பேலியோபுரம்

பேலியோபுரம், நியாண்டர் செல்வன், ஆரோக்கியம் நல்வாழ்வு, பக். 224, விலை 220 ரூ. உடலின் எடையை குறைக்கவும், கொழுப்பை கரைக்கவும், பலரும், டயட் மேற்கொள்கின்றனர். நேரத்திற்கு தகுந்தாற்போல் உணவையும், முறையான பயிற்சியையும், எடுத்தால், உடம்பிற்கு கொழுப்பு நல்லதுதான். நாம் சாப்பிடும் உணவு, இயற்கையிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்பதை, இந்த நூல் வாசகர்களுக்கு உணர்த்தும். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

பரிபூரண அருளாளன்

பரிபூரண அருளாளன், ஆர்.வெங்கடேஷ், தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட், பக். 104, விலை 100ரூ. திருவண்ணாமலை, பல யோகிகளையும், ஞானிகளையும் வழங்கிய அக்னி மலை. அங்கேதான் ரமணர், சேஷாத்ரி சுவாமிகள் உள்ளிட்டோர் வாழ்ந்தனர். உ.பி.யில் இருந்து, 1950களில், திருவண்ணாமலை வந்து, 40ஆண்டுகள், பக்தர்களுக்கு அருளியவர், யோகி ராம் சுரத்குமார். சாமி, பகவான், யோகி, விசிறி சாமியார் என்றெல்லாம் உணர்ச்சி பெருக்குடன் பக்தர்கள் வழிபட்டனர். அவரின் அருள் பெற்றோரின் அனுபவத் தொகுப்பே இந்நூல். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

மணிமகுடம்

மணிமகுடம், ஜெய் சீதாராமன், விருட்சம், பக். 130, விலை 120ரூ. குவிகம் மின்னிதழில் தொடராக வெளிவந்து, பலராலும், கவனிக்கப்பட்ட இந்த சரித்திர குறுநாவல், தற்போது அச்சாகி உள்ளது. பாண்டியர்களின் வம்சாவளி பொக்கிஷங்களான, விலை மதிக்க முடியாதமணிமகுடத்தில் இருந்தும், ரத்தின மாலையில் இருந்தும், இந்த கதை எழுகிறது. இலங்கை மன்னன் மகிந்தன், ஈழத்தில் மறைத்த மதுரை பாண்டியர்களின் பொக்கிஷங்களைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

பொன்னியின் செல்வன் காமிக்ஸ் 8 தொகுதிகள்

பொன்னியின் செல்வன் காமிக்ஸ் 8 தொகுதிகள், கல்கி, நிலா காமிக்ஸ், பக். 42, விலை 145ரூ. கல்கியின், பொன்னியின் செல்வன், ஐந்து தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகமான, வரலாற்று நாவல்களின் சிகரம். அதை, இளைஞர்களும் முதியோரும் படித்திருப்பர். அதில் 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட, மன்னர்களின் வீரம், தீரம், பக்தியை கண் முன் கொண்டு வந்திருப்பார் கல்கி. அதை சிறுவர்களுக்கான படக்கதையாக மாற்றி அருமையான படைப்பாக வெளியிட்டிருக்கிறது நிலா காமிக்ஸ். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

இலக்கிய மலர்கள்

இலக்கிய மலர்கள், ஓ.பாலகிருஷ்ணன், சீதை பதிப்பகம், பக். 136, விலை 70ரூ. சங்க காலம் தொட்டு, இன்றைய வரையிலான இலக்கியத் திறனாய்வியல், நாட்டுப்புறவியல், மானிடவியல், அறிவியல் தமிழ், விடுகதைக் கொள்கைகள், வருணனைகள், குறியீட்டியல் போன்றவற்றில் ஆழ்ந்து ஈடுபட்ட பின்னணியில் செறிவான, 11 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நுால் உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில், கற்பனையில் உருவாகி, அதீத கற்பனையாக முடிவுறுகிற பழமரபுக்கதை எனப்படும் தொன்மத்தின் சொல் விளக்கம், தோற்றம், அமைப்புகள், பொருள் விளக்கங்கள், படிப்போர் மனதில் புதிய பார்வைகளை விளைவிக்கும். சைகையால் வளரத் துவங்கிய மொழி, […]

Read more

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை

சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை, ஜெ. பாலசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், பக். 184, விலை 195ரூ. தலித் இலக்கிய வரலாற்றை, தமிழ் இதழில் ஆய்வு மூலம், ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கிறார். நான்கைந்து தலித் பத்திரிகைகள் மட்டுமே கிடைக்கும் இன்றைய சூழலில், 40க்கும் மேற்பட்ட, தலித் இதழ்கள் பற்றி, செய்திகள் திரட்டி, பகுத்தாய்ந்திருக்கிறார் ஆசிரியர். 1869 – 1943 வரையிலான தலித் பத்திரிகைகள் குறித்து, சிறந்த ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பதை, நுால் வெளிகாட்டுகிறது. நன்றி: தினமலர், 20/1/2018

Read more

கடைசி முகலாயன்

கடைசி முகலாயன், வில்லியம் டேல்ரிம்பிள், தமிழில் ரா.செந்தில், எதிர் வெளியீடு, பக். 712, விலை 750ரூ. கடைசி முகலாய மன்னரான ஜாபரின், அரசாட்சி முடிவு வந்த காலத்தை, மிகையின்றி, சுவாரசியமாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். கடைசி முகலாய மன்னரின் வரலாறு என்பதன் வழியே, அன்றைய காலத்தையும், நெறிகளையும், ஆவணங்கள் துணையுடன் இப்புத்தகத்தில் நிரூபித்து உள்ளார். நன்றி: தினமலர், 20/1/2018.

Read more

ஆசிர்வாதத்தின் வண்ணம்

ஆசிர்வாதத்தின் வண்ணம், அருண்சர்மா, எம். சுசீலா, சாகித்ய அகாடமி, பக். 366, விலை 225ரூ. சுதந்திரத்திற்கு முந்தையதும், பிந்தையதுமான அசாம் கிராமங்களின் சூழலை விளக்கும் நாவல். அசாம் மனிதர்களின் உள்ளம், பழக்க வழக்கங்கள், கிராமிய பண்பாடு என, அங்குலம் அங்குலமாக அசாமியர்களின் வாழ்வியலை வர்ணிக்கிறது. வானொலி நிலைய மைய இயக்குனராக இருந்த அருண் சர்மா, இந்நாவலை, சாதாரண இளைஞரின் வழியாக வெளிப்படுத்தி உள்ளார். நன்றி: தினமலர், 11/1/2018.  

Read more

பூனைக்கதை

பூனைக்கதை, பா.ராகவன், கிழக்கு பதிப்பகம், பக். 382, விலை 350ரூ. கற்பனையும், எதார்த்தமும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் விலகியும், கலையுலகம் பற்றிய கதையம்சத்துடன் புனையப்பட்டுள்ள நாவல். ஒரு பூனை எனும் பாத்திரம், இரண்டு உலகங்களை நம் முன் விரிக்கிறது. அந்த உலகத்தின் அரிதார முகங்களை, அந்த பூனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. கதைக்குள் கதையாய் விரியும் இந்நாவல், நவீன தமிழ் நாவல்களின் வரிசையில் இடம் பிடிக்கும். நன்றி: தினமலர், 11/1/2018.

Read more

படகோட்டி எறும்பு

படகோட்டி எறும்பு, சரவணன் பார்த்தசாரதி, புக் ஃபார் சில்ரன், பக். 24, விலை 45ரூ. இரை தேடிச் சென்ற எறும்புகள் குடும்பம் ஒன்று, தங்களின் புற்று இருந்த இடத்தை மறந்துவிட்டு தேடி அலைகின்றன. அந்த நேரம் பார்த்து, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வர, இந்த எறும்புகளுக்கு என்ன ஆயிற்று என்பது பற்றிச் சுவைபடச் சொல்லும் சிறு நுால். சோவியத் கதை புத்தகமான இதில், பக்கத்திற்குப் பக்கம் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்களும், நேரடித்தமிழ் நுால் போன்ற மொழிபெயர்ப்பும், வாசிக்கும் ஆர்வத்தைத் துாண்டுகின்றன. நன்றி: தினமலர், […]

Read more
1 97 98 99 100 101 240