அகமும் முகமும்

அகமும் முகமும், வே.தி.அரசு, திலகவதி பதிப்பகம், பக். 132, விலை 100ரூ. காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம் என்ற பழைய பாடல், கணவன் – மனைவி இருவரும் ஒத்தக் கருத்துடன் வாழ வேண்டும் என்ற கருத்தை விளக்குகிறது. அகமும், முகமும் என்ற நுால், வே.தி.அரசு தன் சொந்த அனுபவத்தைக் கடிதம் மூலம் நுால் வடிவம் கொடுத்துள்ளார். பிரிந்து வாழும் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறார். இரு மனம் இணைவது தான் திருமணம். ஒரு மனதில் விரிசல் ஏற்பட்டால், […]

Read more

மனசில் பட்டதை

மனசில் பட்டதை, ஆண்டாள் பிரியதர்ஷினி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், 184, விலை 180ரூ. கடவுளை கடவுளாகப் பார்ப்பது ஒரு வகை. கடவுளை மனிதனாகப் பார்ப்பது இன்னொரு வகை. கடவுளை, தந்தை – தாயாக, தோழன் – தோழியாக பார்ப்பது என்ன வகை… எந்த வகையிலும் சேராத பந்த வகை. ‘எவ்வளவு பக்கத்தில் கடவுளை பார்க்க முடியும்… எவ்வளவு பக்குவத்தில் அவரை உணர முடியும்’ என, எப்போதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? உண்டு எனில், உங்கள் மனசுக்குள் நீங்கா ரீங்காரமிட காத்திருக்கும் ஆன்மிக வண்டு […]

Read more

தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்

தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர், ஆலிவர் சேக்ஸ், தமிழில் பேராசிரியர் ச.வின்சென்ட், எதிர் வெளியீடு, பக். 327, விலை 320ரூ. ஆங்கிலேய நரம்பியல் வல்லுனர், அறிவியல் வரலாற்று ஆசிரியர், எழுத்தாளரான ஆலிவர் உல்ப் சேக்ஸ், மருத்துவ உலகில் சந்தித்த அனுபவங்களை பல நுால்களாக தந்திருக்கிறார். அதில், நரம்பியல் கோளாறுகளால் மறதி நோய்க்கு ஆளானவர்கள் குறித்து, ‘தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்’ என, ஆங்கிலத்தில் அழகிய நாவலாக தந்துள்ளார். இந்த நுாலை தமிழில் படிக்க, அலுப்புத்தட்டாத வகையில் அதே பாணியில் […]

Read more

இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை

இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை, ரவிபிரகாஷ், உங்கள் ரசிகன் பதிப்பகம், விலை 420ரூ. இந்நுாலில், 50 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அதில், சாண்டில்யன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்கள், கதை எழுதினால் எப்படி இருக்கும் என்ற பாணியிலான கதைகளும் இடம்பெற்றுள்ளன. ஆசிரியருக்கு, எழுத்துலகில் நட்பு வட்டாரம் அதிகம் என்பதை, தன் ஒவ்வொரு கதைக்கும், ஒரு பிரபலத்திடம் முன்னுரை கேட்டு, அதை பயன்படுத்தியிருக்கிறார். ரா.கி.ரங்கராஜன் முதல், இயக்குனர் ராஜு முருகன் வரை, கதைக்கு முன்னுரை தந்துள்ளனர். ‘சாவி வார இதழில், எட்டு ஆண்டுகளில், 150 சிறுகதைகள் […]

Read more

மூலிகைக் காற்று வீசட்டும்

மூலிகைக் காற்று வீசட்டும், ஜெ.ஜெய வெங்கடேஷ், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.110, விலை 100ரூ. சுற்றுச்சூழல் மாசாகி வரும் இக்காலத்தில் சுத்தமான காற்று எங்கே கிடைக்கிறது? தனிமனித முயற்சியால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும் என, இந்த நுால் மூலம் வழிகாட்டுகிறார், சித்த மருத்துவரான டாக்டர் ஜெயவெங்கடேஷ். ராசிக்கு பொருத்தமான மரத்தையோ, குலதெய்வத்தின் தலவிருட்சத்தையோ வீட்டில் நட்டு பராமரியுங்கள். மூலிகைச் செடிகளை வளருங்கள். சுத்தமான மூலிகை காற்று உங்களை சுற்றி வீசும் என்கிறார். நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள், வேதங்களில் தாவரங்கள் என அபூர்வமான தகவல்களுடன் தாவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. […]

Read more

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள், முனைவர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 600ரூ. சைவ சமயம் உலகில் உள்ள எல்லா சமயங்களுக்கும் முற்பட்ட தொன்மையை உடையது. தமிழும், சைவமும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன. சைவத்தமிழின் சிறப்பை பறைசாற்றும் வகையில் 78 கட்டுரைகள் சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள் என்ற நூல் தொகுப்பாக வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சைவத்தமிழ் இலக்கியங்கள், திருமந்திரத்தின் தனிச்சிறப்புகள், சைவத் தமிழ் அறிஞர்கள் ஆகிய தலைப்புகளில் பகுக்கப்பட்டு அறிவு நிறை ஆய்வாளர்களால் படைக்கப்பட்டு இருக்கிறது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் வேறு, […]

Read more

நேரம் வெற்றிக்கு விதை

நேரம் வெற்றிக்கு விதை, பேராசிரியை கோ.கலாவதி, ஜோதி பதிப்பகம், பக். 56, விலை 50ரூ. காலம் கருதினால் ஞாலமும் கைகூடும்’ என்பது வள்ளுவர் வாக்கு. காலம் கருதி வாழ்ந்தவர்கள் தான், காலம் கடந்தும் வாழ்கின்றனர் என்பதை புது மொழியாகக் கருதலாம். இந்நுால் சிறிதாயினும், நேரத்தின் அருமையையும், அதை மேலாண்மை செய்யும் வழி வகைகளையும், அதனால் அடையப் பெறும் வெற்றியையும், சிறந்த உதாரணங்களுடன் கூறுகிறது. நன்றி: தினமலர், 16/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

உலக சினிமா வரலாறு

உலக சினிமா வரலாறு, வேட்டை எஸ்.கண்ணன், புதிய கோணம், விலை 495ரூ. சினிமாவை, அர்ப்பணிப்பு உணர்வுடன் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு, இந்த புத்தகம் ஒரு பொக்கிஷம். ஒரு குறிப்பிட்ட மொழி திரைப்படங்கள் என்ற எல்லைக்குள் சிக்கி விடாமல், பிரபலமான ஒவ்வொரு மொழிகளிலும், திரைப்படத் துறையின் சாதனைகளை பட்டியலிட்டுள்ளார், ஆசிரியர். இந்த புத்தகத்தை, சினிமாவின் வாழ்க்கை வரலாறு என, தாராளமாக கூறலாம். நன்றி: தினமலர், 16/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

சொல்லும் செய்திகள்

சொல்லும் செய்திகள், வி.என்.மதியழகன், காந்தளகம், விலை 400ரூ. செய்தி வாசிப்பு தொடர்பாக ஆசிரியர் சொல்லும் கருத்துகள் மகத்தானவை. செய்தித் துறையின் அடிப்படை, அதில் நிலவும் சிக்கல்கள், சவால்கள், நடைமுறை, போக்கு போன்ற பல்வேறு கூறுகளையும் பல கோணங்களில் அலசி ஆராய்கிறார். இன்றைய ஊடகத் துறையின் நிலை குறித்த மனக் குமுறலை வெளியிடும் ஆசிரியர், தரமான ஊடகவியலாளர்கள் விளைய, நல்ல ஆலோசனை விதைகளை நுாலெங்கும் துாவிச் செல்லும் பாங்கு பாராட்டிற்குரியது. நன்றி: தினமலர், 16/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

ஓ… இப்படியும் நடக்குமா?

ஓ… இப்படியும் நடக்குமா?, முனைவர் த.அசோக்குமார், முனைவர் டி.அசோக்குமார் வெளியீடு, பக்.100, விலை 100ரூ. வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் வைத்துாறு போலக்கெடும் என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க, நுால் முழுவதும் துன்பம் வருமுன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. வெள்ளம் வருமுன் அணை போடுபவன் புத்திசாலி என்ற வாசகத்திற்கேற்ப, கஷ்ட நஷ்டம் வருவதற்கு முன் அதை தடுக்கும் வழிமுறைகள் இந்நுாலில் உள்ளன. வியாபாரத்தில் தொழிலில் நஷ்டத்தைத் தவிர்ப்பதற்குரிய கருத்துகள் இந்நுாலில் உள்ளன. தொழில் வர்த்தகம், நிர்வாகம், யாவற்றிலும், பாதுகாப்பான உபகரணங்கள், […]

Read more
1 83 84 85 86 87 240