இந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்

இந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம், எஸ்.சென்ன கேசவ பெருமாள், நர்மதா பதிப்பகம், பக். 480, விலை 300ரூ. இறையன்பர்கள், சான்றோர்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் ஆகியோர் அருளிய சமய தத்துவங்கள், விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் நாளிதழ்கள், வார இதழ்கள், திங்களிதழ்கள், ஆண்டு மலர்கள் ஆகியனவற்றில் இடம் பெற்ற இந்து சமயம் தொடர்பான செய்திகள் முதலியனவற்றை நிரல்பட தொகுத்து, ஆங்காங்கே குறிப்புகளையும், விளக்கங்களையும் தந்து நுாலாக்கிய ஆசிரியரின் அளப்பரிய முயற்சி பாராட்டுக்குரியது. ‘இறைவனைக் காண இயலாது; உணர முடியும்’ என, விளக்கியுள்ள பாங்கும், ராமகிருஷ்ண […]

Read more

இரண்டாம் சுற்று

இரண்டாம் சுற்று, ஆர்.பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.வி.தமிழ் பதிப்பகம், பக். 256, விலை 240ரூ. நீண்ட காலமாய் பயணம் செய்யும் தமிழ் நெடுஞ்சாலையில், பேச்சுப் போட்டிக்கு அடித்தளமிட்ட குன்றக்குடி அடிகளார் சுழற்கேடயம். குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று கலெக்டராக பணி. முன்கூட்டியே போட்ட மொட்டையால் முகவரியாக மாறிய முகம். அரவிந்த் என்றோர் அற்புதம், கோராபுட் பக்கம் தான் சிகாகோ, அந்தரத்தில் ஊஞ்சல், பஸ்தர் என்னும் தாய்மடி, உலகத்தை முத்தமிட்டவர், எல்லையற்ற பிரபஞ்சம் உள்ளிட்ட அரிய செய்திகள் அடங்கிய பெட்டகம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: […]

Read more

மக்களும் மரபுகளும்

மக்களும் மரபுகளும், நா.வானமாமலை, என்.சி.பி.எச்.(பி) லிட், பக். 150, விலை 100ரூ. மானிடவியல், இன வரைவியல் போன்ற துறை வழியாக ஒரு குறிப்பிட்ட மக்களின் வரலாறு, பண்பாட்டுத் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில், இந்த நுால், தமிழ்ப் பழங்குடியினரின் பண்பாட்டுத் தொடர்பிலான செய்திகளை விரிவாகப் பேசுகிறது. இந்த நுாலில் உள்ள பன்னிரு கட்டுரைகளும் ஆழமான கருத்துகளைக் கொண்டிருப்பதோடு, அரிய பல தகவல்களைத் தொகுத்துக் கூறியிருக்கிறது. இதைப் பதிப்பித்திருக்கும் நா.வானமாமலை அரிதின்முயன்று இதைத் தொகுத்துள்ளார். கட்டுரைகளை எழுதியிருக்கும் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தேடல் முயற்சியுடன் […]

Read more

பறவை போல் வாழ்தல் வேண்டும்

பறவை போல் வாழ்தல் வேண்டும், இ.தனுஷ்கோடி, தமிழ்வாணி பதிப்பகம், பக். 102, விலை 70ரூ பறவை போல் வாழ்தல் வேண்டும் எனும் இந்த நுாலில், 34 பறவைகளின் வாழ்க்கைச் செய்தியை, திரட்டியுள்ளார் என்பது, இந்த நுாலை வாசிப்பவர்களுக்குத் தெரியும். அன்பால் இணை பிரியாத அன்றில் பறவை, காக்கை, சிட்டுக்குருவி, கிளி, புறா, குயில், மயில், ஆந்தை போன்ற பல பறவைகளின் குணங்களையும், அதன் வாழ்க்கை, வாழும் சூழலையும் அருமையாக கூறியிருக்கிறார் ஆசிரியர். சேர்ந்து வாழும் காதல் பறவைகள், அடிக்கடி முத்தமிட்டு ஆனந்தம் கொள்ளும். தன் […]

Read more

புதுச்சேரி சித்தர்கள்

புதுச்சேரி சித்தர்கள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை 300ரூ. வேதபுரி, அகத்தீசுவரம் என்று புதுச்சேரி போற்றப்படுகிறது. பாடல் பெற்ற கோவில்கள் இங்கு இல்லை. ஆனாலும் அரவிந்தர், அன்னை, பாரதியார் போன்றவர்களால் புனிதம் சேர்ந்தது புதுச்சேரிக்கு. ஞானபூமியில் தோன்றிய 47 சித்தர்களை அரும்பாடுபட்டு இந்நுாலாசிரியர் தொகுத்து விரிவாக எழுதியுள்ளார். பாரதியார், பல சித்தர்களுடன் பழகியவர் என்றும், அவர்கள் பற்றி பாடல்கள் பாடியவர் என்றும் முன்னுரையில் கூறியிருப்பது மிக முக்கியத் தகவலாகும். புதுச்சேரி சித்தர் ஆய்வில், இளைஞர்கள் ஆர்வமுடன் இருப்பதாக எழுதியுள்ளது, எதிர்கால நம்பிக்கை தருகிறது. அகத்தியர் […]

Read more

வெற்றிச் சிறகுகளை விரியுங்கள்

வெற்றிச் சிறகுகளை விரியுங்கள், இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக்.104, விலை 110ரூ. தலைமை தாங்க தயாராகுங்கள், சுறுசுறுப்பை சொந்தமாக்குங்கள், கவலை எனும் வலையில் சிக்காதீர், விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள், படிப்பதை பரவசமாக்குங்கள், அச்சத்தை அகற்றுவது அவசியம், தகவல் தொடர்பில் தகுதி, சொற்பொழிவை சுவையாக்குங்கள், பேச்சாற்றாலை வளர்த்துக் கொள்ளுங்கள். ‘முயற்சியின் வித்துக்கள் முளைக்கத் துவங்கிவிட்டால், வெற்றியின் விளைச்சல் நிச்சயம் உண்டு’ என்ற சிந்தனை முத்துக்களை ஆழமாய் பதிவு செய்கிறது இந்நுால். நன்றி: தினமலர்,5/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more

கதை திரைக்கதை இயக்கம்

கதை திரைக்கதை இயக்கம், கலைச்செல்வன், நிழல் பதியம், பக்.338, விலை 350ரூ. மேடை நாடகங்கள் மற்றும் தெரு நாடகங்களில் நீண்ட அனுபவம் மிக்க கலைச்செல்வன், திரைப்படத் துறையில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிஉள்ளார். எங்கிருந்து தொடங்குவது, திரைக்கதை, திரைக்கதை நுட்பங்கள், கட்டமைப்பு, வடிவமைப்பு போன்ற தலைப்புகளில் கதை மற்றும் இயக்கம், படப்பிடிப்பு, படத்தொகுப்பு, காட்சி அமைப்பு, தயாரிப்பிற்கும் பிந்தைய வேலைகள் போன்ற தலைப்புகளில் சினிமா இயக்கம் பற்றி கூறுகிறார். ‘உலக வாழ்வை உற்றுக் கவனித்து, அதன் சாரத்தைப் பிழிந்து தருபவனே கலைஞன்’ என்று கதை என்ற […]

Read more

பொருநை நதிக் கரையினிலே

பொருநை நதிக் கரையினிலே, கன்யூட்ராஜ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 230ரூ. தமிழகத்தின் பெரும்பான்மை நதிகளில் ஆற்றுநீரும், ஆற்று மணலும் பெருமளவில் கொள்ளையடிக்கப்படுவதை இந்த நவீனம் சித்தரிக்கிறது. பிரசார நெடி வீசுகிறது என்றாலும், கதை சுவாரஸ்யம் உள்ள சம்பவங்களுக்கும் பஞ்சம் இல்லை. தாமிரபரணி தண்ணீரை நம் முன்னோர் தீர்த்தமாக எடுத்துச் சென்று, கடவுளுக்கு அபி ஷேகம் செய்தனர்; அப்படியே குடிக்கவும் செய்தனர். அவ்வளவு துாய்மையாக இருந்தது. இன்று, மீன்கள் வாழக்கூட முடியாத அளவிற்கு, தண்ணீர் மாசு அடைந்து விட்டது. காரணம், ஒன்று சாக்கடை, […]

Read more

வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள், ஞா.தேவநேயப்பாவாணர், பூம்புகார் பதிப்பகம், விலை 450ரூ. தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத் தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும், திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி என, வாதிட்டவர் தேவநேயப்பாவணர். மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல் ஆராய்ச்சி வல்லுனரும் ஆவார். இந்நுால், மொழிகள், இயன்மொழி, திரிமொழி என இருவகைப்படும். வளர்ச்சி அடைந்த ஒவ்வொரு இயன்மொழியும் இயற்கை மொழி, வளர்ச்சி மொழி என இருவகை நிலைகளை உடையது என்கிறார். ‘அம்’ என்னும் வேர்ச்சொல் கட்டுரையில், ‘அம்முதல்’ என்ற சொல்லுக்குரிய […]

Read more

பிரபத்தி அறிவோம் தெளிவோம்

பிரபத்தி அறிவோம் தெளிவோம், வ.ந.கோபால தேசிகாச்சாரியார், சங்கர் பதிப்பகம், விலை 210ரூ. பிரபத்தி மார்க்கம் ஒன்று தான், உய்வதற்கு ஒரே வழியாகும். எது சாரம்? யார் கடவுள்? மோட்சத்தில் ஆசையா? பக்தியும் பிரபத்தியும், யோகங்கள் மூன்று, அங்கங்கள் ஐந்து, சாஸ்திர வரையறை, பாவம் பரிகாரம், ஆன்மாவின் பயணம், மோட்சானந்தம், திருமால் பெருமையை கூறுகிறது. குரு மற்றும் சீடனின் கடமை உள்ளிட்டவை பற்றி வேதங்களும், சாஸ்திரங்களும், ஆழ்வார்கள், ஆளவந்தார், ராமானுஜர் போன்ற வைணவ மகான்களும், பக்தி மார்க்கத்திற்கு செல்லும் வழிமுறைகளை இந்நுாலில் கூறி உள்ளனர். நன்றி: […]

Read more
1 84 85 86 87 88 240