குயில்பாட்டுத் திறன்

குயில்பாட்டுத் திறன், செ.வை.சண்முகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.280, விலை ரூ.260. ஓர் இலக்கியத்தைத் திறனாய்வு செய்வதற்கு பலவிதமான கோட்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. இந்நூல் பாரதியாரின் “குயில் பாட்டு’ படைப்பை மொழியியல் இலக்கியத்திறனாய்வு நோக்கில் ஆராய்ந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் மேலை நாடுகளில் தோன்றிய திறனாய்வு முறைதான் மொழியியல் இலக்கியத் திறனாய்வு. முதலில் இலக்கியத்தின் நடை தொடர்பாக ஆராய்ந்த திறனாய்வு, இலக்கியத்தில் காணப்படும் மொழி அமைப்பு முழுவதையும் ஆராயும் மொழியியல் திறனாய்வாக மாறியது. “மொழியின் அமைப்புதான் இலக்கியத்திற்கு வடிவ அழகைத் […]

Read more

சத்சங்கம்

சத்சங்கம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 160, விலை 150ரூ. அறிவு மட்டுமே ஒருவரை மேன்மையானவர் ஆக்கி விட முடியுமா? முடியாது என்கிறார் ஆசிரியர். மெத்த படித்தவராக, உலகே வியக்கும் தலைவராக ஒருவர் திகழ்ந்தாலும், இவ்வுலகில் யாராவது ஒருவருக்குக் கூட அவர் பகைவராகத் தென்பட்டால் அல்லது நடந்து கொண்டால், அவர் மேன்மையானவர் என்ற சொல்லுக்கு உகந்தவர் அல்ல. கோபம், அகந்தை, சோம்பல், வெறுப்பு, பிறழ்ந்து பேசுதல் ஆகியவை மனித இயல்பு என கருதினாலும், அவை தான் ஒருவரை பண்பட அல்லது மேன்மையடையச் […]

Read more

பச்சை நிழல்

பச்சை நிழல், உதயசங்கர், என்.சி.பி.எச்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 60ரூ. தண்ணீரே இல்லாத ஒரு திடலில் ஒரு புல் முளைக்கிறது. அந்தப் புல்லை இரண்டு சிறுமிகள் கவனமாகப் பார்த்துக்கொள்வதே இந்த நூலின் தலைப்புக்கதை. இதேபோல் சமூகத்தில் நிலவும் பல்வேறு விஷயங்களைப் பற்றிய கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. நன்றி: தமிழ் இந்து, 27/11/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/product.php?productid=32735&page=1 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சத்சங்கம்

சத்சங்கம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.160,  விலை ரூ.150. குருவுக்கும் சீடனுக்கும் இடையில் நிகழும் உரையாடல் வடிவில் ஆன்மிகம் குறித்த தெளிவான புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. ஆன்மிகம் என்பது வழிபாடு என்கிற செயல்முறையோடு நின்றுவிடுவதில்லை.யார் அச்சத்திலிருந்து விடுபடத் தொடங்குகிறார்களோ அவர்களே ஆன்மிகத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள் என்று பொருள். அவர்கள் எதிர்காலம் குறித்துப் பயப்படமாட்டார்கள்.மகிழ்ச்சியால் ஆன்மிகமே தவிர, மகிழ்ச்சிக்காக ஆன்மிகம் இல்லை.ஆன்மிகம் என்பதே அன்பு. எதிரி என்று யாரும் இல்லாத நிலையே ஆன்மிகம். நம்மைப் பார்த்து யாரும் பொறாமைப்படாதவாறு வாழ்வதே சிறந்த […]

Read more

தலித் பார்வையில் தமிழ்ப்பண்பாடு

தலித் பார்வையில் தமிழ்ப்பண்பாடு, ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 140ரூ. பழங்காலத் தமிழ் குடிமக்களின் மூலத் தமிழ்ப் பண்பாடு, பின்னர் முடியாட்சி நடைபெற்ற காலத்தில் ஆரியப் பண்பாடு எவ்வாறு தமிழகத்தில் ஊடுருவியது? தமிழ்ப் பண்பாட்டில் பெண்களைப் பற்றிய கருத்துக்கள், பெண்ணியம் மற்றும் தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு ஆகியவை இந்த நூலில் விளக்கமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான கருத்துகளை, கட்டுரைகளாகத் தொகுத்து இருப்பதோடு, இருவருக்கு இடையே நடைபெறும் தலித் மொழியிலான உரையாடல்களாகவும் தந்து இருக்கும் புதிய முயற்சி பாராட்டப்படக்கூடியதாகும். […]

Read more

மாடும் வண்டியும்

மாடும் வண்டியும் (பொருள்சார் பண்பாட்டு ஆய்வு), த.ஜான்சி பால்ராஜ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.126, விலை ரூ.130. டிராக்டர்கள் வந்த பின் நிலத்தை உழ மாடுகள் தேவையில்லாமற் போய்விட்டன. அதுமட்டுமல்ல, விளைவித்த பொருள்களைக் கொண்டு செல்ல பயன்பட்ட மாட்டுவண்டிக்கான தேவையும் இல்லாமல் போய்விட்டது. மனிதர்கள் பயணம் செய்ய மாட்டு வண்டிகள் கூண்டு வண்டிகளாக மாறின. ஆடம்பரமான வில் வண்டிகளும் வந்தன. நவீன வாகனங்கள் அவற்றை இல்லாமற் செய்துவிட்டன. இந்நூல் மாட்டு வண்டிகளின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும்? மாட்டுவண்டிகளின் பாகங்கள் […]

Read more

தற்காலத் தமிழ் நாட்டு வரலாறு 1801 – 2018

தற்காலத் தமிழ் நாட்டு வரலாறு 1801 – 2018, பேரா., அ.ராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.395 ஆங்கிலேயர் ஆட்சியில், தமிழ்நாடு என்னும் முதல் பாகத்தில் ஆர்க்காடு நவாபின் ஆட்சி, 1710ல் துவங்கி, 1962ல், புதுச்சேரி பிரெஞ்சு பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது வரை, 14 தலைப்புகளில் அமைந்துள்ளது. விடுதலைக்குப் பின், தமிழகம் என்னும் இரண்டாம் பாகத்தில் தமிழக – ஆந்திர எல்லைப் பிரச்னை துவங்கி, 2018ல் காவிரி நதி நீர் நடுவம் அளித்த தீர்ப்பு வரை, எல்லாவற்றையும் விபரமாக எடுத்தாளப்பட்டு உள்ளது. பிற […]

Read more

தலைவலியும் மருத்துவமும்

தலைவலியும் மருத்துவமும்,  சு.நரேந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.102, விலை ரூ.90 தலைவலி ஒரு நோயல்ல; நோயின் அறிகுறி. உடலில் பல்வேறு உறுப்புகளில், உடலின் இயக்கத்தில் ஏற்படும் பாதிப்புகளே தலைவலிக்குக் காரணம் என்கிறார். ஒற்றைத் தலைவலி, மூக்கடைப்பினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் காரணமாகத் தோன்றும் தலைவலி, காது வலியினால் ஏற்படும் தலைவலி, மூளையில் ஏற்படும் நோய்களினால் ஏற்படும் தலைவலி, கண்களில் ஏற்படும் பாதிப்புகளினால் உருவாகும் தலைவலி, இன்சுலின், தைராய்டு போன்ற சுரப்புநீர்கள் சரியாகச் சுரக்காவிட்டால் ஏற்படும் தலைவலி, மன அழுத்தத்தினால் ஏற்படும் […]

Read more

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 370ரூ. பழங்கால தமிழ்ச் சமுதாயத்தில் அறங்களின் தோற்றம் எவ்வாறு ஏற்பட்டது, அறத்தின் மரபுகள், தொல்காப்பிய அறம் உள்ளிட்ட பல்வேறு அறங்களின் உருவாக்கம், அவை பரவிய வரலாறு மற்றும் சங்க காலத் தமிழ்ச் சங்க வரலாறு ஆகியவை ஆய்வு நோக்கில் தரப்பட்டுள்ளன. தமிழ் ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இந்த நூல் பயன் அளிப்பதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 24/7/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029562.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

தற்காலத் தமிழ் நாட்டு வரலாறு 1801 – 2018

தற்காலத் தமிழ் நாட்டு வரலாறு 1801 – 2018, பேரா.அ.ராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்., விலை 395ரூ. ஆங்கிலேயர் ஆட்சியில், தமிழ்நாடு என்னும் முதல் பாகத்தில் ஆர்க்காடு நவாபின் ஆட்சி, 1710ல் துவங்கி, 1962ல், புதுச்சேரி பிரெஞ்சு பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது வரை, 14 தலைப்புகளில் அமைந்துள்ளது. விடுதலைக்குப் பின், தமிழகம் என்னும் இரண்டாம் பாகத்தில் தமிழக – ஆந்திர எல்லைப் பிரச்னை துவங்கி, 2018ல் காவிரி நதி நீர் நடுவம் அளித்த தீர்ப்பு வரை, எல்லாவற்றையும் விபரமாக எடுத்தாளப்பட்டு உள்ளது. பிற […]

Read more
1 2 3 4 26