தம்மபதம் – 8

தம்மபதம் – 8, டாக்டர் என்.ரமணி, கண்ணதாசன் பதிப்பகம், பக்.445, விலை 280ரூ. இது, தம்மபதம் நுாலின், எட்டாவது பாகம். புத்தர், ‘உன்னைத் தெரிந்து கொள்’ என்கிறார்; அதன் அர்த்தம், ‘நீ இல்லாததைத் தெரிந்து கொள்’ என்பதாகும் என்கிறார் ஓஷோ. புத்தரின் வழியில் ஆன்மிகம் உரையை, தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆசிரியர். கேள்வி – பதில் பாணியில், அமைந்திருப்பது சிறப்பு. நன்றி: தினமலர், 20/1/2018

Read more

தப்புக் கடல

தப்புக் கடல, பெ.கருணாகரன், குன்றம் பதிப்பகம், பக்.192, விலை 150ரூ. ஆசிரியரின், சிறுகதை தொகுப்பு. கிராமத்தில், தன் பால்ய வயது நினைவுகளில் இருந்து, சிறுகதைக்கான கருவையும், அதன் வழியே, அந்நாட்களின் தடங்களையும் பதிவு செய்துள்ளார். தப்புக் கடல முதல், வால் பையன் வரை, 15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. சாமானியர்களின் வாழ்க்கையும், சரிந்திரமாகக் கூடும் என்பதை நிரூபித்திருக்கிறார். நன்றி: தினமலர், 20/1/2018

Read more

ஒரு கணவாய் யுத்தம்

ஒரு கணவாய் யுத்தம், போஸ்சில்லி, லயன் காமிக்ஸ், பக்.266, விலை 150ரூ. காமிக்ஸ் புத்தகத்திற்கு, உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. படமும், கதையும் என்ற அணுகுமுறை, குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. லயன் காமிக்ஸ், இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வெளிவந்து, பெரும் வெற்றி பெற்ற காமிக்ஸ் புத்தகங்களை, தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுகின்றனர். வரவேற்கத்தக்கது நன்றி: தினமலர், 20/1/2018

Read more

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக்களஞ்சியம்

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக்களஞ்சியம், முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், காவ்யா பதிப்பகம், பக். 340, விலை 330ரூ. திருநெல்வேலியில் பிறந்து, மதுரையில் வளர்ந்து, புதுவையில் நாடகத் தமிழ் வளர்த்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவரின் எழுத்து, இயக்கம், பேச்சு, மூச்சு என அனைத்து செயல்களும் நாடகத்தமிழில்தான் இருந்தன. அவரால், நாடகத்தமிழ் புத்துயிர் பெற்றது. அவரை தற்கால தலைமுறை புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 10/1/2018.

Read more

பன்முக நோக்கில் புறநாநூறு

பன்முக நோக்கில் புறநாநூறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், பக்.252, விலை 160ரூ. மு.வ.,வின் செல்லப்பிள்ளை எனத்தகும் இரா.மோகன் எழுதியுள்ள இவ்வாய்வு நுால், புறநானுாற்றைப் பல்வேறு கோணங்களில் காட்டியுள்ளது. ஐந்து பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்நுாலில், 40 தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. சங்கச் சான்றோர்களின் ஆளுமைப் பண்புகள், புறநானுாற்றில் புதுமை, நீராதாரத்தின் அருமை, பண்டைத்தமிழர் மெய்யியல் திறம் எனப் பல்வேறு திசைகளில் ஆய்வு பரந்து விரிந்து செல்கிறது. மாசாத்தியார் காட்டும் மறக்குடி மங்கையர் மாண்பு, சான்றாண்மைக்கு ஆழி பெருஞ்சித்திரனார், உலகின் ஒப்பற்ற கவிஞர் அவ்வையார், […]

Read more

கோமாளிகளின் வாழ்வும் இலக்கியமும்

கோமாளிகளின் வாழ்வும் இலக்கியமும், ஆர். தங்கப்பாண்டியன், அகநி வெளியீடு, பக்.112, விலை 70ரூ. ஒரு நுாற்றாண்டு காலம் ஜீவித்திருந்த ஒரு கலையைப் பற்றியும், அதை இயக்கிய கலைஞர்கள் பற்றியும் ஆய்வு செய்து தமிழர்களுக்குத் தந்திருக்கிறார் ஆர்.தங்கபாண்டியன். கோமாளிப் பாத்திரம் நாடகத்திலும், தெருக்கூத்திலும் ஒரு முக்கியப் பாத்திரம். சிவபெருமானைச் சனி பிடிக்கும்போது, ஒரு கபால ஓடு, சிவபெருமானின் கையைப் கவ்விக் கொண்டது. சிவனுக்காகப் படைக்கப்பட்ட எல்லா உணவையும் அந்தக் கபால ஓடு சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். சிவபெருமானின் உணவை கபால ஓடு சாப்பிட்டதால், அவரால் எழுந்து […]

Read more

சொல்லடி சிவசக்தி

சொல்லடி சிவசக்தி, வரலொட்டி ரெங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 272, விலை 200ரூ. இது ஒரு வித்தியாசமான பக்தி நுால். அம்பிகையோடு நுாலாசிரியரே உரையாடுவது போன்று அமைந்திருப்பது புதுமையானது. அம்மன் மீது அளவிலாப் பக்தியைக் கொண்டிருப்பவர்களைப் பரவசப்படுத்தும்படியான நுால். தாயினும் சாலப்பரிந்து, கோலக்கிளியே சரணம், பாலா திரிபுரசுந்தரி, யாதுமாகி நின்றாய், நீயும் நானும் வேறில்லை ஆகிய ஐந்து தலைப்புகளைக் கொண்டிருக்கும் இந்நுால். அம்பிகையை வினாவுவதாகவும், அவளே நேரடியாகப் பச்சைப் புடவைக் காரியாகக் காட்சி தந்து, நுாலாசிரியரின் ஐயங்களைத் தடை விடைகளால் விளக்குவதாகவும் அமைந்திருக்கிறது. அம்பிகையின் […]

Read more

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், பக். 366, விலை 200ரூ. இந்த உலகில், இரண்டு வகையான துன்பப்படுகிற மக்கள் உள்ளனர். ஒரு வகை, மத தீர்க்கதரிசிகளைப் பின்பற்றுவோர்; மறு வகை, அவர்களைப் பின்பற்றி நடக்காதோர். ஆனால், கொஞ்சம் கூட கவலைப்படாத, என்னைப் போன்ற ஒரு மூன்றாவது வகையைச் சேர்ந்த ஒரு மனிதனைக் காண்பது மிகவும் கடினம்’ (பக். 15). இப்படி சுயதரிசனம் தரும், ஓஷோவின், ‘போலியான மதம்’ என்னும் முதல் கட்டுரை துவங்கி, ‘கடவுள் நம் எல்லாருக்கும் தெரிந்த யாருமாகவும் இல்லாதவர்’ முடிய, […]

Read more

தோள் சாயும் பொழுது

தோள் சாயும் பொழுது, இ.எஸ்.லலிதாமதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 80,விலை 60ரூ. ஆணும், பெண்ணும் நண்பர்களாகவே எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்… பள்ளி வரை அல்லது கல்லூரி வரை… அதற்கும் மேல் திருமணம் வரை… அதிகபட்சம் பேரால் இவ்வளவு தான் கடந்திருக்க முடியும்… ஆனால், ‘தோள் சாயும் பொழுது’ நாவல், மேற்சொன்ன எல்லாவற்றையும் கடந்த ஆண், பெண் நட்பை நம் மனக் கண்ணில் பிரதிபலிக்கிறது. இளமை காலத்தில், ‘புரியாத உறவு’ உணர்வுடன் இருந்ததை, இருவருக்குமான உறவின் முரண்களை பேசுகிறது. திருமணத்திற்கு […]

Read more

ஜெர்மனி

ஜெர்மனி, முனைவர் சொ.சேதுபதி, டாக்டர் நா.மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம், பக். 206, விலை 200ரூ. வரலாற்று சுவடு நிறைந்த ஜெர்மனியின் இலக்கிய வளம், சுற்றுலா பகுதிகள், பண்பாடு, நோபல் பரிசு பெற்றவர்கள் என, வார்த்தைகள் வழியே, வாசகர்களுக்கு, ஜெர்மனியை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். தமிழகத்திற்கு வந்த ஜெர்மானிய கிறிஸ்தவர்கள்; ஜெர்மனிக்குப் போய் வந்த தமிழர்கள் பற்றியும் தகவல்கள் உள்ளன. தேசங்களின் வரலாறு அறிய விரும்புவோருக்கு, இந்நுால் பயனளிக்கும். நன்றி: தினமலர், 10/1/2018

Read more
1 98 99 100 101 102 240