மகரந்தம் தூவும் மலர்கள்

மகரந்தம் தூவும் மலர்கள், அன்புச்செல்வி சுப்புராஜு, நிவேதிதா பதிப்பகம், விலை 130ரூ. தம்மை முழுமையாக ஈடுபடுத்தி எழுதுவதை முதன்மையாகக் கொண்டவை தன்முனைக் கவிதைகள் எனப்படுகின்றன. கவிதை உலகில் விருதுகள் பெற்ற பிரபல பெண் கவிஞர்கள் 26பேர்களின் தன்முனைக் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த நூலில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. வாழ்வியல் யதார்த்தம், தத்துவம், காதல் போன்ற பண்புகளை இந்தக் கவிதைகளில் காணமுடிகிறது. நன்றி: தினதந்தி, 17/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

உலகெனும் வகுப்பறை

உலகெனும் வகுப்பறை (கட்டுரைகள்), எஸ்.சங்கரநாராயணன், நிவேதிதா பதிப்பகம், பக்.496, விலை ரூ.400. நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், திரட்டு நூல்கள், கட்டுரை நூல் என ஏறத்தாழ 90 நூல்களை எழுதிய நூலாசிரியரின் படைப்புலக அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. “சமூக அக்கறையற்ற படைப்புகள் குப்பைகளாகவே கருதப்படும். அதுமட்டுமல்ல, அது சமுதாயத்துக்கு எதிரானது' என படைப்புகளின் நோக்கம் குறித்த தெளிவான புரிதலுடன், தன்னைக் கவர்ந்த பல படைப்புகளைப் பற்றி தனது கருத்துகளை தெளிவாக நூலாசிரியர் இந்நூலில் முன் வைத்திருக்கிறார். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலுக்கு இவர் எழுதிய […]

Read more

வைணவம் வளர்த்த மகான்கள்

வைணவம் வளர்த்த மகான்கள், ஆர்.வி.பதி, நிவேதிதா பதிப்பகம், பக். 154, விலை 150ரூ. வைணவம் வளர்த்தவர் என்றதும் பன்னிரு ஆழ்வார்களையே நினைப்போம். ஆனால், வைணவத்தை எங்கும் பரப்பிய, 32 மகான்களை, இந்த நுாலில் மிகச் சுருக்கமாக ஆசிரியர் தந்துள்ளார். வைணவ குரு மரபில் முதல்வர் நாராயணர், இரண்டாம் ஆச்சார்யர் பெரிய பிராட்டியார், பின், விஷ்வக்சேனர் இவரே நம்மாழ்வாராக அவதரித்து நான்கு வேதங்களையும் திருவாய் மொழியாகப் பாடியவர். பெருமாள் கோவில்கள் தலையில் சாத்தப்படும் ஸ்ரீசடாரி, நம்மாழ்வார் சடகோபன் பெயரால் வழங்கப்படும் பெருமாள் பாதங்கள். பல நுாற்றாண்டுகளுக்கு […]

Read more

நதியோடு நாமும்

நதியோடு நாமும், இராஜேஸ்வரி கோதண்டம், நிவேதிதா பதிப்பகம், விலை 160ரூ. தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலிருந்து நல்ல பல நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கும் ‘ராஜம்பாட்டி’ (இதுதான் நாவலாசிரியரின் புனைபெயர்) இந்திய நதிகளின் போக்கிலேயே தானும் பயணித்து, சுவைபட இந்நூலை எழுதியுள்ளார். கங்கை, ஹுக்ளி, கோதாவரி, கிருஷ்ணா, வைகை என இந்திய நதிகள் பலவற்றைப் பற்றியும் மனம் தோய்ந்து எழுதியுள்ளார். கங்கை பாயும் காசி பற்றி எழுதுகையில், மகாகவி பாரதியார் அங்கு வாழ்ந்த காலத்தைப் பற்றியும் சேர்த்தே பதிவு செய்துள்ளார். […]

Read more

பொய்யாமொழி

பொய்யாமொழி, முனைவர் மு. பழனிசாமி, நிவேதிதா பதிப்பகம், விலை 180ரூ கவிதைகள், கட்டுரைகள், வேளாண்மை நூல்கள் எழுதிப் புகழ்பெற்ற முனைவர் மு.பழனிசாமி “பொய்யா மொழி” நாவலை எழுதி வெற்றி பெற்றுள்ளார். நல்ல தமிழில் நாவலை சுவைபட எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. ‘நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more

சிந்தனை மலர்கள்

சிந்தனை மலர்கள், கவிஞர் தாரை வடிவேலன், நிவேதிதா பதிப்பகம், விலை 70ரூ. மரபில் திளைத்த தமிழ்ப்பற்று இது மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு. எல்லாப் பக்கங்களிலும் நிரம்பியிருப்பது ஆழமான தமிழ்ப்பற்றுதான் என்பதில் மிகையில்லை. உலகம் போற்றும் தமிழ், தமிழும் முதன்மை பெற வேண்டும். தமிழா தூங்கும் புலி என இராதே, நீரின்றித் தவிக்கும் தமிழகம், என அதிகமும் தமிழர் நலம் பேசும் மரபுக்கவிதைகள். சுற்றுச்சூழல் குறித்த மரபுக்கவிஞரின் அக்கறை கவனத்துக்குரியது. நன்றி: அந்திமழை, ஜுலை, 2017.

Read more

உஷாதீபன் குறுநாவல்கள்

உஷாதீபன் குறுநாவல்கள், நிவேதிதா பதிப்பகம், விலை 250ரூ. சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதைகளை எழுதுவதில் தேர்ந்த எழுத்தாளர் உஷா தீபனின் 4 குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பிது. 9 சிறுகதை நூல்கள், 3 குறுநாவல்கள், ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பென தொடர்சசியாக எழுதி வருபவர் இவர். இந்த குறுநாவல்களில் குடும்ப உறவுகளில் எழும் சிக்கல்களையும், அதனால் உண்டாகும் மனக் கசப்புகளையும் படம்பிடித்துக் காட்டியுள்ளார். உறவு சொல்ல ஒருவன், என்னவளே, அடி என்னவளே… ஆனந்தக் கண்ணீர், எல்லாம் உனக்காக என திரைப்பட பாணியில் வைக்கப்பட்ட […]

Read more

ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை, சைலேந்திர சர்மா, கிரி டிரேடிங் ஏஜென்ஸி, பக். 304, விலை 150ரூ. இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் உள்ள பண்டைய யோக பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால், கிருஷ்ணரை நேரில் காணும் பாக்கியம் கிடைக்கும் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 2/7/2017.   —-   ஆங்கில மருத்துவம், சா. அனந்தகுமார், நிவேதிதா பதிப்பகம்,  பக். 96, விலை 80ரூ. உடல் மருத்துவம், நோய்கள், மருந்து முறைகள், மருத்துவக் கண்டுபிடிப்புகள், முதல்மருத்துவத் தகவல்கள், மருத்துவ நோபல் பரிசு உள்ளிட்டவை அடங்கிய […]

Read more

சொற்களின் மீது எனது நிழல்

சொற்களின் மீது எனது நிழல், சைலபதி, நிவேதிதா பதிப்பகம், பக். 160, விலை 120ரூ. ‘சொற்களின் மீது எனது நிழல்’ சிறுகதையில் உள்ள, 13 கதைகளும், ஒன்றில் இருந்து ஒன்று மாறுபட்டவை. மகளின் படிப்பை கனவு காணும் தந்தை, சிறு வயதில் வாழ்க்கை இழக்கும் பெண், முதுமையால் நிராகரிக்கப்படும் முதியவர் என, இக்கதையில் வருவோர் எல்லாரும், நமக்கு நெருக்கமானவர்களாகவே உள்ளனர். நடுத்தர மனிதர்களின் கனவுகளை, எளிமையாய் யதார்த்த பின்னணியில் இந்நூல் விளக்குகிறது. சைலபதியின் கதைகள், இனிமையாக துவங்கி, அதிர்ச்சியாகவே முடிவடைகின்றன. நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

தொட்ட அலை தொடாத அலை

தொட்ட அலை தொடாத அலை, எஸ். சங்கரநாராயணன், நிவேதிதா பதிப்பகம், பக். 288, விலை 220ரூ. திருப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பாக, ஆண்டின் சிறந்த நாவல் பரிசு வாங்கியிருக்கிறது, இந்த நாவல். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணாம்சங்களை அழகாக விவரிக்கிறது. அழகான எழுத்து நடையில் நாவலில் வரும் மனிதர்களை காலத்தை ஒட்டிச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் சொற்றொடர்கள் பொங்கிப் பிரகாசிக்கின்றன என்பதை வாசிக்கும்போது உணர்வீர்கள் என்பது நிச்சயம். நன்றி: தினமலர், 13/1/2017.

Read more
1 2