில் இஸ்லாம் காலுான்றியதை வரலாற்றுப் பூர்வமாக விவரிக்கும் நுால். மொத்தம் 10 தலைப்புகளில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது. எண்ண அலைகளில் துவங்கி, கடல், பழந்தமிழர் வாணிபமும் பன்னாட்டு தொடர்பும், அரேபியா, அரேபியரின் வணிகம், குதிரை, இஸ்லாம், சந்திரன், சேரமான் பெருமாள் இயல்களின் கீழ் தகவல்கள் உள்ளன. முதல் இயலில், தமிழகத்தில் முஸ்லிம்கள் பற்றிய தகவல் வரலாறு மற்றும் சங்க கால இலக்கிய பின்னணியுடன் அலசித் தரப்பட்டுள்ளது. அடுத்து கடல் பற்றிய குறிப்புகளும், இலக்கிய பின்னணி மற்றும் […]

Read more

சொல்லிலுள்ள சொல்லைச் சொல்லுங்கள்!

சொல்லிலுள்ள சொல்லைச் சொல்லுங்கள்!, டி.என்.இமாஜான், மணிமேகலை பிரசுரம், விலைரூ.90 சொற்களை அடிப்படையாக கொண்ட புதிர்களின் தொகுப்பு நுால். இதில், 100 புதிர்கள் உள்ளன. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் ஒளிந்துள்ள ஐந்து சொற்களை கண்டுபிடிக்க வேண்டும் என புதிர் போடப்பட்டுள்ளது. இது, மொழி வளர்ச்சிக்கு உதவும். புதிய சொற்களை அறிந்து, அன்றாடம் பயன்படுத்த ஏதுவாகும். வித்தியாசமான மொழி கல்வியை துாண்டும் நுால். – ராம் நன்றி: தினமலர், 16/1/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

நெடுமர நிழல் கதைகள்

நெடுமர நிழல் கதைகள், ஜெயராமன் ரகுநாதன், எழுத்து பிரசுரம், விலைரூ.200 காட்சிகளால் கோர்க்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். நிஜத்தில் மிதக்கும் கீழ்மை எண்ணங்களை சுவாரசியமாக அலசுகிறது. பொருள் ஆர்வத்தில் ஆடும் மன ஊஞ்சல்களை கண் முன் நிறுத்துகிறது. இந்த தொகுப்பு, 24 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. பல சூழ்நிலைகளில் வாழும் மனிதர் மனதில் மிளிரும் வண்ணங்களை குழைத்து, வினோதமாக கண்ணில் காட்டுகிறது. கதாபாத்திரங்கள் இயல்பாக கலக்கின்றன. அவை காட்சி மயமாகி சிந்தனையில் நுழைகின்றன; ஸ்தம்பிக்க வைக்கின்றன. மன வக்கிரங்களின் கோணங்களை முகத்தில் அறைகின்றன; யதார்த்த உலகத்தை […]

Read more

இரண்டாவது உலக யுத்தம்

இரண்டாவது உலக யுத்தம், வி.அ.மத்சுலேன்கோ, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.500 இரண்டாம் உலக யுத்தத்தை கண்முன் நிறுத்தும் நுால். வரலாற்று பின்னணியுடன் நுணுக்கமாக எழுதப்பட்டுள்ளது. யுத்தம் துவங்குவதற்கு முன், ஐரோப்பிய நாடுகளில் நிலவிய நெருக்கடிச் சூழலுடன் துவங்குகிறது. எட்டு பெரிய அத்தியாயங்களில், துணைத் தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. இரண்டாம் அத்தியாயம், போர் துவக்க நிகழ்வை தெரிவிக்கிறது. போரின் போக்கு, ஏற்ற இறக்கங்கள், நாடுகளின் போர் தந்திரம், ஆயுதப்பயன்பாடு, அவற்றால் ஏற்பட்ட விளைவு என, போரின் துயர வரலாற்றை மிக நுட்பமாக படம் பிடிக்கிறது. போரின் […]

Read more

திருப்பி அனுப்பும் வானம்!

திருப்பி அனுப்பும் வானம்!, முனைவர் மு.அப்துல் சமது, நேஷனல் பப்ளிஷர்ஸ், விலைரூ.125 உலக நலன், சமூக நலன், தனிமனிதச் சிந்தனையை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ள நுால். நபிகளின் கருத்துகளை மையமாகக் கொண்டது. உலகை நன்னெறிக்கண் செலுத்த வேண்டும் என்ற பண்பட்ட உள்ளத்தை ஒவ்வொரு கட்டுரையிலும் காணமுடிகிறது. மனித வளமேம்பாட்டுக்குரிய செய்திகளைத் தருகிறது. மனிதர்கள் இறைநெறி நின்று, அறநெறி காத்து, வாழ்வியலைச் செந்நெறிக்கு உட்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு படைக்கப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு குரான் சொல்லியுள்ள கோட்பாடுகளை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. நவீன அறிவியலோடு திருமறை வழி நின்று கருத்துகளை விளக்குகிறது. […]

Read more

கர்ம வினைகள் நீக்கும் கால பைரவ ரகசியம்

கர்ம வினைகள் நீக்கும் கால பைரவ ரகசியம், ஜெகதா, சங்கர் பதிப்பகம், விலைரூ.260. கால பைரவரின் புராணத்தில் துவங்கி, பைரவர் சிறப்புகளையும் வழிபாட்டு முறைகளையும் கூறி, பைரவ வழிபாட்டால் கிட்டும் பலன்கள், தமிழகத்திலுள்ள பைரவர் தலங்கள், பைரவர் சஷ்டி கவசம், அஷ்ட பைரவர் அவதாரங்கள், பைரவர் ஆற்றல்கள், பிரபஞ்ச ரகசியம், நட்சத்திர கோவில்கள் போன்ற பல தகவல்கள் தொகுக்கப்பட்ட நுால். சனி பகவானுக்குக் குரு என்பதாகக் கூறி, ஒவ்வொரு ராசிக்காரரும் முறைமையோடு வழிபாடு செய்ய வேண்டிய கிழமைகள் தரப்பட்டுள்ளன. பைரவர் விரதம் மேற்கொள்ள வேண்டிய […]

Read more

வாழ்வியல் மாற்றம்

வாழ்வியல் மாற்றம், சி.வீரரகு, சத்தியா பதிப்பகம், விலைரூ.100. மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முன்னுரையுடன் துவங்கும் புதின நுால். வாழ்வியல் மாற்றம், பாரதவிலாஸ், தயாளன் கமலா, கமலாவின் தவிப்பு, பால் விற்பனை செய்பவள், கணவனால் கைவிடப்பட்ட குடும்பம், குருக்கள் குடும்பம், சென்னையில் கமலத்திற்கு வேலை, தயாளன் வேலை, சொந்தவேலையில் தயாளன் கமலம், தயாளன் மஞ்சுளா பஞ்சாயத்துத் தலைவி கமலாவின் பிரமிப்பு, மீண்டும் தயாளனும் கமலாவும் என்ற தலைப்புகளில் மிக எளிமையாக எடுத்துச் செல்கிறது. – ராமலிங்கம் நன்றி: […]

Read more

வரம் தரும் அன்னை

வரம் தரும் அன்னை, பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.190. இந்து கடவுள் என்றால் இந்தியாவிலிருந்து தான் வரமுடியுமா… பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம்; மகாகாளி உருவெடுக்கலாம்; சரஸ்வதி வீணை மீட்டலாம். மகாலட்சுமி அருட்கடாட்சம் தரலாம் என்பதை உணர்த்தும் நுால். பிரான்சில் இருந்து வந்த மிர்ரா, அன்னையாக மகான் அரவிந்தர் அடியொற்றி, தத்துவங்களை பின்பற்றி நடந்தவர். நீ நீயாய் இரு என்பது தான் அன்னை சொல்லும் வேதம். உண்மை, அன்பு, பாசம் என நற்பண்புகளுடன் விளங்குவது தான் நீயாக இருப்பதன் அவசியம். […]

Read more

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், மு.அருணகிரி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.990. காசி மாநகரில் முனிவர்கள் பலர் கூடியிருந்து மதுரையைப் பற்றியும், அங்கே சிவபெருமான் கோவில் கொண்டிருப்பது பற்றியும் உரையாடுகின்றனர். அவர்களுடன் இருந்த அகத்தியரைப் பார்த்து, சிவபெருமான் திருவிளையாடல் புரிவதற்கு ஏற்ற இடமாக மதுரையைத் தேர்ந்தெடுத்தது குறித்து கேட்டனர். அந்த முனிவர்களுக்கு, 63 திருவிளையாடலையும் அகத்தியர் கூறுவதைப் போல் இந்த நுால் துவங்குகிறது. தமிழ் மொழியில் நுாற்றுக்கணக்கான தல புராணங்கள் உள்ளன. அவற்றில் எல்லாம் மிகவும் பழமையானதாக விளங்குகிறது. 13ம் நுாற்றாண்டில் தோன்றியது, திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம். […]

Read more

இதழ் விரிக்கும் தமிழ்ப் பூக்கள்

இதழ் விரிக்கும் தமிழ்ப் பூக்கள், க.ஜெய்சங்கர், அகநி, விலைரூ.120. பல்வேறு கருத்துகள் அடங்கிய 12 கட்டுரைகளின் தொகுப்பு நுால். மெய்ப்பொருள் நாயனார் கட்டுரை மூலம் திருக்கோவிலுார் அரசாண்ட குறுநில மன்னர் என்றும், சைவம் பரப்பிய பெருமையையும் அறிய முடிகிறது. நுால் இரு வகைப்படும். ஒன்று நடப்பு காலத்திற்கு ஏற்றது. அடுத்தது காலம் கடந்தும் நிற்பது. உதாரணங்களுடன் ஒரு கட்டுரையில் விளக்குகிறார். செய்யுள் என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது என்பதையும் ஒரு கட்டுரை காட்டுகிறது. இலக்கண அறிவை மேம்படுத்திக் கொள்ள விரும்புவோர் படிக்க ஏற்ற […]

Read more
1 7 8 9 10 11 240