குந்தியின் குருசேத்திரம்

குந்தியின் குருசேத்திரம், விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 352, விலை 275ரூ. தாம்பத்திய உறவு கொள்ள முடியாத கணவனை பெற்றாலும், வரத்தால் குழந்தை பெற்று, கணவன் இறந்தபோது, தன் சக்களத்தியை, உடன்கட்டை ஏற வைத்து, தன் பிள்ளைகளுக்கு, அரசாளும் உரிமை பெற போராடிய, பெண்ணரசியான குந்தியின் ராஜதந்திரங்களை, இந்நூல் விவரிக்கிறது. கர்ணன் இறந்த பின், அவனை அணைத்து கதறும், அவளின் தாய்மையையும் இந்நூல் சிறப்பாக படம் பிடிக்கிறது. நன்றி: தினமலர், 16/1/2018

Read more

அறிவோமா அறிவியல்

அறிவோமா அறிவியல், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், தாமரை பிரதர்ஸ் வெளியீடு, பக். 120, விலை 80ரூ. மத்திய அரசின் தேசிய அறிவியல் பிரச்சார மையத்தில், முதுநிலை விஞ்ஞானியாக உள்ள, த.வி.வெங்கடேஸ்வரனின் கேள்வி – பதில் தொகுப்பு. ஏழு தலைப்புகளின் கீழ், பல்வேறு அறிவியல் கேள்விகளுக்கு, எளிமையாக பதில் அளித்திருக்கிறார். குழந்தைகள் இருக்கும் வீட்டில் நிச்சயம் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினமலர், 16/1/2018.

Read more

மந்திரவாதி மன்னர்

மந்திரவாதி மன்னர், தமிழில் சரவணன் பார்த்தசாரதி, புக்ஸ் பார் சில்ரன், பக். 24, விலை 45ரூ. வண்ணப் படங்களால் நிறைந்துள்ள இந்த நூலில், மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி ஆகிய இரண்டு கதைகள் உள்ளன. சோவியத் கதை வரிசையில் இன்னுமொரு நூல். சோவியத் ஓவியர்களால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள், நூலுக்கு கூடுதல் அழகூட்டுகின்றன. குழந்தைகளை கவரும் வடிவமைப்பும் அழகு!. நன்றி: தினமலர், 16/1/2018.

Read more

வெளிச்சத்தின் நிறம் கருப்பு

வெளிச்சத்தின் நிறம் கருப்பு, முகில், சிக்ஸ்த்சென்ஸ் பக்ளிகேஷன்ஸ், பக். 316, விலை 240ரூ. அறிவியலுக்குள்ளும், பகுத்தறிவுக்குள் அடங்காத மர்மங்கள், இவ்வுலகில் நிறைந்திருக்கின்றன. ஏன், எதற்கு, எப்படி என்ற மூன்று கேள்விகளுக்குள் அடங்காத, அந்த மர்மங்களின் கதகதப்பை உணர செய்கிறது இப்புத்தகம். ‘திக் திக்’ விரும்புகளுக்கு, நிச்சயம் இந்நு’ல் பிடிக்கும். நன்றி: தினமலர், 16/1/2018.

Read more

மணிமகுடம்

மணிமகுடம், ஜெய் சீதாராமன், விருட்சம், பக். 130, விலை 120ரூ. குவிகம் மின்னிதழில் தொடராக வெளிவந்து, பலராலும், கவனிக்கப்பட்ட இந்த சரித்திர குறுநாவல், தற்போது அச்சாகி உள்ளது. பாண்டியர்களின் வம்சாவளி பொக்கிஷங்களான, விலை மதிக்க முடியாதமணிமகுடத்தில் இருந்தும், ரத்தின மாலையில் இருந்தும், இந்த கதை எழுகிறது. இலங்கை மன்னன் மகிந்தன், ஈழத்தில் மறைத்த மதுரை பாண்டியர்களின் பொக்கிஷங்களைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

அகநாழிகை

அகநாழிகை,(கலை இலக்கிய இதழ்), பொன்.வாசுதேவன், அகநாழிகை, பக். 128, விலை 120ரூ. கலை இலக்கிய இதழ், பிரபல எழுத்தாளர்களின் நேர்காணல், கட்டுரை, சிறுகதைகள், நூல் அறிமுகம், கவிதைகள் என, முழுமையான இலக்கிய இதழாக வெளிவந்திருக்கிறது அகநாழிகை. இலக்கிய வட்டாரத்தில் இந்நூல் தடம் பதிக்கும். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

வீரம்

வீரம், குன்றில்குமார், ராஜமாணிக்கம்மாள் வெளியீடு, பக். 160, விலை 100ரூ. இந்திய விடுதலை போரில், ஆண்களுக்கு நிகராக, பெண்களும், தங்கள் பங்கை செலுத்தி இருக்கின்றனர். வேலு நாச்சியார் முதல், ஜல்காரி பாய் வரையிலான, பல பெண் தியாகிகள் பற்றிய சுருக்கமான வரலாற்று நூல். நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

விளம்பர மாயாஜாலம்

விளம்பர மாயாஜாலம், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், பக். 136, விலை 125ரூ. விளம்பரம் என்பது, கலையும், அறிவியலும் கலந்த ஒரு தொழில் நுட்பம். எத்தனை தரமான பொருளாக இருந்தாலும், அதை அழகான விளம்பரமாக உருவாக்க தெரியாவிட்டால் பிரயோஜனம் இல்லை என்கிறது, இந்நூல். நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

தமிழர் வரலாறு (3 தொகுதிகள்)

தமிழர் வரலாறு (3 தொகுதிகள்), தமிழகப் பெண்கள் செயற்களம், பக். 120, 148, 120, விலை 200ரூ, 200ரூ, 180ரூ. பழைய, புதிய, உலோகக் காலம், பழந்தமிழர் காலம், களப்பிரர் காலம் ஆகியவற்றை ஓவிய காட்சிகளுடன் விளக்கி உள்ளனர். பல்வேறு தகவல்கள் மற்றும் தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடுகளில் இருந்து பல்வேறு செய்திகள் சேகரிக்கப்பட்டு இந்த நூல்கள் வெளிவந்துள்ளன. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more

திருமணக் கோவில்கள்

திருமணக் கோவில்கள், தாமரை பிரதர்ஸ் மீடியா, பக். 144, விலை 150ரூ. திருமண தடை நீங்க, கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஏராளம். அவர்களுக்காக, திருமணம் தொடர்பான பிரச்னை நீங்க, வழிபட வேண்டிய சுவாமிகள் பற்றிய கட்டுரை தொகுப்பு. ஆன்மிகமும், சுவாரசிய தகவல்களும் நிரம்பிய புத்தகம் இது. நன்றி: தினமலர், 22/1/2018.

Read more
1 95 96 97 98 99 240