சிந்தனை மலர்கள்

சிந்தனை மலர்கள், கவிஞர் தாரை வடிவேலன், நிவேதிதா பதிப்பகம், விலை 70ரூ. மரபில் திளைத்த தமிழ்ப்பற்று இது மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு. எல்லாப் பக்கங்களிலும் நிரம்பியிருப்பது ஆழமான தமிழ்ப்பற்றுதான் என்பதில் மிகையில்லை. உலகம் போற்றும் தமிழ், தமிழும் முதன்மை பெற வேண்டும். தமிழா தூங்கும் புலி என இராதே, நீரின்றித் தவிக்கும் தமிழகம், என அதிகமும் தமிழர் நலம் பேசும் மரபுக்கவிதைகள். சுற்றுச்சூழல் குறித்த மரபுக்கவிஞரின் அக்கறை கவனத்துக்குரியது. நன்றி: அந்திமழை, ஜுலை, 2017.

Read more

உஷாதீபன் குறுநாவல்கள்

உஷாதீபன் குறுநாவல்கள், நிவேதிதா பதிப்பகம், விலை 250ரூ. சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதைகளை எழுதுவதில் தேர்ந்த எழுத்தாளர் உஷா தீபனின் 4 குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பிது. 9 சிறுகதை நூல்கள், 3 குறுநாவல்கள், ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பென தொடர்சசியாக எழுதி வருபவர் இவர். இந்த குறுநாவல்களில் குடும்ப உறவுகளில் எழும் சிக்கல்களையும், அதனால் உண்டாகும் மனக் கசப்புகளையும் படம்பிடித்துக் காட்டியுள்ளார். உறவு சொல்ல ஒருவன், என்னவளே, அடி என்னவளே… ஆனந்தக் கண்ணீர், எல்லாம் உனக்காக என திரைப்பட பாணியில் வைக்கப்பட்ட […]

Read more

ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை, சைலேந்திர சர்மா, கிரி டிரேடிங் ஏஜென்ஸி, பக். 304, விலை 150ரூ. இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் உள்ள பண்டைய யோக பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால், கிருஷ்ணரை நேரில் காணும் பாக்கியம் கிடைக்கும் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 2/7/2017.   —-   ஆங்கில மருத்துவம், சா. அனந்தகுமார், நிவேதிதா பதிப்பகம்,  பக். 96, விலை 80ரூ. உடல் மருத்துவம், நோய்கள், மருந்து முறைகள், மருத்துவக் கண்டுபிடிப்புகள், முதல்மருத்துவத் தகவல்கள், மருத்துவ நோபல் பரிசு உள்ளிட்டவை அடங்கிய […]

Read more

சொற்களின் மீது எனது நிழல்

சொற்களின் மீது எனது நிழல், சைலபதி, நிவேதிதா பதிப்பகம், பக். 160, விலை 120ரூ. ‘சொற்களின் மீது எனது நிழல்’ சிறுகதையில் உள்ள, 13 கதைகளும், ஒன்றில் இருந்து ஒன்று மாறுபட்டவை. மகளின் படிப்பை கனவு காணும் தந்தை, சிறு வயதில் வாழ்க்கை இழக்கும் பெண், முதுமையால் நிராகரிக்கப்படும் முதியவர் என, இக்கதையில் வருவோர் எல்லாரும், நமக்கு நெருக்கமானவர்களாகவே உள்ளனர். நடுத்தர மனிதர்களின் கனவுகளை, எளிமையாய் யதார்த்த பின்னணியில் இந்நூல் விளக்குகிறது. சைலபதியின் கதைகள், இனிமையாக துவங்கி, அதிர்ச்சியாகவே முடிவடைகின்றன. நன்றி: தினமலர், 16/1/2017.

Read more

தொட்ட அலை தொடாத அலை

தொட்ட அலை தொடாத அலை, எஸ். சங்கரநாராயணன், நிவேதிதா பதிப்பகம், பக். 288, விலை 220ரூ. திருப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பாக, ஆண்டின் சிறந்த நாவல் பரிசு வாங்கியிருக்கிறது, இந்த நாவல். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணாம்சங்களை அழகாக விவரிக்கிறது. அழகான எழுத்து நடையில் நாவலில் வரும் மனிதர்களை காலத்தை ஒட்டிச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் சொற்றொடர்கள் பொங்கிப் பிரகாசிக்கின்றன என்பதை வாசிக்கும்போது உணர்வீர்கள் என்பது நிச்சயம். நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

வியப்பூட்டும் விடுகதைகள் 1000

வியப்பூட்டும் விடுகதைகள் 1000, சி. இலிங்கசாமி, சங்கர் பதிப்பகம், சென்னை, பக். 96, விலை 35ரூ. விடுகதைகளை, சிந்தனையைத் தூண்டும் அறிவுத்திறன் மேம்பாடுப் பயிற்சி எனலாம். இந்த நூல், அந்த பயிற்சிக்கு உதவும் சுவாரஸ்ய விருந்து. நூலின் இருந்து சில விடுகதைகள், நோய் நொடியில்லாமல் நாளெல்லாம் மெலிகிறாள். அவள் யார்? விடை = தினசரி நாட்காட்டி. கல்லிலே சாய்க்கும் பூ, தண்ணீரில் மலரும் பூ, அது என்ன? விடை = சுண்ணாம்பு. கண்ணுக்குத் தெரியாதவன், தொட்டவனை விடமாட்டான். அவன் யார்? விடை = மின்சாரம். […]

Read more

ஸ்ரீவைஷ்ணவம் என்சைக்ளோபீடியா

செவ்வியல் இலக்கிய மணிமாலை, ம.சா. அறிவுடைநம்பி, பக்கம் 320, கருமணி பதிப்பகம், புதுச்சேரி-8, விலை 160 ரூ. தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கம், பயிலரங்கம் ஆகியவற்றில் படிக்கப்பட்ட கட்டுரைகள், தினமணி, தமிழ் ஓசை ஆகிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான சொற்பொழிவு என மொத்தம் 15 கட்டுரைகளால் கோக்கப்பட்ட இலக்கிய மணிமாலை. இலக்கணம், இலக்கியம், அறநெறி, அரசியல், அறிவியல், மதுவிலக்கு, பழந்தமிழர் வாழ்வு, விருந்தோம்பல், கனவுகள், சிந்தனைகள், இசைக்குறிப்புகள் என்ற இவை அனைத்தையும் உள்ளடக்கிய கட்டுரைகளின் சாரம் செவ்வியல் […]

Read more
1 2